Monday, October 17, 2011

(பகுதி-6) என் உயிர் நீ தானே.......

இந்தக்கதையில் வரும் பெயர்,ஊர்கள்அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது
இந்தக்கதை ஈழத்தில் ஒரு ஊரில் நடந்தகதை கதை நடந்த இடத்தின் உரைநடையில் அப்படியே வருகின்றது



முன்னைய பகுதிகளை படிக்க

கடந்த பதிவில்
ரதிக்கு அவளது சொந்தக்கார ஒருத்தனை கலியாணம் கட்ட மூக்காயி ஏற்பாடு செய்தாள்.ரதிக்கு தாய் சொல்வதை தட்டமுடியாது வேண்டாம் என்றால் மூக்காயி கேவலமாக பேசி(திட்டி)அடிப்பாள் என்று தெரியும் மறுபுறம் வெள்ளையனின் காதல்..அவளுக்கும் வெள்ளையனை நினைக்க அழுகை வந்தது அவனது காதலை ஏற்றுக்கொள்வதா இல்லை.தாய் பார்க்கும் மாப்பிளையை கலியாணம் கட்டுவதா..ஒன்றுமே புரியவில்லை அந்த அபலைப்பெண்ணுக்கு.அவளால் அழத்தான் முடிந்தது.
இனி........


ரதிக்கு கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டதும் மூக்காயி ரதியை வீட்டைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை..இதனால் வெள்ளையனுக்கு பெரும் கவலையாக இருந்தது..
ரதி இரண்டும் கெட்டான மன நிலையில் இருந்தாள் வெள்ளையனின் காதலை ஏற்பதா இல்லை தாய் பாத்திருக்கும் மாப்பிளையை கட்டுவதா?


பருவ மழை பெய்யத்தொடங்கியிருந்தது அடைமழை அடித்து ஊத்தி வீதியெல்லாம் வெள்ளம் கரைபுரண்டோடியது..சுதன்,வெள்ளையன் வேலைசெய்த காணியின் முதலாளிமார்கள் வந்து சுதனிடம் சொல்லிவிட்டுப்போனார்கள் சுதன் வயல் எல்லாம் வெள்ளமாக இருக்கு என்ன செய்கின்றீர்கள் தண்ணியை வெட்டி விடுங்க..சுதன் மட்டும் புறப்பட்டு தண்ணீர் வெட்ட சென்றார்.புஸ்பா தம்பியை பார்த்து சொனாள் வெள்ள நீயும் போ மாமா கூட போய தண்ணிய வெட்டிவிட்டுட்டு வா இல்லாட்டி திரும்பவும் முதலாளிமார் வந்து கத்துவாங்க..ஆனால் வெள்ளையனுக்கு அக்காவின் சொல் காதில் விழவில்லை அவன் மனம் எல்லாம் ரதியின் நினைவுதான்.

மழை ஓரளவு ஓய்ந்திருந்தது..அப்போது சுதன் வீட்டுக்கு முன்னால் நிறைய கூட்டம் கூடியிருந்தது..என்ன என்று விசாரித்த போது..வெள்ளையன் ரதியை கூட்டிகிட்டு ஓடிட்டானாம்.மூக்காயி தலைவிரி கோலமாக சுதன் வீட்டுக்கு முன் நின்று பச்சை பச்சையாக(கெட்டவார்த்தைகள்)புஸ்பாவையும் சுதனையும் அவர்கள் குடும்பத்தையும் திட்டிக்கொண்டிருந்தாள்.

கூட்டத்தில் இருந்த பொம்பிளைகள்(பெண்கள்)எவ்வளவு சமாதனப்படுத்தியும் மூக்காயின் கோபம் அடங்கவில்லை.அந்த தே..............மு...........யையும் அந்த ....................மகனையும் எங்க இருந்தாலும் கூட்டிகிட்டு வாங்க.நல்லா நாலு சாத்து செருப்பால சாத்தனும்(அடிக்கனும்)

சுதன் சொன்னான் மூக்காயி அக்கா வீணா வீட்டுக்கு முன்னுக்கு நிண்டு சண்டை பிடிக்கவேண்டாம்..அவன் எங்க போயிருப்பான் என்று எனக்குத்தெரியும் அவங்க ஊருக்குத்தான் கூட்டிட்டு போயிருப்பான்.நான் கூட்டிட்டு வாரன்.சுதன் இப்படி சொன்னது..ரதியின் அப்பா,அவளது அக்கா இருவரின் கணவர்கள்,மூவரும் சொன்னார்கள் நாங்களும் வாரம் சுதன் எல்லோரும் போவம்.சரி எல்லோரும் போவம் என்றால் எதில் போவது..சுதன் தான் வேலைசெய்யும் முதலாளி ஒருவரிடம் இருந்த ஹயஸ் வேனை(வான்)வேண்டிக்கொண்டு வருவதாக சொன்னார்..ஆனால் இதில் உள்ள பிரச்சனை ஒருவருக்கும் ஹயஸ் ஓடத்தெரியாது..எங்கள் ஊரில் பொதுவாக எல்லோறும் டக்டர்(உழவு இயந்திரம்)ஓடுவார்கள் ஆனால் ஏனைய வாகனங்கள் ஓடிப்பழக்கம் இல்லை.

எங்கள் ஊரிகளில் எல்லாம் சின்னவயதிலையே வாகனம் ஓடப்பழகியிருப்பார்கள்.அப்போது அங்கே சாரதி அனுமதிப்பத்திரமும் தேவையில்லை.இதனால் வன்னியில் இருந்த பலர் சின்னவதிலேயே வாகனம் ஓடத்தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

சுதன் உட்பட அங்கு இருந்தவர்களுக்கு வயல் வேலைகள் செய்வதே பிரதான தொழிழாக இருந்தபடியால் டக்டர்(உழவு இயந்திரம்)மட்டும்தான் ஓடப்பழகியிருந்தார்கள் இதனால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதுதான்.

என்னைக்கேட்டார்கள் தம்பி ஹயசை ஓடிக்கொண்டுவரமுடியுமா?
எனக்கும் வாகனம் ஓடுவது என்றால் கொள்ளைப்பிரியம் .ஸ்கூல் லீவுக்காலம் என்பதால் நானும் சரி என்றேன்..

எங்க அண்ண போகனும் என்றேன் சுதனின் ஊரின் பெயரைச்சொல்லி அங்க போகனும் என்றார்கள் இன்றைக்கு திரும்பி வந்திடலாம் தானே என்று கேட்டேன் ஓம் என்றார்கள் நானும் ஹயசில் ரதியின் அப்பா,அவளது சகோதரிகளின் கணவர்கள்,சுதன்,மற்றும் சுதன் காணியில் இருந்த சில இளைஞர்கள் இவர்களை ஏற்றிக்கொண்டு சுதனின் ஊர் நோக்கிப்பயனமானோம்.

கிளி நொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய பிரதான வீதி.இந்த வீதியால்தான் சுதனின் ஊருக்கு போகவேண்டும்.இந்த வீதியில்தான் ..தர்மபுரம்,விசுவமடு,உடையார்கட்டு,சுகந்திரபுரம்.தேவிபுரம்,
வள்ளிபுனம் போன்ற ஊர்கள் இருக்கின்றன.வன்னியில் இறுதி யுத்தம் முடிந்த இடம் முள்ளிவாய்க்காலாக இருந்தாலும்..பல ஆயிரம் மக்களின் உயிரையுத்தம் காவுவாங்கிய அவலபூமி இந்த ஊர்கள்தான்..

அந்தவீதியால் அந்த ஊர்களைக்கடந்து போகும் போது அப்போது நினைக்கவில்லை இன்னும் சில ஆண்டுகளில் இந்தவீதியில் இந்த ஊர்களில் குருதி ஆறு ஓடப்போகின்றது என்று.

ஒருவாரு சுதனின் ஊருக்கு வந்து சேர்ந்தோம்..சுதன் தன் வீட்டிக்கு போகவில்லை காரணம் அவர் புஸ்பாவைக்கூட்டிக்கொண்டு வந்ததில் அவர்கள் குடும்பம் இன்னும் அவரில் கோபமாகத்தான் இருந்தார்கள்.

புஸ்பாவின் அம்மா,தங்கை எல்லோறும் சுதனிடம் வந்துவிட்ட தால்.அங்கே இருந்த புஸ்பாவின் வீட்டில் புஸ்பாவின் மூத்த அக்கா ஒருவர் திருமணம் முடித்து அங்கேதான் இருந்தார்..அவரிடம் போய் சுதன் கேட்டார் அக்கா வெள்ளை இப்படி இவங்க மகளை கூட்டிக்கொண்டு வந்து விட்டான் இங்கதான் வந்தானா?அவர் இல்லை என்றார் சுதன் விடவில்லை இல்லை இங்கதான் அவ்ந்திருக்கவேண்டும் அவன் வேற எங்கையும் போக மாட்டான் என்றார்.

ரதியின் அப்பாவும் சுதனினுடன் சேர்ந்து கொண்டு கேட்க புஸ்பாவின் அக்கா சொன்னார் இங்கதான் இருக்காங்க என்று..உடனே ரதியின் அத்தான்கள்(சகோதரிகளின் கணவர்கள்)அவரிடம் சொன்னார்கள் கூப்பிடுங்க கதைக்கவேண்டும் என்று..
இவர்கள் இப்படி வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கும் போதே..சினிமா ஹீரோக்கள் மாதிரி வெள்ளையன் ரதியுடன் அந்த இடத்திற்கு வந்தான்
அவன் சுதனை நோக்கி சொன்னான் இங்க பாருங்க மச்சான் நீங்க மட்டும் என்ன திரமா.எங்க அக்காவை கூட்டிகிட்டுதானே ஓடிபோனீங்க காதலிச்ச ஒங்களால் கூட எங்களை ஏத்துக்க முடியலையா..என்ன நியாயம் இது.

வெள்ளையனின் கேள்விகளுக்கு சுதனால் பதில் சொல்லமுடியவில்லை.
அதேபோல ரதியின் அப்பா,அவளது அத்தான்களிடமும் வெள்ளையன் சொன்னான் இங்க பாருங்க எனக்கு அவளைப்பிடிச்சிருக்கு அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு அதான் கூட்டிக்கொண்டு வந்திட்டன்..எனக்கு கலியாணம் கட்டிவையுங்க..

ரதியின் அப்பா சொன்னார் சரி வா ஊருக்கு போய் முடிவெடுப்பம்...
வெள்ளையனும் சரி என்றான்.உடனே எல்லோறும் புறப்பட்டார்கள்.
வானகம் ஓடிக்கொண்டு வரும் போது என்னுள் பல கேள்விகள்.இவர்களைக்கூட்டிக்கொண்டு வருகின்றார்களோ ஊரில் வந்ததும் கலியாணம் கட்டி வைப்பார்களா?இல்லை பிரித்துவிடுவார்களா?

ஊரிற்கு வந்ததும் சுதன்.சொன்னமாதிரி ரதியையும் வெள்ளையனையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டதால் சுதனை எல்லோறும் புகழ்ந்தனர்.
மூக்காயில் ருத்திரதாண்டவம் ஆடினாள்..ரதியை பார்த்து..ஏண்டி தே................மு............உனக்கு என்ன அரி.....................எடுத்தா இருக்கு அதானே..மாப்பிளை பாத்தேனே பிறகு என்ன ம................க்கு..இந்த ........................மகன் கூட ஓடிப்போன..................கெட்டவார்த்தைகள் சராமாரியாக அந்த இடத்தில் பேசப்பட்டது..

புஸ்பா தன் தம்பியை பார்த்து கேட்டாள் ஏண்டா வெள்ள..உனக்கு இந்த தே.............மகள் தான் கிடைச்சாளா..இவளை கூட்டிட்டு ஓடியிருக்க...
இப்படி எல்லோறும் மாறி..மாறி திட்டிக்கொண்டிருக்க வெள்ளையன் சொன்னான் இங்க பாருங்க ஊரில இருந்து இங்க ஓடிவந்த என் அக்காவும் மச்சானும் கூட என் காதலை எதிர்க்கிறாங்க...நான் ரதியை காதலிக்கிறேன் அவளைத்தான் கல்யாணம் செய்வேன் முடிஞ்சா யாரும் தடுத்துப்பாருங்க...
அதைவிட இன்னும் ஒன்று சொல்லுறன்..நான் ரதியை கூட்டிகிட்டு போன உடனே அவள் கூட சந்தோசமாக இருந்திட்டன் இனி நீங்க அவளை வேற ஒருத்தனுக்கு கட்டிக்கொடுத்தாலும் எனக்கு பிரச்சனையில்லை..வெள்ளையன் இப்படி சொன்னதும் மூக்காயி வெள்ளையனின் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் ஏண்டா நாயே என் மகள் கூட படுத்திட்டு அவளை இப்ப கழட்டிவிட திட்டம் போடுறியா..ஒழுங்கு மரியாதையா? அவளை கட்டிக்க.

மூக்காயியே சம்மதம் சொன்னாதால் ரதிக்கும்,வெள்ளையனுக்கும் அப்போதே கலியாணம் நடந்திவைத்தார்கள் வெள்ளையன் ரதிக்கு தாலிகட்டினான்.
அவர்கள் இருந்த காணியிலேயே வெள்ளையனுக்கும்,ரதிக்கும்.ஒரு கொட்டில் போட்டு கொடுத்தார்கள்.

தங்கள் காதல் நிறைவேறிய மகிழ்சியில் தன் புதுமனைவியை நெருங்கினான் வெள்ளையன்.மெதுவாக அவள்அவனிடம் கேட்டாள் ஏன் அப்படி சொன்னீங்க?
வெள்ளையன் கேட்டான் எப்படி சொன்னேன்?
இல்லை நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று..இல்லை அப்படி சொன்னதால்தான் நமக்கு கலியாணம் கட்டிவைச்சாங்க இல்லாட்டி உனக்கு வேற மாப்பிளைக்கு கட்டிவைச்சு இருப்பாங்க....எப்படி என் ஜடியா?
திருடா..சரியான ஆள்தான் நீ..வெள்ளையனை செல்லமாகத்திட்டியபடி அவனை இறுக்கிஅணைத்துக்கொண்டாள் ரதி.

அடைமழை பெய்து கொண்டே இருந்தது...வீதியால் போன சுதனை கண்டதும் அவனிடம் வந்த காம்னா சுதன் வா என்றாள் சுதனோ இது தப்பில்லையா காம்னாக்கா என்றான்.முதல்தடவை என்றால் தான் பயப்பிடனும் நாமதான் பலதடைவை பிறகு என்ன பயம் வா. என்று அவனை இழுத்துக்கொண்டு தன் குடிசைக்குள் போய் தட்டியை(குடிசைகளில் கதவுக்கு பதிலாக இருக்கும்)சாத்தினாள்.
(தொடரும்)


இன்றைய தகவல்-ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை 15 வருடங்களாக தன்வசம் வைத்திருப்பவர் பாகிஸ்தான் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரடி அவர் 1996 ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் 102 ஓட்டங்களைக்குவித்தார் அப்போது இவருக்கு எத்தனை வயது தெரியுமா? 16 வயதுதான்.எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களுள் அப்ரடியும் ஒருவர்..இவரை நேரில் பார்த்த தருணம் என்னால் மறக்கமுடியாது இது பற்றி ஒரு தனிப்பதிவில் பார்ப்போம்.


இவங்களைத்தெரியுதா அட நம்ம சினேகா அக்காதான்
ஹாய் தனிமரத்தின் வேண்டுகேளுக்கு அமைய நான் வந்திருக்கேன் .நீங்கள் உங்கள் வேலையை மறக்கவேண்டாம்,கருத்துரை,ஓட்டு



Post Comment

44 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
தொடர் எங்கள் ஊரில் பிரிக்கும் காதல்கள் எப்படி ஓடிப் போய்ப் பொய் சொல்லிச் சேருகின்றது எனும் யதார்த்தத்தினைச் சொல்லியவாறு நகர்கிறது.

அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

தனிமரம் said...

எங்கள் ஊரிகளில் எல்லாம் சின்னவயதிலையே வாகனம் ஓடப்பழகியிருப்பார்கள்.அப்போது அங்கே சாரதி அனுமதிப்பத்திரமும் தேவையில்லை.இதனால் வன்னியில் இருந்த பலர் சின்னவதிலேயே வாகனம் ஓடத்தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.//
உண்மைதான் அனுமதிப்பத்திரம் யாருக்கு அவர்களுக்கு அது பற்றிய விளக்கமும் தெரியாத நிலை இருந்தது!

தனிமரம் said...

வெள்ளையனின் கேள்விகளுக்கு சுதனால் பதில் சொல்லமுடியவில்லை.//
காலம் தங்கள் மீது சாட்டையடி கொடுக்கும் போது வலிகள் புரிந்தவர்கள் எப்படி பதில் சொல்ல முடியும்!

Unknown said...

யதார்த்தமான கதை

அருமை

தனிமரம் said...

பார்த்து கேட்டாள் ஏண்டா வெள்ள..உனக்கு இந்த தே.............மகள் தான் கிடைச்சாளா//
உண்மையில் இந்த வார்த்தை தமிழில் கணதியானது அதன் அர்த்தம் சரியாக புரியாமல் பல இடங்களில்  பாவிப்பது அறியாமை நானும் சில இடங்களில் மற்றவர்கள் பேசும் போது கேட்டிருக்கின்றேன் கனகாலம் மறந்ததை இன்று படிக்கும் போது அதிகாலையில்
சிரிப்பு வருகின்றது!

தனிமரம் said...

கதையை சுறுசுறுப்பாக கொண்டு போறீங்கள் வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

சினேகா பாவம் பாஸ்

தனிமரம் said...

தம்பிக்கு கண்டணம்-1 சினேஹா அக்காள் இல்ல இன்னும் ஹீரோயினிதான் ஆமா தனிமரம் செம்ப நெளிசுப்போடும்!
 -2) சிரிப்பு அழகிக்கு ஒரு சேலையில்/சுடிதாரில் ஸ்டில் கிடைக்காவிட்டால் என்னை நாடியிருந்தால் பல படங்கள் அனுப்பியிருப்பன் உன் கண்ணில் குறும்பு ஹில்மா படம் வேணும் என்றாள் குண்டுப்பீப்பாவைப் போடுங்க!
 தொடர்கள் பல பெண்கள் படிக்கின்றார்கள் நண்பா என் வீட்டிலும் தான் அதனால் ஆபாசம் கலந்த பட்ங்களை முடிந்தளவு தவிருங்கள் .
இதை அன்பு வேண்டுகோள் கருதுங்கள் ராச்!

Unknown said...

நீண்ட நாளைக்கு பின் தொடர்கிறது. அட பாஸ் வண்டி எல்லாம் ஓடி இருக்கிறார்.வெள்ளையன் பெரிய பலே ஆள் ஹி ஹி

K.s.s.Rajh said...

@நிரூபன்

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
எங்கள் ஊரிகளில் எல்லாம் சின்னவயதிலையே வாகனம் ஓடப்பழகியிருப்பார்கள்.அப்போது அங்கே சாரதி அனுமதிப்பத்திரமும் தேவையில்லை.இதனால் வன்னியில் இருந்த பலர் சின்னவதிலேயே வாகனம் ஓடத்தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.//
உண்மைதான் அனுமதிப்பத்திரம் யாருக்கு அவர்களுக்கு அது பற்றிய விளக்கமும் தெரியாத நிலை இருந்தது///

ஆமா பாஸ்..

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வெள்ளையனின் கேள்விகளுக்கு சுதனால் பதில் சொல்லமுடியவில்லை.//
காலம் தங்கள் மீது சாட்டையடி கொடுக்கும் போது வலிகள் புரிந்தவர்கள் எப்படி பதில் சொல்ல முடியும்/////

இதான் யதார்த்தம் இதை பல மனிதர்கள் உணர்ந்துகொள்வது இல்லை

K.s.s.Rajh said...

@வைரை சதிஷ் கூறியது...
யதார்த்தமான கதை

அருமை/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
பார்த்து கேட்டாள் ஏண்டா வெள்ள..உனக்கு இந்த தே.............மகள் தான் கிடைச்சாளா//
உண்மையில் இந்த வார்த்தை தமிழில் கணதியானது அதன் அர்த்தம் சரியாக புரியாமல் பல இடங்களில் பாவிப்பது அறியாமை நானும் சில இடங்களில் மற்றவர்கள் பேசும் போது கேட்டிருக்கின்றேன் கனகாலம் மறந்ததை இன்று படிக்கும் போது அதிகாலையில்
சிரிப்பு வருகின்றது//////

ஆமா பாஸ் இந்தவார்த்தை தமிழில் கணதியானதுதான்..பலர் இதன் அர்த்தம் புரியாமல் பாவிக்கின்றனர்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கதையை சுறுசுறுப்பாக கொண்டு போறீங்கள் வாழ்த்துக்கள்////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தம்பிக்கு கண்டணம்-1 சினேஹா அக்காள் இல்ல இன்னும் ஹீரோயினிதான் ஆமா தனிமரம் செம்ப நெளிசுப்போடும்!
-2) சிரிப்பு அழகிக்கு ஒரு சேலையில்/சுடிதாரில் ஸ்டில் கிடைக்காவிட்டால் என்னை நாடியிருந்தால் பல படங்கள் அனுப்பியிருப்பன் உன் கண்ணில் குறும்பு ஹில்மா படம் வேணும் என்றாள் குண்டுப்பீப்பாவைப் போடுங்க!
தொடர்கள் பல பெண்கள் படிக்கின்றார்கள் நண்பா என் வீட்டிலும் தான் அதனால் ஆபாசம் கலந்த பட்ங்களை முடிந்தளவு தவிருங்கள் .
இதை அன்பு வேண்டுகோள் கருதுங்கள் ராச்/////

ஹா.ஹா.ஹா.ஹா. அண்ணனுக்கு சினேகாவை பற்றி சொன்னது கோவத்தைபாரு..

உங்கள் வேண்டுகோளை ஏற்கின்றேன் பாஸ் இனி கில்மா படங்கள் போடுவதை முற்றாக தவிர்க்கின்றேன்.நன்றி பாஸ் அறிவுரைக்கு..

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
ம் ./////

அட இது புதுவகை கமண்டா இருக்கே..ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
நீண்ட நாளைக்கு பின் தொடர்கிறது. அட பாஸ் வண்டி எல்லாம் ஓடி இருக்கிறார்.வெள்ளையன் பெரிய பலே ஆள் ஹி ஹி/////

ஆமா பாஸ் இடையில் கொஞ்சம் வேற பதிவுகள் எழுதியதால் தாமதமாகிவிட்டது....

எனக்கு ரைவிங் என்றால் கொள்ளைப்பிரியம் பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுவில் சில பாகங்களை மிஸ் செய்துவிட்டேன், முழுதும் படித்துவிட்டு பிறகு வருகிறேன்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த சினேகா படம் மார்பிங் செய்யப்பட்டதுன்னு நினைக்கிறேன்.....

K.s.s.Rajh said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

////
நடுவில் சில பாகங்களை மிஸ் செய்துவிட்டேன், முழுதும் படித்துவிட்டு பிறகு வருகிறேன்.../////

உங்களுக்கு டைம் இருக்கும் போது வாங்க தலைவா

K.s.s.Rajh said...

////
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அந்த சினேகா படம் மார்பிங் செய்யப்பட்டதுன்னு நினைக்கிறேன்./////

ஆமா பாஸ் நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் இது மார்ப்பிங் செய்த படம் தான் போல

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யமாப் போகுது கதை.

சென்னை பித்தன் said...

த.ம.7

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நண்பா, தொடர் முடியட்டும் முழுதும் படித்துவிட்டு எனது கருத்துக்களை கூறுகிறேன். இப்போதைக்கு வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//அந்த சினேகா படம் மார்பிங் செய்யப்பட்டதுன்னு நினைக்கிறேன்.....//

அந்தப்பொண்ணு லாரன்ஸ் கூட கொஞ்சம் கோக்கு மாக்கா ஒரு படம் நடிச்சிச்சே, அதுல உள்ள படமா இருக்கலாம், மார்பிங்கா கூட இருக்கலாம். (இதச்சொல்றதுக்கு ஒரு காமெண்டு தேவையா?)

மாலதி said...

நல்ல படைப்பு பாரட்டுகள் தொடருங்கள் ....

M.R said...

நல்லா சுவாரஸ்யமாக உள்ளது கதை
த.ம எட்டு

Anonymous said...

எவன்யா அது சின்ன பையனை எல்லாம் வான் ஓட விட்டது ...ஆமா இது நடந்து எத்தனை வருஷம் இப்போ ..?

காட்டான் said...

கந்தசாமி. கூறியது...
எவன்யா அது சின்ன பையனை எல்லாம் வான் ஓட விட்டது ...ஆமா இது நடந்து எத்தனை வருஷம் இப்போ ..?

ஆஹா செம்பு நெளியப்போதா ஹி ஹி அட நான்கூட 14வயசில ரக்டர் ஒட்டியிருக்கேன்...
சுவாரசியமா கதையை கொண்டுபோகிறீர்கள் வாழ்த்துக்கள் ராசுக்குட்டி..

கோகுல் said...

சுவாரஸ்யம் தொடர்கிறது!
சின்ன வயசிலேய வாகனம் ஓட்டுறது அலாதி தான் ஆனா பாதுகாப்பு முக்கியம் பாஸ்!

Mohamed Faaique said...

ஓடிப்போனதுக்காக இரண்டு குடும்பமும் தற்கொலை முயற்சி பண்ணியது அதிர்ச்சியளித்தது.. என்ன பாக்குரீங்க.... உங்கள வான் ஓட்ட சொல்லிட்டு உங்க கூட வந்தத்தான் சொல்றேன்...

குறையொன்றுமில்லை. said...

தொடர் சுவார்சியமா போகுது நல்லா இருக்கு.

F.NIHAZA said...

கதை நல்லா போகுது....

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul

தேங்ஸ் டாக்டரே

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//அந்த சினேகா படம் மார்பிங் செய்யப்பட்டதுன்னு நினைக்கிறேன்.....//

அந்தப்பொண்ணு லாரன்ஸ் கூட கொஞ்சம் கோக்கு மாக்கா ஒரு படம் நடிச்சிச்சே, அதுல உள்ள படமா இருக்கலாம், மார்பிங்கா கூட இருக்கலாம். (இதச்சொல்றதுக்கு ஒரு காமெண்டு தேவையா?////
ஹி.ஹி.ஹி.ஹி.............

K.s.s.Rajh said...

பெயரில்லா கூறியது...
hi!friend ,now i want to exchnage with you ,this my http://khmerlibrarypicture.blogspot.com/,if you okey with me i will link you later
http://khmerlibrarypicture.blogspot.com/

oky thanks for comment

K.s.s.Rajh said...

@
மாலதி கூறியது...
நல்ல படைப்பு பாரட்டுகள் தொடருங்கள் ../////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
எவன்யா அது சின்ன பையனை எல்லாம் வான் ஓட விட்டது ...ஆமா இது நடந்து எத்தனை வருஷம் இப்போ ..////

2006ல் பாஸ் அப்ப எனக்கு 17 வயது நான் 14 வயதில் இருந்தே வாகனம் ஓடப்பழகிவிட்டேன்..அப்போது எங்க ஊரில் லைசன்ஸ் தேவையில்லை.

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
கந்தசாமி. கூறியது...
எவன்யா அது சின்ன பையனை எல்லாம் வான் ஓட விட்டது ...ஆமா இது நடந்து எத்தனை வருஷம் இப்போ ..?

ஆஹா செம்பு நெளியப்போதா ஹி ஹி அட நான்கூட 14வயசில ரக்டர் ஒட்டியிருக்கேன்...
சுவாரசியமா கதையை கொண்டுபோகிறீர்கள் வாழ்த்துக்கள் ராசுக்குட்டி./////

செம்பு நெளியாது மாம்ஸ் நான் 14 வயதில் இருந்தே வாகனம் ஓடப்பழகிவிட்டேன்..அப்ப எங்கள் ஊரில் லைசன்ஸ் தேவையில்லை..

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
சுவாரஸ்யம் தொடர்கிறது!
சின்ன வயசிலேய வாகனம் ஓட்டுறது அலாதி தான் ஆனா பாதுகாப்பு முக்கியம் பாஸ்/////

ஆமா பாஸ் பாதுக்காப்பு முக்கியம்

அட இப்ப எனக்கு 22 வயது ரைவிங் லைசன்ஸ் இருக்கு...ஹி.ஹி.ஹி.ஹி

அப்போது வன்னியில் ரைவிங் லைசன்ஸ் தேவையில்லை என்பதால் பெரும்பாலும் சின்ன வயதிலேயே எல்லோறும் வாகனம் ஓடப்பழகியிருப்பார்கள்

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
ஓடிப்போனதுக்காக இரண்டு குடும்பமும் தற்கொலை முயற்சி பண்ணியது அதிர்ச்சியளித்தது.. என்ன பாக்குரீங்க.... உங்கள வான் ஓட்ட சொல்லிட்டு உங்க கூட வந்தத்தான் சொல்றேன்../////

ஹா.ஹா.ஹா.ஹா. அப்படியில்லை பாஸ் நான் நல்லா ரைவிங் செய்வேன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விடயம் ரைவிங்...

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
தொடர் சுவார்சியமா போகுது நல்லா இருக்கு/////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
F.NIHAZA கூறியது...
கதை நல்லா போகுது.....////

நன்றி சகோதரி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails