டிரன்ட்பிரிஜில் ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 221 ஒட்டங்களைப்பெற்று அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்தது அதிகபட்சமாக அந்த அணியின் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 64 ஒட்டங்களைப்பெற்றார்.பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரவீன் குமார் 3விக்கெட்டுக்களையும் இஷாந் சர்மா 3 விக்கெட்டுக்களையும்,சிறிசாந்த் 3 விக்கெடுக்களையும் கைப்பற்றினர்.தொடர்ந்து தனது முதலாவது இனிங்சை விளையாடிய இந்திய அணி 288 ஒட்டங்களுக்கு அனைத்துவிக்கெட்டுக்களையும் இழந்தது.ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களம் இறங்கிய இந்திய அணியின் சுவர் ராகுல் ராவிட் சிறப்பாக விளையாடி117 ஒட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்.ராவிட்டுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கிய யுவராஜ்சிங் 62 ஒட்டங்களைப்பெற்றார்.
பாவம் இந்த மனிதரும் எத்தனை நாளைக்குத்தான் இந்திய அணியைக் காப்பாற்றுவது |
பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் இதில் கெட்ரிக் விக்கெட் வேறு.தொடர்ந்து இரண்டாவது இனிங்சில் இங்கிலாந்து அணி 544 ஒட்டங்களைக்குவித்தது.அதிகபட்சமாக இயன்பெல்159 ஒட்டங்கள்,பிரெஸ்னன் 90 ஒடங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இங்கிலாந்து அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் மிகச்சிறப்பாகவிளையாடினர்,இதனால் இந்திய அணிக்கு 478 ஒட்டங்கள வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது ஒன்றரை நாள் ஆட்டம் மிஞ்சிய நிலையில் இந்திய அணியினர் துடுப்பெடுத்து ஆட ஆரம்பித்தனர் ஆனால் 4ம் நாள் ஆட்டத்தில்லேயே இந்திய அணி 158 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழந்து 319 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விகண்டது.அதிகபட்சமாக சச்சின் 56 ஒட்டங்களைப்பெற்றார்.பந்து வீச்சில் பிரெஸ்னன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
கெட்ரிக் (Hat trick)விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட் |
இனி போட்டி பற்றி பார்ப்போம்
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிகச்சிறப்பாகவே அமைந்து இருந்தது அண்டர்சன்,பிராட்,பிரெஸ்னன்,போன்றவர்கள் மிகச்சிறப்பாகவே பந்து வீசினர்,அதிலும் அண்டர்சனின் பவுன்சர் பந்துகளுக்கு இந்திய வீரர்கள் அபினைமுகுந்,ரெய்னா போன்றவர்கள் திணறினர்.துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியில் குக் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றார்,அதேபோல் கேப்டன் ஸ்ரோரஸ்சின் ஆட்டமும் அவ்வளவு சிறப்பாக இல்லை ஆனால் மற்றதுடுப்பாட்ட வீரர்கள் மிகச்சிறப்பாகவே ஆடினர் இயன் பெல்,பீட்டர்சன்,விக்கெட் காப்பாளர் மைக் பிரயர்,பிரஸ்னன், அதிலும் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அதிரடியாக ஆடி இந்திய வீரர்களை சோதித்தார். இதில் ஒன்றை குறிப்பிடவேண்டும் யுவராஜ் சிங் 20 உலகக்கோப்பை போட்டிகளின் போது 6 பந்திலும் 6 சிக்சர் அடித்து உலகசாதனை படைத்தாரே அது ஸ்டூவர்ட் பிராட்டின் பந்து வீச்சில்தான்.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் அற்புதமான துடுப்பாட்டவீரராகவும் மாறினார் குறிப்பாக ரெய்னாவின் பந்துவீச்சில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை விளாசினார்.இங்கிலாந்து அணியின் வெற்றி அவர்களது திறமைக்குச்சான்று என்பதை யாரும் மறுக்கமுடியாது.இன்னும் இரண்டு போட்டிகள் மிஞ்சி உள்ள நிலையில் இங்கிலாந்துக்கு தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
சரி இந்திய அணியின் தோல்வி ஏன்
இந்திய அணியில் ராகுல்ராவிட் மீண்டும் மீண்டும் ஒன்றை நிரூபித்துக்கொண்டு இருக்கின்றார் தனது ஒய்வுக்கு முன்னர் தனக்கு ஒரு மாற்று வீரரை கண்டு பிடியுங்கள் இல்லையேல் இந்திய அணியின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறியே,இந்திய அணியில் ராவிட்டைத்தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை.
குறிப்பாக முதலாவது இனிங்சில் இந்திய அணியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அபினைமுகுந்,ராகுல் ராவிட் களம் இறங்கினர் ஆனால் முதலாவது பந்திலேயே அபினை முகுந் ஆட்டம் இழந்தார்.இதில் இன்னும் ஒன்றை சொல்லவேண்டும் அபினை முகுந் இரண்டாவது இனிங்சிலும் அதேமாதிரி அண்டர்சனின் பந்துவீச்சில் முதலாவது பந்திலேயே சிலிப்பில் கேட்ச் ஒன்னைக்கொடுத்தார் இங்கிலாந்து வீரர்கள் அதை தவர விட்டதனால் தப்பித்தார் பிறகு 3 ஒட்டங்களுடன் ஆட்டம் இழந்தது வேறுகதை.சரி அவர் அனுபவம் இல்லாத வீரர் என்று சொல்லாம். ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடிவரும் சச்சின்,எத்தனை போட்டிகளை பார்த்திருப்பார்,எத்தனை பந்து வீச்சாளர்களைப்பார்த்து இருப்பார் அவரே முதலாவது இனிங்சில் தேவை இல்லாமல் ஒரு பந்த சிலிப்திசையில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்ரேரஸ்சிடம் ஏலும் என்றால் பிடித்துப்பார் நான் இலகுவான கேட்ச் ஒன்றுதருகின்றேன் என்ற மாதிரி கேட்ச் ஒன்றைக்கொடுத்து ஆட்டம் இழந்தார்.சச்சினுக்கே தான் ஆட்டம் இழந்தவிதம் பிடிக்கவில்லை முகத்தை சுளித்துக்கொண்டே வெளியேரினார்.
இந்திய அணிக்கு கைகொடுக்கும் இந்திய அணியின் சுவரும்(ராவிட்),இந்திய அணியின் தூண்(லக்ஸ்மன்),தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்கின்றனர் ஏனையவீரர்கள் சொதப்பினால்இவர்களும் என்னதான் செய்யமுடியும் |
லக்ஸ்மன் தனது பங்கிற்கு அரைச்சதம் அடித்தார்.யுவராஜ் சிங் மிகச்சிறப்பாக ஆடி நெருக்கடியான நிலைமையில் அரைச்சதம் ஒன்றை விளாசினார்,ராகுல் ராவிட் தனிநபராக போராடி இந்திய அணி முதல் இனிங்சில் கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார் இல்லை என்றால் இந்திய அணி இதைவிட மோசமான தோல்வியைச்சந்தித்து இருக்கும்.
முதலாவது டெஸ்ட்போட்டியில் இந்திய அணிதோற்ற பின் நான் எழுதிய பதிவில் ஒன்றை குறிப்பிட்டு இருந்தேன்.(அந்தப்பதிவை வாசிக்க இங்கே-லோர்ட்சில் டோனி அணியை துவைத்து எடுத்த இங்கிலாந்து அணி)
அதாவது தடுமாறுகின்றபோது ராகுல் ராவிட்டை நம்பித்தான் இந்திய டெஸ்ட் அணி இருக்கின்றது என்பது நிரூபனம் ஆகியது என்று அதற்கு சில நண்பர்கள் ராவிட்டை நம்பி இந்திய அணி இல்லை அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெல்லும் என்று கருத்துக்களைக்கூறி இருந்தனர்.ஆனால் இரண்டாவது டெஸ்ட்டிலும் நடந்தது என்ன?
இரண்டாவது இனிங்சில் ராவிட் 6 ரன்களில் ஆட்டம் இழந்ததும்,இந்திய அணி தடுமாறியது அல்லவா உலகில் பலம் பொருந்திய துடுப்பாட்ட வரிசையைக்கொண்ட இந்திய அணி 478 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வெறும் 158 ரன்களில் சுருண்டது.அதிலும் ராவிட் ஆட்டம் இழந்தாலும் இந்திய அணியைக்காப்பாற்றும் லக்ஸ்மன் வேறு 4 ரன்களில் ஆட்டம் இழந்து விட்டார்.
ஆனால் சச்சினை பாராட்ட வேண்டும் தோல்விய தவிர்க்க கடுமையாக போராடினார். அவரை குறை கூறமுடியாது அவர் தனது வேலையை இரண்டாவது இனிங்சில் நன்றாகவே செய்தார்.அவருக்கு ஏனைய வீரர்கள் ஒத்துழைப்பை வழங்கவில்லை.ராவிட் ஆரம்பத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்து இருந்தால் சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி இருப்பார் இதனால் இந்திய அணி ஒன்று தோல்வியை தவிர்த்து இருக்கும் இல்லை கெளரவமான தோல்வியை சந்தித்து இருக்கும்
அணித்தலைவர் டோனி என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை வருவதும் போவதுமாக இருக்கின்றார் அவரது துடுப்பாட்டம் மோசமாக உள்ளது அணித்தலைவராக இருப்பதனால் அவருக்கு நெருக்கடி அதிகம். அதனால் தான் அவரால் துடுப்பெடுத்தாட முடியவில்லை என்ற சிறுபிள்ளைத்தன மான காரணத்தைக்கூறமுடியாது.ஏன் என்றால் அவுஸ்ரேலியாவின் ரிக்கிபொண்டிங்,தென்னாபிரிக்காவின் கிரேம் சிமித்,இலங்கையின்மகேல ஜெயவர்த்தன போன்ற வீரர்கள் அணித்தலைவராக இருந்த காலத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பல சாதனைகளையும் புரிந்து உள்ளனர்.
ஏன் டோனி கூட கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் என்ன ஒரு பிரமாண்டமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.எனவே டோனி தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.இல்லையே இந்தியாவின் அதிஸ்டகேப்டன் இந்திய அணியின் தலைவர் பதவியில் இருந்து நீங்கப்படுவதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.இதற்கு சிறந்த உதாரணம் இந்திய அணியின் அசைக்க முடியாத தலைவராக இருந்த தாதா கங்குலி.கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கங்குலி ஒய்வு பெற்றது அது வேற கதை.
இந்தப்போட்டியில் டோனி தான் ஒரு சிறந்த கிரிக்கெட்டை மதிக்கும் கேப்டன் என்பதை நிருபித்தார்.அதாவது இங்கிலாந்தின் இயன் பெல் சதம் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவர் அடித்த பந்து எல்லைக்கோட்டை நோக்கி அடிதார் அங்கே களத்தடுப்பில் நின்ற பிரவின் குமார் அதை தடுத்க முயன்றபோது அவர் எல்லைக்கோட்டிற்கு மேல் விழுந்து விட பந்து பவுண்டரியா இல்லையா என சந்தேகம் வர நடுவர் பவுண்டரி என சிக்னல் காட்டவில்லை.தேனீர் இடைவேளை நேரமும் இந்த ஓவருடன் வந்தனால் ரன் ஓடிக்கொண்டிருந்த இயன் பெல்அம்பயர் தேநீர் இடைவேளை அறிவித்து விட்டதாக எண்ணி, மறுமுனை நோக்கி மெதுவாக நடந்து வந்தார். இந்த நேரத்தில்
அதற்குள் இந்திய வீரர்கள் பந்தை எடுத்து விக்கெட்டைத்தாக்கி இயன் பெல் ரன் அவுட் ஆகியதாக நடுவரிடம் முறையிட நடுவரும் இயன் பெல் ஆட்டம் இழந்ததாக அறிவித்தார் இதனால் சர்ச்சை எழுந்தது. விதிகளின் படி இயன் பெல் அவுட்தான், ஆனால் அவர் தவறாக தேநீர் இடைவேளை என்று நினைத்ததால் அவரை திரும்பி விளையாட அழைப்பதுதான் முறை என்று டோனியும், இந்திய வீரர்களும் முடிவெடுத்தனர். ஆனால் டோனி இயன் பெல்லை மீண்டும் அழைத்து துடுப்பெடுத்து ஆடச்சொன்னார்.இயன் பெல் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோதும் .டோனியின் இந்த செயல் அவர் ஒரு கண்ணியம் மிக்க அணித்தலைவர் என்பதனையும் அவர்மீதான நன் மதிப்பை பலமடங்கு உயர்த்திவிட்டது .இதற்கு இந்தியாவின் முன்னால் வீரர்கள்,இங்கிலாந்து பத்திரிக்கைகள்,இங்கிலாந்து முன்னால் வீரர்கள்,உட்பட டோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி இந்தப்போட்டியில் விளையாடிய இந்திய ராகுல் ராவிட்கூறியது
இயன் பெல்லை மீண்டும் விளையாட வைத்த டோனி யின் முடிவு மிகச்சரியானது. சர்ச்சைக்கிடையே பெல்லுக்கு கொடுக்கப்பட்ட அவுட்டை சரியானது என இந்திய வீரர்கள் கருதவில்லை என்று ராகுல் ராவிட் கூறியுள்ளார்.
இது டோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதைக்காட்டினாலும்,அவர்தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம் அடுத்தபோட்டிகளில் என்ன செய்யப்போகின்றார் பொறுத்து இருந்து பார்ப்போம்.
- இந்தப்போட்டியில் ஸ்டூவர்ட்பிராட் கெட்ரிக்(Hat trick)) சாதனை,படைத்து இருந்தார் முதல் இனிங்சில் அவரது கெட்ரிக் விக்கெட்டாக வீழ்தவர்கள் டோனி,கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் அடுத்துவந்த ஹர்பஜன் சிங் LBW முறையிலும் அடுத்துவந்த பிரவீன் குமார் போல்ட் முறையிலும் ஆட்டம் இழந்தார்.
- யுவராஜ் சிங் மிகச்சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கி இருந்தார் முதல் இனிங்சில் நெருக்கடியான சூழ்நிலையில் 62 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்ததோடு இரண்டாவது இனிங்சில் சிறப்பாக விளையாடிய இயன் பெல்லின் விக்கெட்டையும் வீழ்த்தினார்
- இங்கிலாந்தின் பிரெஸ்னன் இரண்டாவது இனிங்சில் 5 விக்கெட்டை வீழ்தியது மட்டும் இல்லாது 90 ஒட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தார்,இதனால் அவரால் முதலாவது டெஸ்ட் சதம் பெறமுடியாமல் போனது துரதிஸ்டவசமானது ஏன் என்றால் முன்பும் அவர் ஒரு முறை சதம் பெறமுடியாமல் 91 ஒட்டங்களுடன் ஆட்டம் இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது
- ராகுல் ராவிட் தனது 34வது டெஸ்ட் சதத்தை பெற்று இந்தியாவில் அதிகடெஸ்ட்சதம் அடித்தவர்களில் சுனில் கவாஸ்கருடன் இரண்டாம் இடத்தை பெற்றார்.முதல் இடத்தில் சச்சின் 51 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. கவாஸ்கர் ஓய்வு பெற்றுவிட்டார்.எனவே தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் உலக அளவில் ராவிட் 4 வது இடத்தில் உள்ளார் ராவிட்டுக்கு முன்பு சச்சின் ரிக்கி பொண்டிங்,ஜக் கலிஸ் ஆகியோர் உள்ளனர்.ராவிட் சிறப்பாக ஆடும் பட்சத்தில் கலிஸ் பொண்டிங்கை முந்த முடியும்.
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து வீரர்கள் |
இந்தபோட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு துடுப்பாட்டவீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதுதான் முக்கிய காரணம். முன்பு சொன்ன மாதிரி இங்கிலாந்து அணி மிகச்சிறந்த டெஸ்ட் அணி என்பதை மறுக்கமுடியாது அந்த அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர் இந்திய அணியுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியில் இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய அணியில் யாரும் 100டெஸ்டில் விளையாடியவீர்களோ டெஸ்ட் போட்டியில் 10,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்தவர்களோ இல்லை ஆனால் இந்திய அணியில் அப்படி இல்லை ராகுல் ராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,இவர்கள் எல்லாம் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர்கள் அதைவிட ராகுல் ராவிட் சச்சின்,இருவரும் 150 டெஸ் போட்டிகளுக்கு மேல் ஆடி சச்சின் 14,000க்கும் அதிகமான ஒட்டங்களைப்பெற்றுள்ளார். ராவிட்12,000 க்கும் அதிகமான ஓட்டங்களைப்பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் 400விக்கெட்டுக்களைக்கைப்பற்றிய வீரர்கள் யாரும் இங்கிலாந்து அணியில் விளையாடவில்லை.இந்திய அணியில் ஹர்பஜன் சிங் 400 டெஸ்ட்விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இங்கிலாந்து மிகச்சிறந்த டெஸ்ட் அணி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அவர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த டெஸ்ட்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர்களின் வெற்றி.
பல இந்திய ரசிகர்கள் இதை மறுக்கலாம் ஆனால் இதுதான் உண்மை.
அடுத்த போட்டிகளில் இந்திய அணியினர் வெற்றி பெறுவார்களா பொறுத்து இருந்து பார்போம் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றதும் டோனிதலைமையில் இந்திய அணி முதல் டெஸ்ட்டில் தோற்று பின் எழுச்சி பெரும் இது வழமை என்று ஆனால் இரண்டாவது டெஸ்டிலும் தோல்வியே கிடைத்துள்ளது இதுவரை டோனிதலைமையில் இந்திய அணி எந்த டெஸ்ட்தொடரையும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத்தொடரில் அந்தவரலாறு மாறுமா?
இந்திய அணியின் அதிஸ்டக்கேப்டன் டோனியின் ராசி தொடருமா இல்லை இந்தியாவின் தோல்வி தொடருமா பொறுத்து இருந்து பார்ப்போம்.
இது சும்மா லொள்லு தலை(சச்சின்)ரசிகர்களே கோபப்படவேண்டாம்
டாடி டாடி நான் விளையாட வந்தாலும் அப்பவும் நீங்க விளையாடி அதையும் ஒரு சாதனையாக படைப்பீங்களா(படத்தில் இருப்பவர்கள் சச்சினின் மகன் அர்ஜுன்,மற்றும் மனைவி அஞ்சலி) |
சரி நீங்கள் உங்கள் வேலையை மறக்காமல் அப்படியே கொஞ்சம் அதான் கருத்துரைகளை சொல்லிவிட்டு போங்க
|
10 comments:
நண்பா உங்கள் தலைப்பிலேயே எனக்கு உடன்பாடில்லை. ஏதோ தோனி இத்தனை நாள் அதிர்ஷ்டத்தை வைத்தே வென்று வருவது போல இருக்கிறது. இது முற்றிலும் தவறு. ஒரு சில சறுக்கல்கள் இருக்கலாம். டிராவிட்டுக்கு மாற்று இல்லை என்பது உண்மையே. அதே போல இந்திய பவுலிங் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக இல்லாததும் ஒரு குறை. 478 ரன் எடுக்கவேண்டிய நிலையில் ஆஸ்திரேலியாவும் 200ரன்னுக்குள் ஆட்டமிழந்தாலும் ஆச்சர்யம் இல்லை. மைண்ட்செட் மாறிவிடும்.
என்னை பொருத்தவரை முதல் போட்டியில் பீட்டர்சனை ஆட விட்டது, இரண்டாவது போட்டியில், முதலில் பிராடையும், இரண்டாவது இன்னிங்சில் பெல்லையும் அவுட் ஆக்காமல் விட்டது ஆகியன மிகத்தவறு.
எல்லா கேப்டனுக்கும் அவுட் ஆப் ஃபார்ம் என்பது தவிர்க்க இயலாது. நீங்கள் சொன்ன ஸ்மித், பாண்டிங், மகேலா ஆகியோர் கேப்டனாக இருந்த எல்லா தொடர்களிலுமா சிறப்பாக ஆடினார்கள்?
தோனிக்கு இன்னும் வயதிருக்கிறது.
முதல் இனிங்சில் இந்திய அணி ஒரு இமாலய இலக்கை எட்டக்கூடிய வாய்ப்பு இருந்தும் தோனி மற்றும் ரைனா வின் முட்டாள் தனமான துடுப்பாட்டத்தால் வாய்ப்பை தவற விட்டது, இதையே இரண்டாவது இனிங்க்சில் தமக்கு சாதகமாக பயன்படுத்திய இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் ரன்களை குவித்துதள்ளிவிட்டார்கள். இந்த இடத்தில் இந்திய பந்து வீச்சு மோசம் , முக்கியமாக ஹர்பஜன் சிங் வீசியது வெறும் ஒன்பது ஓவர்கள் மட்டும் தான்!!! (யுவராஜ் 11 ஓவர் வீசியது வேறு கதை), வெற்றி இலக்கான 477 துரத்தி அடிக்கக்கூடிய இலக்கு அல்ல, அதே போல மீதமுள்ள இரண்டு நாட்க்களை சமாளிக்க கூடிய அளவுக்கு இங்கிலாந்து பந்து வீச்சு மோசம் அல்ல, அதோடு மூன்றாவது, நான்காவது நாட்களில் ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறிவிடும். ராவிட் லக்ஸ்மன் போன்றோர் ஏதாவது அற்புதம் செய்தால் ஒழிய மூன்றாவது நாளிலே தோல்வி என்பது நிச்சயமாக்கப்பட்ட ஒன்று தான்!!!
எனினும் இதை இங்கிலாந்தின் முழுமையான வெற்றி என மனம் ஏற்க மறுக்கிறது, முக்கியமாக அடுத்த போட்டியில் சேவாக், காம்பீர், சகீர் மீள் வரும் போது இந்திய அணி முழுமையடையும், அப்போது இங்கிலாந்து இதே போல ஒரு வெற்றியை பெற்று கொள்ளட்டும்.
உங்கள் அலசல் அருமை நண்பா, நீங்கள் சொன்ன போல ராவிட் இல்லாத இந்திய அணிக்கு பெரும் சோதனைகள் காத்திருக்கிறது தான்..
இன்டிலியில் இணைக்கலையா?
ஒரு அணி தோல்வியை சந்திக்கும் பொது இது போன்ற விமர்சனங்கள் வருவது இயல்பே ... டிராவிட் ஒருவர் மட்டும் இந்த தொடரில் ஃபார்ம் மில் இருக்கிறார் என்பதால் அவர் மட்டுமே இந்திய அணி என்று சொல்வது முட்டாள்தனமானது .. கிரிக்கெட் சரித்திரத்தை திரும்பி பார்த்தால் ஒன்று புரியும் காவாஸ்கர் தொடங்கி கம்பீர் வரை எல்லா காலகட்டத்திலும் தரவரிசையில் ஏதாவது ஒரு இந்திய வீறார் முதல் இடத்தில் இருப்பார் ... அதில் டிராவிட்டும் ஒருவர் அவ்வளவே .. 2003 நியூசிலாந் டெஸ்ட் தொடரில் ஒட்டு மொத்த அணியே சொதப்ப சேவாக் மட்டும் சதமாக அடித்து அணியை காப்பாற்றினார் .. இதுபோல அடிக்கடி நடக்கத்தான் செய்யும் அதற்காக அவர்கள் மட்டுமே அணி என்று சொல்லிவிட முடியாது .... இந்திய அணி உருவாக்கிய சிறந்த துடுப்பாட்டக்காரர்களை போல வேறு எந்த அணியும் உருவாக்கியதில்லை ...
// அவர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றிதான் இந்த டெஸ்ட்தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர்களின் வெற்றி.
பல இந்திய ரசிகர்கள் இதை மறுக்கலாம் ஆனால் இதுதான் உண்மை.
என்னை பொறுத்த வரை இது இந்திய அணியின் சறுக்கள்தானே தவிர இங்கிலாந்து அணியின் மிக சிறந்த வெற்றி கிடையாது ... சறுக்கல்கள் சகஜம் ஆனால் அதில் இருந்து மீண்டு வருவதில்தான் வெற்றியே இருக்கிறது .. நாங்கள் மீண்டு வருவோம் ...
அதே போல இது ஒரு முழுமையான இந்திய டெஸ்ட் அணி கிடையாது ... சேவாக் , கம்பீர் , ஜாகீர் இல்லை ... குறிப்பாக ஜாகீர் , அவர் இருந்திருந்தால் பாலா பின்னூட்டத்தில் கூறி இருக்கும் தவறுகள் நடந்திருக்காது ...
உங்கள் பதிவில் ஒன்று தெளிவாக தெரிகிறது ... இந்திய அணியை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே உங்கள் பதிவை எழுதி இருக்கிறீர்கள் ... ரஜினி பாணியில் சொல்ல வேண்டும் என்றாள் விழுந்தால் எழுந்திருக்க முடியாமல் இருக்க நாங்கள் யானை இல்லை குதிரை , டக்குன்னு எழுந்திருச்சி ஓடி ரேஸ்ல ஜெயிப்போம் ...
@பாலா சொன்னது...
நன்றி நண்பரே.
டோனி வெறும் அதிஸ்டத்தை மட்டும் வைத்து வென்று வருவதாக நான் குறிப்பிடவில்லை நண்பரே.அதிஸ்ட கேப்டன் என்று டோனியைக்குறிப்பிட்டது ஏன் என்றால் இப்ப உதாரணத்திற்கு சமூகத்தில் சொல்வார்கள் இல்லையா எனக்கு இந்த மகன் பிறந்த பின் தான் நான் தொழிலில் முன்னுக்கு வந்தேன் அவனது அதிஸ்டம்தான் என்று அதற்காக அவர்கள் உழைக்காமல் மகனின் அதிஸ்டத்தை மட்டும் வைத்து முன்னுக்கு வந்ததாக அர்த்தம் இல்லையே அவர்கள் உழைப்புடன் மகன் பிறந்த அதிஸ்டமும் கைகொடுத்துள்ளது.அதேபோலத்தான் டோனி ஒரு அதிஸ்டகரமான ராசியான கேப்டன் அதற்காக அவர் திறமை அற்றவர் வெறும் அதிஸ்டத்தை மட்டும் வைத்து இவ்வளவு நாட்கள் வெற்றிகளைக்குவித்து வந்தார் என்று நான் சொல்லவில்லை இந்திய அணிக்கேப்டன்களில் நான் பார்தமட்டில் மிகவும் ராசியான அதிஸ்டகரமான கேப்டன் டோனிதான் அதனால்தான் அப்படி குறிப்பிட்டு உள்ளேன்.
பொண்டிங்,சிமித்,மகேல போன்றவற்கள் எல்லாத்தொடர்களிலும் சிறப்பாக ஆடினார்களா என்று கேட்டு உள்ளீர்கள் உண்மைதான் எல்லாத்தொடர்களிலும் சிறப்பாக எந்த கிரிக்கெட் வீரராலும் ஆடுவது கடினம் ஆனால் பொண்டிங்,சிமித்,மகேல,போன்றவர்கள்,அணித்தலைவராக இருந்தகாலப்பகுதியில்தான் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்,உதாரணமாக மகேல டெஸ்ட்போட்டிகளில் உலகசாதனை இணைப்பாட்டத்துடன் 374 ஓட்டங்களைப்பெற்றது அவர் இலங்கை அணியின் தலைவராக இருந்த போதுதான்.அதற்காக டோனி கேப்டன் ஆன பின்பு எல்லாத்தொடர்களிலும் சிறப்பாக ஆடவில்லை என்று சொல்லவில்லையே.கேப்டனாக இருப்பது கூடுதல் சுமை அதனால்தான் டோனிக்கும் நெருக்கடி என்று சில நண்பர்கள் என்னிடம் விவாதித்து உள்ளார்கள் அதற்கு உதாரணமாகவே பொண்டிங்,சிமித்,மகேல போன்றவர்களை சுட்டிக்காட்டியுள்ளேன்,ஏன் டோனியின் கூட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் என்ன சிறப்பான ஒரு ஆட்டத்தைவெளிப்படுத்தி இருந்தார்.அதைத்தான் கேப்டனாக இருப்பது பெரியளவு நெருக்கடி இல்லை என்று அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
@பாலா சொன்னது..
தலைப்பில் ஒரு சின்ன குழப்பம் இருக்கின்றது அதாவது அதிஸ்டகரமான நபர் என்பதை எங்கள் பேச்சுவழக்கில் அதிஸ்ட நபர் என்று சொல்வது வழக்கம் அதனால்தான் அதிஸ்டகரமான தலைவர் டோனி என்பதை அதிஸ்டதலைவர் டோனி என்று குறிப்பிட்டு உள்ளேன் திருத்தி விட்டேன்.நன்றி நண்பரே
@கந்தசாமி. சொன்னது..
நன்றி நண்பரே இன்ட்லியில் இனைத்துள்ளேனே.
@"ராஜா" சொன்னது..
நன்றி நண்பரே
நீங்கள் இது ஒரு முழுமையான டெஸ்ட் அணி கிடையாது சேவாக்,கம்பீர்,சகீர்கான்,இல்லை என்பது உண்மைதான் ஆனால் சச்சின்,ராகுல்ராவிட்,லக்ஸ்மன்,டோனி,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,இவர்கள் எல்லோறும் என்ன அனுபவம் அற்ற புதிய வீரர்களா இல்லையே.இவர்கள் எல்லாம் விளையாடியபோட்டியில்தானே இந்திய அணியை இங்கிலாந்து வென்று இருக்கின்றது.பிறகு ஏன் இங்கிலாந்தின் வெற்றியை ஏற்க உங்கள் மனம் மறுக்கின்றது.
நீங்கள் சொல்வது போல் இந்திய அணியை மட்டம்தட்டவேண்டும் என்பதற்காக நான் இந்தப்பதிவை எழுதவில்லை.எனக்கு கிரிக்கெட் பிடிப்பதற்கு கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடுவந்ததற்கு பல இந்திய அணிவீரர்கள்தான் காரணம்.கங்குலி,சேவாக்,யுவராஜ்சிங்,கும்ளே,சகிர்கான்,டோனி,இப்படி எனக்கு இந்திய அணியில் நிறையவீரர்களைப்பிடிக்கும்,குறிப்பிட்டுச்சொன்னால் கடந்த 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு இலங்கையராக இலங்கை கிண்ணத்தை வெல்லவேண்டும் என நினைத்தாலும்,இந்தியா கிண்ணத்தை வென்றபோது சச்சின் மீது இருந்தமதிப்பினால் இந்திய அணியினர் சச்சினுக்காக கிண்ணத்தைவெல்லவேண்டும் என்று கூறி கிண்ணத்தை வென்றதும் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.இங்கிலாந்து அணி இனிவரும் போட்டிகளில் இந்திய அணியிடம் தோற்றால் நிச்சயமாக அதைப்பற்றியும் பதிவு எழுதுவேன் நண்பரே.எனக்கு பிடித்தகிரிக்கெட் அணிகளில் இந்திய அணியும் ஒன்று.
விரிவான அலசல்...தலைப்பு எனக்கும் மனதுக்குள் தோன்றிய சிந்தனை தான் பாஸ்!!!
@மைந்தன் சிவா சொன்னது...
நன்றி நண்பரே
Post a Comment