Sunday, October 30, 2011

(பகுதி-8)என் உயிர் நீ தானே

கடந்த பகுதியில்-
ஓரு நாள் வேலைக்குப்போன வெள்ளையனைக்காணவில்லை காலையில் போனவன் இரவாகியும் இன்னும் வரவிலை என்ன நடந்தது எங்க போய்ட்டானோ என்று எல்லோறும் தேடிக்கொண்டிருந்தனர்.ரதி அழுது கொண்டிருந்தாள். அப்போது........
இனி.........

அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஓருவர் வந்து சொன்னார் வெள்ளையன் புதுக்குடியிருப்புக்கு பஸ்சில் போய்க்கொண்டிருப்பதை கண்டதாக...




எல்லோறும் யோசித்தனர் வெள்ளையன் ஏன் புதுக்குடியிருப்புக்கு போறான்....
தொலைபேசி வசதிகள் எதுவும் அப்போது வன்னியில் இல்லை கைத்தொலைபேசிக்கும் தடையிருந்தது.எனவே ஓருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நேரில்தான் சந்திக்கவேண்டும்...

மூக்காயி சொன்னாள் விடுங்க எங்க போகப்போறான் இங்கதானே வரனும்
மூக்காயின் கூற்றை எல்லோறும் ஏற்றுக்கொண்டனர்.ரதி மட்டும் அழுது கொண்டேயிருந்தாள்.
திடீர் என்று இரண்டு நாட்களில் வெள்ளையன் திரும்பிவந்தான்....எங்கே போனாய் என்று எல்லோறும் கேட்டபோது அவன் கோபமாக சொன்னான்..இங்க இருப்பவங்க எல்லாம் மனுசங்களா...மிருகங்கள்....
யாரைச்சொல்கின்ற என்று சுதன் கேட்க வெள்ளையன் சொன்னான் உன்னைத்தான் என் அக்காவை கலியாணம் கட்டிகிட்டு காம்னாவுடன் போன மன்னிச்சு அக்கா ஏற்றுக்கொண்டாள் அப்பறம் என் தங்கைச்சி உடனும் இப்ப போற உன்னை அடித்து உதைக்கனும் ஆனால் என் அக்காவின் இரண்டு பிள்ளைகளுக்காக உன்னை விடுறன்..

சுதன் கோபமாக வெள்ளையனிடம் சொன்னான்.இங்க பாருவெள்ளை தேவையில்லாமல் கதை கட்டாத உன் தங்கைச்சியிடம் நான் அப்படி எதுவும் தப்பாக நடக்கவில்லை....
வெள்ளையன் கோபத்துடன் சுதனின் சேட்டை(சட்டையை)பிடித்து கேட்டான் ஏண்டா நாயே என் தங்கைச்சு தங்கம் கூட நீ கழிவாத்தில் ஓதுங்குனது எல்லாம் எனக்கு தெரியும்.....எனக்கு எப்படி தெரியும் என்று பார்க்கிறியா...நீங்க வீட்டில் ஓருத்தரும் இல்லாத நேரம் கொஞ்சி கூழாவி கழிவாத்துக்கு போறது எல்லாம் எனக்கு தெரியும் ரொம்ம நாள் உங்களை நான் கவனிச்சு கிட்டுதான் வாரன்.இதை வெளியிலாலும் சொல்லமுடியலை..அக்காவின் வாழ்கை எனக்கு பெரிதாக தெரிந்தது.
மனசு சரியில்லை அதான் ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வந்தேன்

சுதனின் லீலைகளை வெள்ளையன் போட்டுடைத்ததும்..எல்லோறும் சுதனை கேவலமாக பேசினர்(திட்டினர்)ஏண்டா தே.............................மகனே..உனக்கு எத்தின பொம்புள தேவை...........அப்படி என்னடா அ........................உனக்கு

புஸ்பா தன் தங்கை தங்கத்துக்கும் தன் புருசனுக்கும் தொடர்பு இருக்கு என்று..தன் தம்பி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் தங்கத்தை இழுத்து போட்டு அடித்தாள்..தங்கம் வாய் திறந்து எதுவும் பேசவில்லை...

உடனே தங்கத்துக்கு கலியாண ஏற்பாடுகள் நடந்தது.சட்டு புட்டு என்று(விரைவாக)ஓரு மாப்பிளை பார்த்து தங்கத்துக்கு கலியாணம் செய்து நடந்தது.
தங்கம் கலியாணம் ஆகி அவள் புருசனுடன் போய்விட்டாள்...


அந்த நேரம் யுத்தம் உக்கிரமடைந்தது...மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வேறு ஊர்களுக்குச்செல்லத்தொடங்கினர்.....பெரும்பாலும் எல்லோறும் பரந்தன்..புதுக்குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள இடங்களான...விசுவமடு,உடையார்கட்டு,சுதந்திரபுரம் போன்ற ஊர்களுக்குச்சென்றனர்..காரணம்..கிளிநொச்சியில் இருந்து முன்னுக்கும் போக முடியாது அங்க கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்தது..பின்னால் யாழ்ப்பாணப்பக்கமும் போகமுடியாது அங்கே கடுமையான சண்டை எனவே இடையில்...உள்ள பெரும் பிரதேசங்களான இந்த வீதியை அண்மித்திருந்த ஊர்களுக்குச்செல்லத்தொடங்கினர்.....



முதலில் இந்தவீதியில் முன்னுக்கு உள்ள ஊரில் இருப்பது அப்பறம் அங்க ஷெல்கள் விழத்தொடங்க அடுத்த ஊருக்குப்போவது..அப்பறம் அங்க ஷெல்கள் விழத்தொடங்கியதும் அடுத்த ஊருக்குப்போவது இப்படி ஓவ்வொறு ஊறாக போய் போய்தான் கடைசியில் இறுதியில் இருந்த முள்ளிவாய்க்காலில்.வன்னிமக்கள் அனைவரும் தஞ்சமடைதது குறிப்பிடத்தக்கது.

சுதனின்,குடும்பமும்,வெள்ளையன் குடும்பம்,மூக்காயி என எல்லோறும் இடம் பெயர்ந்து...விசுவமடு என்று இடத்தில் முதலில் இருந்தனர்.....யுத்தம் கடுமையாக இருந்ததனால் அங்கே வயல் வேலைகள் இல்லை அவர்களுக்குத் தெரிந்தஓரே தொழில் வயலில் வேலை செய்வது மட்டும்தான்.

இருந்தாலும் வயிறு என்று ஓன்று இருக்கின்றதே....எனவே
இடம்பெயர்கின்றவர்களின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிடும் வேலையை தொடங்கினார்கள் சுதனும்,வெள்ளையனும்,கடுமையான ஷெல்கள் விழுகின்ற போதும்..,உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்தனர்....
அப்போது ஓரு நாள்
(தொடரும்)

படங்கள்-கூகுள்/
பொதுவான இடப்பெயர்வின் படங்கள்..

இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க



Post Comment

46 comments:

Unknown said...

ம்ம்ம் கதையல்ல நிஜம்!!
பல சம்பவங்களை தொகுத்து தந்திருகிறீங்க..
எனக்கென்றால் அவை ஞாபகம் குறைவு...சின்ன வயசில் நடந்ததாலோ என்னமோ!

Unknown said...

ம்ம்ம் கதையல்ல நிஜம்!!
பல சம்பவங்களை தொகுத்து தந்திருகிறீங்க..
எனக்கென்றால் அவை ஞாபகம் குறைவு...சின்ன வயசில் நடந்ததாலோ என்னமோ!

Shanmugam Rajamanickam said...

தொடருங்கள்...

சக்தி கல்வி மையம் said...

பல சம்பவங்களின் தொகுப்பு..

Mohamed Faaique said...

வேலைப்பழுவுக்கு மத்தியில் எழுதி இருக்கீங்க போல.. பதிவு ரொம்ப சின்னதாகிடுச்சு....

அடுத்த பதிவு இன்னும் சுவாரஸியமாக இருக்குமென நம்புகிறோம்..

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி
சுதனின் கதையை நீங்கள் சொல்லும் விதம் அழகு அதுவும் ஏதோ நாங்கள் உங்கள் முன் நேரடியாக நின்று கேட்பதைப்போல்(கதைப்பதைபோல்?)
உள்ளது..

வாழ்த்துக்கள்..

ADMIN said...

உங்கள் வலைப்பூ பிடித்துவிட்டது. பின்தொடர்பவராகியிருக்கிறேன்..!!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரே படத்தை ரெண்டு முறை போட்டுருக்கீங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கதை சொல்லி திறமையாக சொல்லுகிறார் வாழ்த்துக்கள்....

கோகுல் said...

இருந்தாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே?

ஆமாம் பாஸ் !
அதுக்காகத்தனே இத்தனை வலிகளும்!

Unknown said...

super

குறையொன்றுமில்லை. said...

தொடர் சுவாரசியமா போகுது.

சென்னை பித்தன் said...

அழகாகக் கொண்டு செல்கிறீர்கள்.
த.ம.4

M.R said...

நண்பா சுவாரஸ்யம்

செல்கள் என்றால் குண்டா நண்பா

த.ம.6

தனிமரம் said...

வணக்கம் சகோ !
கொஞ்சம் தனிப்பட்ட முள்கள் வேலைகள் அதுதான் லேட் கதைக்குள் வருவோம்!

தனிமரம் said...

ஏன் இந்த அவசரம் வெள்ளையன் புதுக்குடியிருப்பு போகும் வழியில் அவனின் மன உணர்வுகள் இடையே இன்னும் மெருகு ஊட்டுயிருக்கலாம் இந்த இடத்தில் ஜீவன் மிஸ்சிங்க சகோ !

தனிமரம் said...

இடம் பெயர்வு விடயத்தில் ஆதிக கவணம்
செலுத்தவில்லையே பாஸ் பெருக்கு வாழ்த்த முடுயாது நேரடி அனுபவம் உங்களுக்கு அதிகம் பரதன் வழி ஊடாக இயற்கைக் காட்சி மக்கள் மனநிலை மக்களின் துயரங்களை முகாரி வாசிக்க வேண்டிய இடத்தில் டாக்குத்தர் பேட்டி பார்க்கும் அவசரத்தில் எழுதியது போல் இருக்கு ஏதோ இந்தத் தொடதில் ராசின் தனித்துவம் எங்கு தேடியும் என் கண்களுக்குத் தெரியவில்லை ராஜ்சின் சமுகத்தின் பார்வையில் யுத்தத்துயரங்களை இன்னும் சாடி மெருகு ஏற்றாமல் விட்டது வியப்பாக இருக்குது!
வாழ்த்துச் சொல்லி உங்களை பாராட்ட முடியாது சகோ இந்தத் தொடரில் ஜீவன் இருக்கவில்லை எனக்கு ஏமாற்றம் அளிக்குது கும்மியில் காத்திரமான தொடர் கவனம் சிதறக்கூடாது இது ஒரு வாசகனின் கருத்து!

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா

நன்றி மாப்ள

K.s.s.Rajh said...

@சண்முகம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

ஆமா பாஸ் அடுத்த பகுதியை கொஞ்சம் பெரிதாக எழுதுகின்றேன் நன்றி

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@தங்கம்பழனி

நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ

////ஒரே படத்தை ரெண்டு முறை போட்டுருக்கீங்க..////

நன்றி பாஸ் திருத்திவிட்டேன்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
கதை சொல்லி திறமையாக சொல்லுகிறார் வாழ்த்துக்கள்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
இருந்தாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே?

ஆமாம் பாஸ் !
அதுக்காகத்தனே இத்தனை வலிகளும்////

ஆமாம் சரியாகச் சொன்னீங்க

K.s.s.Rajh said...

@ வைரை சதிஷ் கூறியது...
super////

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன் கூறியது...
அழகாகக் கொண்டு செல்கிறீர்கள்.
த.ம.4////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
நண்பா சுவாரஸ்யம்

செல்கள் என்றால் குண்டா நண்பா

த.ம.6////

ஆமாம் பாஸ்....நன்றி

K.s.s.Rajh said...

@தனிமரம்

வணக்கம் அண்ணே
உங்கள் ஆம் இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம்....அடுத்த பகுதிகளில் முயற்சி செய்கின்றேன்

நன்றி பாஸ்

இராஜராஜேஸ்வரி said...

தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்

நிரூபன் said...

பாஸ்...தொடரில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீங்க.
சுகந்திரபுரம் - சுதந்திரபுரம்,
செல்கள் என்பது மனித உடலில் உள்ள செல்களைக் குறிப்பது,
ஷெல்கள் என்பது ஆட்டி அல்லது ஆட்டிலறி ஷெல்லைக் குறிக்கும்,
இத்தகைய சிறு தவறுகளைத் திருத்தி, பதிவேற்ற முன்னர் கொஞ்சம் சரி பார்த்து மெரு கூட்டி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்,

பாலா said...

வெகு இயல்பாக செல்கிறது. தொடருங்கள் நண்பரே.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா... நேரிலே பார்ப்பதுபோல இருக்கு கதை. பல பழைய நினைவுகளைக் கிளறுகிறது..... தொடருங்க அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஷேர்

மாய உலகம் said...

நண்பரே நடை நளினமாக அழகாக எங்களை அழைத்து செல்கிறது... சுதனின் விசயம் தெரிந்து தங்கத்துக்கு ஒரு நல்லது நடந்துவிட்டது... அடுத்த பதிவுக்காக காத்திருப்பு... பழைய பதிவுகளையும் ப்டிக்கவேண்டும்.. பிறகு வருகிறேன் நண்பா... நன்றி

Unknown said...

Super post! This real story?

வலையுகம் said...

அழகாக தொகுத்து இருக்கிறீர்கள்
உங்களின் பேச்சு வழக்கு அழகு தமிழில்

நன்றி சகோ

ஸாதிகா said...

தேர்ந்தெடுத்த புகைப்படங்களும் பகிர்வும் அருமை.வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
பாஸ்...தொடரில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீங்க.
சுகந்திரபுரம் - சுதந்திரபுரம்,
செல்கள் என்பது மனித உடலில் உள்ள செல்களைக் குறிப்பது,
ஷெல்கள் என்பது ஆட்டி அல்லது ஆட்டிலறி ஷெல்லைக் குறிக்கும்,
இத்தகைய சிறு தவறுகளைத் திருத்தி, பதிவேற்ற முன்னர் கொஞ்சம் சரி பார்த்து மெரு கூட்டி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்/////

எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
வெகு இயல்பாக செல்கிறது. தொடருங்கள் நண்பரே/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
அடடா... நேரிலே பார்ப்பதுபோல இருக்கு கதை. பல பழைய நினைவுகளைக் கிளறுகிறது..... தொடருங்க அருமை/////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
குட் ஷேர்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
நண்பரே நடை நளினமாக அழகாக எங்களை அழைத்து செல்கிறது... சுதனின் விசயம் தெரிந்து தங்கத்துக்கு ஒரு நல்லது நடந்துவிட்டது... அடுத்த பதிவுக்காக காத்திருப்பு... பழைய பதிவுகளையும் ப்டிக்கவேண்டும்.. பிறகு வருகிறேன் நண்பா... நன்றி/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஹைதர் அலி கூறியது...
அழகாக தொகுத்து இருக்கிறீர்கள்
உங்களின் பேச்சு வழக்கு அழகு தமிழில்

நன்றி சகோ/////

நன்றி நண்பரே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails