Thursday, December 08, 2011

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…அன்பே


என் உயிரில் ஓடிவரும் ஓசை நீ தான்
உன் அன்பை நாடிவரும் ஜீவன் தான்
என் முகத்தில் தாடி வரும் காரணம் நீதான்
ஆனால் நீ மட்டும் உன் டாடியை அனுப்பி
என்னை தேடி வர சொல்லாதே என் லேடி
அப்பறம் நான் ஓடிவிடுவேன் ஓடி

காதல் என்ற விதை என் மனதில் வீழ்ந்தது
அதை விதைத்தவள் உன்னை என் காலம் எல்லாம்
என் கண்ணில்வைத்து தாங்குவேன்
எனக்காக பிறந்தவளே உனக்காவே நான் வாழ்வேன்

நான் பார்க்கும் போது பார்கமாட்டாய்
நான் பார்காத போது பார்கிறாய்
இதுதான் பெண்களின் காதலா
புரியவில்லை உன் பார்வைகள்
நான் அறியவில்லை உன் விழிகளின் மொழியை

காதலின் உருவில் உன்னை பார்க்கும் போது
நான் கருவில் இருந்தது நினைவில் வருது
ஏன்னா காதலும் கருவறையும் ஒன்றுதான்
இரண்டிலும் இன்னும் ஒருவரால் வாழ்வோம்
கருவறையில் என் தாயினால் வாழ்ந்தேன்
என் கல்லறைவரை உன் காதலினால் வாழனும்

உன் மடியில் தலை சாய்ந்து தூங்கனும்
உனது இளமையில் தினம் தினம் என் ஆண்மை சாகனும்
கனவுக்காதலிலே என் வருங்கால துணைவியே
உன்னை நினைத்து தினம் தினம்
என் பேனா எழுதிய அழகிய வரிகள் இவை

எனக்காக இந்த உலகில் பிறந்தவளே 
என் அன்பே யார் நீ எங்கே இருக்கின்றாய்?
எப்போது உன்னை பார்ப்பேன்?
என் இளமைதாகம் தீர்கவா அன்பே
உன் அன்பு மழையில் நான் நனையனும்.
உனக்கு முத்த மழை நான் பொழியனும்.

முஸ்கி-இது ஒரு கவிதை ஹி.ஹி.ஹி.ஹி....

முஸ்கி-இது யாரை நினைத்தும் எழுதப்பட்டது இல்லை முழுவதும் கற்பனை

ஒரு வேளை என்னை நினைச்சுதான் பாஸ் கவிதை எழுதியிருப்பாறோ


Post Comment

18 comments:

பாட்டு ரசிகன் said...

very.. very.. nice

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////

இது யாரை நினைத்தும் எழுதப்பட்டது இல்லை

/////////

நாங்க அப்படியே நம்பிட்டோங்க...

அம்பலத்தார் said...

நான் உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன்..... யாரப்பா அந்தப்பொண்ணு

Mohamed Faaique said...

ஆஹா...அடுத்த கொலை வெறிப் பாடல் தயார்...

Unknown said...

என்னா கொலவெறி? :-)
கலக்குங்க கிஸ் ராஜா!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல் .

சக்தி கல்வி மையம் said...

யார் அந்த தேவதை..
யார் அந்த தேவதை..
யார் அந்த தேவதை..?

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
யாரைக் குறித்தும் எழுதாதபோதே
இத்தனை அருமையாக இருக்கிறதே ?
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 8

M.R said...

கவித்துவமான தலைப்பு ,அழகிய கவிதை


தமிழ்மணம் 9

மற்றவற்றிலும் வாக்களித்தேன் நண்பா

குறையொன்றுமில்லை. said...

கவிதையும் நல்லா வருதே. வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

வருவாள் கண்டிப்பாய்
தருவாள் கேட்டதெல்லாம்!
(அருவாளோடு அப்பனும் வந்தால்?!)

Unknown said...

எனகுப் போட்டியா..?

அருமை அருமை!!

இவ்வழி எழுதி-மேலும்
செவ்வழி காண்க!

புலவர் சா இராமாநுசம்

கோகுல் said...

நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும்

(நடக்குமா இல்ல நடந்துடுச்சா?)

சி.பி.செந்தில்குமார் said...

ஏகத்துக்கம் ஏக்கமா இருக்கே. வந்துடுவாள் சீக்கிரம்.

பால கணேஷ் said...

நல்லவேளை... இது கவிதைன்னு சொன்னீங்க ராஜ்... இல்லன்னா கவிதைபாணி உரைநடைன்னு நினைச்சிருப்பேன். ஆனா மேட்டர் நல்லாத்தான் இருக்கு. காதலிச்சு எங்கயோ முதுகுல டின் வாங்கியிருப்பீங்களோன்னு லேசா ஒரு டவுட்டு வரத்தான் செய்யுது.... அருமை!

Riyas said...

ம்ம்ம் கவிதை கவிதை.. கலக்குறீங்க..

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
கவிதை அருமை..
கவிதையின் தலைப்பில் பூங்காற்றிலே உன் சுவாசத்திற்குப் பதிலாக நீங்கள் ஏதும் வித்தியாசமான தலைப்பினை வைத்திருக்கலாம்!

அப்புறமா உங்களுக்குள் சந்த கவி வரையக் கூடிய திறமை இருக்கு! முயற்சித்துப் பாருங்கள்!

நிரூபன் said...

நீங்கள் யாரையும் நினைத்து எழுதவில்லை என்றாலும், மனதினுள் எங்கோ ஓர் மூலையில் வாழும் ஒரு பெண் மீதான ஏக்க உணர்வினை இக் கவிதை சொல்லி நிற்கிறது.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails