Friday, October 21, 2011

இரும்பு மனிதன் கேணல் கடாபி ஒரு பார்வை

ஆபிரிக்காவின் வட எல்லையில் மத்திய தரைக்கடல் பகுதிக்கு அண்மையில் சூடானுக்கும் எகிப்துக்கும் இடையில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டின் அதிபர் முகமர்கடாபி 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிகாரத்தை தன் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்தார் இவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் எட்டுப் பிள்ளைகள் உள்ளனர் அதில் ஏழுமகன்களும்,ஒரு மகளும்..உள்ளனர்





 இளம்வயதில் அதாவது 27 வயதில் லிபியாவின் ஆட்சியைக்கைப்பற்றி 42 வருடங்கள் லிபியாவை தன் இரும்புப்பிடிக்குள்வைத்திருந்த கேணல் முகமர் கடாபி. சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றியதையடுத்து கடாபி கைது செய்யப்பட்டு, காயம் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படடுள்ளது.


அவரது வரலாற்றை நோக்கினால்
1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த கடாபி இளம் வயதில் லிபிய இராணுவத்தில் இணைந்து கொண்டார் .1966ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு ராணுவப் பயிற்சிக்குச் சென்றார்.
மீண்டும் நாட்டிற்கு திரும்பிய அவர், தனக்கென ஆதரவாளர்களைத் திரட்டியதுடன் தனி சாம்ராஜ்சியம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற மன உறுதியை வளர்த்துக்கொண்டார். இச் சந்தர்ப்பத்தின்போதே லிபிய மன்னர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.




1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 42 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார். கடாபி முப்படைத் தளபதியாகவும், ஆளும் கமிட்டியின் தலைவராகவும் ஆனார். 1970 ஆண்டு முதல் 1972 பிரதமராகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்தார்.  தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார்.




இவரது மூத்த மகன் முஹம்மது அல் கடாபி - இவர் லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கின்றார் இரண்டாவது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி - இவர் அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை நிர்வகித்துக் கொண்டிருந்துள்ளார். மூன்றாவது மகன் சாதி கடாபி - தேசிய உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராக இருந்திருக்கின்றார் நான்காவது மகன் முடாசிம் கடாபி – லிபிய இராணுவத்தில் உயர்ந்த பதவியை வகித்திருக்கின்றார். 


 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி இவருடையதாகவே இருந்து வந்துள்ளது. ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி - நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் மேற்கொண்டிருக்கும் நிறுவனத்தை நிர்வகித்து வந்துள்ளார். ஆறாவது மகனான சைப் அலி கடாபியும், ஏழாவது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின் பொலிஸ் நிர்வாத்தைக் கவனித்து வந்துள்ளார்கள் அவரது ஒரே மகள் – ஆயிஸா அல் கடாபி ஒரு சட்டத்தரணியாவார். நாட்டின் நீதி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பவராக இருந்திருக்கின்றார்




கடாபி திருமணமாகாத இளம்பெண்களைக் கொண்ட படையொன்றை அமைத்து வைத்திருந்தார். 
கடாபியின் அராஜக ஆட்சியில் அதிருப்தி அடைந்த மக்கள் புரட்சிப் படை அமைந்தது. கடந்த பெப்ரவரி மாதம் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியது. அதனை ஒடுக்குவதற்கு இராணுவத்தை அனுப்பினார் கடாபி. இரு தரப்புக்கும் பயங்கர சண்டைநீடித்தது. புரட்சிப் படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்த அவர், கடைசி வரை போராடுவேன் என்றார். 




இதையடுத்து, ஐ.நா. சபை அனுமதி பெற்று புரட்சிப் படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு இராணுவம் மீது தாக்குதல் நடத்தின. இந்நிலையில், கடந்த ஓன்பது மாதங்களாக நீடித்த சண்டையில் தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றினர். கடும் தாக்குதலுக்கு மத்தியில் மேற்படி நகரம் கைப்பற்றப்பட்டதுடன் கடாபி தலைமறைவானார். இதையடுத்து, கடாபியின் மாளிகையை புரட்சிப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொடி நாட்டினர். இந்த வெற்றியை லிபியா முழுவதும் கொண்டாடினார்கள். 


இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் 'லிபியா சர்வாதிகாரியின் பிடியில் இருந்து விடுபட்டு விட்டது" என்று அந்த அறிவித்தார். லிபியாவின் எதிர்காலம் இனி அந்த நாட்டின் மக்கள் கைகளில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 
தொடர் போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் சிர்தே நகரை அந்நாட்டு இடைக்கால அரச படையினர் கைப்பற்றினர் கடாபி கைது செய்யப்பட்டார். காயம் அடைந்திருந்தால் அவர் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது




பல நாடுகளுக்கு சவால் விடும் வகையில் மன உறுதியுடன் நாற்பது வருடங்கள் லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஒரு இரும்பு மனிதனின் முடிவு தன் நாட்டுமக்களின் நம்பிக்கையை இழந்தால்.அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டதால் இவ்வாறு அமைந்துவிட்டது..


இன்றைய தகவல்-அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ரிக்கி பொண்டிங்..1996,1999,2003,2007.ஆகிய நான்கு உலககோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார் இதில் 3 முறை அவுஸ்ரேலியா கிண்ணத்தை கைப்பற்றுயுள்ளது(1999,2003,2007)இதில் 2003,2007 ஆண்டுகளில் உலககிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்ரேலிய அணியின் கேப்டனாக ரிக்கி பொண்டிங் இருந்துள்ளமை மேலும் சிறப்பம்சம்

Post Comment

56 comments:

K said...

வணக்கம் மச்சான் சார்!நிறையத் தகவல்களைத் தேடி எடுத்து, விரிவாக கட்டுரையத் தந்திருக்கீங்க! உங்க உழைப்புக்கு ஒரு சலியூட்!

M.R said...

தகவலுக்கு நன்றி நண்பா
த.ம. முதல் வாக்கு

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே.

Mathuran said...

கடாபி பற்றிய அசத்தலான தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றி

தனிமரம் said...

கடாபியை பற்றி நீண்ட தகவல்களை சுவையாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
 லிபியாவில் மக்கள் புரட்சிக்குழுவின் பின்னனியில் சில மேற்குலகம் தன் பொருளாதார நலன்  காரணம் காட்டி வேகமாக செயல்படுவதையும் நோக்க வேண்டும் மக்களுக்கு விடுதலையா அல்லது தம் பொருளாதார விடுதலையா என்பதை இனிவரும் லிபியாவின் எதிர்காலம் சொல்லும் .

தனிமரம் said...

லிபியாவின் முக்கிய கூட்டாளி நாடான இலங்கை அரசின் செய்திக்குறிப்புக்கள் ஏதாவது உடனடியாக வெளியாகி இருக்குமே அதை கவனிக்க வில்லையா பாஸ்?? 

தனிமரம் said...

உலகத் தலைவர்களில் எனக்கு கடாபியின் துனிச்சல் பிடிக்கும் அதையும் தாண்டி அவரின் பாதுகாப்பு பெண் படையின் செயல்கள் வித்தியாசமானவை.

K.s.s.Rajh said...

@Powder Star - Dr. ஐடியாமணி

வாங்க..வாங்க....ஆமா தகவல்களை தேடிய நேரத்துக்கு சில பதிவுகள் எழுதியிருக்கலாம்

நன்றி மச்சான் சார்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
தகவலுக்கு நன்றி நண்பா
த.ம. முதல் வாக்கு
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே/////

நன்றி டாக்டரே

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
கடாபி பற்றிய அசத்தலான தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றி/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கடாபியை பற்றி நீண்ட தகவல்களை சுவையாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
லிபியாவில் மக்கள் புரட்சிக்குழுவின் பின்னனியில் சில மேற்குலகம் தன் பொருளாதார நலன் காரணம் காட்டி வேகமாக செயல்படுவதையும் நோக்க வேண்டும் மக்களுக்கு விடுதலையா அல்லது தம் பொருளாதார விடுதலையா என்பதை இனிவரும் லிபியாவின் எதிர்காலம் சொல்லும் /////

ஆமா பாஸ் லிபியாவின் எதிர்காலம் எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
லிபியாவின் முக்கிய கூட்டாளி நாடான இலங்கை அரசின் செய்திக்குறிப்புக்கள் ஏதாவது உடனடியாக வெளியாகி இருக்குமே அதை கவனிக்க வில்லையா பாஸ்????/////

ஹி.ஹி.ஹி.ஹி...ஏன்யா ஏன்?

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உலகத் தலைவர்களில் எனக்கு கடாபியின் துனிச்சல் பிடிக்கும் அதையும் தாண்டி அவரின் பாதுகாப்பு பெண் படையின் செயல்கள் வித்தியாசமானவை/////

ஆமா பாஸ் அவர் மிகவும் துணிச்சல் உடையவர்தான்

அம்பலத்தார் said...

கடாபியின் நடவடிக்கைகளில் பல நம்ம ஜனாதிபதிகுடும்பத்திற்கும் பொருந்துகிறது. எங்கள் நாட்டு மக்களும் லிபிய மக்களைப்போல கிளர்ந்து எழுவார்களா?

சென்னை பித்தன் said...

த.ம.7
கடாஃபி பற்றிய நல்ல தொகுப்பு.

Yoga.S. said...

கடாபியின் பக்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!பாராட்டுக்கள்!மேற்குலகின் நரித்தனம் என்ன என்றும் சொல்லியிருந்தால் பூரணப்பட்டிருக்கும்!"கத்தி" போய் "வாள்" வந்தது என்பார்களே தெரியுமா?

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
கடாபியின் நடவடிக்கைகளில் பல நம்ம ஜனாதிபதிகுடும்பத்திற்கும் பொருந்துகிறது. எங்கள் நாட்டு மக்களும் லிபிய மக்களைப்போல கிளர்ந்து எழுவார்களா?/////

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
த.ம.7
கடாஃபி பற்றிய நல்ல தொகுப்பு?/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
கடாபியின் பக்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்!பாராட்டுக்கள்!மேற்குலகின் நரித்தனம் என்ன என்றும் சொல்லியிருந்தால் பூரணப்பட்டிருக்கும்!"கத்தி" போய் "வாள்" வந்தது என்பார்களே தெரியுமா?////

சொல்யிருக்கலாம் ஜயா தனியே கடாபியின் வரலாற்றை மட்டும் சொல்ல நினைத்தேன்......

அது பற்றி பிறகு ஒரு பதிவில் விரிவாகப்பார்ப்போம்..ஆலோசனைக்கு நன்றி ஜயா..

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

இராஜராஜேஸ்வரி said...

தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

கடாபியின் முழுச் சரித்திரத்தை மிக அழகாக
அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி
சுடச் சுடச் கொடுத்தமைக்கு நன்றி
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பாலா said...

கடாபியை பற்றி உடனடியாக நிறைய தகவல்களை திரட்டி எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது. இன்றைய தகவலும் சிறப்பு.

மாய உலகம் said...

எளிமையாக கடாபின் வாழ்க்கையைப் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் நண்பா.

Yoga.S. said...

"கத்தி" போய் "வாள்" வந்துவிடக் கூடாது என்பதால் தான் எங்கள் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று "அவர்" முயற்சித்தார்,தெரியும் தானே?

Mohamed Faaique said...

கடாபி பற்றி அளவான ஒரு பதிவை தந்திருக்கிறீர்கள்...

காட்டான் said...

வணக்கம் ராசுகுட்டி
கடாபியை பற்றி சுடச்சுட ஒரு பதிவு..
கடாபி போன தடவை பிரான்ஸ்சுக்கு வரபோது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத் அசத்தினாங்க ஆனா நேற்றய தாக்குதலில் பிரன்சு விமானங்கள்தான் கடாபியின் வாகண அணிமீது தாக்குல் நடத்தி உதவி செய்திருக்கிறது புரட்சிப்படைக்கு.. பின்ன அவங்க ஏற்கனவே அறிவிச்சிருக்காங்களே 35% பெற்றோல் உங்களுக்குத்தான்யான்னு அதுக்கு பிறகும் சும்மா இருப்பாங்களா பிரன்சுக்காரங்க..!!!??? இவங்கதான் கடாபிக்கு ஆயுதம் கொடுத்து வியாபாரம் செய்தாங்க இப்ப அந்த ஆயுதங்களை அழிச்சிட்டாங்க.. ஏன்னா புது அரசாங்கத்துக்கும் ஆயுத வியாபாரம் செய்யவேணுமே.. அத்தோட அடுத்த வருட தேர்தலில் இதை காட்டி ஏதாவது செய்யலாமான்னு சித்தப்பு சார்கோசி இஞ்ச யோசிக்கிறார்.. லிபியாவின் புதிய அரசு இனி மேற்குலகத்துக்கு வாலாட்டும் ஒரு நாய்..!!!????????????????

காட்டான் said...

 Yoga.S.FR கூறியது...
"கத்தி" போய் "வாள்" வந்துவிடக் கூடாது என்பதால் தான் எங்கள் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று "அவர்" முயற்சித்தார்,தெரியும் தானே?
21 அக்டோபர், 2011 12:08 pm

ஆமாண்ண..!!! ஊரில சொல்லுவாங்களே "இதே வேலை இனித்தான் இருக்குன்னு" அதுதான் நடக்கபோது புதிய லிபிய அரசு இனி அரபுலக பிரச்சனைகளை குறிப்பாக பாலஸ்தீன பிரச்சனையை கதைக்காது..!!???

SURYAJEEVA said...

காட்டான் அண்ணன் கருத்தும் என் கருத்தும் ஒன்றே, காட்டானுக்கு குழ போட்டேன்

Unknown said...

நல்ல தகவல்கள் சகோ கடாபி பத்தி நிறைய தேடி இருக்கீங்க உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
இராஜராஜேஸ்வரி கூறியது...
தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி/////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
கடாபியின் முழுச் சரித்திரத்தை மிக அழகாக
அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி
சுடச் சுடச் கொடுத்தமைக்கு நன்றி
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
கடாபியை பற்றி உடனடியாக நிறைய தகவல்களை திரட்டி எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது. இன்றைய தகவலும் சிறப்பு/////

வாங்க பாஸ்..நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
எளிமையாக கடாபின் வாழ்க்கையைப் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் நண்பா////

நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
"கத்தி" போய் "வாள்" வந்துவிடக் கூடாது என்பதால் தான் எங்கள் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று "அவர்" முயற்சித்தார்,தெரியும் தானே?

ம்..தெரியும் ஜயா..

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
கடாபி பற்றி அளவான ஒரு பதிவை தந்திருக்கிறீர்கள்./////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுகுட்டி
கடாபியை பற்றி சுடச்சுட ஒரு பதிவு..
கடாபி போன தடவை பிரான்ஸ்சுக்கு வரபோது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத் அசத்தினாங்க ஆனா நேற்றய தாக்குதலில் பிரன்சு விமானங்கள்தான் கடாபியின் வாகண அணிமீது தாக்குல் நடத்தி உதவி செய்திருக்கிறது புரட்சிப்படைக்கு.. பின்ன அவங்க ஏற்கனவே அறிவிச்சிருக்காங்களே 35% பெற்றோல் உங்களுக்குத்தான்யான்னு அதுக்கு பிறகும் சும்மா இருப்பாங்களா பிரன்சுக்காரங்க..!!!??? இவங்கதான் கடாபிக்கு ஆயுதம் கொடுத்து வியாபாரம் செய்தாங்க இப்ப அந்த ஆயுதங்களை அழிச்சிட்டாங்க.. ஏன்னா புது அரசாங்கத்துக்கும் ஆயுத வியாபாரம் செய்யவேணுமே.. அத்தோட அடுத்த வருட தேர்தலில் இதை காட்டி ஏதாவது செய்யலாமான்னு சித்தப்பு சார்கோசி இஞ்ச யோசிக்கிறார்.. லிபியாவின் புதிய அரசு இனி மேற்குலகத்துக்கு வாலாட்டும் ஒரு நாய்..!!!???????????????//////

சரியாகச்சொன்னீர்கள் மாம்ஸ்...எதிர்காலத்தில் இப்படியான விடயங்கள் பற்றி பல பதிவுகள் எழுதயிருக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
காட்டான் அண்ணன் கருத்தும் என் கருத்தும் ஒன்றே, காட்டானுக்கு குழ போட்டேன்////

ஹா.ஹா.ஹா.ஹா.காட்டான் மாம்ஸ்க்கே குழ போட்டுவிட்டீர்கள்..அவர் இந்த வார்த்தையை மறந்திருந்தார்...

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
நல்ல தகவல்கள் சகோ கடாபி பத்தி நிறைய தேடி இருக்கீங்க உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்/////

நன்றி பாஸ்

செங்கோவி said...

முதலில், இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது..வாழ்த்துகள் கிஸ்ராஜா.

செங்கோவி said...

தற்போதைய புரட்சி, மக்களுக்கு பெரிய பலனை அளித்துவிடாது என்பதே நிதர்சனம். ஆண்டான் மாறியுள்ளான், அவ்வளவே.

செங்கோவி said...

கடாபி செய்த தவறு, நாட்டை ஜனநாயகப் பாதைக்கு கொண்டு செல்லாமல், குடும்ப ஆட்சியை நிறுவுயது. இப்போது பெரியண்ணனும் வழவழாகொழகொழா ஆட்சி ஒன்றை நிறுவி, லிபியாவை ஒட்டக் கறப்பார்கள்.

கத்திக்கு மாற்று வாள் அல்லவே!

K.s.s.Rajh said...

@செங்கோவி
////
முதலில், இந்தப் பதிவிற்கான உங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுகிறது..வாழ்த்துகள் கிஸ்ராஜா////
பல செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களை தொகுத்துள்ளேன் அவ்வளவுதான்..நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
தற்போதைய புரட்சி, மக்களுக்கு பெரிய பலனை அளித்துவிடாது என்பதே நிதர்சனம். ஆண்டான் மாறியுள்ளான், அவ்வளவே/////

ஆம் பெரிய பலன் எதுவும் அளிக்கப்போவது இல்லைதான்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
கடாபி செய்த தவறு, நாட்டை ஜனநாயகப் பாதைக்கு கொண்டு செல்லாமல், குடும்ப ஆட்சியை நிறுவுயது. இப்போது பெரியண்ணனும் வழவழாகொழகொழா ஆட்சி ஒன்றை நிறுவி, லிபியாவை ஒட்டக் கறப்பார்கள்.

கத்திக்கு மாற்று வாள் அல்லவே/////

இதான் யதார்த நிலை

Anonymous said...

தகவல்களுக்கு நன்றி மாப்பு ..எல்லாம் சர்வதிகாரம் ,மற்றும் குடும்ப நலன்களை தூக்கி பிடித்ததால் வந்த விளைவுகள் தான் ..இந்த வரிசையில் இன்னும் இருவர்
ஒருவர் மகிந்தர் மற்றவர் கருணாநிதி ...

Unknown said...

நான் அறியாத பலவற்றை
அறியச் செய்தீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...

பல இடங்களில் தேடிப் படிக்காமல், ஒரே இடத்தில் பல தகவல்கள் கிடைத்திருக்கு ராஜ், பகிர்வுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கருணாநிதி, மகிந்த இவர் பாணியைப் பின்பற்றுகிறார்களா?

ரீகன் காலத்தில்அமெரிக்காவின் தாக்குதலில் இவர் வளர்ப்பு மகள் ஒருவர் கொல்லப்பட்டார்.

நிரூபன் said...

வணக்கம் மச்சான்சார்,
கடாபி பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள உங்களின் இப் பதிவு எனக்கு உதவியிருக்கிறது.
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
தகவல்களுக்கு நன்றி மாப்பு ..எல்லாம் சர்வதிகாரம் ,மற்றும் குடும்ப நலன்களை தூக்கி பிடித்ததால் வந்த விளைவுகள் தான் ..இந்த வரிசையில் இன்னும் இருவர்
ஒருவர் மகிந்தர் மற்றவர் கருணாநிதி .////

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
நான் அறியாத பலவற்றை
அறியச் செய்தீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
பல இடங்களில் தேடிப் படிக்காமல், ஒரே இடத்தில் பல தகவல்கள் கிடைத்திருக்கு ராஜ், பகிர்வுக்கு நன்றி/////
நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
யோகன் பாரிஸ்(Johan-Paris) கூறியது...
கருணாநிதி, மகிந்த இவர் பாணியைப் பின்பற்றுகிறார்களா?

ரீகன் காலத்தில்அமெரிக்காவின் தாக்குதலில் இவர் வளர்ப்பு மகள் ஒருவர் கொல்லப்பட்டார்/////

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாஸ் தொடர்ந்து வாருங்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails