Wednesday, February 01, 2012

கன்னிப்பருவத்திலே-திரைவிமர்சனம்

சினிமா அலசல் என்ற இந்த பகுதியின் ஊடாக காலத்தால் மறக்க முடியாத இயக்குனர்கள்,நடிகர்களின் பழய படங்களை விமர்சனம் செய்துவருகின்றேன். அந்த வகையில் இன்று கடந்த பதிவை போலவே இன்னும் ஒரு பாக்கியராஜ் படம் பற்றி பார்ப்போம். 1979ம் ஆண்டும் ராஜேஸ்,வடிவுக்கரசி,கே.பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ”கன்னிப்பருவத்திலே”கணவனிடம் இருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு பெண்ணின் உணர்வுகளை சொல்லும் கதைதான் இது.
இந்த திரைப்படத்தில் கே.பாக்கியராஜ் வில்லனாக நடித்திருப்பது சிறப்பம்சம்.

கிராமத்தில் கடும் உழைப்பாளியான விவசாயி ராஜேஸ்.ஊரில் எலோறாலும் மதிக்கப்படுபவர். ஒரு முறை கிராமத்தில் காளை அடக்கும் போட்டியில் ராஜேஸ் கலந்துகொண்டு காளையை அடக்குகின்றார்.அப்போது ராஜேஸ் தன் தோளில் போட்டு இருந்த துண்டை தூக்கி எறியும் போது அது வடிவுக்கரசியின் மீது விழுகின்றது.ராஜேஸ் மீதுகாதல் கொள்ளும் வடிவுக்கரசி அந்த துண்டைதன்னுடன் எடுத்து செல்கின்றார்.ராஜேஸ் காளையை அடக்கும் போது காளை முட்டியதில் வைத்திய சாலையில் சேர்க்கப்படுகின்றார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com


பின் குணமாகி மீண்டும் வந்ததும் வடிவுக்கரசி தன் காதலை ராஜேஸிடம் சொல்ல முதலில் மறுத்துவிடும் ராஜேஸ் பின்பு ஏற்றுக்கொள்கின்றார்.ஆனால் வடிவுக்கரசியின் தந்தை ராஜேஸுக்க்கு வடிவுக்கரசியை திருமணம் செய்துதர மறுத்துவிடுகின்றார்.வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய வேறு ஊருக்கு அழைத்துச்சென்றுவிடுகின்றார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com

ராஜேஸ் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது.ராஜேஸின் உதவியாளர் கோளையன்(இவர் உண்மையான பெயர் தெரியவில்லை படத்தில் இவர் பெயர் கோளையன்)மற்றும் டவுனில் படித்துவிட்டு வந்திருக்கும் ராஜேஸின் நண்பன் கே.பாக்கியராஜ் இருவரும்.ராஜேசிடம் சொல்கின்றார்கள்.நீ கோழை உணமையான வீரன் என்றால் போய் வடிவுக்கரசியை தூக்கிட்டு வந்து தாலி கட்டு என்று ராஜேஸும் இவர்களின் கூற்றுப்படி வடிவுக்கரசியை தூக்கிகிட்டு வந்து தாலிகட்டுகின்றார்.

வடிவுக்கரசி,ராஜேஸ்.கன்னிப்பருவத்திலே படத்தில்
முதல் இரவில் ஆரம்பிக்குது பிரச்சனை இருவரும் கட்டி அணைத்து இன்பத்தில் மூழ்கி மேட்டரில் ஈடுபட தயாராகும் போது ராஜேஸ்க்கு நெஞ்சிவலி வந்துவிடுகின்றது.அதனால் அத்துடன் மேட்டர் கட்.அதே போல காலையில் வடிவுக்கரசி டீ கொண்டுவந்து கொடுக்கும் போது மீண்டும் ராஜேஸ்க்கு மூடுவந்துவிட மேட்டருக்கு தயாராகின்றனர்.ஆனால் அதே போல மீண்டும் நெஞ்சிவலி வந்துவிடுகின்றது.எனவே மீண்டும் மேட்டர் கட்.


இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் இருவரும் டவுனில் வைத்தியரிடம் செல்கின்றனர் அங்குதான் தெரிகின்றது. காளையை அடக்கும் போது மாடு முட்டியதில் ராஜேஸ்க்கு ஆண்மை போய்விடுகின்றது என்று.ராஜேஸால் மேட்டரில் ஈடுபடமுடியாது என்று டாக்டர் சொல்கின்றார்(அதுக்கு ஏன் நெஞ்சி வலி வந்தது என்று லாஜிக் எல்லாம் கேட்க முடியாது படம் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது).

அப்பறம் என்ன இருவரின் வாழ்க்கையும் சூன்யமாகிவிட்டது ஆனால் வடிவுக்கரசி சொல்கின்றார். நீ எதுக்கு மச்சான் கவலைப்படுற வெறும் ஜந்து நிமிட சுகம் அதுமட்டும் தான் வாழ்க்கையா இல்லை அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கு என்று டயலாக் பேசி ராஜேஸை சமாதானம் செய்கின்றார்.

ஒரு முறை ஊரில் ஒரு கரடியுடன் சண்டையிட்டு ராஜேஸ் ஜெயிக்கின்றார். ஊரே ராஜேஸை புகழ்கின்றது. ஆம்புளனா இவன் ஆம்புள என்று. ஆனால் வீட்டிற்குள் வந்ததும் ராஜேஸ் வடிவுக்கரசியின் மடியில் படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழும்போது ராஜேஸ் நடிப்பில் மிளிருகின்றார்.

கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாக கே.பாக்கியராஜ்
இந்த சந்தர்ப்பத்தில் ராஜேசின்,நண்பனான பாக்கியராஜ் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கின்றார் ராஜேஸ்.ஒரு முறை ராஜேஸ் வயலுக்கு போய்விட வீட்டில் வடிவுக்கரசி,பாக்கியராஜ் மட்டும் இருக்கின்றனர்.சமைத்துக்கொண்டு இருந்த வடிவுக்கரசியின் சேலையில் தீப்பற்றிக்கொள்ள அதை அணைக்க போகும் பாக்கியராஜும் வடிவுக்கரசியும் கட்டி பிடித்து உருள இருவருக்கும் காமத்தீ பற்றிக்கொள்கின்றது.ஒரு நிமிடம் தடுமாறும் வடிவுக்கரசி பாகியராஜை கட்டிப்பிடித்து தன்நிலை மறந்துவிடுகின்றார்.பின்பு சுதாகரித்துக்கொண்டு.எழுந்து விடுகின்றார்.ஆனால் மேட்டர் நடக்கவில்லை.

பின் இதை சாட்டாக வைத்துக்கொண்டு பாகியராஜ் எப்படியாவது வடிவுக்கரசிக்கு மேட்டரை முடித்துவிடவேண்டும் என்று திரிகின்றார்.இரவில் ஜன்னல் வழியாக வந்து வடிவுக்கரசியை கூப்பிடுவது.போன்ற பல தொல்லைகளை வடிவுக்கரசிக்கு கொடுக்கின்றார்.ஒரு முறை தோட்டத்தில் தனியாக வரும் வடிவுக்கரசியை ரேப்பண்ண முயற்சி செய்கின்றார். அப்போது வடிவுக்கரசி ஏண்டா இப்படி இருக்க அன்று ஒரே ஒரு நிமிடம் நான் தடுமாறியதால் தான் எனக்கு இந்த நிலைமை அதுவும் என் புருசன் ஒழுங்கா இருந்திருந்தா! நான் அப்படி தடுமாறியிருக்க மாட்டேன். என்று ஆத்திரத்தில் கூறிவிட.அதைக்கேட்ட பாக்கியராஜ் என்ன உன் புருசனுக்கு ஆண்மையில்லையா? இரு ஊரில் எல்லோரிடமும் சொல்லிவிடுகின்றேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com

அதன் பின் அதை வைத்து வடிவுக்கரசியை ப்ளாக்மெயில் செய்கின்றார்.இந்த நிலையில் பாக்கியராஜின் விட்டில் அவருக்கு பொண்ணுபார்க்க அதை மறுத்துவிடும் பாக்கியராஜ்.வடிவுக்கரசியிடம் வந்து இன்று இரவு ஒரு மணிக்கு நாம் இந்த ஊரைவிட்டு ஓடிப்போகின்றோம் தயாராக இரு என்று சொல்லிவிட்டு அதே போல இரவு ஒரு மணிக்கு வருகின்றார்.

வடிவுக்கரசிக்கோ இரண்டும் கெட்டான நிலை காரணம் பாக்கியராஜ் சொல்கின்றார் நீ என்னுடன் வராவிட்டால் உன் புருசனுக்கு ஆண்மையில்லை என்பதை ஊரில் சொல்லிவிடுவேன். ஒருவேளை நீ தற்கொலை செய்துகொண்டால்.அப்பவும் இந்த விடயத்தை ஊரில் சொல்லி இதனால் தான் நீ தற்கொலை செய்துகொண்டாய் என்று சொல்லுவேன் என்று சொல்லிவிடுகின்றார்.

இரவு ஒரு மணிக்கு வந்த பாக்கியராஜ் வடிவுக்கரசியை தன்னுடன் இழுத்துச்செல்கின்றார்.போக மனம் இல்லாத வடிவுக்கரசி அவருடம் போகின்றார் இடையில் ஒரு இடத்தில் வடிவுக்கரசி பாக்கியராஜிடம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்சிப்பார்கின்றார்.அதற்கு பாக்கியராஜ் மறுத்துவிடவே!அவரை அருகில் இருக்கும் கிணற்றில் தள்ளிவிடுகின்றார்.பாக்கியராஜை தள்ளிவிட்டுவிட்டு திரும்பும் போது வடிவுக்கரசியின் கணவன் ராஜேஸ் முன்னால் நிற்கின்றார்.

அழுதுகொண்டு அவரிடம் ஓடிவரும் வடிவுக்கரசியை பார்த்து  ராஜேஸ் சொல்கின்றார். அழாத புள்ள எனக்கு எல்லாம் தெரியும்!  நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன்.நீ மனசால தன் கெட்டவ உன் உடலால் கெடவில்லை அப்படி நீ கெட்டுப்போய் ஒரு குழந்தைக்கு தாயாகி வந்திருந்தாலும் நான் உன்னை ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

இப்ப வா வீட்டுக்கு போகலாம் இந்த நேரத்துல் நீ கிணறில் தள்ளிவிட்டதை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்,பயப்படாதே என்று ஆறுதல் சொல்கின்றார்.அதற்கு வடிவுக்கரசி முன் இருக்கும் கோயிலைக்காட்டி ஆத்தா பாத்துக்கொண்டு இருக்கின்றாள். என்று சொல்ல ராஜேஸ் நல்லவிடயத்துக்குத்தான் நீ அவனை தள்ளிவிட்டாய். அதனால் ஆத்தா உன்னை தண்டிக்க மாட்டாள். என்று சொல்லி வடிவுக்கரசியை அழைத்துச்செல்கின்றார்.

இந்தப்படத்தில் ராஜேஸின் உதவியாளராக வருபவரின் நடிப்பு மிக பிரமாதமாக இருக்கும்.பாகியராஜ் நெக்கட்டிவ் ரோலில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.இரவில் வடிவுக்கரசியின் வீட்டிற்கு சென்று அவரை கூப்பிடும் போது அவரிடம் ஒரு வசனம் சொல்வார். ஒரு பொம்பளைக்கு எப்படி அவள் முதல் இரவை மற்றக்க முடியாதோ! அதே போல தான் ஆம்பளைக்கும் உன்னை என்னால் மறக்க முடியாது என்று. நெக்கட்டிவ் ரோலில் பாக்கியராஜின் நடிப்பு நன்றாக இருக்கும் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப்போகின்றார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு
வடிவுக்கரசி,ராஜேஸ்,பாக்கியராஜ்,தங்கள் பாத்திரங்களில் மிகச்சிறபாக நடித்திருப்பார்கள்.

.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com
தாம்பத்திய சுகம் கிடைக்காத ஒரு பெண்ணும்,ஆண்மையை இழந்த அவள் கணவனும் படும் அவஸ்தைகளை சொல்லும் படம் ”கன்னிப்பருவத்திலே”
மூலக்கதை-வைரவன்
திரைக்கதை,வசனம்-கே.பாக்கியராஜ்
இயக்கம்-பாலகுரு
இசை-சங்கர் கணேஸ்
தயாரிப்பு-S.ராஜ்கண்ணு 

.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com
பாடல்களை பொறுத்த மட்டில் பலர் மனங்களில் நிலைத்து நின்ற ஒரு பாடலான ”பட்டுவண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்”என்ற பாடல் இந்தப்படத்தில் தான் இடம் பெற்றுள்ளது.
இந்தப்படத்தில் இரண்டு முறை இந்தப்பாடல் இடம் பெருகின்றது ஒரு முறை வடிவுக்கரசி பாடுகின்றார் இன்னும் ஒரு முறை ராஜேஸ் பாடுவதாக அமைந்திருக்கின்றது
இந்தப்பாடலின் வீடியோ

மீண்டும் ஒரு பதிவில் இன்னும் ஒரு பழய படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு-www.nanparkal.com
படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
வீடியோ-Youtube.com

இதற்கு முன் எழுதிய கே.பாக்கியராஜின் தாவனிக்கனவுகள் விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்-தாவனிக்கனவுகள்-விமர்சனம்

Post Comment

20 comments:

பாலா said...

மிக அருமையான படம். கொஞ்சம் தப்பி இருந்தாலும் ஏடாகூட படமாகியிருக்க கூடும். பாக்கியராஜ் நடிப்பு சூப்பர்.

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்.

கொஞ்சம் ருவிட்ஸ் வைத்து விமர்சனத்தினைச் சொல்லியிருக்கலாம்,

விமர்சனத்தில் பாதிக் கதை வந்து விட்டது.

மற்றும் படி மீண்டும் ஒரு முறை படம் பார்க்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!இந்தப் படம் வெளியானபோது நீங்கள் பிறந்துவிட்டீர்களோ? ஹி!ஹி!ஹி!!!விமர்சனம் அருமை!ஆனாலும் நீங்க இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி!!!

சி.பி.செந்தில்குமார் said...

wநல்ல கதை, திரைக்கதை இந்தப்படம்

விமர்சனம் நீட்

ஒரே ஒரு ஸ்மால் கரெக்‌ஷன்.. வடிவுக்கரசி பாக்யராஜ்க்கு கிஸ் எல்லாம் குடுக்க மாட்டார்.. அவர் கட்டிப்பிடிக்கறப்ப கண் மூடி ரசிப்பார் அவ்ளவ் தான் (அப்டினு நினைக்கறேன்)

K.s.s.Rajh said...

@பாலா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் மச்சான் சார்.

கொஞ்சம் ருவிட்ஸ் வைத்து விமர்சனத்தினைச் சொல்லியிருக்கலாம்,

விமர்சனத்தில் பாதிக் கதை வந்து விட்டது.

மற்றும் படி மீண்டும் ஒரு முறை படம் பார்க்கும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.
////

படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டதனால் தான் பாஸ் ருவிட்ஸ் வைக்கவில்லை

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!இந்தப் படம் வெளியானபோது நீங்கள் பிறந்துவிட்டீர்களோ? ஹி!ஹி!ஹி!!!விமர்சனம் அருமை!ஆனாலும் நீங்க இன்னும் கொஞ்சம் வளரணும் தம்பி!!!
////

இந்தபப்டம் வெளியான போது நான் பிறக்கவில்லை ஜயா இது வெளியாகி கிட்ட தட்ட 10 வருடம் கழித்துதான் நான் பிறந்தேன் நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
wநல்ல கதை, திரைக்கதை இந்தப்படம்

விமர்சனம் நீட்

ஒரே ஒரு ஸ்மால் கரெக்‌ஷன்.. வடிவுக்கரசி பாக்யராஜ்க்கு கிஸ் எல்லாம் குடுக்க மாட்டார்.. அவர் கட்டிப்பிடிக்கறப்ப கண் மூடி ரசிப்பார் அவ்ளவ் தான் (அப்டினு நினைக்கறேன்)///

அட ஆமா பாஸ் சாரி சாரி நன்றி பாஸ் திருத்திவிட்டேன்

நன்றி பாஸ்

rajamelaiyur said...

உண்மையில் அருமையான படம் .. வில்லனாக பாக்கியராஜ் நடிப்பு அருமையாக இருக்கும்

Riyas said...

//மேட்டர்//

இதற்கு அழகான நாகரீகமான தமிழ் சொல்லான "உறவு" என்ற சொல்லைப்பயன்படுத்தியிருக்கலாம்..

மற்றபடி இது திரைவிமர்சனமா என்பதில் எனக்கு சந்தேகம்..

படத்தின் கதையை சொல்வதாக கொள்ளலாம்..(மன்னிச்சிடுங்க பாஸ் தப்பாயிருந்தா, ஏதோ தோனிச்சு.

Yoga.S. said...

K.s.s.Rajh கூறியது...

இந்தப்படம் வெளியான போது நான் பிறக்கவில்லை ஜயா இது வெளியாகி கிட்ட தட்ட 10 வருடம் கழித்துதான் நான் பிறந்தேன் நன்றி ஜயா./// அதென்ன கிட்டத்தட்ட,ஏறக்குறைய என்று????ஒரு குத்துமதிப்பா சொல்லுங்கோவன்,ஹி!ஹி!ஹி!!!!!!

தனிமரம் said...

தரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் எடுத்த படம் அதுவும் பூனையைக் காட்டியே திரிலிங்க கொண்டுபோகும் உத்தி பிடிக்கும் . 
ம.வாதேவனின் சோகராகம் பிடிக்கும் .அடி சத்தியாமா நான் இருப்பேன் 
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் என்ற பட்டுவண்ண ரோசாவில் இன்னும் ஒரு மயக்கம் கிறக்கம் தொடர்கின்ற அருமையான பாடல் சில அறிவிப்பாளர்கள் இந்தப்படத்தின் பெயர் சொன்னால் இந்தப்பாடல் தான் என்று அறுதியாக அறிவிப்பு செய்து மனதுக்குல் நானும் ஒரு அறிவிப்பாளராக கனவு கண்டது ஒரு காலம். ம்ம்ம் அது கடந்தகாலம்.

ராஜி said...

ரசிக்க வைக்கும் பாடல்களை கொண்ட படம். வெறும் காமம் மட்டுமே கொண்டதல்ல திருமண வாழ்க்கை. உண்மையான காதலிருந்தால் காமம் இல்லாமல் கூட வாழலாம் என்பதை உணர்த்தும் படம்..., பகிர்வுக்கு நன்றி

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Riyas கூறியது...
//மேட்டர்//

இதற்கு அழகான நாகரீகமான தமிழ் சொல்லான "உறவு" என்ற சொல்லைப்பயன்படுத்தியிருக்கலாம்..

மற்றபடி இது திரைவிமர்சனமா என்பதில் எனக்கு சந்தேகம்..

படத்தின் கதையை சொல்வதாக கொள்ளலாம்..(மன்னிச்சிடுங்க பாஸ் தப்பாயிருந்தா, ஏதோ தோனிச்சு.
////

படம் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சுவாரஸ்யத்துக்காக அப்படி முழுக் கதையையும் எழுதினேன்.

நன்றி பாஸ் இனி கவனத்தில் எடுக்கின்றேன்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
K.s.s.Rajh கூறியது...

இந்தப்படம் வெளியான போது நான் பிறக்கவில்லை ஜயா இது வெளியாகி கிட்ட தட்ட 10 வருடம் கழித்துதான் நான் பிறந்தேன் நன்றி ஜயா./// அதென்ன கிட்டத்தட்ட,ஏறக்குறைய என்று????ஒரு குத்துமதிப்பா சொல்லுங்கோவன்,ஹி!ஹி!ஹி!!!!!!
////
அவ்வ்வ்வ் முடியலை பாஸ் நான் பிறந்தது 1989ல் போதுமா பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் எடுத்த படம் அதுவும் பூனையைக் காட்டியே திரிலிங்க கொண்டுபோகும் உத்தி பிடிக்கும் .
ம.வாதேவனின் சோகராகம் பிடிக்கும் .அடி சத்தியாமா நான் இருப்பேன்
இந்த நம்பிக்கைதான் நம்மை எல்லாம் என்ற பட்டுவண்ண ரோசாவில் இன்னும் ஒரு மயக்கம் கிறக்கம் தொடர்கின்ற அருமையான பாடல் சில அறிவிப்பாளர்கள் இந்தப்படத்தின் பெயர் சொன்னால் இந்தப்பாடல் தான் என்று அறுதியாக அறிவிப்பு செய்து மனதுக்குல் நானும் ஒரு அறிவிப்பாளராக கனவு கண்டது ஒரு காலம். ம்ம்ம் அது கடந்தகாலம்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ ராஜி கூறியது...
ரசிக்க வைக்கும் பாடல்களை கொண்ட படம். வெறும் காமம் மட்டுமே கொண்டதல்ல திருமண வாழ்க்கை. உண்மையான காதலிருந்தால் காமம் இல்லாமல் கூட வாழலாம் என்பதை உணர்த்தும் படம்..., பகிர்வுக்கு நன்றி
////

உண்மைதான் திருமணவாழ்வின் உண்மையான அன்பை சொல்லும் படம்

நன்றி அக்கா

ranga said...

இதனை நான் பார்க்கவில்லை என்றாலும் உங்களின் விமர்சனத்தையும்,சக நண்பர்களின் கருத்துரையையும் வைத்து பார்க்கையில் எனக்கு இப்படத்தினை பார்க்க ஆசையாக உள்ளது!!!

ஆம் இன்னும் ஒரு விடயம் நான் இத்தளத்தினை சில நாட்களுக்கு முன்பே அறிந்தேன்!!!. ஆனாலும் இத்தளம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டு வருகிறேன்.

K.s.s.Rajh said...

@ ranga கூறியது...
இதனை நான் பார்க்கவில்லை என்றாலும் உங்களின் விமர்சனத்தையும்,சக நண்பர்களின் கருத்துரையையும் வைத்து பார்க்கையில் எனக்கு இப்படத்தினை பார்க்க ஆசையாக உள்ளது!!!

ஆம் இன்னும் ஒரு விடயம் நான் இத்தளத்தினை சில நாட்களுக்கு முன்பே அறிந்தேன்!!!. ஆனாலும் இத்தளம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது உங்களின் பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டு வருகிறேன்.
////

நன்றி சகோ தொடர்ந்து வாருங்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails