Tuesday, July 26, 2011

(சிறப்பு பார்வை)டோனி அணியை லோர்ட்ஸ்சில் துவைத்து எடுத்த இங்கிலாந்து அணி.


சர்வதேச அளவில் நடை பெற்ற 2000வது டெஸ்ட்போட்டி(இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 100வது டெஸ்ட்போட்டி)பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி ஆரம்பமாகியது.குறிப்பாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார்.




லோர்ட்ஸ்மைதானத்தில் ஒரு அரைச்சதம் கூட பெறமுடியாத சச்சினின் துரதிஸ்டம் தொடர்ந்து விட்டது அவர் முதல் இனிங்சில் 34 ரன்களும் இரண்டாவது இனிங்சில்12ரன்களுக்கும் ஆட்டம் இழந்தார்.முதல் நாள் ஆட்டத்தின் போது சகிர்கான் காயம் அடைந்தது நிச்சயம் இந்திய அணிக்கு பேர் இழப்பே.ஆனால் இஷாந்சர்மா,பிரவின் குமாரும் சிறப்பாகவே பந்து வீசினர்.இதில் ஒன்றைக்குறிப்பிட வேண்டும் இங்கிலாந்து இரண்டாவது இனிங்சில் தடுமாறிக்கொண்டு இருந்த போது சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய இஷாந் சர்மாவை உணவு இடைவேளைக்குப்பின் டோனி பந்துவீச அழைக்கவில்லை.
இது குறித்து கூறியுள்ள இந்திய முன்னால் வீரர் கவாஸ்கர்-இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இஷாந்த் சர்மா சிறப்பாகப் பந்து வீசினார். 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய அவரை, மதிய உணவு இடைவெளிக்குப்பின் பந்து வீச டோனி அழைக்கவில்லை.

இதனால் பிரையரும், பிராடும் நிலைத்து நின்று ஆடி அதிக ரன்களை குவித்து விட்டனர். இஷாந்த் பந்து வீசியிருந்தால் அவர்களை அவுட் ஆக்கியிருக்கலாம் என்று காவஸ்கர் கூறியுள்ளார்


இதுபற்றி இஷாந்சர்மா கூறி இருப்பது-.இதனிடையே தனக்கு ஓய்வு வேண்டுமென்று தோனியிடம் கேட்டதாக இஷாந்த் சர்மா கூறியுள்ளார். 4-வது நாளில் தொடக்கத்தில் இருந்து 11 ஓவர்களை வீசிவிட்டேன். எனவே சிறிது ஓய்வு வேண்டுமென்று தோனியிடம் கேட்டேன். அதனால்தான் அவர் என்னை பந்து வீசுமாறு கூறவில்லை என்று இஷாந்த் தெரிவித்தார்.

சகிர்கான்

ஆனால் சகிர்கானும் இல்லாத நிலையில் இங்கிலாந்துதடுமாறிக் கொண்டிருந்த போது சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த இஷாந் சர்மாவை பந்து வீச அழைக்காதது நிச்சயம் தவரான முடிவே .
இதனால் பிரையர்,பிராட் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இஷாந் ஒய்வு கேட்டாலும் டோனி கட்டாயம் பந்துவீச அழைத்து இருக்கவேண்டும்


டோனி பலமுறை தவறான முடிவுகள் எடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த மேற்கு இந்தியதீவுகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் போது வெற்றி பெற குறைந்த ரன்கள் தேவைப்பட்டபோது (86ரன்கள்)ஆட்டம் முடிய 15 ஒவர்கள் மிஞ்சி இருந்தும்.அதுவும் ராவிட் ஆடிக்கொண்டிருந்த போது பின்னால் விக்கெட்டுக்கள் இருந்த போதும்.டோனி போட்டியை சமநிலையில் முடித்துக்கொள்ள சம்மதித்ததனால் போட்டி சமநிலையில் முடித்துக்கொள்ளப்பட்ட்து.குறிப்பிடத்தக்கது.


இரட்டைச்சதம் விளாசிய பீட்டர்சன்(202*)

இந்தபோட்டியில் இங்கிலாந்து முதல் இனிங்சில் கெவின் பீட்டர்சன் விளாசிய இரடைச்சதத்தின் உதவியுடன் 8 விக்கெடுக்களை இழந்து 474 ஒட்டங்களை பெற்று டிக்கிளேயர் செய்தது.பந்து வீச்சில் பிரவின் குமார் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.பலமான துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட இந்தியா அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து இழக்கப்பட்டது ,அனுபவம் அற்றஆரம்பதுடுப்பாட்ட வீரர் அபினைமுகுந் 49 ஒட்டங்களைப்ப்பெற்றாலும் அவரது துடுப்பாட்டம் சிறப்பானது என சொல்ல முடியாது.கம்பீரும் 13 ஒடங்களுக்கு ஆட்டம் இழந்து விட்டார்.

டோனி-பாஸ்(ராவிட்)உங்களை நம்பித்தான் நாங்க

கடைசியில் தடுமாறுகின்ற போது ராவிட்டை நம்பித்தான் இந்திய டெஸ்ட் அணி இருக்கின்றது என்பது மீண்டும் நிரூபனம் ஆகியது .

பயப்படத்தேவை இல்லை நான் விளையாடும் வரை இந்திய அணியைத்தாங்குவேன்

இந்திய அணியின் பலோ ஒன்னைதவிர்ப்பதற்கு ராவிட் தனி நபராக போராடிஆட்டம் இழக்காமல்103 ஒட்டங்களைப்பெற்று இந்திய அணியை பலோ ஒன்னில் இருந்துதவிர்த்தார்

லோர்ட்சில் சதம் அடித்த இந்திய அணியின் பெரும் சுவர் ராகுல் ராவிட்

முதல் இனிங்சில் இந்தியா 286 ஒடங்களுக்கு ஆட்டம் இழந்தது.பந்து வீச்சில் பிராட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.எல்லா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து 188 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இனிங்சில் விக்கெட்டுக்களை விரைவாக இழந்த போதும் பிரையரின் சிறப்பான சதம்,பிராட்டின் அரைச்சதம், உதவியுடன்.6 விகெடுக்களை இழந்து 269 ஒட்டங்களை பெற்று டிக்கிளேயர் செய்தது.இஷாந் சர்மா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.எனவே இந்திய அணிக்கு 458 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.கம்பீர் காயம் அடைந்ததால்.முகுந்துடன், ராவிட் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம்
இறங்கினார்.முகுந் 12 ஒட்டங்களுடன்ஆட்டம் இழக்க அடுத்து களம் இறங்கிய லக்ஸ்மன்,ராவிட்டுடன் இனைந்து நிதானமாக விளையாடினார் 4 வது ஆட்ட நேரமுடிவில் 1விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 80 ஒட்டங்கள் எடுத்து இருந்தது.5ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் சிறப்பாக பந்து வீசி இந்திய துடுப்பாட்டவரிசையை சின்னாப்பின்னம் ஆக்கினார்.ராவிட்36 ரன்களும்,லக்ஸ்மன் 56 ரன்களும்,கம்பீர்22,சச்சின்12,டோனி 16,ஹர்பஜன்சிங்12,பிரவின் குமார் 2,இஷாந் சர்மா 1,சகிர்கான் ஒட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழக்காமல் இருந்தார்,ரெய்னா மாத்திரம் தனிநபராக போராடி 78 ஒட்டங்களைக் பெற்று ஆட்டம் இழந்தார்,இந்திய அணி இரண்டாவது இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261ங்களை மாத்திரம் பெற்றது இந்தனால் 196 ரன்களினால் தோல்வியைத்தழுவியது.அண்டர்சன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


நம்பர் வன் டெஸ்ட் அணிக்கு லோர்ட்சில் இங்கிலாந்து செம அடி கொடுத்துள்ளது.
  • இங்கிலாந்து கேப்டன் ஸ்ரோரஸ் சொன்ன மாதிரியே சச்சினை 100வது சதம் அடிக்கவிடவில்லை.
  • இந்தபோட்டியில் டோனி பந்து வீசியதனால் ராகுல் ராவிட் விக்கெட் கீப்பராக கொஞ்ச நேரம் செயல் பட்டார் நீண்டகாலத்துக்குப்பிறகு ராவிட் விக்கெட் கீப்பராக செயல் பட்டதை பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
  • ராகுல் ராவிட் இந்தப்போட்டியில் டெஸ்ட்போட்டிகளில் அதிகஒட்டங்கள்,குவித்தவர்களில் ரிக்கிப்பொண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தைப்பிடித்தார்.அதிக டெஸ்ட் ஒட்டங்களைப்பெற்றவர்களில் சச்சின் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது
  • அதேபோல் ராவிட்டின் சதம் ராவிட் 1996ம் ஆண்டு தனது அறிமுக டெஸ்ட் போடியில் இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் 95 ஒட்டங்களைப்பெற்று ஆட்டம் இழந்தார் இதேபோட்டியில் இன்னும் ஒரு அறிமுக வீரராக களம் இறங்கிய கங்குலி சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.அதற்கு 14 வருடங்களுக்குப்பிறகு லோர்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக ராவிட் சதம் அடித்துள்ளார்.அந்தவகையில் இந்த சதம் சிறப்பு பெறுகின்றது
  • முகுந் நன்றாக ஆடினாலும் பலமான ஒரு ஆரம்பத்துடுப்பாட்ட வரிசை இங்கிலாந்துக்கு எதிராக நிச்சயம் தேவை சேவாக் இல்லாததன் விளைவு டோனிக்கு புரிந்து இருக்கும்
  • அனுபவம் இல்லாத அபினை முகுந்துக்கு பதிலாக சச்சினை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களம் இறக்கி,அல்லது ராவிட்டை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களம் இறக்கி மத்திய வரிசையில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.ஆனால் ராவிட்டை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறக்கினால் அவரது முக்கியத்துவம் வாய்ந்த 3ம் இலக்கத்துடுபாட்ட வரிசையில் வெற்றிடம் வந்துவிடும் ஏன் என்றால் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் 3வது துடுப்பாட்ட வீரராக ராவிட் இந்திய அணியை தன் சிறப்பான துடுப்பாட்டத்தினால் தாங்கி நிற்பார்.ஆனால் சச்சினை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அனுப்பி இருக்கலாம் இதனால்.யுவராஜ் சிங்க்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.
  • ஏன் என்றால் யுவராக் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர்.
  • அத்துடன் யுவராஜ் சிறந்த சுழல் பந்துவீச்சாளரும் கூட ரெய்னாவை பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்தலாம் என்றாலும் ரெய்னாவை விட யுவராஜ் சிறந்த பகுதி நேர பந்துவீச்சாளர்
  • மற்றது நெருக்கடியான நேரங்களில் யுவராஜ் சிங் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்
  • அடுத்த டெஸ்ட்டில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்
  • ராகுல் ராவிட்டின் ஒய்வுக்கு முன்னர் அவருக்கு மாற்று வீரரை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும் இல்லை என்றால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் ராகுல் ராவிட்டின் ஒய்வுக்குப்பின்னர் கேள்விக்குறியே.
  • எப்படி அவுஸ்ரேலிய அணி,ஷேன் வோன்,மெக்ராத்,மத்தியூ கேய்டன்,டேமியன் மார்ட்டின்,அடம் கில்கிறிஸ்ட்,போன்றோர் சமகாலத்தில் ஒய்வு பெற்றதும், பாதிப்பை ஏற்படுத்தியதோ..அதேபோல் இந்திய அணிக்கும் ராகுல் ராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,இவர்களின் ஒய்வுக்குப்பின் இந்திய டெஸ்ட் அணி தடுமாறும் என்பது மறுக்க முடியாது
  • இவர்களின் ஒய்வுக்கு முன்னர் இவர்களுக்கு நிகரான வீரர்களை இனம் காண்பது கஸ்டமே இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.
  • அபினை முகுந் எதிர்காலத்தில் சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.ஆனால் இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்கள் வருவதும் போவதும்,சிலர் சிலகாலம் பிரகாசிப்பதும் பிறகு காணாமல் போவதும் வழமைதானே.இதைவிட கங்குலியையே காலிபன்னிய இந்திய கிரிக்கெட்டில் அபினை முகுந் எல்லாம் எம் மாத்திரம்
எது எப்படியோ 2000மாவது டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி.பீட்டர்சன் விளாசிய இரட்டைச்சதம்,பிரையரின் சதம்,இந்திய கிரிக்கெட் அணியின் பெரும் சுவர் ராகுல் ராவிட்டின் சதம்.போன்றவற்றால் சிறப்புப்பெற்றுள்ளது.அடுத்த டெஸ்ட் போட்டியில் டோனி என்ன செய்யபோகின்றார்.யுவராஜ்சிங்கிற்கு வாய்ப்பு கொடுப்பாரா இல்லையா.அடுத்த போட்டியிலாவது சச்சின் 100வது சதம் அடித்து ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வாரா,டோனி அணி வெல்லுமா பொருத்து இருந்து பார்ப்போம்

அப்படியே மறக்காமல் உங்கள் கருத்துரைகளைச்சொல்லி விட்டுப்போங்க

Post Comment

26 comments:

பிரியதர்சினி.மாணிக்கவாசகம் said...

கிரிக்கெட் எனக்கு பெருசா தெரியாது.ஆனாலும் சச்சின் பிடிக்கும் அவர் சதம் அடிக்காதது கவலை

K.s.s.Rajh said...

@வலையகம் சொன்னது…
வணக்கம் நண்பரே
உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்..

நன்றி வலையகம்

K.s.s.Rajh said...

@பிரியதர்சினி.மாணிக்கவாசகம் சொன்னது…
கிரிக்கெட் எனக்கு பெருசா தெரியாது.ஆனாலும் சச்சின் பிடிக்கும் அவர் சதம் அடிக்காதது கவலை.

நன்றி சகோதரி தங்கள் கருத்துக்களுக்கு

Anonymous said...

நல்ல அலசல் சகோதரா ..சகீர்கானின் இழப்பு இந்திய அணியை முதல் இனிங்சில் பெரும் பின்னடவை கொடுத்துவிட்டது.

Anonymous said...

அனுபவம் இல்லாத அபினை முகுந்துக்கு பதிலாக சச்சினை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களம் இறக்கி,அல்லது ராவிட்டை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களம் இறக்கி மத்திய வரிசையில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்/// ஆனால் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை ஆரம்ப வீரராக களமிறக்கி அதிக நெருக்கடி கொடுக்க அணி விரும்பாது என்று தான் நினைக்கிறேன், இருந்தும் தற்போதைக்கு முகுந்த் பருவாயில்லை என்றே நினைக்கிறேன் (முரளி விஜய் யிலும் பார்க்க)

Anonymous said...

///எப்படி அவுஸ்ரேலிய அணி,ஷேன் வோன்,மெக்ராத்,மத்தியூ கேய்டன்,மேமியன் மார்ட்டின்,அடம் கில்கிறிஸ்ட்,போன்றோர் சமகாலத்தில் ஒய்வு பெற்றதும், பாதிப்பை ஏற்படுத்தியதோ..அதேபோல் இந்திய அணிக்கும் ராகுல் ராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,இவர்களின் ஒய்வுக்குப்பின் இந்திய டெஸ்ட் அணி தடுமாறும் என்பது மறுக்க முடியாது// நீங்கள் சொல்வது சரி தான் பாஸ் ,அதற்கிடையில் ஹோலி, ரைனா போன்றோருக்கு போதிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது

நன்றி நண்பரே.
தற்போது சிறப்பாக விளையாடாத முரளிவிஜய்யிலும் பார்க்க அபினைமுகுந் பரவாஇல்லைதான்.எதிர்காலத்தில் சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வருவார்.
ராவிட்டை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக இறக்க முடியாது அவரதுவிக்கெட் ஆரம்பத்தில் வீழ்ந்து விட்டால் இந்திய அணிக்கு நெருக்கடிதான் ஆனால் சச்சினை இறக்கலாம் சச்சின் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக வந்தால் எதிரணிகளுக்கு ஒரு மனரீதியிலான நெருக்கடி ஏற்படும் அதைவிட சச்சின் மிகச்சிறந்த ஆரம்பத்துடுப்பாட்டவீரர் தானே ஒரு நாள் போட்டிகளில் தற்போதும் இந்திய அணியில் அவர்தானே ஆரம்பத்துடுப்பாட்டவீரர்.முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் சேவாக் இல்லாதபோது சச்சினை ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக இறக்கலாம் என்பது என்கருத்து.
தங்கள் விரிவான கருத்துரைகளுக்கு மீண்டும் நன்றி நண்பரே

"ராஜா" said...

இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைய முதல் காரணம் ஜாகீர் கான் முதல் இன்னிங்ஸ்ஸில் காயமடைந்ததுதான் ...

இரண்டாவது சச்சினின் வைரல் ஃபீவர் .... சிங்கம் இந்த அளவு தடுமாறி நான் பார்த்ததில்லை ...

"ராஜா" said...

// லோர்ட்சில் இங்கிலாந்து செம அடி கொடுத்துள்ளது.

இந்திய வேங்கைகள் இதை விட பெரிய அடியை திருப்பி கொடுப்பார்கள் நண்பரே.. எதிலும் no1 அவ்வளவு எளிதில் திறமை இல்லாமல் கிடைத்துவிடாது ....

"ராஜா" said...

// ராவிட்டை நம்பித்தான் இந்திய டெஸ்ட் அணி இருக்கின்றது என்பது மீண்டும் நிரூபனம் ஆகியது .

ஒரு ஆட்டத்தை மட்டும் வைத்து இந்த முடிவுக்கு வரக்கூடாது நண்பா.... கம்பீர் , சச்சின் , சேவாக் இவர்கள் இருக்கும் வரை டிராவிட் இல்லையென்றாலும் இந்தியா டெஸ்டில் no 1 தான் ...

"ராஜா" said...

மேலே உள்ள லிஸ்டில் ஜாகீரையும் சேர்த்து கொள்ளலாம் ...

"ராஜா" said...

ஆனால் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார்.

வழக்கம் போலவா? அப்படினா சச்சின் இன்னமும் சதமே அடிக்க ஆரம்பிக்கவில்லையா? இல்லை அவர் அடித்த 99 சாதங்களும் வீணா போன ஆட்டங்களில் அடித்ததா?

K.s.s.Rajh said...

@"ராஜா" சொன்னது/
ராவிட்டை நம்பித்தான் இந்திய டெஸ்ட் அணி இருக்கின்றது என்பது மீண்டும் நிரூபனம் ஆகியது .

ஒரு ஆட்டத்தை மட்டும் வைத்து இந்த முடிவுக்கு வரக்கூடாது நண்பா.... கம்பீர் , சச்சின் , சேவாக் இவர்கள் இருக்கும் வரை டிராவிட் இல்லையென்றாலும் இந்தியா டெஸ்டில் no 1 தான் ...

நன்றி நண்பரே இந்த ஒரு ஆட்டத்தை வைத்து நான் ராகுல் ராவிட் பற்றி சொல்லவில்லை.இந்திய அணி டெஸ்ட்போட்டிகளில் தடுமாறுகின்றபோது எல்லாம் பல நேரங்களில் கை கொடுப்பவர் ராவிட்தான்.இந்திய அணியின் பல அற்புதமான டெஸ்ட் இனிங்சுகளுக்கு ராவிட் மூலகாரணமாக இருந்துள்ளார்.அதனால் தான் கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் பெரும் சுவர் என்று ராகுல்ராவிட் அழைக்கப்படுகின்றார்.சச்சின் கூட கிரிக்கெட் உலகில் அப்படி அழைக்கப்படுவது இல்லை.

K.s.s.Rajh said...

"ராஜா" சொன்னது…
// லோர்ட்சில் இங்கிலாந்து செம அடி கொடுத்துள்ளது.

இந்திய வேங்கைகள் இதை விட பெரிய அடியை திருப்பி கொடுப்பார்கள் நண்பரே.. எதிலும் no1 அவ்வளவு எளிதில் திறமை இல்லாமல் கிடைத்துவிடாது ...

நான் இந்திய அணி திறமை அற்ற அணி என்று சொல்லவில்லை நண்பரே.சச்சின்,ராகுல்ராவிட்,சேவாக்,லக்ஸ்மன்,இவர்கள் எல்லாம் மிகச்சிறந்த வீரர்கள்,அதிலும் சச்சினின் சாதனைகளை இன்னும் ஒரு வீரர் முறியடிப்பது என்பது எளிதான காரியம் இல்லை.இந்தியா நம்பர் வன் இடத்திற்கு தகுதியான அணி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் இங்கிலாந்து அணியும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எவ்வகையிலும் குறைந்த அணி இல்லை

K.s.s.Rajh said...

"ராஜா" சொன்னது…
ஆனால் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார்.

வழக்கம் போலவா? அப்படினா சச்சின் இன்னமும் சதமே அடிக்க ஆரம்பிக்கவில்லையா? இல்லை அவர் அடித்த 99 சாதங்களும் வீணா போன ஆட்டங்களில் அடித்ததா

அப்படி இல்லை நண்பரே வழக்கம் போல சச்சின் ஏமாற்றினார் என்று குறிப்பிட்டது பல நேரங்களில் ரசிகர்கள் சச்சின் சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கின்றபோது அவர் அதனை நிகழ்த்துவது இல்லை,உதாரணத்திற்கு சச்சினின் 50வது டெஸ்ட் சதத்தை நியூஸ்லாந்து தொடரில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சச்சின் அந்தத்தொடரில் 50வது டெஸ்ட் சதம் அடிக்கவில்லை.அதற்கு அடுத்த தென்னாபிரிக்காவுடனான தொடரில்தானே 50 வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
அதேபோல் அவர் 100வது சதத்தை கடந்த உலகக்கிண்ணப்போட்டிகளின் போதே அடிப்பார் என்று எவ்வளவு எதிர்பார்க்கப்பட்டது.அவரால் அடிக்க முடியவில்லையே.தற்போது இங்கிலாந்துடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது சச்சின் அடிக்கவில்லையே.இதனால் தான் வழக்கம் போல் சச்சின் ஏமாற்றினார் என்று குறிப்பிட்டுள்ளேன்.
மற்றபடி சச்சின் அடித்த 99 சதங்களும் வீனாப்போன ஆட்டங்களில் அடித்தது என்று நான் சொல்லவில்லையே நண்பரே.சச்சினை எனக்கு தனிப்பட்ட ரீதியில் பெரிதாக பிடிக்காவிட்டாலும் நான் எந்த சந்தர்பத்திலும் அவரை குறைகூறியது இல்லை.சச்சின் மிகச்சிறந்த கிரிக்கெட்வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

K.s.s.Rajh said...

@ராஜா" சொன்னது

தங்கள் விரிவான கருத்துரைகளுக்கு நன்றி நண்பரே

Sabireen said...

பொறுத்து இருந்து பார்ப்போமே, இன்னும் மூன்று டெஸ்ட் உள்ளது நண்பரே, இப்போது நமது அணியின் வீரர்களின் தவறுகளை திருத்தி கொள்வார்கள், நிச்சயம் நாம் உலகத்தில் முதல் இடத்திற்கு தகுதியானவர்கள் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு புரியவைப்பார்கள் நம் இந்திய அணி வீரர்கள் ...

K.s.s.Rajh said...

@Hi I am Sabireen From Ayangudi சொன்னது...

நன்றி நண்பரே.
அடுத்த போட்டிகளில் இந்திய அணி என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.எனது வலைப்பதிவை வாசித்து கருத்துரைகளை இடுவதற்கு மீண்டும் நன்றிகள் நண்பரே.

பாலா said...

இந்திய அணி மீண்டு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்புறம் சச்சினின் மீதான நெருக்கடி தேவை அற்றது.

பாவம் இங்கிலாந்தும் ஒரு போட்டியில் ஜெயிக்கட்டுமே?
- இப்படிக்கு சூனா பானா.

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது....

நன்றி நண்பரே

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், கடந்த வாரம் முழுவதும் கொஞ்சம் பிசியாகி விட்டேன், அதனால் உங்கள் பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், மன்னிக்கவும், இன்று படித்துக் கருத்துக்களை வழங்குகிறேன்.

"ராஜா" said...

// பாவம் இங்கிலாந்தும் ஒரு போட்டியில் ஜெயிக்கட்டுமே?

repeattuuuuuuu

// இப்படிக்கு சூனா பானா.

விரைவில் நாம் ஆட்கள் நாங்கள் சூனா பானா இல்லை சூப்பர் ராணா என்பதை நிரூபிப்பார்கள்


// ஆனால் இங்கிலாந்து அணியும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எவ்வகையிலும் குறைந்த அணி இல்லை

அவர்கள் ஊரில் மட்டும் என்று திருத்தி கொள்ளவும் ... மேலும் இந்திய அணியினர் எப்பொழுதும் slow starters ... குறிப்பாக வெளிநாடுகளில் .... we have the ability to bounce back strongly in any condition...

// இந்திய அணி டெஸ்ட்போட்டிகளில் தடுமாறுகின்றபோது எல்லாம் பல நேரங்களில் கை கொடுப்பவர் ராவிட்தான்.

இந்திய அணியில் திராவிட்டுக்கு மட்டுமே பல நேரங்களில் அணியை காப்பாற்றிய பெருமை இருக்கிறது என்று சொல்ல முடியாது .. சேவாக் தொடங்கி ஹர்பஜன் வரை எல்லாருமே அணி தடுமாறிய பொது கை கொடுத்திருக்கிறார்கள் ... ஒருவரையோ இல்லை இருவரையோ நம்பி இந்திய அணி விளையாடிய நாட்கள் மலையேறிவிட்டன ... டிராவிட் மிக சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் ஐயமில்லை ... ஆனால் இந்திய அணியில் அவர் மட்டுமே பெஸ்ட் இல்லை ...


சச்சின் மீது அதிக எதிர்பார்ப்பு தேவை இல்லாத ஒன்று .... அவரை இயல்பாக விளையாட விட்டால் கண்டிப்பாக இன்னும் நன்றாக விளையாடுவார் ...

K.s.s.Rajh said...

நிரூபன் சொன்னது…
வணக்கம் சகோதரம், கடந்த வாரம் முழுவதும் கொஞ்சம் பிசியாகி விட்டேன், அதனால் உங்கள் பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், மன்னிக்கவும், இன்று படித்துக் கருத்துக்களை வழங்குகிறேன்

நன்றி நீங்கள் தொடர்ந்து எனது பதிவுகளை வாசிப்பதே சந்தோசம் பாஸ்

K.s.s.Rajh said...

@ராஜா" சொன்னது...

நன்றி நண்பரே

Unknown said...

அலசல் நல்லா இருக்கு.....பாஸ்!!தொடருகிறேன்!

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா சொன்னது…
அலசல் நல்லா இருக்கு.....பாஸ்!!தொடருகிறேன்

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails