Thursday, October 13, 2011

நண்பர்களிடம் சில கேள்விகள்.. எனக்கு ஒரு சந்தேகம்...

இன்று ஒரு வித்தியாசமான பதிவு(அதை படிச்சிட்டு நாங்க சொல்லனும் என்று திட்டுவது புரிகின்றது..ஹி.ஹி.ஹி.ஹி..)

என்னிடம் சில கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தால் நீங்கள் சொல்லுங்க நண்பர்களே?

சில கேள்விகள்

கேள்வி 1-பொதுவா பொண்ணுங்க ஒரு பையன் நல்ல மாதிரிகதைத்தால் உடனே ஏன் அண்ணா போட்டு கூப்பிடுகின்றார்கள்?



கேள்வி 2-பொதுவா பேஸ் புக்கில் பொண்ணுங்கள் பெயரில் உலாவறும் பலர் அதை நாங்கள் கண்டு பிடித்தாலும்.இல்லை இல்லை நான் பொண்ணுதான் என்று அடம்பிடிப்பது ஏன்?
(இதைக்கண்டு பிடிப்பது எளிது கொஞ்சம் நேரத்தை செலவு செய்தால் இலகுவாக கண்டு பிடிக்கலாம் நான் ஒரு தனிப்பதிவு போடுறன் கண்டு பிடிப்பது எப்படி என்று)

கேள்வி 3-காதலிப்பவர்கள் தங்கள் காதல்தான் உலகத்தில் உயர்ந்தது என்று பில்ட்டப் கொடுப்பது ஏன்?

கேள்வி 4-சில பசங்களுக்கு அழகான பொண்ணுங்களை பார்த்தால் மட்டும் காதல் வருவது ஏன்?
(நீ மட்டும் என்ன யோக்கியமா என்று கேட்காதீர்கள்.ஹி.ஹி.ஹி.ஹி)

கேள்வி 5-இது கொஞ்சம் பழய கேள்வி பலர் கேட்டு இருப்பார்கள் இருந்தாலும் நானும் கேட்கின்றேன்
காதலுக்காக எம்மை பெற்று வளர்த்து எமக்காக வாழும் பெற்றோர்களை தூக்கி எறிந்துவிட்டு காதலியுடனோ இல்லை காதலனுடனோ போவது சரியா?
இதற்கு என் பதில் நிச்சயம் தவறு என்பேன்


நிறைய கேள்வியிருக்கு இவ்வளவும் இப்ப போதும்(அப்ப இதுவும் ஒரு தொடரா எழுதப்போறியா என்று கேட்காதீர்கள் இது தொடர் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி)


ஒரு சந்தேகம்
நான் பாடசாலையில் படிக்கும் போது ஆகா மறுபடியும் ஆரம்பிச்சிட்டானா என்று ஓடாதீர்கள் இது வேற மேட்டர்.இது கொஞ்சம் விவகாரமான சந்தேகம் எனவே தயவு செய்து என் வலைப்பதிவை படிக்கும் பெரியோர்கள்,தாய்மார்கள்,சகோதரிகள்,நண்பிகள்,காதலிகள் சாரி சாரி ஒரு புலோவுல வந்துடிச்சி....நலன் விரும்பிகள் போன்றோர்கள் யாரும் தப்பாக நினைக்கவேண்டாம்.(இப்படி கேட்டை போடாட்டி கும்மிவிடுவார்கள்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி).

சரி மேட்டருக்கு வருவோம் என் கூட ஒரு பொண்ணு படிச்சிச்சி ரொம்ப அழகான பொண்ணு

படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை இது சும்மா?.....
வகுப்பில் அழகான பொண்ணு என்றால் பசங்க எல்லோறுக்கும் அவள் மேல் ஒரு கண்ணு இருக்கும் தானே..8ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு வரையும் என்னுடன் படித்தாள்..இதுல என்ன சந்தேகம் என்று கேட்குறீங்களா பொறுங்க விசயத்துக்கு வாரன்..அதாவது 12 வயதில் இருந்து 15 வயதுவரை எங்களுடன் படித்தாள் இப்பதான் நம்ம பசங்களுக்கு சந்தேகம் கிளம்பியது இவள் எப்ப வயசுக்கு வந்தாள்..எமது சந்தேகத்துக்கு காரணம் இருந்தது 8ம் வகுப்பில் படிக்கும் போது அவள் ஓவ்வொறு நாளும் பாடசாலைக்கு வருவாள் ஒரு நாள் கூட வராமல் நின்றது இல்லை..பாடசாலை லீவு நாட்களிலும் டியூசன் வகுப்புக்களுக்கும் எங்களுடன் தான் படித்தாள் சோ ஓவ்வொறு நாளும் அவளை நாங்கள் காண்போம் இந்தக்காலப்பகுதியில் வயசுக்கு வந்திருந்தால் சடங்கு சம்பிரதாயம் என்று அவள் சில நாட்கள் பாடசாலைக்கு வாரமல் இருந்திருக்கனுமே? எனவே 8 வகுப்பில் வயசுக்கு வந்திருக்க சந்தர்ப்பம் இல்லை இப்படித்தான் 9,10,11ம் வகுப்புக்களிலும் அவள் பாடசாலைக்கு லீவு எடுத்தது இல்லை..

ஆத்தாடி என் பாஸ்க்கு வந்த டவுட்ட பாரேன்

இந்தக்காலப்பகுதியில் வயசுக்கு வந்திருந்தால் பாடசாலைக்கு லீவு போட்டிருக்கவேண்டுமே? அப்ப அவள் எப்ப வயசுக்கு வந்தாள்?இதுதான் சந்தேகம்.இந்த சந்தேகம் வரக்காரணம் பொதுவாக இந்த வயதில்தானே பொண்ணுங்க வயசுக்கு வருவாங்க..இந்த சந்தேகத்தை 8ம் வகுப்பில் இருந்து நம்ம நண்பர்கள் குழு ஆராச்சிசெய்து வந்திருக்கு..எனக்கு இது தெரியவில்லை..11ம் வகுப்பில் தான் என்னிடம் அந்தகுழு தொடர்பு கொண்டு அவர்கள் சந்தேகத்தை என்னிடம் கேட்டார்கள்?

(ஆமா பெரிய டவுட்டு என்று திட்டாதீர்கள் பாடசாலைகாலங்களில் இப்படி சில சுவாரயமான சந்தேகங்கள் வருவது சகஜம் தானே)

அப்பதான் நானும் யோசித்தேன் அட ஆமா இல்லை இவள் எப்ப வயசுக்கு வந்திருப்பாள்..நானும் கொஞ்சம் யோசித்தேன் .....

நான் அந்த நண்பர்கள் குழுவிடம் கொஞ்சம் கோபமாக சொன்னேன்(நான் கோபப்பட்டதுக்கு காரணம் இது எல்லாம் ஒரு சந்தேகமா அவள் எப்ப வயசுக்கு வந்தால் நமக்கு என்ன..ஹி.ஹி.ஹி.ஹி)..டேய் அவள் ஒருவேளை 8ம் வகுப்புக்கு முன் வயசுக்கு வந்திருக்காலாம் இல்லையா ஏன் 12 வயசில் இருந்து 15 வயசுக்குள் தான் கட்டாயம் வயசுக்கு வந்திருக்கனுமா.அதற்கு முதல் 10,11 வயசில் வந்திருக்கலாம் தானே போங்கடா போய் வேலையைப்பாருங்க என்று பேசி அனுப்பிவிட்டேன்.அதற்குப்பிறகு 11ம் வகுப்பு முடிய அவள் வேற பாடசாலைக்குச்சென்றுவிட்டாள்...கொஞ்சகாலம் அவளை காணமுடியவில்லை சிலமாதங்களின் பின் மீண்டும் கண்டபோது முன்பு இருந்ததை விட அழகாக இருந்தாள் அவள் அழகு மேலும் கூடியிருந்தது அப்பதான் எனக்கும் சந்தேகம் வந்தது இவள் எப்ப வயசுக்கு வந்தாள்?
8ம் வகுப்புக்கு முன்பா?இல்லை 11ம் வகுப்புக்கு பிறகா?

இது கொஞ்சம் விவகாரமான விடயமாக தோன்றினாலும்
பாடசாலைவாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விடயங்கள் இருக்கும் எதைப்பற்றியும் கவலைப்பட்டாமல் சந்தோசமாக இருக்கும் அந்தப்பருவம் மீண்டும் நிச்சயம் எமது வாழ்க்கையில் வரபோவது இல்லை நினைவுகளின் மூலம் மீள ஞாபகப்படுத்திக்கொண்டாலும் கால ஓட்டத்தில் எல்லாம் மறந்து போய்விடும் இதுதான் யதார்த்தம்

முஸ்கி-அப்பறம் தலைப்பை பார்த்துவிட்டு. இப்ப சில பதிவர்களுகிடையில் சில விடயங்கள் பெரும் பஞ்சாயத்தாகிக்கிடக்கு . நானும் அதில் பல கருத்துக்களை சொல்லி முரண்பாடுகள் வந்ததனால் அது பற்றிய பதிவு என்று நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு பல்ப்புதான் ஹி.ஹி.ஹி.ஹி..
ஏன் என்றால் கருத்துக்களால் மோதிக்கொண்டாலும் நாங்கள் என்றும் நண்பர்கள்தான்.

நண்பன் துஷி ஒரு அழகான ஒரு கருத்தை சொல்லியிருந்தார் அவரது கருத்தை இங்கே நான் பதிவிடுகின்றேன்

எமது கருத்துக்கள் எல்லாத்துக்கும் ஆமா சொல்லுறவன் கண்டிப்பாக உண்மையான நண்பனாக இருக்க முடியாது. தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து தட்டிகேட்க்க வேண்டிய இடத்தில் தட்டுவவனே உண்மை நண்பன். 


இன்றைய தகவல்-2003 உலக்கோப்பை இறுதிப்போட்டி பற்றி இன்றைய தகவல்
தென்னாபிரிக்காவின் ஜோகனஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா, ஆவுஸ்ரேலிய அணிகள் மோதின "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கங்குலி முதலில் "பீல்டிங்' செய்வது என்று தீர்மானித்தார் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆஸ்ரேலிய அணி ரன் மழை பொழிந்தது. துவக்கத்தில் கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) அதிரடியாக ரன் சேர்த்தனர். பின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட கேப்டன் பொண்டிங் சதம் அடித்தார். 8 சிக்சர்கள் விளாசிய இவர் 140 ரன்கள் எடுத்தார். டேமியன் மார்ட்டின் 88 ரன்கள் எடுக்க, 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி தடுமாறியது. சச்சின்(4), கங்குலி(24), டிராவிட்(47) ஏமாற்றினர். சேவக்(82) மட்டும் ஆறுதல் அளித்தார். 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுக்ளையும் இழந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. 125 ரன்கள் வித்தியாசத்தில் "மெகா' வெற்றி பெற்ற ஆவுஸ்ரேலிய அணி, மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி சாதித்தது

ஒருவேளை இந்திய அணி கோப்பையை வென்று இருந்தால் உலகில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக புகழப்படும் கங்குலியின் சாதனைகளில் இதுவும் ஒரு மகுடமாக மாறியிருக்கும்


எல்லாறும் பதிவை படிச்சாச்சா பிறகு என்ன என்னையே பாக்குறீங்க கருத்துரை ,ஓட்டு போட்டுட்டு கெளம்புங்க





Post Comment

63 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதில் - 1

பெண்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் அதுதான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதில் - 2
பொம்பள புள்ளைங்க பேரையும் படத்தையும் போட்டாதாங்க ஜனங்க வருவாங்க...

அதை ஆண் என்று சொல்லி தடைபோட்டுக்கொள்ள அவர்களுக்கு மனதுவராது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதில் - 3...

அது பீலிங்...

உலகில் ஒவ்வோறு காதலும் சமம்தான் உயர்ந்தது தாழ்ந்தது என்று கிடையாது...

ஆகையால அப்படி சொல்லலாம்...

கோகுல் said...

துஷி சொன்னது கரக்டு தான்!அட நான் ஆமா போடலைங்க!நம்புங்க!

கோகுல் said...

யோவ என்னய்யா சந்தேகம் இது!?ஏன் இப்படியெல்லாம் கிளம்புரிங்க?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதில் - 4
அது ஒரு விருப்பம் அவ்வளவுதான்...
எல்லா காதலும் அழகைப்பார்த்து மட்டுமே வருவதில்லை...

அப்படி பார்ததால் அழகில்லாத பெண்கய் காதலிக்காமலா இருக்கிறார்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதில் - 5
சூழ்நிலைகளில் தான் அப்படி ஆகிறது..
காதலுக்காக பெற்றோரை துரப்பது சரியில்லைதான்..
ஆனால்

காதலிக்காக அல்லது காதலருக்காக சிலர் செய்யும் சிறு தியாகம் அது..

மனைவிக்குள்ளும் ஒரு அம்மா இருக்கிறார்..

கணவனுக்குள்ளும் ஒரு அப்பா இருக்கிறார்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீதமுள்ள தொகுப்பிற்க்கு ஒரு சபாஷ்...

அம்பலத்தார் said...

எதை எதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து இருக்கிறீர்கள். இதுகளிற்கெல்லாம் அப்புறம் பாடத்தில் வருகிற டவுட்டைப்பற்றி ஆராய்ச்சிபண்ண நேரம் மீதி இருந்த்தா?
துஷி சொன்னது சரிதான்.

K.s.s.Rajh said...

@
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
தகவலுக்கு நன்றி////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதில் - 1

பெண்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் அதுதான்.../////
ஆமா பாஸ் இந்த விடை மிகப்பொருத்தம்தான்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதில் - 2
பொம்பள புள்ளைங்க பேரையும் படத்தையும் போட்டாதாங்க ஜனங்க வருவாங்க...

அதை ஆண் என்று சொல்லி தடைபோட்டுக்கொள்ள அவர்களுக்கு மனதுவராது.////

இதான் உண்மை பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதில் - 3...

அது பீலிங்...

உலகில் ஒவ்வோறு காதலும் சமம்தான் உயர்ந்தது தாழ்ந்தது என்று கிடையாது...

ஆகையால அப்படி சொல்லலாம்../////

இந்த கேள்விக்கு மிகவும் அழகான பதிலை சொல்லியிருக்கீங்க பாஸ் நன்றி

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
துஷி சொன்னது கரக்டு தான்!அட நான் ஆமா போடலைங்க!நம்புங்க////

ஆமா பாஸ் மிகவும் அழகான கருத்து அது

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
யோவ என்னய்யா சந்தேகம் இது!?ஏன் இப்படியெல்லாம் கிளம்புரிங்க?//////

ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதில் - 4
அது ஒரு விருப்பம் அவ்வளவுதான்...
எல்லா காதலும் அழகைப்பார்த்து மட்டுமே வருவதில்லை...

அப்படி பார்ததால் அழகில்லாத பெண்கய் காதலிக்காமலா இருக்கிறார்கள்./////

உண்மைதான் பாஸ் அது ஒரு விருப்பம் மட்டும்தான்..

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
பதில் - 5
சூழ்நிலைகளில் தான் அப்படி ஆகிறது..
காதலுக்காக பெற்றோரை துரப்பது சரியில்லைதான்..
ஆனால்

காதலிக்காக அல்லது காதலருக்காக சிலர் செய்யும் சிறு தியாகம் அது..

மனைவிக்குள்ளும் ஒரு அம்மா இருக்கிறார்..

கணவனுக்குள்ளும் ஒரு அப்பா இருக்கிறார்..//////

நல்ல விளக்கம் பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
மீதமுள்ள தொகுப்பிற்க்கு ஒரு சபாஷ்../////

கேள்விகளுக்கு மிக அழகான பதில்களை வழங்கியிருக்கீங்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
எதை எதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து இருக்கிறீர்கள். இதுகளிற்கெல்லாம் அப்புறம் பாடத்தில் வருகிற டவுட்டைப்பற்றி ஆராய்ச்சிபண்ண நேரம் மீதி இருந்த்தா?
துஷி சொன்னது சரிதான்////

ஹி.ஹி.ஹி.ஹி அந்த வயதில் அது ஒரு காலம் பாஸ்

துஷியின் கருத்து மிகச்சிறந்தது

SURYAJEEVA said...

1. பொண்ணுக்கு பையன பிடிக்கலன்னு சிம்போலிக்கா அண்ணான்னு சொல்றாங்க, அது தெரியாம?
2. james bond கணக்கா இவர் கண்டு பிடிச்சுட்டார், face bookkaam face book ...
3. காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு தான் தலைவரே...
4. காமம் தான் காதலின் அடிநாதம்... காமம் முடிந்த பின் காதல் தொடர்ந்தாள் நலம்...
5. உங்க சந்தேகத்தில் இடி விழ, ஏங்க உங்க பாட சாலையில பெரிய பெரிய விடுமுறையே விட மாட்டாங்களா?

kobiraj said...

உங்கள் கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. அந்த பெண்களின் பெயரில் கள்ள அக்கௌன்ட் வைத்திருப்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி விரைவில் எதிர் பார்க்கிறேன்

K.s.s.Rajh said...

@suryajeeva
///
1. பொண்ணுக்கு பையன பிடிக்கலன்னு சிம்போலிக்கா அண்ணான்னு சொல்றாங்க, அது தெரியாம?
2. james bond கணக்கா இவர் கண்டு பிடிச்சுட்டார், face bookkaam face book ...
3. காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு தான் தலைவரே...
4. காமம் தான் காதலின் அடிநாதம்... காமம் முடிந்த பின் காதல் தொடர்ந்தாள் நலம்...
5. உங்க சந்தேகத்தில் இடி விழ, ஏங்க உங்க பாட சாலையில பெரிய பெரிய விடுமுறையே விட மாட்டாங்களா////

ஹா..ஹா...ஹா..ஹா...பெரிய பெரிய விடுமுறைவிட்டாலும் அந்தக்காலப்பகுதியில் டியூசன் வகுப்புக்கள் இருக்கும் பாஸ்...

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
உங்கள் கேள்விகள் எனக்கும் இருக்கின்றன. அந்த பெண்களின் பெயரில் கள்ள அக்கௌன்ட் வைத்திருப்பவர்களை கண்டு பிடிப்பது எப்படி விரைவில் எதிர் பார்க்கிறேன்/////

அது ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை மச்சி கொஞ்சம் யோசித்து பிளான் போட்டால் இலகுவாக கண்டு பிடிக்கலாம்.நான் அப்படி பிளான் போட்டு நிறைய பேரை கண்டு பிடிச்சு இருக்கேன் விரைவில் பதிவு போடுகின்றேன்

தனிமரம் said...

தம்பி எனக்கு பால்கோப்பிக்குப் பதிலாக இன்று பல்பு கொடுத்துவிட்டாய் இரவு விளக்கமாக பின்னூட்டம் இட முயல்கின்ரேன்!
துசியின் கருத்தையும் நானும் வழிமொழிகின்றேன் அதனால் தான் அவனுடன் முட்டிமோதி அன்பைப் பொழிவது!

K.s.s.Rajh said...

////
தனிமரம் கூறியது...
தம்பி எனக்கு பால்கோப்பிக்குப் பதிலாக இன்று பல்பு கொடுத்துவிட்டாய் இரவு விளக்கமாக பின்னூட்டம் இட முயல்கின்ரேன்!
துசியின் கருத்தையும் நானும் வழிமொழிகின்றேன் அதனால் தான் அவனுடன் முட்டிமோதி அன்பைப் பொழிவது/////
ஹி.ஹி.ஹி.ஹி முதல் பல்ப்பு உங்களுக்குத்தானா?

Unknown said...

நல்ல பதிவு சகோ

நிறைய கேள்வி கேட்டு இருக்கீங்க

கேள்வி 5 க்கு மட்டும் பதில் சொல்லுறேன்..

சுயநலம் - ஏன்னா இது நான் எடுத்த முடிவு கேள்வி கேக்க யாருக்கும் உரிமையில்லை என்று நினைப்பதால் தான்

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
நல்ல பதிவு சகோ

நிறைய கேள்வி கேட்டு இருக்கீங்க

கேள்வி 5 க்கு மட்டும் பதில் சொல்லுறேன்..

சுயநலம் - ஏன்னா இது நான் எடுத்த முடிவு கேள்வி கேக்க யாருக்கும் உரிமையில்லை என்று நினைப்பதால் தான்/////

தேங்ஸ் பாஸ் உங்கள் பதில் சிறப்பானது..தொடர்ந்து வாருங்கள்

சக்தி கல்வி மையம் said...

எனக்கும் கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்ல தெரியாது.

Mohamed Faaique said...

ஷப்பா,... வருங்காலத்துல இன்னும் எத்தன டவுட்டு வர இருக்கோ!!!

Mohamed Faaique said...

சில பசங்களுக்கு மட்டுமில்ல... எல்லோருக்கும் அப்படித்தான்...

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
எனக்கும் கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்ல தெரியாது////

அப்ப நம்மளை மாதிரித்தானா?

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
ஷப்பா,... வருங்காலத்துல இன்னும் எத்தன டவுட்டு வர இருக்கோ!!////

ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
சில பசங்களுக்கு மட்டுமில்ல... எல்லோருக்கும் அப்படித்தான்../////

எல்லோறுக்கும் என்று போட்டால் கும்மிவிடுவார்கள் பாஸ் அதான்..ஹி.ஹி.ஹி.ஹி........

C.P. செந்தில்குமார் said...

கலக்கு ராசா நீ கலக்கு....

சுதா SJ said...

நன்பா.. நன்றி.. என்னை புரிந்து கொண்டமைக்கு... :)

ரெம்ப பிஸி நன்பா.. ஒரு நாள் இவ்ளோ சின்னனா என்று இப்பத்தான் தெரியுது..
பதிவு பக்கமே தலை வெக்க முடியவில்லை..

பதிவு பக்கம் வர ஆசையா இருக்கு.. என்ன செய்ய டைம்தான் இல்லை.. :(

KANA VARO said...

கேள்வி எல்ல்லாம் நல்லாத்தான் இருக்கு..

Unknown said...

inraiya thakaval super thakaval.

ungkal kelvikku enakku pathil theriyathu

சென்னை பித்தன் said...

கேள்வி 4--முன்பு படித்த ஒரு குட்டிக் கவிதை நினைவுக்கு வருகிறது-- ”அழகாயில்லாததால்,அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்?!”

K.s.s.Rajh said...

@C.P. செந்தில்குமார்
////கலக்கு ராசா நீ கலக்கு.../////

தேங்ஸ் பாஸ்..

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன் கூறியது...
நன்பா.. நன்றி.. என்னை புரிந்து கொண்டமைக்கு... :)

ரெம்ப பிஸி நன்பா.. ஒரு நாள் இவ்ளோ சின்னனா என்று இப்பத்தான் தெரியுது..
பதிவு பக்கமே தலை வெக்க முடியவில்லை..

பதிவு பக்கம் வர ஆசையா இருக்கு.. என்ன செய்ய டைம்தான் இல்லை.. /////

உங்கள் வேலைப்பலுவுக்கு மத்தியிலும் வந்து கமண்ட் போடுவதற்கு நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
கேள்வி எல்ல்லாம் நல்லாத்தான் இருக்கு.////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
inraiya thakaval super thakaval.

ungkal kelvikku enakku pathil theriyathu////

தேங்ஸ் பாஸ்..நாம சின்னப்பசங்க மச்சி நமக்கு விடைதெரியாது அதான் நானும் கேள்வியாக கேட்டேன்..ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
கேள்வி 4--முன்பு படித்த ஒரு குட்டிக் கவிதை நினைவுக்கு வருகிறது-- ”அழகாயில்லாததால்,அவள் எனக்குத் தங்கையாகி விட்டாள்?!/////

ஆகா பதிலை கவிதையாக சொல்லிவிடீர்கள் நன்றி ஜயா

மாய உலகம் said...

கருத்துரையும் ஓட்டும்போட்டுட்டு கிளம்பிட்டோம் ஹி ஹி

காட்டான் said...

இரவு வணக்கம் ராசுக்குட்டி என்னையா எல்லாரும் இப்பிடி பாசத்த பொழியுறீங்க.. அப்போ உங்கள நம்பி இனி விலக்கு தீர்க்க வரக்கூடாதுபோல.. ஹி ஹி ஹி 
வாழ்த்துக்கள் மாப்பிள.. உனக்கு காலையிலே ஈமெயில் போட்டேனே பார்த்தாயா..!?

சுதா SJ said...

காட்டான் மாமா புரிஞ்சுகிட்டா சரி....... ஹீ ஹீ

வலையுகம் said...

நண்பரே நலமா?

இன்று தான் உங்கள் பதிவை காண நேர்ந்தது.வாழ்த்துக்கள்

ஆனால் சில உறுத்தல்களோடு இணைந்த கேள்விகள்?

பதிவுக்காக ஹிட்ஸ்ஸ? ஹிட்ஸ்க்காக பதிவ?

மொக்கைப் பதிவென்பது யாது?

சரி எனக்கு தெரிந்த சில பதில்களை சொல்லி விடுகிறேன் உங்களுடைய பதிலையும் எதிர்பார்க்கிறேன்.

டாஸ்மாக்-சுண்டக்கஞ்சியைக் காட்டிலும் வலியது இந்த ஹிட்ஸ் போதை.

இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் கோபல் பல்பொடியைத் தோற்கடிக்கும் விதத்தில்,ஒரே நேரத்தில் சர்வேதேச வாசகர்கள் படிப்பதைக் கணினியில் பளிச்சிடும் உலக வரைபடத்தின் நட்சத்திரங்கள் காட்டுகின்றன. எல்லாப் பதிவர்களையும் ‘உலக நாயகனே.. எழுது.. எழுது..’ என்று உந்தி தள்ள இலக்கு இல்லாமல் பதிவுகள் சிரிக்கின்றன.

எழுதுபவர்களின் நோக்கமோ,திறமையோ எழுத்துக்கான உந்துதலாக இல்லாமல்,மேற்படி ‘போதையே’ உந்துவிசையாக மாறிவிடுகின்ற அபாயகரமான தருணத்தில்தான் மொக்கை அவதரிக்கின்றது.

சுருக்கமாக என்ன சொல்ல வர்றே என்று கேட்கிறீர்களா?

நண்பரே நல்ல தரமான சமூக அவலங்கள் பற்றிய பதிவுகளை கொடுங்கள் நல்ல விஷயங்களை சொல்லுங்கள் நான் உங்கள் உண்மை நண்பனாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நிரூபன் said...

வணக்கம் மச்சி.
நலமா?

நான் ஒரு ரண களத்தில மாட்டியதால் வலைப் பக்கம் வர முடியலை.

சாரி.


கேள்விகள் அனைத்தும் கலக்கல்.

பெரும்பாலும் அவரவர் மன நிலையினைப் பொறுத்தே பதில்கள் அமைந்து கொள்ளும்,.

அந்தப் பொண்ணு வயசிற்கு வந்த மேட்டர்.
ஒரு வேளை அவள் ஸ்கூல் விடு முறையில் வந்திருக்கலாம், அல்லவா

இது எப்பூடி?

வலையுகம் said...

தமிழ் மணம் 14 வது ஓட்டு
மற்ற திரட்டிகளிலும் ஓட்டு போட்டு இருக்கிறேன்

இனி தொடரும்

K.s.s.Rajh said...

@மாய உலகம்

////கருத்துரையும் ஓட்டும்போட்டுட்டு கிளம்பிட்டோம் ஹி ஹி/////

ஏன் பாஸ் ஓடுறீங்க தமன்னா பாக்கவேண்டாம் என்று சொன்னால் என்ன நான் சொல்கின்றேன்..பாத்திட்டு போங்க

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
இரவு வணக்கம் ராசுக்குட்டி என்னையா எல்லாரும் இப்பிடி பாசத்த பொழியுறீங்க.. அப்போ உங்கள நம்பி இனி விலக்கு தீர்க்க வரக்கூடாதுபோல.. ஹி ஹி ஹி
வாழ்த்துக்கள் மாப்பிள.. உனக்கு காலையிலே ஈமெயில் போட்டேனே பார்த்தாயா..!?

ஹி.ஹி.ஹி.ஹி.........ஈமெயில் பாக்காலை மாம்ஸ் இப்ப பாக்குறேன்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
காட்டான் மாமா புரிஞ்சுகிட்டா சரி....... ஹீ ஹீ////

இது மாம்ஸ்க்கு துஷியின் கடுமையான எச்சரிக்கையா? ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@ஹைதர் அலி

வணக்கம் நண்பரே உங்கள் கருத்து மிகவும் ஆழமானது உண்மையைச்சொன்னால்..நான் வலைப்பதிவு எழுதவரும் போது.எனக்கு இந்தபதிவுலகை பற்றி சரியாகத்தெரியவில்லை.நான் பதிவு எழுதவந்து கிட்டதட்ட 11 மாதங்கள் ஆகிவிட்டது ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் கிரிக்கெட் பற்றி எழுதினேன்,பின் வேறு சில பதிவுகளையும் எழுதினேன் யாருமே என்பதிவுகளை படிக்கவில்லை எனவே என்ன செய்யலாம் என்று யோசித்த போது சில கிரிக்கெட் பதிவுகள் ஹிட்ஸ் ஆனது எனவே அதனுடன் சில மொக்கை பதிவுகளும் எழுதினேன்.
(மொக்கை பதிவுகள் இங்கே மொக்கை என்பது நகைச்சுவையான பிரயோசனம் இல்லாத சிரிக்கவைத்தல் என்று பொருள்படும் என்று நினைக்கின்றேன்.)
நிறைய வாசகர்கள் வந்தார்கள்

ஆனாலும் என் சமூகத்தின் அவலங்களை சொல்லும் பதிவுகளை எழுதவேண்டும் என்பது எனக்கும் விருப்பமாக இருந்தது.ஆனால் எடுத்ததும் நான் அதை எழுதியிருந்தால் நான் பதிவுலகில் இன்று அடையாளம் காணப்படாமல் பல நல்ல பதிவுகளை எழுதும் பதிவர்கள் போல காணாமல் போயிருப்பேன்.இதுதான் இன்றைய பதிவுலகின் நிலையாக இருக்கின்றது.

ஆனாலும் நான் இடைக்கிடையில் சில சமூதாய கருத்துக்களை வலியிருத்தியும் சில பதிவுகள் எழுதியிருந்தேன்...ஆனால் முழுமையாக எழுதவில்லை என்பது உண்மை..இப்போது என் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் பதிவுலகில் எனக்கும் ஒரு இடம் இருக்கின்றது இப்ப நான் எழுதினால் நிச்சயமாக நிறைய பேர் படிப்பார்கள்..அதன் முதல் கட்டமாகதான் என் உயிர் நீதானே என்ற ஒரு தொடர்ரை எங்கள் ஊரின் ஒரு சில மக்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிப்பதாக அந்தத்தொடர் அமைகின்றது.

ஆனாலும் முழுமையாக நான் சமூகக்கருத்துகளை தாங்கிய பதிவுகளை எழுதவில்லைதான்
எனவே அந்த நல்ல செயலை என் 100வது பதிவிற்கு பிறகு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கின்றேன் காரணம் சில தொடர் பதிவுகளை எழுதியதால் அவைகளை முடிக்கவேண்டியுள்ளது அதற்காக நீண்ட நாட்கள் எடுக்காது இபோ91 பதிவுகள் எழுதிவிட்டேன் எனவே என் 100வது பதிவுக்கு பிறகு நிச்சயம் சமூக சிந்தனையுடம் கூடிய பதிவுகளை என் சமூகத்தின் வலிகளை எதிர்பாக்கலாம்.அத்துடன் எங்கள் சமூகத்தின் அவலங்களை சொல்வதில் பல பிரச்சனையிருக்கின்றது அதாவது ஈழத்தில் யுத்ததை மட்டுமே கண்டு வாழ்ந்த மக்களின் அவலங்களை சொல்ல முற்படும் போது பல விடயங்களை சிந்திக்கவேண்டியுள்ளது ஆனாலும் நிச்சயமாக 100 வது பதிவுக்கு பிறகு எதிர்பார்க்கலாம் நண்பரே உங்கள் ஆலோசனைக்கு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சி.
நலமா?

நான் ஒரு ரண களத்தில மாட்டியதால் வலைப் பக்கம் வர முடியலை.

சாரி.


கேள்விகள் அனைத்தும் கலக்கல்.

பெரும்பாலும் அவரவர் மன நிலையினைப் பொறுத்தே பதில்கள் அமைந்து கொள்ளும்,.

அந்தப் பொண்ணு வயசிற்கு வந்த மேட்டர்.
ஒரு வேளை அவள் ஸ்கூல் விடு முறையில் வந்திருக்கலாம், அல்லவா

இது எப்பூடி////

வாங்க வாங்க நீங்க மட்டுமா மாட்டினீங்க நானும்தான் ஹி.ஹி.ஹி.ஹி.

யோவ் அதான் பதிவில் சொல்லியிருக்கேன்ல ஸ்கூல் விடுமுறையின் போதும் அவள் டீயூசனுக்கு வருவாள் என்று பிறகு என்ன?என்ன இது உங்கள் மேசின் கமண்ட்டா?

Mathuran said...

கேள்வி-1 = ஏன் சரன்ஜா அண்ணா என்று கூப்பிட்டிருச்சோ

Mathuran said...

கேள்வி-2= அதற்கு இதை மாத்திரம் வைத்து கண்டுபிடிக்கமுடியாது

Mathuran said...

கேள்வி3- பாருங்கப்பா அனுபவத்தையெல்லாம் எழுதுறாங்க

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
கேள்வி-1 = ஏன் சரன்ஜா அண்ணா என்று கூப்பிட்டிருச்சோ?

ஏன்யா ஏன்?செல்லம் அப்படி எல்லாம் சொல்லாது

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
கேள்வி-2= அதற்கு இதை மாத்திரம் வைத்து கண்டுபிடிக்கமுடியாது/////

சிலரை கண்டு பிடிக்கலாம் பாஸ் நான் சிலரை கண்டு பிடிதிருக்கின்றேன் ஆதாரத்துடன் பதிவு போடுகின்றேன் பாருங்க

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
கேள்வி3- பாருங்கப்பா அனுபவத்தையெல்லாம் எழுதுறாங்க/////

ஹி.ஹி.ஹி.ஹி.............

M.R said...

அதானே ஏன் ? ஹி ஹி நமக்கும் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்

K.s.s.Rajh said...

@M.R

அட நீங்களும் நம்மாளா ஆமா பாஸ் கேள்வி கேட்பது ஈசி..ஹி.ஹி.ஹி.ஹி..............

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails