தாஜ் மஹாலுக்கு போகவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.இதற்கு முன் பல முறை இந்தியா போயிருந்தாலும் ஒரு முறை கூட தாஜ் மஹாலை போய் பார்தது இல்லை.என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இதோ 2023 ஆண்டில் ஜனவரி மாதத்தில் தாஜ்மஹால் முன் நிற்கின்றேன்.
வாழ்க்கையின் ஒவ்வொறு நொடிகளும் வலிகளைத்தாங்குவது என்பது கொடுமை.இந்த நிலையில் வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைந்து போய்விடும் அப்படி நமக்கு நம்பிக்கை குறையும் பொழுதுகளில் எல்லாம் நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வர தொடர்ந்தும் வலிகளுடன் போராட ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயம் தேவை