Friday, February 03, 2012

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகை-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று என்னைக்கவர்ந்த பிரபலங்கள் என்ற இந்த பகுதியில் என்னைக்கவர்ந்த ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.ஆச்சி மனோரம்மா  1000ம் படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகை.

மனோரம்மாவின் நடிப்பை பாராட்ட எனக்கு வயசு இல்லை.எம்.ஜி.ஆர்,சிவாஜி முதல்,ரஜனி,கமல்,விஜயகாந்,விஜய்,அஜித்,விக்ராந்,முதல் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குறியவர் மதிப்புக்குறிய ஆச்சி மனோரம்மா.நான் இவரது மிகப்பெரிய ரசிகன்.எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் பிச்சு உதறும் ஆச்சி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிசம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

மனோரம்மா பற்றி சில குறிப்புக்கள்
1939 –ல் மனோரமா பிறந்த ஊர் ராஜமன்னர்குடி. பெற்றோர் காசிகிளாக்குடையார்-ராமாமிர்தம்மாள்,. பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள்

1952 –ல் மேடை ஏற்றப்பட்ட `யார் மகன் நாடகம்தான் ஆரம்பம். `அந்தமான் கைதி’ மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம், நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்!

1952 –ல் மேடை ஏற்றப்பட்ட `யார் மகன் நாடகம்தான் ஆரம்பம். `அந்தமான் கைதி’ மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம், நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்!


முதல் படம் மாலையிட்ட மங்கை’, நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300 –க்கு மேல். இதனால் `கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் மணோரமா. இவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணாதாசன்!

மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய திறமைசாலி

கண் திறந்தது’ படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனோடு திருச்செந்தூர் கோயிலில் திருமணம். ஒரே ஒரு மகன் இருக்கின்றார் பூபதி


இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதல் அமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணாதுரை,  கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இவருடன் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.




கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆச்சிக்கு கெளரக டாக்டர் பட்டம் அளித்துள்ளது. மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் தமிழக அரசு கலைமாமணி விருதும் அளித்து கெளரவித்தன

மனோரமாவின் அம்மா இறந்த 16-வது நாள் சடங்குகளை `சகோதரன்’ என்ற முறையில், உடனிருந்து செய்தவர் சிவாஜி.இந்த நெகிழ்வில் சிவாஜியை வாய் நிறைய, `அண்ணே’ என்று தான் அழைப்பார் ஆச்சி!



ஆச்சி இண்டர்நேஷனல்’, `அல்லி ராஜ்யம்’, `காட்டுபட்டிச் சத்திரம்’ என சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கின்றார்.

எஸ்.எஸ்.ஆரில்ஆரம்பித்துசிவாஜி,எம்.ஜி.ஆர்.கமல்.ரஜனி,விஜய்,அஜித்,விக்ராந் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கும் ஓரே தமிழ்க் கலைஞர் இவர்தான். 


மனோரம்மா வாழும் காலத்தில் நாம் தமிழ் சினிமா ரசிகர்களாக இருப்பதே எமக்கு பெருமைதான்.

முஸ்கி-இந்த பதிவிற்கான மனோரம்மா பற்றிய குறிப்புக்கள் இணையதள தேடலில் பெறப்பட்டவை தகவல் பெற்ற அனைத்து தளங்களுக்கும் நன்றி


அடுத்த வாரம் வேறு ஒரு துறையை சேர்ந்த என்னைக் கவர்ந்த ஒரு பிரபலம் பற்றி பார்போம்.




Post Comment

14 comments:

Kumaran said...

ஆச்சியை பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்..எனக்கு இவரது நடிப்பு என்றாலே அலாதி பிரியம்.அவரை பற்றி ரொம்ப அருமையான தகவல்களை திரட்டி ஒரு நல்ல தொகுப்பாக வழங்கிய தங்களுக்கு என் நன்றிகளோடு கலந்த வணக்கங்கள்.

ஆமினா said...

ஆச்சி நடிச்சிருந்தா லத்திகாவை கூட பார்க்க தயாரா இருப்பேன் ஹி..ஹி...ஹி...

ஆமினா said...

அருமையான நடிகை.

ADMIN said...

சிறந்ததொரு தொகுப்பு..! சினிமாக் கலைஞர் மனோரமாவைப்பற்றி அனைவருக்குமே தெரியும். இன்றைய தலைமுறையில் மட்டுமல்ல என்றுமே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. பகிர்வுக்கு நன்றி!

தனிமரம் said...

ஆச்சி நடிப்பில் மட்டும் மல்ல பாடலிலும் சிறப்பு மிக்கவர் டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத்தட்டாதே ,மெட்டாரைச்சுற்றிக்காட்டப் போறேன் என பலதை அடுக்கலாம் ஆச்சி ஒரு அற்புதமான நடிகை அவர் மகன் பூபதி நடித்த படத்தை முடிந்தால் பிறகு பதிவாக சொல்லுகின்றேன் அதில் அருமையான பாடல்கள் கேட்டது ஒரு காலம்.!ம்ம்ம் அடுத்த பதிவில் கும்மியடிக்கின்றேன் வேலை நேரம் பாஸ்.

ஹாலிவுட்ரசிகன் said...

//மனோரம்மா வாழும் காலத்தில் நாம் தமிழ் சினிமா ரசிகர்களாக இருப்பதே எமக்கு பெருமைதான்.//

நிச்சயமாக. இவரின் நடிப்பை பிடிக்காதவர்கள் யாராவது இருந்தால் நிச்சயம் அவருக்கு மண்டைக் கோளாறு இருக்கணும். மிகவும் நல்ல தொகுப்பு. நன்றி.

பால கணேஷ் said...

நல்ல தமிழ் பேசி நடிக்கும் சொந்தமாகப் பாடுத் திறனுள்ள அற்புத நடிகை. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் உங்களையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அருமையான பகிர்வு ராஜ்.

குறையொன்றுமில்லை. said...

ஆச்சி மனோரமாவைப்பிடிக்கதவரும் உண்டோ. எந்தவித நடிப்பிலும் வெளுத்துக்கட்டுவாரே. அவரைப்பற்றியபகிர்வுக்கு நன்றி

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!மனோரமா பற்றி எழுத வயதில்லை நமக்கு.முதன் முதலில் மனோரமா கதாநாயகியாகவே திரையுலகில் அறிமுகமானார்.அவரின் நகைச்சுவையான பேச்சால் தான் பின்னர் நகைச்சுவை நடிகையானார்!கதாநாயகியாக தொடர்ந்திருந்தால்..............................!?

Yoga.S. said...

கிட்டத்தட்ட அல்ல ஏலவே ஆயிரம் தாண்டி பல வருடங்களாயிற்று!

பால கணேஷ் said...

ராஜ்... என் இந்தப் பதிவுக்கு உடன் வரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post.html

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு நண்பரே ! பாராட்டுக்கள் !

காட்டான் said...

நல்ல பதிவு ராசுக்குட்டி .... ஆயிரம் திரைப்படத்துக்கு மேல நடிச்ச மனோரம்மா தமிழ் சினிமாவுக்கு கிடைச்ச வரப்பிரதாசம் தான் .. காட்டான் குழ போட்டான்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails