Wednesday, February 08, 2012

அவளும் அந்த மூன்று நாட்களும்-காதலர் தின சிறப்பு சிறுகதை


ஹரினிக்கு மனம் முழுவது சோகம் குடிகொண்டு இருந்தது. கல்யாணம் ஆகி மூன்று நாள் தான் ஆகியிருந்தது. சந்தோசப் படவேண்டிய நேரத்தில் ஏன் இந்த சோகம் அதுவும் அவளாகவே முன்பு சம்மதித்த கல்யாணம்தான்.  ஆனால் மனம் இப்போது அதை ஏற்க மறுக்கின்றது அவள் மனம் முழுவதும் கண்ணன் குடிகொண்டு இருந்தான் யார் கண்ணன்? அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு.

ஹரினி ஈழத்தின் வன்னிமண்ணில் கிளிநொச்சி என்ற ஊரில் பிறந்தவள்.ஆண்டவன் அழகை அவளுக்கு வஞ்சனை இன்றி அள்ளிக்கொடுத்திருந்தார்.அவளது 10 ம் வகுப்பில் அவள் கூட படித்தவன் தான் கண்ணன். அவனது இயல்பான பேச்சு. எல்லோறுடனும் சகஜமாக பழகும் தன்மை,அமைதியான சுபாவம் போன்ற பல விடயங்கள்.அவன் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன.பலருக்கு இவள் மேல் காதல் வந்த போது இவளுக்கு கண்ணன் மேல் காதல் வந்தது. ஆனால் அதை அவனிடம் சொல்லியது இல்லை.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
கால ஓட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட சூழ்நிலைகளால் ஹரினியின் குடும்பம் புலம் பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றுவிட்டனர்.அதன் பின் அவளுக்கு கண்ணன் உடனான தொடர்பு கிடைக்கவில்லை.அவளும் அவனை மறந்தே போய்விட்டாள்.

இது நம்ம நடிகை ஸ்வாதியின் படம் பதிவில் அழகுக்காக சேர்க்கப்பட்டது
இந்த நிலையில் ஊரில் ஹரினியின் பாடசாலையில் படித்த இவளது அண்ணனின் நண்பன் ஒருவனின் தொடர்பு கிடைத்து. அவனை இவளுக்கு திருமணம் செய்ய வீட்டில் பேச்சு எழுந்தது.தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவனுக்கு ஊரில் இருக்கும் போது ஹரினி மேல் காதல் இருந்தது. அதை அவளிடம் சொல்லிய போது அவள் மறுத்திருந்தாள். மறுத்தது மட்டும் இல்லை தன் அண்ணனிடம் சொல்லிவிட்டாள் இதனால் அவளது அண்ணனும் அண்ணனின் ஏனைய நண்பர்களும் சேர்ந்து  அவனுக்கு அடித்தும் இருந்தனர்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
இப்போது ஹரினியை அவனுக்கு கல்யாணம் செய்ய வீட்டில் ஏற்பாடு செய்த போது குற்ற உணர்ச்சியால் அவள் மனம் தவித்தாலும் பின்பு ஏற்றுக்கொண்டு விட்டாள்.இருவருக்கும் இன்னும் ஒரு மாதத்தில் கலியாணம் என்று முடிவாகிய பின்பு.ஹரினியும் அவள் அம்மாவும் நாட்டில் அமைதி திரும்பியதால் ஊரை பார்பதற்கு திரும்பி வந்தனர்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
ஊரிற்கு வந்ததும் பழய நண்பர்கள் எவரையும் காணவில்லை எல்லோறும் ஒவ்வொறு திசையில் இருந்தனர்.ஆனால் கண்ணன் ஊரில் இருப்பதாக அவள் அறிந்துகொண்டாள். எப்படியாவது அவனை தொடர்பு கொள்ள மனம் ஏங்கியது.கண்ணனின் அண்ணன் மூலமாக கண்ணனின் தொடர்பு கிடைத்தது.கண்ணனுடன் தொலை பேசியில் அவ்வப்போது பேசிக்கொள்வாள்.

ஒரு நாள் கண்ணன் இவளை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்கவே அதற்கு அவளால் மறுப்பு சொல்லமுடியவில்லை.பின்நேரம் வீட்டிற்கு வா என்று சொன்னாள்.

கண்ணனும் அவனது நண்பனும்.பின்நேரம் அவளது வீட்டிற்கு சென்றனர்.அங்கே ஹரினியின் தாய் கடைக்கு சென்று இருந்தாள். ஹரினி மட்டும் தனிமையில் இருந்தாள்.கண்ணனின் நண்பனோ தான் வெளியில் நிற்கின்றேன் நீ பேசிவிட்டு வா என்று ஒதுங்கிக்கொண்டான்.

கண்ணன் மனதிலும் ஹரினி மேல் முன்பு காதல் இருந்தது. ஆனால் அதை அவனும் ஹரினியை போல வெளிகாட்டியது இல்லை.தனிமையில் கண்ணனும்,ஹரினியும்,ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.நான்கு விழிகளும் தங்கள் அன்பை பறிமாறிக்கொண்டன.

கண்ணன் மனதினுல் நல்ல சந்தர்ப்பம் இவளை எப்படியாவது அனுபவித்துவிடனும் என்று கண்ணன் எண்ணிக்கொண்டான்.

அப்போது ஹரினியின் கண்கள் கலங்கியது அந்த அழகான விழிகள் கண்ணீர் சிந்தியது. ஏன் அழுகுறீங்க ஹரினி ப்ளீஸ் அழாதீங்க என்ன பிரச்சனை சொல்லுங்க என்று அவளை கண்ணன் தேற்றினான்.

இல்லை கண்ணா! உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் உன் கூட வாழனும் என்னை இப்பவே உன் கூட கூட்டிட்டு போறீயா? ப்ளீஸ்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
இந்த வசனத்தை கண்ணன் அவளிடம் இருந்து சற்றும் எதிர்பார்கவில்லை.
அவளுக்கு நிச்சயம் ஆன விடயம் அவனுக்கு தெரியும்.இதனால் அவள் மேல் இருந்த காதல் அவனுக்கு போய் காமம் தான் மனதில் இருந்தது அவளை எப்படியும் அனுபவித்துவிடலாம் என்றுதான் அவளை சந்திக்க வந்தான் ஆனால் அவள் இப்படி சொன்னதும் அவனால் ஏதுவும் சொல்ல முடியவில்லை.


என்னால் இப்ப உன்னைக்கூட்டிட்டு போகமுடியாது ஹரினி. எங்க வீட்டில் சம்மதிக்க மாட்டாங்க அதைவிட நானும் நீயும் என்ன காதலர்களா?இல்லைத்தானே.இப்பதான் நீ சொல்லுற என்னை காதலிப்பதாக ஒருவேளை படிக்கும் போது சொல்லியிருந்தால்! ஏற்றுக்கொண்டு இருப்பேன்.இப்ப உனக்கு இன்னும் ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்டது. இப்ப உன்னை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.என்று அவள் முகம் பார்க்காமல் பேசிவிட்டு வெளியில் வந்துவிட்டான்.

அதுக்கு பிறகு ஹரினி போன் பண்ணினால் கண்ணன் பேசுவான். ஆனால் முன்பு மாதிரி அதிகம் பேசமாட்டான்.சில நாட்களின் பின் ஹரினிக்கு திருமணம் செய்ய குறிக்கப்பட்ட நாள் வந்தது. திருமணத்திற்காக ஹரினி இந்தியாவுக்கு சென்றுவிட்டாள்.போகும் போது கண்ணனிடம் சொல்லிவிட்டுத்தான் போனாள். அவன் எதுவும் பேசவில்லை.

திருமணமும் நடந்தது.ஹரினி மனசில் கண்ணை வைத்துக்கொண்டு இன்னும் ஒருவரின் மனைவியானாள்.திருமணம் நடந்த இந்த மூன்று நாட்களில் ஹரினி பல தடவைகள் கண்ணுடன் போனில் பேசியிருப்பாள்.
கண்ணனும் அவளுடன் கதைப்பான்.ஹரினி கண்ணனை மறக்க முடியாமல் தவித்தாள்.

ஹரினியின் கணவனும் திருமணம் ஆகி இந்த முன்று நாட்களில் மனைவியின் முகத்தில் குடிகொண்ட சோகத்தை அறியாமல் இல்லை. ஆனால் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.ஹரினியிடம் சொன்னான். இங்க பாரு ஹரினி ஊரில் இருக்கும் போது நான் உன்னை காதலித்தேன். அதை உன்னிடம் சொன்ன போது நீ உன் அண்ணிடம் சொல்லி எனக்கு அடிவாங்கி தந்தாய்.ஆனால் ஆண்டவன் போட்ட முடிச்சை பார்த்தியா! நீ எனக்காக பிறந்தவள்.உன்னையே என் மனைவியாக்கிவிட்டார்.

ஏற்கனவே என்னை அவமதித்தால் உனக்கு குற்ற உணர்ச்சி இருந்தால் அதை தூக்கிப்போட்டு விடு ஹரினிம்மா! நீ யார்? என் தேவதை என்னை அடிக்கவும் உதைக்கவும் உனக்கு இல்லாத உரிமையா? ஏன் என் செல்லத்துக்கு என்னில் இன்னும் கோபமா? வேண்டும் என்றால் உன் அண்ணிடம் சொல்லி திரும்பி ஒரு முறை அடிக்க சொல்லுறியா உனக்காக நான் எத்தனை அடியும் வாங்கத்தயார் என்று குறும்பாக அவளை பார்த்து சிரித்தான்.

தன் கணவனின் வெகுளித்தனமான அன்பு ஹரினியை வெகுவாக கவர்ந்தது திருமணம் ஆன பின்பும் மூன்று நாட்களாக மனதில் வேதனையாக இருந்த கண்ணனின் நினைப்பை அடியோடு மாற்றியது.போனில் இருந்த கண்ணின் நம்பரை மட்டும் இல்லை அவள் மனதில் இருந்தே கண்ணனை அழித்துவிட்டு.பாய்ந்து சென்று தன் கணவனை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

”கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று”
என்ற பாடல் எங்கோ தூரத்தி ஓலித்தது

*********************************************************************************
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்

*********************************************************************************
முஸ்கி-10ம் திகதிக்கு பிறகு சில காலம் பதிவுலகில் சீராக இயங்கமுடியாது சூழ்நிலை இருப்பதால்(இது பற்றி 10ம் திகதி இல்லை நாளைக்கு சொல்கின்றேன்) இதனால் காதலர் தின ஸ்பெசல் பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


எச்சரிக்கை-இந்தப்பதிவுக்கு யாராவது உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கமண்ட் போட்டால் பவர்ஸ்டார் பட டி.வீ.டி. வழங்கப்படும் என்பதனை சொல்லிக்கொள்கின்றேன்.தேவயானி,சிம்ரன் முதல்,ஜஸ்வர்யா ராய் வரை நான் ஜொள்ளுனவங்க எல்லோறுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி ஹி.ஹி.ஹி.ஹி...எனவே பதிவு பற்றிய கமண்ட் மட்டும் போடவும்
*********************************************************************************

Post Comment

21 comments:

பால கணேஷ் said...

மென்மையான காதல் கதை. காதல் அனுபவம் இல்லாமல் இவ்வளவு அழகாக காதல் உணர்வுகளை எழுதுவது கடினம். எத்தனை சதவீதம் ராஜின் அனுபவம் இதில் ஒளிந்திருக்கிறது? சரளமான நடையில் சென்ற கதையை (சில எழுத்துப் பிழைகள் தவிர்த்து) நான் மிக ரசித்தேன் ராஜ். அருமை.

தனிமரம் said...

நீங்கள் சரண்யாமோகனுக்கு காதலர் தினத்தில் அன்புப்பரிசாக இதயத்தைக் கொடுக்கப் போவதாக ஒரு சேதி காற்றில் வந்திச்சு நிஜமா???

தனிமரம் said...

சிறுகதையை அலசிக்கொண்டு இன்னும் சிலமணித்தியாலத்தில் வருகின்றேன்.ஹீ

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!காதலர் தின வாழ்த்துக்கள்!(இப்பிடிஎண்டாலும் "அந்த"சி.டி கிடைக்காதா?ஹ!ஹ!ஹா!!!!)

குறையொன்றுமில்லை. said...

கதை நல்லா இருக்கு. பொருத்தமான பாட்டும் இணைத்திருப்பது கூடுதல் சுவாரசியம்

Anonymous said...

To the author of this story: This story is very amateurish and dramatic. Try to read more short stories from especially ananda vikatan, sujata, asokamithiran, vanna nilavan etc. You need to include tamil writers from your land also. Point is that, a maturity and intelligence has to be shown in story narration. Good luck.

K.s.s.Rajh said...

@கணேஷ்
////ஹா.ஹா.ஹா.ஹா..... எனக்கும் காதல் அனுபவங்கள் இருக்கு பாஸ் ஆனால் அது பாடசாலைக்காலத்துடன் முடிந்துவிட்டது என் தளத்தின் சைட் பாரில் மறக்கமுடியாத ”பாடசாலை நாட்கள் ” ஒரு படத்துடன் தொடருக்கு லிங் கொடுத்திருக்கேன் பாருங்க அது என் பாடசாலைக்காலத்தில் ஒரு பெண்மேல் ஏற்பட்ட காதலின் அனுபவம் தான்.

சில எழுத்துப் பிழைகளை தவிர்க முடியாது உள்ளது பாஸ் கொஞ்சம் கொஞ்சமாக திருத்திக்கொண்டு வருகின்றேன்.விரைவில் சரியாகிவிடும் என்று நினைக்கின்றேன்.

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
நீங்கள் சரண்யாமோகனுக்கு காதலர் தினத்தில் அன்புப்பரிசாக இதயத்தைக் கொடுக்கப் போவதாக ஒரு சேதி காற்றில் வந்திச்சு நிஜமா???////

போங்க பாஸ் எனக்கு வெட்கம் வெட்கமாக வருது அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
சிறுகதையை அலசிக்கொண்டு இன்னும் சிலமணித்தியாலத்தில் வருகின்றேன்.ஹீ
////

வாங்க வாங்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!காதலர் தின வாழ்த்துக்கள்!(இப்பிடிஎண்டாலும் "அந்த"சி.டி கிடைக்காதா?ஹ!ஹ!ஹா!!!!)
////

ஹா.ஹா.ஹா.ஹா. பாஸ் பவர் ஸ்டார் பட டீ.வீ.டி கேட்ட உங்கள் மனத் தைரியத்தை பாராட்டி அதற்கு பதிலாக டாகுத்தரின் சுறாப் பட டீ.வீ.டி அனுப்பிவைக்கப் படும்.ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@Lakshmi கூறியது...
கதை நல்லா இருக்கு. பொருத்தமான பாட்டும் இணைத்திருப்பது கூடுதல் சுவாரசியம்
////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@ பெயரில்லா கூறியது...
To the author of this story: This story is very amateurish and dramatic. Try to read more short stories from especially ananda vikatan, sujata, asokamithiran, vanna nilavan etc. You need to include tamil writers from your land also. Point is that, a maturity and intelligence has to be shown in story narration. Good luck.
////
Thanks for your comment friend

பாலா said...

அந்த கண்ணன் யாருங்க....

நாம விரும்புறவங்கள விட, நம்மள விரும்புறவங்கள கட்டிக்கிட்டா வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் - ரஜினி, படம் வள்ளி.

தனிமரம் said...

காதல் மயக்கத்தில் இருக்கும் ஹரினியின் இதயச் சுமையைச் சுமந்து வந்திருக்கு கதை.
இன்னும் அழகு படுத்தியிருந்தால் நிறைவாக இருக்கும் என எண்ணுகின்றேன். 
கடவுள் அமைத்துவைத்த மேடை காட்சிக்கு ஏற்ற பாடல் ரசித்தேன் இணைந்த ஜோடிகள் என நினைத்து. தொடருங்கள் இப்படி இன்னும் கதைகள் பல வாழ்த்துக்கள் .

Riyas said...

Good Story,, Keep it up

Yoga.S. said...

K.s.s.Rajh கூறியது...சுறா அனுப்பிவைக்கப் படும்.////அனுப்புங்கோ,அனுப்புங்கோ!எங்கத்தயச் சுறா?கொழும்புத்துறையான் எண்டால் விசேஷம்!கரையூர்,பாஷையூரான் அவ்வளவு டேஸ்ட்டா இருக்காது!

Unknown said...

நல்ல திருப்பம்
கதை அருமை!


புலவர் சா இராமாநுசம்

ஹாலிவுட்ரசிகன் said...

மிக அருமையான கதை. அழகான நடை. மிக நன்றி.

ஹாலிவுட்ரசிகன் said...

எனக்கு நம்ம தல பவர்ஸ்டார் டீவீடீ வேணும்....

Yoga.S. said...

ஹாலிவுட்ரசிகன் கூறியது...

எனக்கு நம்ம தல பவர்ஸ்டார் டீவீடீ வேணும்....////கடைசி பாரா"எச்சரிக்கை"பார்க்கவும்!அதாவது,காதலர் தின வாழ்த்து சொல்பவர்களுக்கு "மட்டும்" கிடைக்கும்!

Admin said...

எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது தோழர்..உணர்வுகள் கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது.சிறப்பு.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails