Wednesday, October 26, 2011

ஒரு வரியில் வேலாயுதம் விமர்சனம்...

வேலாயுதம் பற்றி பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவார்கள் எனவே இன்னு நானும் விமர்சனம் எழுதலாம் என்று வேலாயுதம் பார்த்தேன்...ஆனால் நான் இப்போது விமர்சனம் எழுதவில்லை..காரணம் வேலாயுதத்தை ஓரு வரியில் விமர்சிக்கலாம்..இதோ வேலாயுதம் விமர்சனம்

வழமையான விஜய் படம்...

அவ்வளவுதான் வேலாயுதம் விமர்சனம் முடிஞ்சுது கெளம்புங்க.
கோபப்படாதீங்க உண்மைதான் வழமையான விஜய் படம்.இருந்தாலும் கீழே விமர்சனம் பாருங்க..

.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனிக்குஅடுத்த படியாக அதிக மாஸ் ஓப்பினிங் ஹீரோ அது விஜய் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை சுறாவில் சரிந்த இமேஜை..காவலனில் விஜய் தூக்கி நிறுத்தினார்...ஆனால் வேலாயுதம் விஜயின் இமேஜை தக்க வைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..ஏன் என்றால் அதே பழைவிஜய் படம் தான்

சரி கதை என்ன
தீவிரவாதிகள் சென்னையை குண்டுவைத்து தகர்க்க நினைக்கின்றார்கள் அதற்காக..தமிழநாட்டு அமைச்சர் ஓருவரை கடத்துகின்றார்கள்..அவரும் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக அதற்கு சம்மதிக்கின்றார்..

பின் அமைச்சர்..தன் அடியாள்களிடம் தீவிரவாதிகளிடம் சேர்ந்து..(B)பாம் வைக்க சொல்கின்றார்..சில இடங்களில் (B)பாம் வெடிக்கின்றது இந்த நிலையில் பத்திரிகையாளர் ஜெனிலியாவும் அவரின் நண்பர்களும் அமைச்சரின் அடியாள்களின் செயற்பாடுகளை..படம் பிடிக்க அதைகண்ட அமைச்சரின் அடியாட்கள் ஜெனிலியாவையும்,அவரது..நண்பர்களையும் கொல்ல துரத்துகின்ரார்கள்...ஜெனிலியாவின் நண்பர்களை..எரித்துக்கொல்லும் அடியாட்கள்...ஜெனிலியாவையும் கத்தியால் குத்தி ஜெனிலியாவிடம் சொல்கின்றார்கள் பாம்வைத்தது நாங்கதான்...என்றும் அடுத்த முறை இந்த இடத்தில் வைப்போம் என்று சொல்லிவிட்டு...வாகனத்தில் ஏறும் போது..சிகரட் பற்றவைக்க அது தவறி வாகனத்தில் இருந்த..பெற்றோல்..பாக்கட்(பைக்கட்)மீது விழ வாகனம் தீப்பற்றி எரிந்து அடியாட்கள் இறந்துவிட..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவி.(www.cricketnanparkal.bolospot.com)nanparkal/நண்பர்கள்
ஜெனியியா..ஓரு பேப்பரில் ...இவர்களை நான்தான் அழித்தேன்.இனியும் குண்டுவைத்தால் அழிப்பேன் என்று எழுதி..அதில்.என்ன பெயர்போடலாம் என்று சுற்று முற்றும் பார்க்க முருகன் படம் தென்பட..உடனே வேலாயுதம் என்று எழுதிவிட்டு போகின்றார்.

கிராமத்தில் இருக்கும் விஜய்..தன் தங்கை சரன்யாமோகன் மீது பாசத்தை பொழியும் பாசக்கார அண்ணன்..தங்கை திருமணத்திற்காக...தான் சேமித்துவைத்த பணத்தை எடுக்க சென்னைக்கு வருகின்றார்..சென்னையில் விஜய் செய்யும் சில செயல்களில் எதேர்ச்சையாக தீவிரவாதிகளுக்கு எதிராக அமைய...கிராமத்தில் விஜயின் பெயரும் வேலாயுதம் தான்..ஒரு கட்டத்தில் ஜெனியியா....விஜயால் காப்பாற்றப்பட..அப்போது ஜெனிலியா விஜயையிடம் நீதான் மக்களை காக்கும் வேலாயுதம் என்கின்றார்..விஜய் நம்ம மறுக்க விஜய் எதேர்ச்சையாக செய்த செயல்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக அமைந்ததை விளக்கி...விஜயை வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்க சொல்லுகின்றார்..மறுத்துவிடும் விஜய்..

ஓரு கட்டத்தில் விஜய் பணம் சேமித்துவைத்த சீட்டுக்கம்பனி மக்களை ஏமாற்றிவிட அதில் பணம் போட்டவர்களில் ஒருவரான இளவரசு தற்கொலை செய்து கொள்ள..அவரது மரணம்விஜயை வெகுவாக பாதிக்க...விஜய் வேலாயுதமாக மாறுகின்றார்..

கடைசியில் விஜய் தீவிரவாதிகளை அழித்தாரா....என்ன நடந்தது.என்பது கிளைமாக்ஸ்....
வழமையான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியும் கிளைமாக்ஸ் என்ன என்று..

நடிகர்கள்
விஜய்,ஜெனிலியா,ஹன்சிகா,சந்தாணம்,சரன்யாமோகன்,இளவரசு,மணிவண்ணன்,சிங்கமுத்து...வையாபுரி,எம்.எஸ்.பாஸ்கர்,சூரி

சந்தானம்
தற்போது வெளிவரும் பல படங்களில் ஹீரோவை விட படத்தை தூக்கி நிறுத்தும் பொறுப்பை சந்தாணம்தான் செய்து வருகின்ரார்..ஆனால் வேலாயுதத்தில்..அவரது பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியிருக்கலாம்.விஜய் படம் என்பதால் சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை..ஆனாலும் கிடைக்கும் சீன்களில் தன் நகைச்சுவையில் பட்டைய கெளப்புகின்றார்.....சென்னையில் திருடனாக வரும் சந்தாணம்..விஜயுடன் செய்யும் காமெடி ரசிக்கவைக்கின்றது.

சரன்யாமோகன்
விஜயின் தங்கையாக வரும் சரன்யாமோகன் வழக்கம் போல தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்...அவரது நடிப்பு பிரமாதம் விஜய்யும் சரன்யாவும் அடிக்கும் லூட்டிகள் அசத்தல்...தமிழ் சினிமா இவரை தங்கைச்சி கேரக்டரில் தொடர்ந்து நடிக்க வைப்பது என்னைப்போன்ற இவரது ரசிகர்களுக்கு..கவலைதான்..இப்ப நான் இந்த பதிவை டைப்பண்ணிக்கொண்டு இருக்கும் போது வேலாயுதம் பற்றி வேலாயுதம் டீம் டீவியில் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்..அதில் விஜய்..சரன்யா மோகனின் நடிப்பை புழந்து பேசிக்கொண்டு இருக்கார்..
பிரமாதமான ஒரு நடிகை சரன்யா மோகன்


ஜெனிலியா


மிகச்சிறந்த ஓரு நடிகை...வேலாயுதத்திலும் தன்பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்...இவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகின்றது கதையின் முக்கிய வேடம் ஜெனிலியாவுக்கு...தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்.


ஹன்சிகா


நடிக்க முயற்சி செய்திருக்கின்றார்....பாடல் காட்சிகளில் விஜயுடன் ஆடும் போது..இவர் இன்னும் சிறபாக ஆடியிருக்கலாம் ஏன் என்றால் சிறப்பான ஓரு டான்சரான விஜய்க்கு ஓரளவு இவர் ஈடுகொடுத்து ஆட முயற்சி செய்திருக்கலாம்.....படத்தில் ஹன்சிகாவுக்கு கிராமத்து பொண்ணுவேடம் ஆனால் கொஞ்சம் கூட அதுக்கு பொருத்தமில்லாமல் இருக்கின்றார்...இவரது அதிக படியான உடம்பு...இவரை படத்தில் ரசிக்கமுடியவில்லை இவர் உடம்பை குறைத்து நடனம்,நடிப்பு போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தவேண்டும்.இல்லை தமிழ் சினிமாவில் இருந்து விரைவில் காணாமல் போய்விடுவார்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவி.(www.cricketnanparkal.bolospot.com)nanparkal/நண்பர்கள்
விஜய்
வழக்கம்போல டான்ஸ்,பைட்,காமடி என்று பட்டைய கெளப்பியிருகார்..அதிலும் விஜய் காமெடியில் சரன்யாமோகனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் பிரமாதம். தான் ஓரு மாஸ் ஹீரோ என்பதை நிருபித்துள்ளார்.


எம்.எஸ்.பாஸ்கர்
ஹன்சிகாவின் அப்பாவாக வரும் இவர் படத்தில் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றார்..


இளவரசு,சிங்கமுத்து,வையாபுரி
படத்தில் ஒரு சில காட்சிகளில் வரும் நட்சத்திரங்கள்


படத்தின் பலம்
விஜய்,சரன்யா மோகன்,ஜெனிலியா,பாடல்கள்,நகைச்சுவைகாட்சிகள்


பலவீனம்
வழமையான விஜய் படம்..என்ற வட்டத்துக்குள்தான் வருகின்றது..அந்நியன் உட்பட பல படங்களின் சாயல் தெரிகின்றது..


படம் பற்றி என் கருத்து
நல்ல ஓரு கமர்சியல் படத்தை பார்க்கலாம் ஆனால் வழமையான விஜய் படம்தான்...விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி ஆனால் படம் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்கனும்...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவி.(www.cricketnanparkal.bolospot.com)nanparkal/நண்பர்கள்
நான் படம் பாக்க போன காரணங்கள்
சரன்யா மோகன்,ஜெனிலியா,விஜயின் நகைச்சுவை,சந்தாணம்.


முஸ்கி-எங்கள் ஊரில் ஓரே ஒரு தியேட்டர்தான் இருக்கு அங்கே வேலாயுதம் மட்டும் தான் ரிலீஸ் எனவே 7ம் அறிவு இப்போதைக்கு பார்க்கமுடியாது அதை பார்க்கும் போது அது பற்றி எழுதுகின்றேன்.


என் தனிப்பட்ட ரசனை இந்தப்படம் பார்த்த பிறகு




சரன்யா மோகன் கொஞ்சம் குண்டாகிவிட்டார்..அவரது அழகு கொஞ்சம் குறைந்ததை போல ஒரு பீலிங் ஆனாலும் அழகாக இருக்கின்றார்.வேலாயுதம் பார்த்த பிறகு செல்லத்தின் மேல லவ் அதிகமாகிவிட்டது...இனி நான் சரன்யா மோகன் நடிக்கும் படங்கள் பார்பது இல்லை என்று முடிவெடுத்திருக்கேன் காரணம் அவங்களை பார்க பார்க்க ரொம்ம பீலிங்கா இருக்குப்பா..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத்த பதிவி.(www.cricketnanparkal.bolospot.com)nanparkal/நண்பர்கள்







Post Comment

71 comments:

”தளிர் சுரேஷ்” said...

சூப்பரா இருக்கு விமர்சனம்! ட்ரெய்லர் பாக்கும்போதே இது வழக்கமான விஜய் படம் என்று தெரிந்துவிட்டது!

ராகுல் said...

velayutham sure hit

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை விட விமர்சனம் சூப்பார்ப்!!!!!!

Unknown said...

எங்க ஹன்ஸிகா ரசிகர் மன்றத்தினர் இந்த பதிவை பார்க்கவில்லையா?

Shanmugam Rajamanickam said...

சரண்யா மேல அவ்ளோ ஆசையா? அவ்......

Unknown said...

இப்பவே முடிவு பன்னினா எப்படி?

ஏழாம் அறிவு இருக்குல்ல

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அம்பலத்தார் said...

வணக்கம், தங்களிற்கும் தங்கள் குடும்ப உறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கோகுல் said...

ஹன்சிகா--நடிக்க முயற்சி செய்திருக்கின்றார்.//
அப்படியா?பாத்தா அப்படி தெரியலையே.

கோகுல் said...

சரி கதை என்ன-ஓ!அதெல்லாம் வேற இருக்கா?

கோகுல் said...

விமர்சனம் பாத்தா படம் பாக்கலாம் போலிருக்கே?

Anonymous said...

படம் பார்த்துவிட்டிங்களா ??? நலமா தானே இருக்கீங்க பாஸ்.. இல்லை பெரியாஸ்பத்திரில இருந்து தான் விமர்சனம் எழுதிநிங்களா ஹி ஹி

Unknown said...

http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html

மனசாலி said...

அப்போ பிரபாகரன் சொன்னது போல இது பழைய நாகர்ஜுன் படம் தானா?

For Further Details Read:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/azad.html

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

முதலில் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் பின்ன.. டொக்குத்தர் படத்த பார்க்கிறதுக்கு தைரியம் வேண்டும்..

அடுத்து நான் நினைக்கிறேன்  டொக்குத்தர்  தலை வலி மாத்திரைகள் தாயாரிக்கும் தொழில்சாலை வைத்திருக்கிறாரா..?? ஏன்னா இவரின் படங்களால் வலி நிவாரணி மாத்திரைகள் அமோக விற்பனைன்னு தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஹி ஹி 

எங்கையா என்ர மாப்பிள மதுரன்.. ஹி ஹி

காட்டான் குழ போட்டான்..

Yoga.S. said...

மீண்டும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்!எனக்கு அழுவாச்சி,அழுவாச்சியா வருது!இனிமே சரண்யா மோகன் நடிக்கிற படம் பாக்க மாட்டனெண்டு சொல்லிப் போட்டியளே?

K.s.s.Rajh said...

@thalir

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராகுல் கூறியது...
velayutham sure hit/////

பொறுத்திருந்து பார்ப்போம் பாஸ்...ஆனால் ஹிட்டாகும் என்றுதான் நினைக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
படத்தை விட விமர்சனம் சூப்பார்ப்!!!!!/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
எங்க ஹன்ஸிகா ரசிகர் மன்றத்தினர் இந்த பதிவை பார்க்கவில்லையா?/////

ஹா.ஹா.ஹா.ஹா.....

K.s.s.Rajh said...

@
சண்முகம் கூறியது...
சரண்யா மேல அவ்ளோ ஆசையா? அவ்..../////

ஹி.ஹி.ஹி.ஹி........

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
இப்பவே முடிவு பன்னினா எப்படி?

ஏழாம் அறிவு இருக்குல்ல/////

பொறுத்திருந்து பார்ப்போம்.....பாஸ்

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்/////

நன்றி பாஸ் உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
வணக்கம், தங்களிற்கும் தங்கள் குடும்ப உறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்./////

நன்றி பாஸ் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
ஹன்சிகா--நடிக்க முயற்சி செய்திருக்கின்றார்.//
அப்படியா?பாத்தா அப்படி தெரியலையே///

ஹா.ஹா.ஹா.ஹா...அவங்க நடிப்பில் இன்னமும்..மெருகூட்டனும்....

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
சரி கதை என்ன-ஓ!அதெல்லாம் வேற இருக்கா?/////

ஏன் பாஸ் ஏன்......அவ்............

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
விமர்சனம் பாத்தா படம் பாக்கலாம் போலிருக்கே?/////

ஆமா பார்கலாம் பாஸ் நல்ல ஓரு கமர்சியல் படம்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
படம் பார்த்துவிட்டிங்களா ??? நலமா தானே இருக்கீங்க பாஸ்.. இல்லை பெரியாஸ்பத்திரில இருந்து தான் விமர்சனம் எழுதிநிங்களா ஹி ஹி/////

ஏன் கந்து கோத்து விடுறீங்க....ஹி.ஹி.ஹி.ஹி...........

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
http://kaviyulagam.blogspot.com/2011/10/blog-post_26.html/////

இதோ......வாரன்

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul

எடிட் பண்ணியாச்சு டாக்டரே

Yaathoramani.blogspot.com said...

அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
படம் கிட் ஆக சான்ஸ் இருப்பதுபோல் படுகிறது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 4

K.s.s.Rajh said...

@காட்டான்

வாழ்த்துக்கள் மாம்ஸ்...ஏன் மாம்ஸ் என்னை கோத்து விடுறீங்க...ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
MANASAALI கூறியது...
அப்போ பிரபாகரன் சொன்னது போல இது பழைய நாகர்ஜுன் படம் தானா?

For Further Details Read:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/10/azad.html
/////

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...எனக்கு சரியாகத்தெரியவில்லை...

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
மீண்டும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்! நன்றாக விமர்சித்திருக்கிறீர்கள்!எனக்கு அழுவாச்சி,அழுவாச்சியா வருது!இனிமே சரண்யா மோகன் நடிக்கிற படம் பாக்க மாட்டனெண்டு சொல்லிப் போட்டியளே?/////

ஹா.ஹா.ஹா.ஹா..நன்றி ஜயா அது சும்மா ஓரு பீலிங்ல சொன்னது சரன்யா நடிச்ச படம் பாக்காம இருக்கமுடியாது......ஹி.ஹி.ஹி.ஹி......

சுதா SJ said...

 ராஜ் நான் படித்த வேலாயுதம் விமர்சனத்திலேயே நடுனிலையான தரமான விமர்சனம் இதுதான்.
பக்க சார்பு இன்றி எழுதி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். படம் பார்க்காமல் கருத்து சொல்ல முடியவில்லை. ஆனால் விமர்சனம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்வ்வ்வ்வ்வ்வ்...

சீக்கிரம் படம் பார்க்கனும்
நம்ம ஜெனிலியாக்காண்டி..
நிருபர் வேடம் வேற பொண்ணு கலக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். ^_^

JK said...

ஹா ஹா .. இது சரண்யா மோகன் விமர்சனமா ... வேலாயுதம் விமர்சனமா? ஒரே பீலிங்கா இருக்கு அண்ணே!

Vinodhini said...

படத்தை விட விமர்சனம் உண்மையாகவே நன்றாக இருக்கிறது.. Trailer பார்த்த பின் எப்படியும் படம் பார்ப்பதில்லை என முடிவு செய்தேன், ஒரே மாதிரியான கதையை எத்தனை முறை தான் பார்ப்பது.. இது என் தனிப்பட்ட கருத்து, தவறிருப்பின் மன்னிக்கவும்.. :)

இராஜராஜேஸ்வரி said...

விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்..

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

நன்றி மச்சி

K.s.s.Rajh said...

@
Vinodhini கூறியது...
படத்தை விட விமர்சனம் உண்மையாகவே நன்றாக இருக்கிறது.. Trailer பார்த்த பின் எப்படியும் படம் பார்ப்பதில்லை என முடிவு செய்தேன், ஒரே மாதிரியான கதையை எத்தனை முறை தான் பார்ப்பது.. இது என் தனிப்பட்ட கருத்து, தவறிருப்பின் மன்னிக்கவும்.. ://///

ஆனாலும் நல்ல ஒரு கமர்சியல் படம் பார்த்த உணர்வு கிடைக்கும்...சகோ

K.s.s.Rajh said...

@
இராஜராஜேஸ்வரி கூறியது...
விமர்சனம் அருமை. பாராட்டுக்கள்////

நன்றி மேடம் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@Ramani

நன்றி பாஸ் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@JK
////ஹா ஹா .. இது சரண்யா மோகன் விமர்சனமா ... வேலாயுதம் விமர்சனமா? ஒரே பீலிங்கா இருக்கு அண்ணே/////

ஹி.ஹி.ஹி.ஹி............

தனிமரம் said...

என்னையா அந்த ஊரில் நான் இருக்கும் போது 4தியேட்டர் இருந்திச்சே ?

தனிமரம் said...

வயது ஏற ஏற குண்டாவது இயல்பு தானே அதுக்கு ஏய்யா சரன்யா மோகன் மீது சலிச்சுக்கிறாய் இல்ல நம்ம கோவைசரளா இருக்கிறாங்க இல்ல!

Unknown said...

வேலாயுதம் - ரீமேக் ராஜா -தெரிந்து கொள்ளுங்கள்
http://aagaayamanithan.blogspot.com/2011/10/blog-post_26.html

தனிமரம் said...

ஒருவரி அது தலைவலி அவர் செயல்!
அடுத்த பதிவில் சந்திப்போம்!

மாய உலகம் said...

அருமையா அலசிருக்கீங்க நண்பா...

Mathuran said...

இருங்க இருங்க.. வச்சுக்கிறன்

முற்றும் அறிந்த அதிரா said...

ஹன்ஷிகாவைவிட ஜெனிலியாதான் நல்லா இருக்கிறா:))).... எதுக்கு எல்லோரும் ஹன்ஷிகாவுக்கு அடிபடுகினமோ தெரியேல்லை.... இண்டைக்கு எதைப் பார்த்தாலும் ஒரே டவுட்டு டவுட்டா வருதே அவ்வ்வ்வ்வ்வ்:)))

நிரூபன் said...

விமர்சனம் கலக்கல் பாஸ்..

சரண்யா பற்றிய உங்கள் கமெண்டை நினைத்தால் தான் கவலையாக இருக்கு..

அப்பாவி தமிழன் said...

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அப்புறம் மாஸ் ஒபெநிங் விஜய்க்கு தான் அதில எந்த மாற்றமும் இல்லை //////////

ஐ படத்தில இருக்கற காமெடியா விட இது பெருங் காமெடியா இருக்கே ....

K.s.s.Rajh said...

@தனிமரம்
/////
என்னையா அந்த ஊரில் நான் இருக்கும் போது 4தியேட்டர் இருந்திச்சே ////இப்ப ஓன்றுதான் இருக்கு....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வயது ஏற ஏற குண்டாவது இயல்பு தானே அதுக்கு ஏய்யா சரன்யா மோகன் மீது சலிச்சுக்கிறாய் இல்ல நம்ம கோவைசரளா இருக்கிறாங்க இல்ல/////

பீலிங்க இருக்கு பாஸ்............ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வயது ஏற ஏற குண்டாவது இயல்பு தானே அதுக்கு ஏய்யா சரன்யா மோகன் மீது சலிச்சுக்கிறாய் இல்ல நம்ம கோவைசரளா இருக்கிறாங்க இல்ல/////

பீலிங்க இருக்கு பாஸ்............ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
ஆகாயமனிதன்.. கூறியது...
வேலாயுதம் - ரீமேக் ராஜா -தெரிந்து கொள்ளுங்கள்
http://aagaayamanithan.blogspot.com/2011/10/blog-post_26.html/////

இதோ வாசிச்சா போச்சு

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஒருவரி அது தலைவலி அவர் செயல்!
அடுத்த பதிவில் சந்திப்போம்/////

ஹா.ஹா.ஹா.ஹா........

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
அருமையா அலசிருக்கீங்க நண்பா./////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
இருங்க இருங்க.. வச்சுக்கிறன்/////

ஏன்யா கொந்தளிக்கின்றீ இதைவிட இதை நடுநிலையா இந்த படத்தை விமர்சணம் செய்யமுடியாது........

ஆமா யாரை வச்சுக்கின்றன் என்று சொல்லுறீங்க?ஹி.ஹி.ஹி.ஹி..ஹன்சியையா?

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
ஹன்ஷிகாவைவிட ஜெனிலியாதான் நல்லா இருக்கிறா:))).... எதுக்கு எல்லோரும் ஹன்ஷிகாவுக்கு அடிபடுகினமோ தெரியேல்லை.... இண்டைக்கு எதைப் பார்த்தாலும் ஒரே டவுட்டு டவுட்டா வருதே அவ்வ்வ்வ்வ்வ்:))/////

ஹா.ஹா.ஹா.ஹா............

K.s.s.Rajh said...

@
அப்பாவி தமிழன் கூறியது...
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அப்புறம் மாஸ் ஒபெநிங் விஜய்க்கு தான் அதில எந்த மாற்றமும் இல்லை //////////

ஐ படத்தில இருக்கற காமெடியா விட இது பெருங் காமெடியா இருக்கே .../////

ஹா.ஹா.ஹா.ஹா......

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
விமர்சனம் கலக்கல் பாஸ்..

சரண்யா பற்றிய உங்கள் கமெண்டை நினைத்தால் தான் கவலையாக இருக்கு.////

யோவ் பாஸ் அதுக்கு நான் தானே கவலைப்படனும் நீங்க ஏன் கவலைப்படுறீங்க............

சென்னை பித்தன் said...

நல்ல விமரிசனம்.
தீபாவளி கொண்டாடியாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனம் அழகு, நிறைய ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு பாருங்க, உதா - சந்தானம் க்கு ண யூஸ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி ஜயா..ஆம் தீபாவளி கொண்டாடியாச்சு.......

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

////விமர்சனம் அழகு, நிறைய ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்கு பாருங்க, உதா - சந்தானம் க்கு ண யூஸ்////

நன்றி பாஸ் சரி செய்கின்றேன்

அம்பாளடியாள் said...

அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு .....

K.s.s.Rajh said...

@அம்பாளடியாள்

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@சார்வாகன்
நன்றி சகோ

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails