Thursday, February 09, 2012

விஜய் ரசிகரும் ,கங்குலியும் நானும் ஒரு சிறப்பு பதிவு.

வணக்கம் நண்பர்களே கங்குலி என்ற தலைப்பை பார்த்துவிட்டு இது கிரிக்கெட் பதிவு என்று. கிரிக்கெட் பிடிக்காத யாரும் ஓடிவிடாதீர்கள்.இது ஒரு கிரிக்கெட் பதிவு இல்லை.

கங்குலி இந்தப் பெயர் என்னக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம் இந்திய கிரிகெட் அணியின் முன்னால் வெற்றிகரமான கேப்டன்.ஆளுமையின் சிகரம் ஒரு தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும்,எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கும் கங்குலி சிறந்த உதாரணம்.2000ம் ஆண்டுகளில் எனக்கு அறிமுகமான பெயர்.கிரிக்கெட்டையும் தாண்டி நிறைய விடயங்களில் எனக்கு அவரை பிடிக்கும்.

குறிப்பாக அவரது ஆளுமை திறன் என்னை வெகுவாக கவர்ந்தது.படிக்கும் காலங்களில் ஆங்கிலப் பாடம் என்றாலே கசக்கும்.ஆங்கிலப் பாடத்தில் அக்கறை செலுத்துவது இல்லை அதுக்கு காரணம் ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்பிக்க மாட்டார்கள்,அதை ஒரு அறிவாகவும் வகுப்பில் ஆங்கிலம் பேசினால் அந்த மாணவன் திறமையானவனாகவும் தான்.எங்கள் ஊர்களில் நினைப்பார்கள்.எனவே ஆங்கிலம் மீது எனக்கு வெறுப்பு.

அப்படி ஆங்கிலத்தை வெறுத்த நான் கங்குலிக்காக ஆங்கிலம் கற்றேன்.ஆம் இது உண்மை.கங்குலியை எப்படியாவது சந்தித்து பேசவேண்டும் என்பது என் விருப்பம்.அப்படி அவரை சந்தித்தால் எந்த மொழியில் பேசுவது.தமிழ் அவருக்கு தெரியாது.பெங்காலி எனக்கு தெரியாது.எனவே கங்குலிக்கு ஆங்கிலம் தெரியும்.அதனால் நானும் ஆங்கிலம் கற்கவேண்டும் என்றுதான் எனக்கு ஆங்கிலத்தின் மீதே காதல் பிறந்தது.இன்று நான் ஆங்கில மொழியை அறிந்திருக்கின்றேன்.என்றால் அதுக்கு காரணம் கங்குலி மேல் இருந்த ஈர்ப்பே.ஆனால் ஒரு முறை கங்குலியை பார்த்துள்ளேன் அவருடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


கங்குலி பற்றி தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதி வெளியிடவேண்டும் என்பது என் ஆசை.என்றோ ஒரு நாள் நிச்சயம் வெளியிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது பார்ப்போம்.

அடுத்து கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு ஆர்வம் வலது கை துடுப்பாட்ட வீரராக இருந்த நான் கங்குலி மீது இருந்த ஈர்ப்பால் இடதுகை துடுப்பாட்ட வீரராக மாறினேன்.விளைவு இதனால் என்னிடன் இருந்த சிறப்பாக விளையாடும் திறன் போச்சி.சரியாக என்னால் விளையாடமுடியவில்லை.ஆனாலும் இன்றுவரை இடது கை துடுப்பாட்ட வீரராக சிறப்பாக விளையாடமுடியாவிட்டாலும்.கிரிக்கெட் விளையாடினால் இடதுகை துடுப்பாட்ட வீராராகவே விளையாடுகின்றேன்.


இயல்பாகவே எனக்கு இந்தியா பிடிக்கும்.அதற்கு காரணம் எங்கள் பூர்வீகம் இந்தியாதான்.மதுரைதான் என் தந்தையின் சொந்த இடம்.எனவே எங்கள் வீட்டில் எப்போதும் இந்தியா பற்றி அதிகமாக பேச்சு இருக்கும்.ஆனால் கங்குலியால் எனக்கு இந்திய நாட்டை மிக மிக பிடிக்கும்.

நான் கங்குலியின் தீவிர ரசிகன் தான். ஆனால் கங்குலி பற்றி யார் விமர்சித்தாலும் எனக்கு கோபம் வருவது இல்லை அதற்கு காரணம்.கங்குலி ஒன்றும் கடவுள் இல்லை அவர் சாதாரன மனிதன் தான் அவரிடம் குறைகள் இருக்கும்,அதை விமர்சிப்பதால் அவரது திறமை மங்கிவிடப்போவது இல்லை அவர் திறமை உலகிற்கே தெரியும்.எனவே எனக்கு கங்குலியை யாரும் விமர்சித்தால் கோபம் வருவது இல்லை.

சரி கங்குலி புராணம் போதும் அடுத்த மேட்டருக்கு வருவோம்

சிலர் ஒரு நடிகனுக்கு தீவிர ரசிகனாக இருக்கின்றார்கள் அந்த நடிகர் பற்றி யாரும் விமர்சித்தால் உடனே விமர்சித்தவர்களுடன் சண்டையிடுகின்றார்கள்.

இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்.அன்மையில் ஒரு நண்பன் நான் விஜயை கலாத்தாக சொல்லி என்னுடன் சண்டைபோட்டார் எனக்கு மிகவும் மனவேதனையாக போய்விட்டது.அட ஒரு நடிகனுக்காக ஏன் இப்படி நண்பர்களுடன் சண்டையிடுகின்றார்கள் இத்தனைக்கு நான் ஏதுவும் தப்பாகவும் கலாய்க்கவில்லை என் பதிவில் ஒரு ஜோக் எழுதினேன் இதுதான் அந்த ஜோக்-விஜய் ஏன் நண்பன் படத்தில் நடித்தார் சொல்லு?ஏன் பொய் சொல்லுற அவரு எங்க நடித்தாரு#All is well

All is well
இதற்கு அந்த நண்பன் எனக்கு கமண்ட் போட்டிருந்தார்.நான் ஜோக் என்ற பெயரில் வாந்தி எடுத்துள்ளேன் என்று சொல்லி எனக்கு மைனஸ் ஓட்டும் போட்டுவிட்டு சென்றார்.இதை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.காரணம் இப்படியான வெறித்தனமான ரசிகர்களை நான் கணக்கெடுப்பதே இல்லை.ஆனாலும் அந்த நண்பன் அற்ப விடயத்துக்கு சண்டை போட்டது மனசு வலிக்கின்றது.

இதுவரை நான் யாருக்கும் பதிவுலகில் உள்குத்து பதிவுகள் போட்டது இல்லை.ஆனால் அந்த நண்பனுக்கு செம உள்குத்து பதிவு ரெடி பண்ணி வைச்சிருந்தேன்.நான் பதிவுலகில் பெரிதும் மதிக்கும் ஒருவர் கேட்டுக்கொண்டதால் அதை வெளியிடவில்லை.

அதைவிட ஹிட்ஸ்க்காக விஜயை கலாய்த்து எழுதுகின்றேன் என்றும் அந்த நண்பர் சொல்கின்றார் ஏன் விஜய் பற்றி எழுதித்தான் ஹிட்ஸ் பெறவேண்டுமா?ஹிட்ஸ் என்றால் என்ன?அதைவைத்து என்ன செய்வது?.அந்த நண்பரிடம் ஒரு கேள்வி சரி விஜயை கலாய்த்து எழுதினால் ஹிட்ஸ் வரும் என்று உங்கள் கூற்றுப்படி பார்த்தால் என்ன அர்த்தம் விஜயை கலாய்க்கும் பதிவுகளைத்தான் வாசகர்கள் அதிகம் படிக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்.இதுக்கு என்ன சொல்கின்றீர்கள்?அடப்போங்கப்பா தாங்க முடியலை உங்கள் ஜொள்ளு.

இன்னும் ஒரு விடயம் ஒரு முறை பேச்சுவாக்கில் அந்த நண்பரிடம் எனக்கு விஜயை பிடிக்கும் என்று சொல்லியிருந்தேன் அதைப்பிடித்துக்கொண்ட அவர் நான் விஜயை விமர்சித்தால் நான் இரட்டை வேசம் போடுகின்றேன். என்று சொல்லித்திரிகின்றார்.ஹி.ஹி.ஹி.ஹி.....என்னையும் விஜய் ரசிகர் லிஸ்ட்டில் சேர்க்கப் பாக்கின்றார்.வெளங்கிடும்...

நண்பரே உங்களுகளுக்கு மட்டும் இல்லை எல்லோறுக்கும் தெரியும் நான் பல இடங்களில் சொல்லியிருக்கின்றேன்.இப்பவும் சொல்கின்றேன்.
எனக்கு விஜயை பிடிக்கும் அவரின் படங்களை பார்ப்பேன்.அதற்காக உங்களை போல முட்டாள்தனமான ரசிகன் இல்லை.விஜய்க்கு மட்டும் இல்லை தனிப்பட்ட ரீதியில் ஒரு நடிகனுக்கு நான் ரசிகன் கிடையாது எல்லா நடிகர்களின் படங்களும் விரும்பிப்பார்ப்பேன்.நான் ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்..

என் பதிவுகளில்.அஜித்,ரஜனி,கமல்,சிம்பு,தனுஷ்,சூர்யா,விக்ரம்,இப்படி எந்த நடிகர்கள் யாரையாவது நான் கலாய்க்கவில்லை. அதுக்கு காரணம்.ஏனைய நடிகர்களில் ரசிகர்கள் யாரும் வந்து என் பதிவுகளில் அம்மாவை.சகோதரிகளை இழுத்து கேலவமாக  கமண்ட் போடவில்லை.ஆனால் இந்த விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் சில முட்டாள் ரசிகர்களால் உண்மையாக விஜயை நேசிக்கும் அவரின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் அவமானம்.

எனவே பணிவை விட ஒரு சிறந்த குணம் ஏதும் இல்லை எனவே அன்பு நண்பனே உங்கள் மனம் நோகும் படி நான் ஏதும் கதைத்திருந்தால் மன்னிக்கவேண்டுகின்றேன்.


இப்படியான முட்டாள் தனமான ரசிகர்களை விமர்சிக்கும் போது.விஜயை உண்மையாக நேசிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் உங்களிடம் மன்னிக்க வேண்டுகின்றேன்.

சிலவேளை அந்த நண்பர் இந்தப் பதிவுக்கும் கேவலமான கமண்ட் போட்டு.மைனஸ் ஓட்டு குத்துவார்.இல்லை எனக்கு ஒரு உள்குத்து பதிவு போடுவார்.என்ன வேணும் என்றாலும் செய்யுங்க பாஸ் உங்களை போல முட்டாள்தனமான ரசிகர்களை நான் கணக்கு எடுப்பதே இல்லை.

முடிவா என்ன தான் சொல்ல வார என்று கேட்கின்றீங்களா?
யாருக்கும் ரசிகராக இருப்பது தவறு இல்லை ஆனால் வெறித்தனமான,முட்டாள்தனமான ரசிகராக இருப்பது தவறு அம்புட்டுதான்.
*********************************************************************************
முஸ்கி-அது சரி அது என்ன சிறப்பு பதிவு என்று தலைப்பு போட்டு இருக்கேன் என்று நினைக்கிறீங்களா இதோ சொல்கின்றேன்.இன்று உங்கள் அபிமான பதிவர்(ஹி.ஹி.ஹி.ஹி) கே.எஸ்.எஸ்.ராஜ் இந்த பூமிக்கு வந்து இன்றுடன் 22 வருடங்கள் முடிந்துவிட்டது. இன்று 23வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றார்.ஆம் இன்று எனது பிறந்த நாளாகும்.என்னை இந்த உலகிற்கு காட்டிய தாய்,தந்தையை வணங்கி நிற்கின்றேன் அவர்கள் இல்லையேல் நான் இல்லை இந்த உலகில் நண்பர்களே எமது பெற்றோர்களைவிடவும் வேறு யாரும் எமக்கு முக்கியமில்லை பெற்றோர்களே நம்முன் வாழும் தெய்வங்கள் அவர்களை எப்போதும் சந்தோசமாக வைத்திருப்போம். இதுதான் நண்பர்களுக்கு என் பிறந்த நாள் மேசேஜ்.


என்னைப்பற்றி அண்ணன் தனிமரம் ஒரு பாட்டு எழுதியிருக்கார் பாருங்க இங்கே கிளிக்-அன்புத் தம்பிக்கு ஒரு பாட்டு மிக்க நன்றி அண்ணே
*********************************************************************************



Post Comment

42 comments:

ஆமினா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜ்

பதிவை படித்துவிட்டு கமென்ட் சொல்றேன்

பாலா said...

உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை பெற கடவுளை வேண்டுகிறேன்.

பிறந்தநாள் அதுவுமா கருத்து சொல்லி இருக்கீங்க. கேட்டுக்கிறேன். நன்றி

பி.அமல்ராஜ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ். மாலை வருகிறேன் பதிவிற்கு.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் மச்சான் சார்,

உங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி, வளமான வாழ்வு உங்களை நாடி வெகு விரைவில் வந்து சேர வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

கங்குலியினை முன் மாதிரியாக கொண்டு ஆங்கிலம் கற்றிருக்கிறீங்கள்!

எந்த ஓர் இன்ஷ்பிரேசனும் நிச்சயம் வெற்றி கொடுக்கும் என்று சொல்லுவார்கள்.
அதனை உங்கள் விடயத்திலும் செயற்படுத்தியிருக்கிறீங்க.

விஜய் ரசிகர்கள் விட்டுத் தள்ளுங்க பாஸ்...

மீண்டும் வாழ்த்துக்கள் நண்பா.

பால கணேஷ் said...

எந்த ஒரு தனி நபருக்கும் ரசிகனாக இருக்கலாம், ஆனால் வெறியனாக இருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்தும். உங்களுடன் ஒத்துப் போகிறேன் நான். உங்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மென்மேலும் உயர்வு பெற்று நீங்கள் சிறப்புற மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். (23 வயசுதானா? தம்பின்னே கூப்பிடலாம் போலருக்கே...)

Anonymous said...

பிற்ந்தநாள வாழ்த்துக்கள்!!!!!!!!

தனிமரம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் பல்லாண்டு  நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.

தனிமரம் said...

எனக்கு கங்குலியை கிரிக்கட் தாண்டிப் பிடிப்தே அவரின் அசாத்திய ஆளுமைக்குத்தான்.நிதானம் இருக்கும் .

தனிமரம் said...

சினிமா விடயத்தில் உங்கள் பிறந்தநாள் பரிசாக எடுத்துக்குக் கொள்ளும் பால்கோப்பித் தீர்மானம் நோ கொமண்டஸ்.வேறவிடயங்களில் நேரத்தை செலவு செய்வோம் நல்ல இசை கேட்போம்.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பர் ராஜ்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீடூழி வாழ்க
பெரும் வளத்துடன்.

நண்பர் நேசன் சொன்னதுபோல, கங்குலியின்
ஆளுமைத்திறனும் பிடிவாத குணமும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

காட்டான் said...

ராசுக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

காட்டான் said...

ஒரு ரசிகனாய் இருந்து ஆங்கிலம் பயின்று பயன் பெற்று இருக்கிறீர்கள்.. என்றாலும் அவருக்காய் உங்கள் விளையாட்டு திறமை குறைந்தது மனவருத்தமே..!! 

பிறந்த நாள் அதுவுமா இப்படி ஒரு பதிவா.?

கோகுல் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்,மச்சி,நண்பா............

திண்டுக்கல் தனபாலன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே !

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!மன்னிக்கவும்.பகலில் பொழுது கிட்டவில்லை,வாழ்த்துவதற்கு!எப்போ வாழ்த்தினால் என்ன?அன்பாக வாழ்த்தினால் போதுமென்று நினைக்கிறேன்!இன்றுபோல் என்றென்றும் தீர்க்காயுசுடன் நலமுடன் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்!எல்லா நலன்களும் பெற ஆண்டவனை இறைஞ்சுகிறேன்!

செங்கோவி said...

கிஸ்ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Unknown said...

எண்பது வயது எனக்காமே
இருபத்து மூன்று உமக்காமே
பண்பினில் மிக்க இராசாவே
பதிவில் மலரும் ரோசாவே
நண்பர்கள் போற்றும் வலைப்பூவே
நாளும் மலரும் கலைப்பூவே
அன்பரும் பிறந்த நாளின்றே
ஆண்டுகள் நூறென வாழ்வீரே!

புலவர் சா இராமாநுசம்

kaialavuman said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜ்.

சினிமா, விளையாட்டு, கலைத் துறைச் சேர்ந்தவர்களின் ரசிகராக இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் அந்ந்தந்தத் துறையில் மட்டுமே விற்பன்னர்கள் என்பதை ஊடகங்கள் கூட மறந்து விடுகின்றன. அனைத்துத் துறைகளைப் பற்றியும் அவர்கள் கருத்தைக் கேட்டு வெளியிடுகிறார்கள். ரசிகர்களும் அவர்கள் கருத்தை வேதவாக்காக நினைக்கிறார்கள். அவர்களின் தவறுகளை ஒன்று சப்பைகட்டு கட்டி ஞாயப்படுத்துகிறார்கள் அல்லது அதுவே சரியான வழி என்று தாங்களும் துணைப் போகிறார்கள்.
இம்மாதிரி சமயங்களில் தனிமனித தாக்குதலும் நடத்துகிறார்கள்.

நல்ல பதிவு நன்றிகள்.

Yoga.S. said...

செங்கோவி கூறியது...

கிஸ்ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்./////அப்பாடா,ராஜ் பொறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி,தலைவர் "இருக்கேன்"ன்னு சிக்னல் குடுத்துட்டார்!எப்புடி இருக்கீங்க,சார்?பையன் எப்புடி இருக்கான்????

K.s.s.Rajh said...

@செங்கோவி
வாங்க பாஸ் மிக்க மகிழ்ச்சி பாஸ்
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஆமினா கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராஜ்

பதிவை படித்துவிட்டு கமென்ட் சொல்றேன்
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@ பாலா கூறியது...
உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை பெற கடவுளை வேண்டுகிறேன்.

பிறந்தநாள் அதுவுமா கருத்து சொல்லி இருக்கீங்க. கேட்டுக்கிறேன். நன்றி

////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ பி.அமல்ராஜ் கூறியது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ். மாலை வருகிறேன் பதிவிற்கு.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் மச்சான் சார்,

உங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறி, வளமான வாழ்வு உங்களை நாடி வெகு விரைவில் வந்து சேர வாழ்த்துகிறேன்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கணேஷ் கூறியது...
எந்த ஒரு தனி நபருக்கும் ரசிகனாக இருக்கலாம், ஆனால் வெறியனாக இருக்கக் கூடாது என்பதுதான் என் கருத்தும். உங்களுடன் ஒத்துப் போகிறேன் நான். உங்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மென்மேலும் உயர்வு பெற்று நீங்கள் சிறப்புற மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். (23 வயசுதானா? தம்பின்னே கூப்பிடலாம் போலருக்கே...)
////

அட தாராளமாக தம்பி என்று கூப்பிடுங்க பாஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ எனக்கு பிடித்தவை கூறியது...
பிற்ந்தநாள வாழ்த்துக்கள்!!!!!!!!
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மகேந்திரன் கூறியது...
வணக்கம் நண்பர் ராஜ்,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நீடூழி வாழ்க
பெரும் வளத்துடன்.

நண்பர் நேசன் சொன்னதுபோல, கங்குலியின்
ஆளுமைத்திறனும் பிடிவாத குணமும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
////
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கந்தசாமி. கூறியது...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
ராசுக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
////

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
ஒரு ரசிகனாய் இருந்து ஆங்கிலம் பயின்று பயன் பெற்று இருக்கிறீர்கள்.. என்றாலும் அவருக்காய் உங்கள் விளையாட்டு திறமை குறைந்தது மனவருத்தமே..!!

பிறந்த நாள் அதுவுமா இப்படி ஒரு பதிவா.?
////

என்ன பண்னுவது மாம்ஸ் சிலவிடயங்களை சொல்லனும் என்று தோனுச்சு அதுதான்.

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்,மச்சி,நண்பா............
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
பிறந்தநாள் வாழ்த்துகள் பாஸ்,மச்சி,நண்பா............
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே !
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!மன்னிக்கவும்.பகலில் பொழுது கிட்டவில்லை,வாழ்த்துவதற்கு!எப்போ வாழ்த்தினால் என்ன?அன்பாக வாழ்த்தினால் போதுமென்று நினைக்கிறேன்!இன்றுபோல் என்றென்றும் தீர்க்காயுசுடன் நலமுடன் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்!எல்லா நலன்களும் பெற ஆண்டவனை இறைஞ்சுகிறேன்!
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
எண்பது வயது எனக்காமே
இருபத்து மூன்று உமக்காமே
பண்பினில் மிக்க இராசாவே
பதிவில் மலரும் ரோசாவே
நண்பர்கள் போற்றும் வலைப்பூவே
நாளும் மலரும் கலைப்பூவே
அன்பரும் பிறந்த நாளின்றே
ஆண்டுகள் நூறென வாழ்வீரே!

புலவர் சா இராமாநுசம்
////

மிக்க நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜ்.

சினிமா, விளையாட்டு, கலைத் துறைச் சேர்ந்தவர்களின் ரசிகராக இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர்கள் அந்ந்தந்தத் துறையில் மட்டுமே விற்பன்னர்கள் என்பதை ஊடகங்கள் கூட மறந்து விடுகின்றன. அனைத்துத் துறைகளைப் பற்றியும் அவர்கள் கருத்தைக் கேட்டு வெளியிடுகிறார்கள். ரசிகர்களும் அவர்கள் கருத்தை வேதவாக்காக நினைக்கிறார்கள். அவர்களின் தவறுகளை ஒன்று சப்பைகட்டு கட்டி ஞாயப்படுத்துகிறார்கள் அல்லது அதுவே சரியான வழி என்று தாங்களும் துணைப் போகிறார்கள்.
இம்மாதிரி சமயங்களில் தனிமனித தாக்குதலும் நடத்துகிறார்கள்.

நல்ல பதிவு நன்றிகள்.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

//// Yoga.S.FR கூறியது...
செங்கோவி கூறியது...

கிஸ்ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்./////அப்பாடா,ராஜ் பொறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி,தலைவர் "இருக்கேன்"ன்னு சிக்னல் குடுத்துட்டார்!எப்புடி இருக்கீங்க,சார்?பையன் எப்புடி இருக்கான்????
////

அண்ணனுக்கு என்னில் ஒரு அன்புதான் ஜயா

செங்கோவி said...

//Yoga.S.FR சொன்னது…
அப்பாடா,ராஜ் பொறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி,தலைவர் "இருக்கேன்"ன்னு சிக்னல் குடுத்துட்டார்!எப்புடி இருக்கீங்க,சார்?பையன் எப்புடி இருக்கான்????//

ஐயா, உங்கள் ஆசீர்வாதத்தில் அனைவரும் நலம்..பையன் வழக்கம்போல்..ஹி..ஹி!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails