இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 242 ஒட்டங்களால் படுதோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இழந்து.டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தையும் இழந்து விட்டது.
கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வென்ற போது சில நண்பர்கள் இங்கிலாந்தின் வெற்றியை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாது.சேவாக் விளையாடி இருந்தால் வென்று இருக்கலாம்.சகிர்கான் விளையாடி இருந்தால் வென்று இருக்கலாம்.நான் இந்திய அணியை மட்டம்தட்டி பதிவு எழுதுகின்றேன் என்று எல்லாம் எனக்கு கருத்துரை இட்டார்கள்.அவர்களிடம் இப்ப ஒரு கேள்வி இப்ப என்ன நடந்தது?.அதுவும் அதிரடி வீரர் சேவாக் இந்த 3வது டெஸ்ட்டில் இரண்டு இனிங்ஸ்களிலும் எதிர் கொண்ட முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து விட்டார்.இந்திய கேப்டன் தோனியை பாராட்ட வேண்டும் அவர் இந்தப்போட்டியில் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி இருந்தார் ஏனையை வீரர்கள்.துடுப்பாட்டத்தில் சொதப்பியதால் ஏற்பட்டதுதான் இந்த படுதோல்வி.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனும் இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஆரம்பத்துடுப்பாட்டவீரருமான குக் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான ஒரு இனிங்ஸ்சை ஆடியிருந்தார்.அவர் 294 ஒட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்.6 ஒட்டங்களால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் ஸ்கோரை முதலில் சுருக்கமாக பார்ப்போம்
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்ரோரஸ் இந்திய அணியை துடுப்பெடுத்து ஆட பணித்தார்.இந்திய அணி தன் முதல் இனிங்ஸ்சில் 224 ஒட்டங்களுக்கே சுருண்டுவிட்டது.தோனி மட்டும் தனியாக போராடி 77 ஒட்டங்களைப்பெற்றார்.நீண்ட நாட்களுக்குப்பிறகு அதாவது கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியின்பந்து வீச்சாளர்களை தோனி.சோதித்ததற்கு பிறகு. தோனி ஆடிய மிகச்சிறந்த இனிங்ஸ் இது.
பந்துவீச்சில் அண்டர்சன் 2விக்கெட்டுக்களையும்.ஸ்டூவட் பிராட் 4விக்கெட்டுக்கலையும்.பிரஸ்னன் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தனது முதல் இனிங்ஸ்சை ஆடிய இங்கிலாந்து அணி இந்தியப்பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.குறிப்பாக கடந்த இரண்டு போட்டிகளிலும் தடுமாறி வந்த குக் இந்த போட்டியில் ருத்திரதாண்டவம் ஆடினார்.அவர் 294 ஒட்டங்களைக்குவித்தார்.இவருக்கு அடுத்த படியாக மோர்க்கன் 104 ஒட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.இதனால் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 710 ஒட்டங்களைக்குவித்து டிக்ளேயர் செய்தது.
பந்து வீச்சில் அமிர்த்மிர்ஷா 3 விக்கெட்டுக்களையும்.பிரவிண்குமார் 2விக்கெட்டுக்களையும்.ரெய்னா 1விக்கெட்டுடையும்,இஷாந்சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
486 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 244 ஒட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்துவிட்டது.இதனால் ஒரு இனிங்ஸ் மற்றும் 242 ஒட்டங்களால் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்தது மட்டும் இன்றி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தையும் இழந்தது.இரண்டாவது இனிங்சிலும் இந்திய கேப்டன் தோனி சிறப்பாக ஆடினார் அவர் ஆட்டம் இழக்காது 74 ஒட்டங்களைப்பெற்றார்.அவருக்கு அடுத்தாக சச்சின் 40 ஒட்டங்களையும்.அதிரடியாக அடிய பிரவிண்குமார் 18 பந்துகளில் 3 சிக்ஸ்சர்.5 பவுண்ரிகளுடன் 40ஒட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார்.
பந்து வீச்சில் அண்டர்சன் 4 விக்கெட்டுக்களையும்,ஸ்டுவோட் பிராட் 2 விக்கெட்டுக்களையும்,ஸ்வான் 2 விக்கெட்டுக்களையும் பிரஸ்னன் 1விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்கள்,மற்றும் துடுப்பாட்டவீரர்கள்,மிகச்சிறப்பாக செயற்பட்டனர். அவர்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு கிடைத்த பரிசுதான்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியும்,டெஸ்ட் தரவரிசையில் முதல் இடமும்.
இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் இலகுவாக முதல் இடத்திற்கு வரவில்லை மிகக்கடுமையாக போராடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி.படிப்படியாக முதல் இடத்தைப்பெற்றார்கள்.இதற்கு முன்னால் இந்திய அணித்தலைவர் சவ்ரவ் கங்குலி அடித்தளம் இட்டவர் என்றார் மிகையாகாது.வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணியால் சிறப்பான வெற்றிகளை பெறமுடியும் என இந்திய அணியின்வீரர்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டி அதில் வெற்றியும் பெற்றார்.இந்த அடிதளம்தான் இந்திய அணியின் டெஸ்ட்தர வரிசையில் முதல் இடம் பிடிக்கவும் ஒரு காரணம்.
தோனி தலைவர் பதவி ஏற்ற பின்பு இந்திய அணி மேலும் சிறப்பாக செயல்ப்பட்டு டெஸ்தரவரிசையில் முதல் இடத்தை பெற்றது ஆனால்.கடின உழைப்பால்,சிறப்பான ஆட்டத்தால் பெற்ற டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை இந்திய அணி இலகுவாக இழந்துவிட்டது என்றே தோன்றுகின்றது.
அதுவும் மிக மோசமாக டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் தோனி கூறியது.தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதே தோல்விக்கு காரணம் என்றார்.ஆனால் இங்கிலாந்து அணியும்.உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் இலங்கை அணியுடனான தொடரில் ஆடிவிட்டே இந்திய தொடரில் விளையாடுகின்றார்கள்.அதேபோலதானே இந்திய அணியும் மேற்கு இந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஒரு தொடரில் விளையாடி விட்டு இங்கிலாந்து தொடரில் விளையாடுகின்றார்கள்.அதுவும் சச்சின்,கம்பீர்,போன்ற முன்னனி வீரர்கள் மேற்கு இந்திய தொடரில் விளையாடவில்லை.
இப்படி இருக்க தோனி ஏன் அப்படி தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடியதுதான் தோல்விக்கு காரணம் என்றார்.கூர்ந்து அவதானித்தால் அவர் சொன்னதன் அர்த்தம் புரியும்.அவர் ஜ.பி.எல். போட்டிகளைத்தான் மறைமுகமாக சாடியுள்ளார்.ஆம் உலகக்கோப்பை முடிந்த கையோடு இந்திய வீரர்கள் ஜ.பி.எல்.போட்டிகளில் விளையாடி அதில் சேவாக்,கம்பீர்,உட்டபட பலர்.காயம் அடைந்ததனால் மேற்கு இந்திய தொடரில் விளையாட முடியவில்லை.அதுவும் சேவாக் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.இப்படி சேவாக் ஜ.பி.எல் போட்டிகளில் காயம் அடைந்து சர்வதேசப்போட்டிகளில் விளையாட முடியாமல் போவது இது முதல்முறை இல்லை.கடந்த 20ஒவர் உலகக்கோப்பை போட்டிகளிலும் ஜ.பி.எல் போட்டிகளில்காயம் அடைந்ததால் சேவாக் விளையாடவில்லை.எனவே ஜ.பி.எல். போட்டிகளைவிட நாட்டிற்காக விளையாடும் போட்டிகள் முக்கியம் அல்லவா.இதை வீரர்கள் உணர்ந்தாலும்.ஜ.பில்.போட்டிகள் இந்திய கிரிக்கெட் சபையின் ஆதரவுடனே நடக்கும் போட்டித்தொடர்.இந்திய அணிவீரர்களோ இல்லை இந்திய கேப்டன் தோனியோ ஜ.பி.எல் போட்டிகளில் விளையாட முடியாது என அறிவிப்பதோ இல்லை ஜ.பி.எல்.போட்டிகளை சாடுவதோ கடினம்.
எனவேதான் தோனிமறைமுகமாக அப்படிச்சொல்லி உள்ளார்.ஏற்கனவே 20ஒவர் உலக்கோப்பை போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறிய போது.ஜ.பி.எல்.போட்டிகளின் போது அதிகளவான இரவு களியாட்டங்களில் கலந்து கொண்டதே தோல்விக்கு காரணம் என தோனி கூறி நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டது நினைவு இருக்கலாம்.
இந்திய அணிவீரர்களைவிட.அவுஸ்ரேலியா,இங்கிலாந்து,அணிவீரகள் ஒரு சிலரைத்தவிர பெரிதாக ஜ.பி.எல் போட்டிகளில் அக்கறை காட்டுவது குறைவு நாட்டிற்காக ஆடும் போட்டிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
பல திறமையான் இளம் வீரர்களை இனம் கான ஜ.பி.எல் போன்ற போட்டிகள் உதவினாலும் அதனால் சர்வதேசப்போட்டிகளுக்கு நெருக்கடி வரும் போது சிந்திக்கவேண்டும்.
ஜ.பி.எல்.போன்ற உள்ளூர்போட்டித்தொடர்களில்,தோனியோ,இல்லை,ரெய்னாவோ விராட் கோலியோ சதமோ இல்லை அரைச்சதமோ அடிப்பது பெரியவிடயம் இல்லை நாட்டிற்காக விளையாடும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்.வீரர்களுக்கு ஒய்வு வேண்டும் என்றால்.ஜ.பி.எல்.போன்ற உள்ளூர் தொடர்களில் ஒய்வு எடுங்கள் அதைவிட்டு விட்டு சர்வதேச தொடர்களில் ஏன் ஒய்வுஎடுக்கின்றீர்கள்.குறிப்பாக சச்சின் கூட உலகக்கிண்ணம் முடிந்த கையோடு ஜ.பி.எல்.போட்டிகளில் விளையாடி விட்டு மேற்கு இந்தியத்தொடரில் ஒய்வு கேட்டு விளையாடாமல்.இப்போது இங்கிலாந்து தொடரில் விளையாடி.தடுமாறி வருகின்றார்.இதில் இன்னும் ஒன்று ஜ.பி.எல். 20 ஒவர் போட்டிகளில் விளையாடும் அவர் சர்வதேச 20 ஒவர் போட்டிகளை தவிர்து அதில் இருந்து விலகி இருப்பவர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஒவர் சர்வதேசப்போட்டியில் மட்டும் சச்சின் விளையாடி இருக்கின்றார்.
எனவே இந்திய கிரிக்கெட் சபையும் வீரர்களும்தான் இதில் கவனம் செலுத்தவேண்டும்.அதைவிட்டு விட்டு உள்ளூர்போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு.சர்வதேசப்போட்டிகளில் தடுமாறும் போது.அதைகாரணமாக காட்டுவதைவிட சம்மந்தப்பட்டவர்கள் யோசிக்கவேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும்.டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் இழந்து விட்ட இந்திய அணி எஞ்சியுள்ள ஒரு டெஸ்ட்டிலாவது வெற்றி பெருமா இல்லை அதிலும் தோல்வி அடைந்து விடுமா.அடுத்து ஒரு நாள் தொடரில் இந்திய அணி என்ன செய்யப்போகின்றது என்பதுவும் கேள்விக்குறியே.உலகக்கோப்பையில் அசத்திய யுவராஜ் சிங்கும் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலையில்.ராகுல் ராவிட்டை மீண்டும் ஒரு நாள்,மறும் 20 ஒவர் அணிக்கு மீள அழைத்து இருக்கின்றார்கள்.இந்தத்தொடருடன் ராவிட் சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 20 ஒவர் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.எனவே இந்திய கிரிக்கெட்டிற்காக நிறைய உழைத்த ஒருவருக்கு கெளரவமாக ஒரு நாள் போட்டிகளில் இருந்து பிரியாவிடைக்கொடுக்கத்தான் இந்த தெரிவா இல்லை உண்மையில் ராவிட்டின் பங்களிப்பு மீண்டும் இந்திய அணிக்கு தேவைப்பட்டுள்ளதா?.அது இந்திய அணியின் தேர்வாளர்களுக்கே வெளிச்சம்.
இந்திய அணி ஒரு நாள் தொடரில் சாதிக்குமா?இல்லை அதிலும்படுதோல்வி அடையுமா பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் தோனி இந்திய அணித்தலைவர் ஆன பின் இந்திய அணி இழக்கும் முதலாவது டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடரை வென்றதுக்காகவும்,டெஸ்ட்தரவரிசையில் முதல் இடம் பெற்றதுக்காகவும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.
மிஸ்கி-சகபதிவர் மதிசுதா ஒரு அருமையான சமூகவேவைக்கான விடயம் ஒன்றை முன் எடுத்துச்செல்கின்றார்.அவரின் அந்த பதிவைக்கான இங்கே-
மனித நேயம் கொண்டதமிழருக்காக(அரவணைப்போம்-1)
முஸ்கி-முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்குப்பின் எழுதிய பதிவுகள் இரண்டு வாசிக்க பதிவுகளை கிளிக்செய்யவும்
அப்படியே உங்கள் வேலையை மறக்காமல் கருத்துரைகளைச்சொல்லிவிட்டுப்போங்க.முடிந்தால் ஓட்டுக்களையும் போட்டுவிட்டுப்போங்க.

இந்திய அணியை பந்தாடிய குக் |

வெற்றி பெற்ற பின் இங்கிலாந்து வீரர்கள் |
இந்த டெஸ்ட் தொடரை வென்றதுக்காகவும்,டெஸ்ட்தரவரிசையில் முதல் இடம் பெற்றதுக்காகவும் இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.
மிஸ்கி-சகபதிவர் மதிசுதா ஒரு அருமையான சமூகவேவைக்கான விடயம் ஒன்றை முன் எடுத்துச்செல்கின்றார்.அவரின் அந்த பதிவைக்கான இங்கே-
மனித நேயம் கொண்டதமிழருக்காக(அரவணைப்போம்-1)
முஸ்கி-முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்குப்பின் எழுதிய பதிவுகள் இரண்டு வாசிக்க பதிவுகளை கிளிக்செய்யவும்
- லோட்ஸ்சில் இந்திய அணியை துவைத்து எடுத்த இங்கிலாந்து அணி
- அதிஸ்டகரமான கேப்டன் டோனியின் அழிவுகாலம் ஆரம்பம் ஆகின்றதா?
அப்படியே உங்கள் வேலையை மறக்காமல் கருத்துரைகளைச்சொல்லிவிட்டுப்போங்க.முடிந்தால் ஓட்டுக்களையும் போட்டுவிட்டுப்போங்க.
|
19 comments:
தொடர் போட்டிகளினால் அயர்ச்சி அடந்த இந்தியா தொடர்ந்து தடுமாறுகிறது நண்பா:)
எனக்கு என்னமோ மிகவும் சந்தோசமாக உள்ளது :)
@சாய் பிரசாத் சொன்னது…
தொடர் போட்டிகளினால் அயர்ச்சி அடந்த இந்தியா தொடர்ந்து தடுமாறுகிறது நண்பா:)
எனக்கு என்னமோ மிகவும் சந்தோசமாக உள்ளது :
நன்றி நண்பா.ஆனால் இந்திய அணியின் தோல்விகளை ஏற்க மனம் இல்லாது பல நண்பர்கள்,இங்கிலாந்தின் வெற்றிகளை ஏற்க மறுக்கின்றார்கள்.
நம்பர் வன் இடத்தை பிடித்துவிட்டார்கள், ஆனால் அதை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல.. தமது மண்ணுக்கு வெளியிலும் சென்று தொடர்ச்சியாக போட்டிகளை வெல்லட்டும், முக்கியமாக ஆசிய மண்ணில் வந்து இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளேன். மற்றும் படி இந்திய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு மிக மோசம், தொடர்ச்சியான போட்டிகளால் தான் இந்த நிலையையும் இருக்கலாம்.
இங்கிலாந்து ஆடுகளங்கள் சுழல் பந்துக்கு சாதகமாகவும் இல்லை.
சேவாக்கின் ஆட்டமிழப்பு அவரின் அதிஸ்ரத்தை தான் சுட்டி நிற்கிறது..
வீட்ல புலி. வெளில எலி?
வோட் போட்டேன்
பட் நோ கமண்ட்ஸ்
கிரிக்கெட் என்றால்
நமக்கு அலர்ஜி பாஸ்
@ கந்தசாமி. கூறியது...
நம்பர் வன் இடத்தை பிடித்துவிட்டார்கள், ஆனால் அதை தக்க வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல.. தமது மண்ணுக்கு வெளியிலும் சென்று தொடர்ச்சியாக போட்டிகளை வெல்லட்டும், முக்கியமாக ஆசிய மண்ணில் வந்து இவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை காண ஆவலாக உள்ளேன். மற்றும் படி இந்திய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு மிக மோசம், தொடர்ச்சியான போட்டிகளால் தான் இந்த நிலையையும் இருக்கலாம்
நீங்கள் சொல்லது சரிதான் முதல் இடத்தைப்பிடித்தாலும் அதை தக்கவைப்பது இலகுவான விடயம் இல்லை இங்கிலாந்து என்ன செய்யப்போகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
சுழல் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகம் இல்லைத்தான்.இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வானின் பந்து வீச்சுக்கும் அடி விழுந்ததுதான்.ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சிறப்பாகவே இருந்தது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டனர்.இந்திய பந்து வீச்சாளர்கள் என்ன செய்தார்கள்.பிரவின் குமார் மட்டுமே ஒரளவு நன்றாக செயற்பட்டார்.மற்ற படி இந்திய பந்து வீச்சு படு மோசமாக இருந்தது.அதோடு துடுப்பாட்டவீரர்களும் சொதப்பியதால் ஏற்பட்டதுதான் இந்த படுதோல்வி
@! சிவகுமார் ! சொன்னது…
வீட்ல புலி. வெளில எலி..
சரியாச்சொன்னீங்க
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் சொன்னது..
நன்றி தல
சிறப்பான அலசல்...நான் வந்திட்டேன்...........~~~~~!!!!!!
அடுத்தடுத்த பதிவுகளில் கலக்குவோம் சகோ!

@மைந்தன் சிவா சொன்னது…
சிறப்பான அலசல்...நான் வந்திட்டேன்...........~~~~~!!!!!!
அடுத்தடுத்த பதிவுகளில் கலக்குவோம் சகோ
வாங்க....நீண்ட நாட்களுக்கு பிறகு.....கலக்குவோம் பாஸ்
nice post,gud writting
@karurkirukkan சொன்னது…
nice post,gud writting
thanks friend
தோனிக்கு இது மிக பெரிய சருக்கல். . .பாவம் அவர். . .வெற்றிகளை சுமந்த அவர் முதுகின்மேல் தோல்வி பெட்டகம். . .
அருமையான அலசல் வாழ்த்துக்கள்...!
@பிரணவன் சொன்னது..
நன்றி நண்பா
@Nirosh சொன்னது..
நன்றி பாஸ்
விலாவாரியான பதிவு. இந்திய அணிக்கு இது ஒரு சரிவுதான். ஆனால் வீழ்ச்சி அல்ல. அணிக்குள் புகுந்திருக்கும் அரசியல் பேய் தலை தூக்கும் நேரம் எல்லாம் இந்த மாதிரி சரிவு ஏற்படுவது இயற்கையே.
@பாலா சொன்னது…
விலாவாரியான பதிவு. இந்திய அணிக்கு இது ஒரு சரிவுதான். ஆனால் வீழ்ச்சி அல்ல. அணிக்குள் புகுந்திருக்கும் அரசியல் பேய் தலை தூக்கும் நேரம் எல்லாம் இந்த மாதிரி சரிவு ஏற்படுவது இயற்கை.
உண்மைதான் நண்பரே இந்தியஅணி தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று நினைக்கின்றேன் பொறுத்து இருந்து பார்ப்போம்.
Post a Comment