Wednesday, August 17, 2011

காதல் வந்தால் கவிதை வரும் என்பது உண்மையா?





காதலித்தால் கவிதைவரும் கண்டு கொண்டேன் உன்னாலே
என்று ஒரு சினிமாப்பாடல் கூட இருக்கின்றது.
காதல் வந்தால் கவிதைவரும் என்பது உண்மையா?
இதை நீண்ட நாட்களாக நான் ஆராய்ந்து வந்தேன்.ஆனாலும் எனக்கு புரியவில்லை எப்படி காதல் வந்தால் கவிதை வருகின்றது.
கவிதைக்கு அவர்களுக்கு சம்மந்தமே இல்லாத என் நண்பர்கள் சில பேர் இருந்தார்கள் ஆனால் காதலில் விழுந்ததும்.விழுந்து விழுந்து கவிதை எழுதியதை கண்டு உள்ளேன்.



இன்னும் ஒருவர் எழுதிய கவிதையை தாங்கள் எழுதிய மாதிரி பில்ட்டப் கொடுக்கும் நண்பர்களும் இருக்கின்றார்கள்அவர்களை இங்கே சேர்க்க முடியாது

ஏன் எனக்கும் கவிதைக்கும் சம்மந்தமே இல்லை ஆனாலும்.பாடசாலையில் படிக்கின்றபோது ஒருத்தி என்னையும் கவிஞன் ஆக்கினாள்.இது 7 வருடங்களுக்கு முன்பு.இப்ப நான் அவளைப்பார்த்தே 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.இப்ப கவிதையா அப்படினா என்ன? என்று நான் கேட்கின்றேன்.
ஏன் காதல் வயப்பட்டு இருக்கும் போது கவிதைவருகின்றது.

படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லைங்கண்ணா இது நம்ம அஞ்சலி புள்ள

இது பற்றி எனது கருத்து என்னவென்றால்.
ஒரு பெண்ணின் மீது மட்டும் இல்லை,அம்மா,நண்பர்கள்,இப்படி நம் உறவுகளையும்,இயற்கையையும்,அளவுக்கு அதிகமாக நாம் நேசிக்கும் போது அவர்கள் மீதும்,இயற்கையின் மீதும் ஏற்படும் அதீத மான ஈர்ப்பே வார்த்தைகளாக வெளிப்படுகின்றது அதை மேலும் அழகாக்கும் போது கவிதைகள் பிறக்கின்றன.

உதாரணமாக-பல கவிஞர்கள்,தங்கள் நாட்டை,தாங்கள் பிறந்த மண்ணை,இயற்கையை,நேசித்து அதனால் பல காவியங்கள் படைத்துள்ளதை பார்க்கின்றோம் அல்லவா.
இதே போல்தான் நாம் காதலிக்கும் போதும் நமது காதலர்கள் மீது நமக்கு கவிதை வருகின்றது என்பது என் கருத்து.

முஸ்கி-நான் பிரபல பதிவர் ஆகிட்டேன் என்னடா..இப்படிச்சொல்கின்றேன் என்று நினைக்கிறீங்களா?நான் எழுதிய முரளிதரன் பற்றிய தொடர் பதிவில் ஒரு பகுதியை கொப்பி(copy)பண்ணிஒரு இனையதளத்தில் பிரசுரம் ஆகி இருக்கின்றது.எனவே கொப்பி(copy) பண்ணும் அளவுக்கு எழுதுகின்றேன் என்றால் அப்ப நான் பிரபல பதிவர்தானே(போடாங் என்று திட்டுவது புரியுது).


ஒரு கிரிக்கெட் செய்தியை அல்லது கிரிக்கெட்வீரர்கள் பற்றி எழுதுகின்றபோதுஅவரது சாதனைகள் எந்த தளத்திலும் மாற்றி எழுதஇயலாது உதாரணத்திற்கு சச்சின் ஒருநாள் போட்டிகளில் 18000 ரன்களுக்கு மேல் கடந்துள்ளார் என்ற செய்தியை எழுதும் போது.யார் எப்படி பதிவு எழுதும் போதும் சச்சின் 18000 ரன்களைக்கு மேல் எடுத்த விடயம் மாறாது.ஆனால் ஒவ்வொறுவருக்கும் எழுதுவதில் ஒரு ஸ்டைல் இருக்கும் தானே.இப்ப நான் இதை எழுதினால்.
சாதனை படைப்பதில் சாதனை படைப்பவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 18000 ரன்களைக்கடந்து உள்ளார் என்று எழுதுவேன்.


அதே போல்தான் எனது முரளிதரன் பற்றிய பதிவில் சில பகுதிகளை என் ஸ்டைலில் நான் எழுதியமாதியே அப்படியே கொப்பி(copy)பண்ணி வெளியிட்டு இருக்கின்றார்கள் ஒரு சில வார்த்தைகள் மாற்றி இருக்கின்றார்கள்.ஒரு இனையதளமே என்பதிவை கொப்பி(copy)பண்ணும்அளவுக்கு நான் எழுதுகின்றேன் என்று நினைக்க பெருமையா இருக்கு.ம் இப்படி சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
கொப்பி(copy)பண்ணியவர்களின் பெயரை நான் கூறவிரும்பவில்லை.
எங்கள் மண்ணில் நாங்கள் பார்க்காத வலிகளா இல்லை 
நாங்கள் சந்திக்காத அவமாணங்களா.எத்தனையோ கஸ்டங்களை தாங்கி விட்டோம்.எவ்வளவோ வேதனைகளைக்கடந்து வந்து விட்டோம்.
அதனுடன் ஒப்பிடும் போது இது எல்லாம் சின்ன விடயம்.
சுருக்க மாக சொன்னால்.
சுனாமிய பார்தவனுக்கு சுண்டக்கடலையால் அடித்தால் அவனுக்கு வலிக்காது.அது ஒன்றும் பெரியவிடயம் இல்லை.


ஒவ்வொறு பதிவரும் எவ்வளவு யோசித்து ஒரு பதிவுகளை எழுதுகின்றார்கள் ஆனால் அதை கொப்பி(copy) பண்ணு போது கொஞ்சம் யோசியுங்கள். நண்பர்களே.
அப்படி நீங்கள் கொப்பி(copy)பண்ணி போட்டாலும்.நன்றி என்று ஒரு வார்த்தையாவது கொப்பி பண்ணிய தளத்திற்கோ இல்லை அந்த பதிவை எழுதியவருக்கோ சொல்லிவிடுங்கள்.என்பது என் தாழ்மையான வேண்டுகோள்


திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.


சரி இதை விடுங்க உங்கள் கருத்து எப்படி
காதலித்தால் கவிதை வரும் என்பது உண்மையா?
உங்கள் பதில்களையும் கருத்துரையாக சொல்லிவிட்டுப்போங்க


குறிப்பு-தற்போது விளையாடும் வீரர்களில் கிரிக்கெட்டின் பிதாமகன் என்று சொல்ல தகுதியான சிறந்த வீரர் யார் என்று ஒரு வாக்கெடுப்பு பெட்டி பதிவின் மேலே வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று தோன்றுகின்றதோ அவருக்கு வாக்களியுங்கள்.

Post Comment

27 comments:

ஆகுலன் said...

வடை

ஆகுலன் said...

ஆமா பாஸ் அது உண்மைதான்.....
நானே உப்பிடித்தான் கவிதை எழுதினான்.................

கடுரையே எழுத தெரியாத எனக்கு கவிதை வருது என்றால் பாருங்கோவன்....

K.s.s.Rajh said...

@ஆகுலன் சொன்னது...

அடங் கொய்யால

காந்தி பனங்கூர் said...

காதலிக்கும் எல்லோருக்கும் கவிதை வருவதில்லை பாஸ், காதலிக்கும்போது காதலியை கவுக்கறத்துக்காக(Impress) முட்டி மோதி, மூளையை கசக்கி கவிதை எழுத முயற்சிக்கிறார்கள். நாளடைவில் அது தொடர்கதையாகிடுது.

www.panangoor.blogspot.com

Anonymous said...

///இன்னும் ஒருவர் எழுதிய கவிதையை தாங்கள் எழுதிய மாதிரி பில்ட்டப் கொடுக்கும் நண்பர்களும் இருக்கின்றார்கள்அவர்களை இங்கே சேர்க்க முடியாது/// இந்த தரப்பு தான் மிக அதிகம் பாஸ் ,உதாரணமா முகநூலிலும் கூட அடுத்தவன் கவிதையை திருடி போட்டுவிட்டு கொடுப்பாங்கள் பாருங்க ஒரு பில்டப் ...

Anonymous said...

பாஸ் copy பண்ணியவன்களை பகிரங்க படுத்துங்க, அந்த அவமானம் தான் அவர்களுக்கான தண்டனை.

K.s.s.Rajh said...

@காந்தி பனங்கூர் சொன்னது…
காதலிக்கும் எல்லோருக்கும் கவிதை வருவதில்லை பாஸ், காதலிக்கும்போது காதலியை கவுக்கறத்துக்காக(Impress) முட்டி மோதி, மூளையை கசக்கி கவிதை எழுத முயற்சிக்கிறார்கள். நாளடைவில் அது தொடர்கதையாகிடுது...

அதுவும் சரிதான்

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது…
///இன்னும் ஒருவர் எழுதிய கவிதையை தாங்கள் எழுதிய மாதிரி பில்ட்டப் கொடுக்கும் நண்பர்களும் இருக்கின்றார்கள்அவர்களை இங்கே சேர்க்க முடியாது/// இந்த தரப்பு தான் மிக அதிகம் பாஸ் ,உதாரணமா முகநூலிலும் கூட அடுத்தவன் கவிதையை திருடி போட்டுவிட்டு கொடுப்பாங்கள் பாருங்க ஒரு பில்டப்..

உண்மைதான் முகநூலில் கவிதைகளை காப்பி பேஸ்ட் பண்ணி தாங்கள் எழுதியது போல் பில்டப் கொடுப்பவர்கள் அதிகம்தான்

K.s.s.Rajh said...

@கந்தசாமி. சொன்னது…
பாஸ் copy பண்ணியவன்களை பகிரங்க படுத்துங்க, அந்த அவமானம் தான் அவர்களுக்கான தண்டனை

உண்மைதான் ஆனால் எனது பதிவின் சில பகுதிகளைத்தான் கொப்பி(copy) செய்து இருக்கின்றார்கள்.எனவே நான் தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் எழுதுவதால்.ஒரு வேளை மீண்டும் அவர்கள் கொப்பி(copy) செய்தால் நிச்சயம் வெளிப்படுத்தலாம்.பார்ப்போம்

நிரூபன் said...

வணக்கம் மச்சி,
என் இணையவேகம் ஸ்லோ ஆகிவிட்டது,
அதனால் தான் வலைப் பக்கம் ஒழுங்காக வரமுடியலை,
மன்னிக்கவும்,.

நிரூபன் said...

காதல், கவிதை பற்றிய ஆராய்ச்சி சூப்பர்.

காப்பி பேஸ்ட் மன்னர்கள். மற்றவன் உழைப்பில் தாம் வாழ நினைக்கும் கயவர்கள். இவர்களைத் திருத்தவே முடியாது மச்சி,

K.s.s.Rajh said...

@நிரூபன் சொன்னது…
வணக்கம் மச்சி,
என் இணையவேகம் ஸ்லோ ஆகிவிட்டது,
அதனால் தான் வலைப் பக்கம் ஒழுங்காக வரமுடியலை,
மன்னிக்கவும்,

சரிசெய்யுங்க பாஸ்/
நீங்கள் சொன்ன மாதிரி காப்பி,பேஸ்ட் செய்பவர்களை திருத்தவே முடியாது.

மாலதி said...

முஸ்கி-நான் பிரபல பதிவர் ஆகிட்டேன் என்னடா..இப்படிச்சொல்கின்றேன் என்று நினைக்கிறீங்களா?நான் எழுதிய முரளிதரன் பற்றிய தொடர் பதிவில் ஒரு பகுதியை கொப்பி(copy)பண்ணிஒரு இனையதளத்தில் பிரசுரம் ஆகி இருக்கின்றது.எனவே கொப்பி(copy) பண்ணும் அளவுக்கு எழுதுகின்றேன் என்றால் அப்ப நான் பிரபல பதிவர்தானே(போடாங் என்று திட்டுவது புரியுது).// appadi illai

பாலா said...

இங்கே காதலே வரவில்லை. கவிதை எங்கே இருந்து வருவது?


அப்புறம் வணக்கம் பிரபல பதிவரே...

K.s.s.Rajh said...

@மாலதி சொன்னது…
முஸ்கி-நான் பிரபல பதிவர் ஆகிட்டேன் என்னடா..இப்படிச்சொல்கின்றேன் என்று நினைக்கிறீங்களா?நான் எழுதிய முரளிதரன் பற்றிய தொடர் பதிவில் ஒரு பகுதியை கொப்பி(copy)பண்ணிஒரு இனையதளத்தில் பிரசுரம் ஆகி இருக்கின்றது.எனவே கொப்பி(copy) பண்ணும் அளவுக்கு எழுதுகின்றேன் என்றால் அப்ப நான் பிரபல பதிவர்தானே(போடாங் என்று திட்டுவது புரியுது).// appadi illa

வாங்க நல்வரவு சகோதரி

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது…
இங்கே காதலே வரவில்லை. கவிதை எங்கே இருந்து வருவது?


அப்புறம் வணக்கம் பிரபல பதிவரே..

அது சரி.......

Unknown said...

முச்கிக்கும் உங்களுக்கும் முன் ஜென்ம பந்தமோ??ஹிஹி
அட பிரபல பதிவரா!!எப்ப பார்ட்டி பாஸ்?????

Unknown said...

முச்கிக்கும் உங்களுக்கும் முன் ஜென்ம பந்தமோ??ஹிஹி
அட பிரபல பதிவரா!!எப்ப பார்ட்டி பாஸ்?????

Unknown said...

முச்கிக்கும் உங்களுக்கும் முன் ஜென்ம பந்தமோ??ஹிஹி
அட பிரபல பதிவரா!!எப்ப பார்ட்டி பாஸ்?????

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா சொன்னது…
முச்கிக்கும் உங்களுக்கும் முன் ஜென்ம பந்தமோ??ஹிஹி
அட பிரபல பதிவரா!!எப்ப பார்ட்டி பாஸ்????

பதிவுலகில் பயன் படுத்தப்படும் ”டிஸ்கி”
பதிலா நான் கண்டுபிடிச்சதுதான் முஸ்கி.
இதுக்கு சிறந்த கண்டு பிடிப்புக்கான நோபல் பரிசுக்கு கிடைக்கும் என்று பேசிக்கொள்கின்றார்கள்.

பரிசு கிடைச்சால் பார்ட்டியை யோசிப்பம் தல.ஹி.ஹி.ஹி.ஹி

பிரணவன் said...

அதீத ரசனையின் காரணமாக கவிதை வரும். அதுவும் காதலில் விழுந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் அதிகம் தான். . .

சுதா SJ said...

தமிழ்மணம் 4

சுதா SJ said...

பாஸ் என்னைப்பொறுத்தவரை

காதலித்தால்தான் கவிதை வரும் என்பது எல்லாம் சும்மா,

என் அனுபவத்தில் எனக்கு காதலி இல்லாமல் இருக்கும் போதுதான் நிறைய கவிதை எழுதினேன் ( இத பார்த்தாவது யாராவது ஒரு பொண்ணு லவ் பண்ணா மாட்டாளா என்று )

அப்புறம் காதலி கிடைத்ததும் கவிதை எழுத எங்க டைம் காதலியை பக்கத்தில் வைத்துகொண்டு எவனாவது கவிதை எழுதிட்டு இருப்பானா??

பின்பு அந்த காதல் பிச்சுக்கிட்டு போனதும் கவிதை எழுதினேன் பின் காதலி வந்ததும் கவிதைக்கு ஒரு ஸ்டாப்

இப்புடி மாறி மாறி நடக்குது பாஸ்
அவ்வவ்

சுதா SJ said...

பதிவுகளை திருடுவுவர்கள் பற்றி நோ கமெண்ட்ஸ்

நீங்கள் சொன்னது போல்
"திருடனாய் பார்த்து திருந்தினால் ஒழிய..... "

K.s.s.Rajh said...

@பிரணவன் சொன்னது…
அதீத ரசனையின் காரணமாக கவிதை வரும். அதுவும் காதலில் விழுந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் அதிகம் தான். .

நல்ல கருத்து நண்பா

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

@ "கற்றது தமிழ்" துஷ்யந்தன் கூறியது...
பாஸ் என்னைப்பொறுத்தவரை

காதலித்தால்தான் கவிதை வரும் என்பது எல்லாம் சும்மா,

என் அனுபவத்தில் எனக்கு காதலி இல்லாமல் இருக்கும் போதுதான் நிறைய கவிதை எழுதினேன் ( இத பார்த்தாவது யாராவது ஒரு பொண்ணு லவ் பண்ணா மாட்டாளா என்று )

அப்புறம் காதலி கிடைத்ததும் கவிதை எழுத எங்க டைம் காதலியை பக்கத்தில் வைத்துகொண்டு எவனாவது கவிதை எழுதிட்டு இருப்பானா??

பின்பு அந்த காதல் பிச்சுக்கிட்டு போனதும் கவிதை எழுதினேன் பின் காதலி வந்ததும் கவிதைக்கு ஒரு ஸ்டாப்

இப்புடி மாறி மாறி நடக்குது பாஸ்
அவ்வ//


ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails