Thursday, October 20, 2011

(பகுதி-4)எனக்குப்பிடித்த பெண்கள்

இந்தத்தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவுக்கு வருகின்றது..எனக்குப்பிடித்த 100 பெண்களை குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன் இப்போது அதை 50 உடன் நிறுத்திக்கொள்கின்றேன்.
முன்னய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3



31)கொண்டலீசா ரைஸ்


32)ஹிலாரி கிளிங்டன்


33)பூலான் தேவி


பல வருடங்களுக்கு முன்பு ஓரு பத்திரிக்கையில் இவரது கதை தொடராக வந்தது அப்போது நான் மிகவும் சின்னப்பையன் ஆனாலும் இவரது கதையை தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.தாங்கமுடியாத துயரங்களை தாங்கிய ஒரு பெண்

34)ஜான்சி ராணி(லட்சுமிபாய்)

ராணி லட்சுமி பாயின் சிலை
இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.
zee தமிழ் தொலைக்காட்சியில் தற்போது இவரது வாழ்க்கை வரலாறு தொடராக ஒளிபரப்பாகின்றது.


35)தாமரை



தமிழ் சினிமாவிப் பெரும்பாலும் ஆண் பாடாலாசிரியர்களே ஆதிக்கம் செலுத்தும் போது..ஒரு பெண் பாடல் ஆசிரியராக தன் அற்புதமான பாடல் வரிகளால் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றவர்... இவருக்கு ஆரம்பத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது .மின்னலே படத்தில் வரும் வசீகரா என் நெஞ்சினிலே உன் பொண் அடியை....என்ற மெகா ஹிட் பாடல் தான் இவரை திரும்பிபார்க்கவைத்து...


36)கோவைசரளா



மிகச்சிறந்த நகைச்சுவை நடிகை தன் நகைச்சுவையால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்..கவுண்டமணி,செந்தில்,வடிவேல்,இவர்களுடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவைகாட்சிகள் காலத்தால் மறக்கமுடியாதவை.
கமல் சதிலீலாவதி என்ற படத்தில் தனக்கு ஜோடியாக இவரை நடிக்கவைத்தது இவரது திறமைக்கு சான்று.


37)ஷகிலா



 இவர் நடித்த மலையாளப்படங்களை விட்டுவிடுங்கள் நம்ம தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை கலந்தவேடங்களில் நடித்திருக்கின்றார்..அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்(நான் தமிழ் சினிமாவில் சொன்னேன்).விஜய் டீ.வியில் வாங்க பேசலாம் என்ற நிகழ்சியில் இவர் ஒரு முறை கலந்து கொண்டு..தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.தன் வாழ்க்கை பற்றியும் பல விடயங்களைச்சொல்லியிருந்தார்..


அந்த மாதிரி படங்களில் நடித்தால் நிஜவாழ்க்கையிலும் அப்படியா இருப்பார்கள் இல்லையே?அவங்களும் பெண் தானே.


38)சினேகா



ஒரு அற்புதமான நடிகை....இவரின் சிரிப்பினால் பல இளஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர்....அப்போதெல்லாம் ஊர்களில் ஒரு அழகான பொண்ணு இருந்தால் அவளுக்கு உடனே பட்டப்பெயர் சினேகாதான் அந்தளவுக்கு பலரின் மனதை கொள்ளை கொண்டவர் ஆனாலும் தற்போது படவாய்ப்புக்கள் குறைந்துவிட்டது இவரது ரசிகர்களுக்கு வருத்தம் தான்


39)நமீதா


ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..................................எனக்கு மட்டுமா இவங்களைப்பிடிக்கும்..............மச்சான்ஸ்............


40)ரேவதி


தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகை..இவரது முதல் படமான மண்வாசனை முதற்கொண்டு பெரும்பாலும் இவர் நடித்த பல திரைப்படங்களை பாத்திருக்கின்றேன்
(தொடரும்)
அடுத்த பகுதியுடன் இந்தத்தொடர் நிறைவு பெறும்


அன்பான நண்பர்களே 

என்ன ஒரே தொடராக இருக்கின்றது என்று நினைக்கவேண்டாம் நான் ஆரம்பித்த எல்லாத்தொடர்களையும் முடித்துவிட்டு என் 100வது பதிவுக்கு பிறகு பல மாற்றங்களை என் பதிவுகளில் செய்ய இருக்கின்றேன் எனவே மன்னித்து அருளுங்கள் நண்பர்களே
அதாவது காத்திரமான பல பதிவுகள் எழுதலாம் என்று நினைக்கின்றேன் உனக்கு ஏன் இந்த வேலை என்று கேட்கலாம்.கிரிக்கெட் பதிவராக இருந்து கமர்சியல் பதிவராக(யாரு யாரு) மாறினேன் இப்போது என் தளத்தை பலர் வாசிப்பதால் பல சமூக நலன் சார்ந்த விடயங்களை எழுதினால் பலர் படிப்பார்கள்.முன்னமே எழுதியிருந்தால்..நான் மட்டும்தான் என்பதிவுகளை படித்துக்கொண்டு இருந்திருப்பேன்.எனவே 100வது பதிவுக்கு பிறகு சில காந்திரமான பதிவுகளை எழுத இருக்கின்றேன்.
ஆனாலும் என்னிடம் வாசகர்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான கிரிக்கெட்,சினிமா,மொக்கை,அனுபவப்பகிர்வுகள் போன்ற பல்சுவைப்பதிவுகளும் வரும் என்னை பதிவுலகில் அடையாளம் காட்டிய இந்தமாதிரி பதிவுகள் எழுதுவதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன்.இவையுடன் சேர்ந்து சமூகநலன் சார்ந்த பதிவுகளும் வரும்.

எனக்கு தெரிந்ததை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

இன்றைய தகவல்-சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இனிங்சில் ஆட்டம் இழக்காமல் 400 ஓட்டங்களை விளாசிய மேற்குஇந்திய ஜாம்பவான் லாரா.முதல் தர போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 500 ஓட்டங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.400 ஓட்டங்களை 2004ல் இங்கிலாந்துக்கு எதிராக விளாசினார் ஆனால் அதற்கு 10 வருடங்களுக்கு முன்னபு 500 ஓட்டங்களை முதல் தர போட்டியில் விளாசிவிட்டார்.

Post Comment

40 comments:

SURYAJEEVA said...

first half right
last half wrong

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
first half right
last half wrong/////

ஹா.ஹா.ஹா.ஹா. என்ன பண்ணுவது நண்பரே சினிமாவும் எமது ரசனையுடன் கலந்து விட்டது..

செங்கோவி said...

இன்னைக்குத் தான்யா உங்க லிஸ்ட்டோட ஒத்துப் போயிருக்கேன்..

தனிமரம் said...

ஒரு கறுப்பினத்தவர் முன்னேறலாம் துணிவு இருந்தால் என்பதை நிரூபித்தவர் கொண்டலீரைஸ்!

தனிமரம் said...

சமுதாயத்தின் மீது கூர்மையான பார்வை கொண்டவர் தன் கணவன் விடயத்தில் அமைதிகாத்து குடும்பத்தை கட்டமைத்தவர் ஹிலாரி எனக்கும் பிடிக்கும்!

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
இன்னைக்குத் தான்யா உங்க லிஸ்ட்டோட ஒத்துப் போயிருக்கேன்////
ஹி.ஹி.ஹி.ஹி...நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஒரு கறுப்பினத்தவர் முன்னேறலாம் துணிவு இருந்தால் என்பதை நிரூபித்தவர் கொண்டலீரைஸ்/////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சமுதாயத்தின் மீது கூர்மையான பார்வை கொண்டவர் தன் கணவன் விடயத்தில் அமைதிகாத்து குடும்பத்தை கட்டமைத்தவர் ஹிலாரி எனக்கும் பிடிக்கும்/////

ஆம் பாஸ் இது அவரது தனித்திறமையே

தனிமரம் said...

சினேஹா -முதல் படம் பின் வந்தாலும் என்னவளே முதலில் வந்தபோது காத்திரமான நடிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்தவர்  ஆனந்தம் படத்தில் புத்தகத்தில் விளக்கேற்ற வரலாமா என்று சீண்டியவள் முகத்தை மறக்க முடியுமா ???

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சினேஹா -முதல் படம் பின் வந்தாலும் என்னவளே முதலில் வந்தபோது காத்திரமான நடிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்தவர் ஆனந்தம் படத்தில் புத்தகத்தில் விளக்கேற்ற வரலாமா என்று சீண்டியவள் முகத்தை மறக்க முடியுமா ??/////

எனக்கு ஆனந்தத்தைவிட ஏப்ரல் மாதத்தில் அவங்க நடிப்பு மிகவும் பிடிக்கும்....அதைவிட புதுப்பேட்டையில் என்ன ஒரு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தனிமரம் said...

பூலான் தேவி கதைக்காக அந்தப்பேப்பர் தொடராக வாங்கியவன்!
ரேவதி நடிகை மட்டுமல்ல நல்ல இயக்குனர்     
ஹிந்தியில் சல்மான்கானை இயக்கியவர் மட்டுமல்ல மித் ர மை பிரெண்டு மூலம் எயிட்ச் நோயாளியின் உலகை காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை !
 துணிந்து எழுதுங்கள் கூட வருகின்றோம் வாசகனாக!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
பூலான் தேவி கதைக்காக அந்தப்பேப்பர் தொடராக வாங்கியவன்!
ரேவதி நடிகை மட்டுமல்ல நல்ல இயக்குனர்
ஹிந்தியில் சல்மான்கானை இயக்கியவர் மட்டுமல்ல மித் ர மை பிரெண்டு மூலம் எயிட்ச் நோயாளியின் உலகை காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை !
துணிந்து எழுதுங்கள் கூட வருகின்றோம் வாசகனாக/////

ஆமா பாஸ் ரேவதி ஒரு இயக்குனர்தான்

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
////துணிந்து எழுதுங்கள் கூட வருகின்றோம் வாசகனாக!////

நன்றி பாஸ்.......

Mohamed Faaique said...

ஷப்பா... இந்த லிஸ்ட் எங்க பெய்ட்டு முடியப் போகுதோ!!!

Riyas said...

இதில் சிலரை பிடிக்காது சிலரைப்பிடிக்கும்..

காட்டான் said...

வணக்கம் ராசுகுட்டி..
ஏன்யா ஏன் ஏன் இந்த கொலை வெறி ஹி ஹி

M.R said...

நல்ல தொகுப்பு நண்பா ,நன்றி பகிர்வுக்கு

Anonymous said...

முப்பத்தஞ்சும் முப்பத்தாறும் எனக்கு பிடிக்கும் ..)

கோகுல் said...

அடுத்த லிஸ்டுல யாறாரு இருக்காங்கன்னு ஆவலைருக்கு!

சென்னை பித்தன் said...

த.ம.7
கதம்ப செலெக்சன்!

Yoga.S. said...

ஐம்பதோட நிறுத்தப் போறீங்களா,ஏன் ராசா,ஏன்???????????

Unknown said...

நல்ல தொகுப்பு

கடைசி பாதி அருமை

அம்பாளடியாள் said...

நல்ல ரசனையுடன்தான் தேர்வு செய்துள்ளீர்கள் சகோ .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ....

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

அடுத்த பகுதியுடன் முடியும்

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
இதில் சிலரை பிடிக்காது சிலரைப்பிடிக்கும்/////

ஹா.ஹா.ஹா. நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Kannan கூறியது...
உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
நல்ல தொகுப்பு நண்பா ,நன்றி பகிர்வுக்கு/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
முப்பத்தஞ்சும் முப்பத்தாறும் எனக்கு பிடிக்கும் ../////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
அடுத்த லிஸ்டுல யாறாரு இருக்காங்கன்னு ஆவலைருக்கு/////

ஹா.ஹா.ஹா.ஹா..தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
த.ம.7
கதம்ப செலெக்சன்/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
ஐம்பதோட நிறுத்தப் போறீங்களா,ஏன் ராசா,ஏன்??????????//////

ஹா.ஹா.ஹா.ஹா.படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டக்கூடாதுதானே ஜயா அதான்

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
நல்ல தொகுப்பு

கடைசி பாதி அருமை////

அட நம்ம வயசுக்கு...ஹி.ஹி.ஹி.ஹி அதானே புடிக்கனும்........

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
நல்ல ரசனையுடன்தான் தேர்வு செய்துள்ளீர்கள் சகோ .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .../////

நன்றி மேடம்

மாய உலகம் said...

லிஸ்டில்.. தாமரை அவர்களையும், சினேகாவையும் சந்தித்திருக்கிறேன்... நல்லதொரு ரசனை உங்களுக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பா!

சி.பி.செந்தில்குமார் said...

என்னது?காத்திரமான பதிவுகள் எழுதப்போறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?
காத்திரமான பதிவுகளை நீங்கள் எழுதி இன்னும் அதிகளவான வாசக உள்ளங்களின் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

அப்புறமா இன்றைய லிஸ்ட்டும் அசத்தல்.

பூலன் தேவி தொடர் தினமுரசுப் பத்திரிகையில் வந்தது என்று நினைக்கிறேன்.

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
லிஸ்டில்.. தாமரை அவர்களையும், சினேகாவையும் சந்தித்திருக்கிறேன்... நல்லதொரு ரசனை உங்களுக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பா/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
என்னது?காத்திரமான பதிவுகள் எழுதப்போறீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////

ஹி.ஹி.ஹி.ஹி...நமக்கு அவ்வளவு வராது முயற்சிசெய்வோம்...

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் பாஸ்,
நலமா?
காத்திரமான பதிவுகளை நீங்கள் எழுதி இன்னும் அதிகளவான வாசக உள்ளங்களின் மனதில் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

அப்புறமா இன்றைய லிஸ்ட்டும் அசத்தல்.

பூலன் தேவி தொடர் தினமுரசுப் பத்திரிகையில் வந்தது என்று நினைக்கிறேன்/////

தேங்ஸ் பாஸ்
ஆம் அந்தப்பத்திரிக்கையில் தான் வந்தது.

kaialavuman said...

நல்ல தேர்வுகள் ராஜா.

தொடர்ந்து அனைத்து வித பதிவுகளையும் இடுங்கள். காத்திரமான ப்திவுகள், இது போன்ற கவரும் பதிவுகள் என கலந்தே எழுதுங்கள்.

நன்றி.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails