Wednesday, October 12, 2011

என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.

ரஜனி,கமல் இவர்கள் இணைந்து பல படங்கள் நடித்து இருக்கின்றார்கள் எனவே இவர்கள் இணைந்து நடித்த ஒரு சிலப்படங்களைக்குறிப்பிடுகின்றேன்


1)அபூர்வராகங்கள்




சூப்பர் ஸ்டாரின் முதல் தமிழ் சினிமா அறிமுகம் இதில் தான்

2)மூன்று முடிச்சு


சிறிதேவியின் முதல் படம்,ரஜனிகாந் வில்லனாக நடித்திருப்பார்

3)16 வயதினினிலே


இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படம்,இதிலும் ரஜனி வில்லனாக நடித்திருப்பார்,இதில் கவுண்டமணியும் நடித்திருப்பார் அவருக்கும் இதுதான் முதல் படம் இதனால் மேலும் சிறப்பம்சம்,இதில் கிராமத்து வைத்தியராக ஒரு சின்ன வேடத்தில் ஒரே ஒரு சீனில் பாக்கியராஜ்..தோன்றியிருப்பார் அந்த வகையில் பாக்கியராஜ் முதன் முதலில் திரையில் தோன்றிய படம் இதுதான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)/nanparkal/நண்பர்கள்
4)தில்லுமுல்லு


ரஜனி முதன் முதலில் நகைச்சுவையில் கலக்கிய படம்.இதில் கமல் சின்ன காட்சியில் நடித்து இருப்பார்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)/nanparkal/நண்பர்கள்
வேறு சில ஹீரோக்கள் இணைந்து நடித்த படங்கள்
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மாஸ் ஹீரோக்களில்  போட்டியாளர்களான சக ஹீரோக்களுடன் அதிகளவு படங்களில் இணைந்து நடித்தவர் அஜித்குமார்தான்

1)கல்லூரி வாசல்


அஜித்தும் பிரசாந்தும் இணைந்து நடித்த படம்

2)ராஜாவின் பார்வையிலே


சமகாலத்தில் போட்டியாளர்களாக கருதப்படும் அஜித்தும் விஜயும் இணைந்து நடித்த படம்..இதில் விஜய்தான் ஹீரோ அஜித் கொஞ்ச நேரம் வந்தாலும் கதையில் முக்கிய பாத்திரம் அவருக்கு.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)/nanparkal/நண்பர்கள்
3)உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்


கார்த்திக்கும் அஜித்தும் இணைந்து நடித்த படம் இதில் கார்த்திக்தான் ஹீரோ அஜித் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பார்..மறக்க முடியாத ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் என்ற சூப்பர் ஹிட் பாடல்கள் உள்ள படம்,அதைவிட இயக்குனர்,நகைச்சுவை நடிகர்,ரமேஸ் கண்ணா நடிகராக அறிமுகமான படம்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)/nanparkal/நண்பர்கள்
4)ஆனந்தப்பூங்காற்றே



இதுவும் அஜித்தும்,கார்த்திக்கும் இணைந்து நடித்த படம்,இதில் அஜித்தான் ஹீரோ கார்திக் மிகமுக்கியமான வேடம் ஒன்றில் நடித்து இருப்பார்


5)பகைவன்


அஜித்தும்,சத்யராஜ், இணைந்து நடித்த படம்.இதில் சத்யராஜ் நெக்கட்டிவ் ரோலில் நடித்து இருபார் பிறகு திருந்தும் வேடம்

6)உல்லாசம்


அஜித்தும்,விக்ரம் இணைந்து நடித்த படம் இந்தப்படத்தில் அஜித் ஹீரோ என்றாலும் பிரதான பாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார்

7)கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்


மம்முட்டி,அஜித், அப்பாஸ் இணைந்து நடித்த படம் இந்தப்படத்தில் ஜஸ்வர்யா ராயும் நடித்திருப்பது சிறப்பம்சம் ஆனால் ஜஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியில்லை அப்பஸை காதலித்து அந்தக்காதல் நிறைவேறாமல் பின் மம்முட்டியை காதலிக்கும் பாத்திரத்தில் நடிதிருப்பார்..இதில் ஹீரோ மம்முட்டிதான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவெடுத்த பதிவு(www.cricketnanparkal.blogspot.com)/nanparkal/நண்பர்கள்
8)மங்காத்தா


அஜித்,அர்ஜுன் நடித்த படம் அஜித்தின் 50 வது படம் அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம்

9)நன்றி


அர்ஜூன்,கார்த்திக் இணைந்து நடித்த படம்
இது அர்ஜுனின் முதல் படம்

10)காதலா காதலா


கமல்,மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த படம்

11)பூவே உனக்காக


விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் இந்தப்படத்தில் முரளி நடிகர் முரளியாகவே சின்ன வேடத்தில் நடித்திருப்பார்

12)நல்லவனுக்கு நல்லவன்


ரஜனியுடன் கார்த்திக் இணைந்து நடித்த படம்

13)சந்தணக்காற்று,


இது விஜயகாந் நடித்த படம் அப்போது வில்லானக நடித்துக்கொண்டு இருந்த சரத்குமார் இதிலும் வில்லனாக நடித்து இருப்பார்

14)புலண்விசாரனை


இதுவும் விஜயகாந்தின் படம் சரத்குமார் வில்லனாக நடித்திருப்பார்.

15)செந்தூரப்பாண்டி


,விஜயகாந் இளையதளபதி விஜய் இணைந்து நடித்த படம் விஜயகாந்தின் தம்பியாக விஜய் நடித்திருப்பார்

15)சுயம்பரம்


சத்யராஜ்,பாக்கியராஜ்,கார்த்திக்,அர்ஜுன்,பிரபுதேவா,பிரபு,அப்பாஸ்,
பாண்டியராஜன்,இன்னும் பலர் இணைந்து நடித்த படம் இந்தப்படம் 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த படம்

இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன இதில் பல படங்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள்..பட்டியல் நீண்டு விட்டதால் அடுத்த பதிவில் பார்ப்போம்
(தொடரும்)

இன்றைய தகவல்-
கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்தவரான கவாஸ்கர் ஒரு வித்தியாசமான சாதனையையும் படைத்தவர். 1975ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது (அப்போது 60 ஓவர்கள்)174 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 36 ரன்களையே ஆட்டம் இழக்காமல் பெற்றுக்கொண்டார் இதில் ஒரே ஒரு நான்கு ஓட்டம் மாத்திரமே அடித்தார்.

Post Comment

56 comments:

செங்கோவி said...

நல்ல லிஸ்ட்.

K.s.s.Rajh said...

@செங்கோவி கூறியது...
நல்ல லிஸ்ட்////

வாங்க பாஸ் தேங்ஸ் பாஸ்

தனிமரம் said...

நல்ல பட்டியல் இதில் எல்லாப்படத்தையும் பார்த்தவன் சந்தனக்காற்றில் ஓ தென்றலே ஒரு  பாட்டுப்பாடு என் வசந்தகால நதியில் ஒரு பூவே உனக்காக என்றும் சொல்ல முடியும்!

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
நல்ல பட்டியல் இதில் எல்லாப்படத்தையும் பார்த்தவன் சந்தனக்காற்றில் ஓ தென்றலே ஒரு பாட்டுப்பாடு என் வசந்தகால நதியில் ஒரு பூவே உனக்காக என்றும் சொல்ல முடியும்///

வாங்க பாஸ் உங்களுக்கு ஒரு மேசேஜ் போட இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க என்ன நேத்து உங்களுக்கு ஆப்புவைச்சிட்டாங்களாமே? இரவுதான் இந்த மேட்டர் மதுரன் நிரூபன் பாஸ் இன் ப்ளாக்கில் கமண்ட் போட்ட போதுதான் தெரிந்து கொண்டேன்.
என்ன நடந்தது பாஸ்?

நேற்று என் ப்ளாக்கிலும்,நிருபான் பாஸ் ப்ளாக்கிலும் பெரிய பஞ்சாயத்து ஆனதால்..இரவு கேட்க முடியவில்லை

தனிமரம் said...

உல்லாசம் படத்தில் கமல் ஒரு பாடலும்ப்பாடுவதால் மூவர் என்றும் பார்க்கலாம் பாஸ்! முத்தே முத்தம்மா பாடல் அவர்பாடியது!

Mathuran said...

எல்லாமே அசத்தல் படங்கள் பாஸ்

தனிமரம் said...

சின்னச்சின்ன முள்ளுகள் அதனால் தான் உங்களிடம் நேற்று வரமுடியல! சோலைக்குயில் பாடும் தனிமரம் பேசும்  விடாது கருத்துச் சொல்லும் ஓசிதானே!ஹீ ஹீ

தனிமரம் said...

நமக்கு கும்முவதற்கு இடம் இல்லாமல் போச்சு அதுதான் நிரூவீட்டில் ஒரே ரகளை நேற்று! ஹீ ஹீ

தனிமரம் said...

டாக்குத்தர் ஒழுங்கா நடித்த படம் எனக்குப் பிடித்த படம் பூவே உனக்காக! இதன் பின் சுவாரசியமான கதை இருக்கு பார்ப்போம் நேரம் இருந்தால் தனிமரத்தில்! 

தனிமரம் said...

சிறப்பான படங்களை பட்டியல் இன்னொரு பதிவில் சந்திப்போம்!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உல்லாசம் படத்தில் கமல் ஒரு பாடலும்ப்பாடுவதால் மூவர் என்றும் பார்க்கலாம் பாஸ்! முத்தே முத்தம்மா பாடல் அவர்பாடியது/////
அட இது புதிய தகவல்

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
எல்லாமே அசத்தல் படங்கள் பாஸ்/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சின்னச்சின்ன முள்ளுகள் அதனால் தான் உங்களிடம் நேற்று வரமுடியல! சோலைக்குயில் பாடும் தனிமரம் பேசும் விடாது கருத்துச் சொல்லும் ஓசிதானே!ஹீ ஹீ///

நேற்று பெரிய பஞ்சாயத்து ஜயா

கோகுல் said...

நண்பர்கள் தளத்தில் நண்பர்களாய் நடித்த படங்கள்!அருமை!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நமக்கு கும்முவதற்கு இடம் இல்லாமல் போச்சு அதுதான் நிரூவீட்டில் ஒரே ரகளை நேற்று! ஹீ ஹீ////
ஆமா நேற்று இரவு 2 மணிவரையும் நிரூபன் பாஸ் கடையில் தான் நானும் இருந்தேன்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
டாக்குத்தர் ஒழுங்கா நடித்த படம் எனக்குப் பிடித்த படம் பூவே உனக்காக! இதன் பின் சுவாரசியமான கதை இருக்கு பார்ப்போம் நேரம் இருந்தால் தனிமரத்தில்////

அட நீங்க கூட டாகுத்தரை பாராட்டுறீங்களே

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சிறப்பான படங்களை பட்டியல் இன்னொரு பதிவில் சந்திப்போம்/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நண்பர்கள் தளத்தில் நண்பர்களாய் நடித்த படங்கள்!அருமை////

தேங்ஸ் பாஸ்

குறையொன்றுமில்லை. said...

சில படங்கள் பார்த்ததில்லே. பட்டியல் நல்லாதான் இருக்கு.

மாய உலகம் said...

பட்டியல் தொடரட்டும்

காட்டான் said...

வணக்கம் ராசுகுட்டி..
தமிழ் சினிமாவில் இருக்கும் ஈகோவால் பல ஹிரோக்கள் ஒன்று சேர்ந்து ஹிந்தியைப்போல் நடிப்பதில்லை.. 

உங்களின் பட்டியலில் எனக்கு பிடித்த படங்கள்..
அபூர்வராகங்கள்,மூன்று முடிச்சு,பதினாறு வயதினிலே,தில்லு முள்ளு,

அருமையான படங்கள் இவற்றை பார்தீர்களா!!?

Nirosh said...

அனைத்தும் பார்த்திருக்க்றேன் அருமையான படங்கள்...!

பிரணவன் said...

நல்ல பதிவு சகா, ரஜினி க்கு கதாநாயகன் வேடத்தைவிட, வில்லன் வேடமே, அவரது நடிப்புத் திறத்தை அதீதமாக வெளிப்படுத்துகின்றது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. . .

F.NIHAZA said...

படங்களின் பட்டியல் நல்லா இருக்கு....

ரைட்டர் நட்சத்திரா said...

intersting

அம்பாளடியாள் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரியான விடயம் .இந்தப் படங்கள்
அனைத்தும் நான் பார்த்துள்ளேன் .மிகவும் சரியான தேர்வுப் பட்டியல் .
வாழ்த்துக்கள் சகோ.மிக்க நன்றி பகிர்வுக்கு ...............

சக்தி கல்வி மையம் said...

தில்லு முள்ளு படத்தை நினைத்த உடன் இப்போதும் சிரிப்பு வருகிறது.

சேக்காளி said...

சிவாஜி கணேசன் - ரஜினிகாந்த் நடித்த படங்களை விட்டு விட்டீர்களே.

K.s.s.Rajh said...

@Lakshmi

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@மாய உலகம்

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@காட்டான்

ஆமா மாம்ஸ் இதில் உள்ள எல்லாம் படங்களும் நான் பார்த்துவிட்டேன்,அதிலும் அபூர்வராகங்கள்,மூன்று முடிச்சு,பதினாறு வயதினிலே,தில்லு முள்ளு,மறக்கக்கூடிய படங்களா

K.s.s.Rajh said...

@Nirosh

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@பிரணவன்

உங்கள் கருத்து மிகவும் சரியே ரஜனி வில்லன் வேடங்களில் அசத்தியிருப்பார்..இதை ரஜனிகாந்தே பல தடவைகள் சொல்லியுள்ளார்...வில்லன் ரோலில் அசத்த சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரேதான் அண்மையில் எந்திரனில் கூட கலக்கியிருப்பார்

K.s.s.Rajh said...

@F.NIHAZA

நன்றி சகோதரி

K.s.s.Rajh said...

@கார்த்தி கேயனி

தேங்ஸ் சகோ

K.s.s.Rajh said...

@அம்பாளடியாள்

தேங்ஸ் சகோதரி

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

ஆமா பாஸ் சூப்பர்ஸ்டார் முதன் முதலில் காமடியில் கலக்கிய படம் என்றால் யாரும் நம்ம மாட்டார்கள்.மிகச்சிறந்த நகைச்சுவைப்படம்

K.s.s.Rajh said...

@சேக்காளி
பதிவு நீளமாகிவிட்டதால் அடுத்த பகுதியில் குறிப்பிடுகின்றேன் பாஸ்,,சிவாஜி,ரஜனி,இருவரும் இணைந்து நடத்த படங்களை மறக்கமுடியுமா?

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பட்டியல்! இப்போதெல்லாம் இணைந்து நடிப்பது குறைந்து விட்டது!

K.s.s.Rajh said...

@thalir

ஆமா பாஸ் ஹிரோக்கள் இணைந்து நடித்தால் நிறைய நல்ல படங்கள் வெளிவரும்

G. NAGARAJAN said...

க. நாகராஜன், திருவாரூரிலிருந்து..... அருமையான ஆய்வு. இந்த ஆய்வில் எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி, எம்.ஜி.ஆர். - ஜெமினி இணைந்து நடித்த முகராசி, கார்த்திக் - பிரபு நடித்த அக்னிநட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் இல்லையே... ஏன்? அப்புறம் அஜீத் நடித்த முதல் படமான அமராவதியில் அஜீத்திற்கு டப்பிங் பேசியவர் விக்ரம்...

சுதா SJ said...

வணக்கம் நண்பா... எல்லா உங்கள் பதிவுகளையும் என் பேஸ்புக் கில் பகிர்ந்து விடுவீர்கள்... இதை ஏன் வீட்டீர்கள்? ஏன் மேல் கோவமா??? நண்பா... உங்கள் கருத்துக்கள் எல்லாத்துக்கும் ஆமா சொல்லுறவன் கண்டிப்பாக உண்மையான நண்பனாக இருக்க முடியாது. தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து தட்டிகேட்க்க வேண்டிய இடத்தில் தட்டுவவனே உண்மை நண்பன். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்குறேன்...

சுதா SJ said...

நீங்கள் குறிப்பிட்ட படங்களில்
உல்லாசம், பகைவன், தவிர மற்றவை எனக்கும் மிகவும் புடித்த படங்கள்.

அப்புறம்.... எங்கப்பா...... காமினியை காண நாளா காணோம்??? என்னாச்சு அவங்களுக்கு..

Anonymous said...

நீ வருவாய் என- அஜித் பார்த்தீபன்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - அஜித் ,பார்த்தீபன்

விட்டுட்டிங்களே

ஒன்ஸ்மோர் -விஜய் ,சிவாஜி

K.s.s.Rajh said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு
தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
G. NAGARAJAN கூறியது...
க. நாகராஜன், திருவாரூரிலிருந்து..... அருமையான ஆய்வு. இந்த ஆய்வில் எம்.ஜி.ஆர். - சிவாஜி இணைந்து நடித்த கூண்டுக்கிளி, எம்.ஜி.ஆர். - ஜெமினி இணைந்து நடித்த முகராசி, கார்த்திக் - பிரபு நடித்த அக்னிநட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் இல்லையே... ஏன்? அப்புறம் அஜீத் நடித்த முதல் படமான அமராவதியில் அஜீத்திற்கு டப்பிங் பேசியவர் விக்ரம்..////
பதிவு நீளமாகியதால் அடுத்த பதிவில் போடலாம் என்று விட்டுவிட்டேன்..அடுத்த பகுதியில் வரும்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
வணக்கம் நண்பா... எல்லா உங்கள் பதிவுகளையும் என் பேஸ்புக் கில் பகிர்ந்து விடுவீர்கள்... இதை ஏன் வீட்டீர்கள்? ஏன் மேல் கோவமா??? நண்பா... உங்கள் கருத்துக்கள் எல்லாத்துக்கும் ஆமா சொல்லுறவன் கண்டிப்பாக உண்மையான நண்பனாக இருக்க முடியாது. தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து தட்டிகேட்க்க வேண்டிய இடத்தில் தட்டுவவனே உண்மை நண்பன். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்குறேன்..///////

அட என்ன மச்சி நீங்க கோபமா நானா அப்படினா என்ன?

நேற்று நிரூபன் பாஸ் தளத்தில் பெரும் பஞ்சாயத்து ஆகிப்போச்சி அதுல மறந்துட்டேன்...பாஸ் சாரி..இன்னைக்கு ஒரு பதிவு வருது பாருங்க.............

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
நீங்கள் குறிப்பிட்ட படங்களில்
உல்லாசம், பகைவன், தவிர மற்றவை எனக்கும் மிகவும் புடித்த படங்கள்.

அப்புறம்.... எங்கப்பா...... காமினியை காண நாளா காணோம்??? என்னாச்சு அவங்களுக்கு./////

வருவாங்க வருவாங்க...............

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
நீ வருவாய் என- அஜித் பார்த்தீபன்
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - அஜித் ,பார்த்தீபன்

விட்டுட்டிங்களே

ஒன்ஸ்மோர் -விஜய் ,சிவாஜி///

அட ஆமா பாஸ் அஜித்,பார்த்தீபன்,நீ வருவாய் என விட்டு விட்டேன்

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் இணைத்துள்ளேன் அதில் அஜித் கார்த்திக் நீங்கள் சொல்லும் படம் நானும் பார்த்தேன் அஜித்துக்கு தந்தையாக பார்த்தீபன் நடித்த படம் ஒன்று இருக்கு..அதைத்தான் நீங்க சொல்லுறீங்க அதன் பெயர் ஞாபம் வரவில்லை அடுத்த பகுதியில் இணைக்கின்றேன்.

ஓன்ஸ் மோர் அடுத்த பகுதியில் வரும் பாஸ்

உலக சினிமா ரசிகன் said...

தங்கள் வலைப்பக்கம் முதன்முதலாக வருகிறேன்.
கமல் ரஜினி இருவரும் இணைந்து நடித்ததே தனிப்பதிவாகப்போடலாம்.

தங்கள் பதிவில் உள்ள பல படங்கள் பார்த்திருக்கிறேன்.
கல்லூரி நாட்களில் நான் பார்த்த படங்கள் பதிவில் உள்ளன.
ஜாலியாக ஒரு பிளாஷ் பேக் டிராவல் போக முடிந்தது.நன்றி.

K.s.s.Rajh said...

@உலக சினிமா ரசிகன்

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ் தொடர்ந்து வாருங்கள்

kobiraj said...

நல்ல பட்டியல் தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்

K.s.s.Rajh said...

@kobiraj

நன்றி பாஸ்

Anonymous said...

ஹிஹி நான் தான் தவறாய் சொல்லிட்டேன் அஜித் பார்த்தீபன் இணைந்து நடித்தது 'உன்னை கொடு என்னை தருவேன்'

K.s.s.Rajh said...

@கந்தசாமி.
////ஹிஹி நான் தான் தவறாய் சொல்லிட்டேன் அஜித் பார்த்தீபன் இணைந்து நடித்தது 'உன்னை கொடு என்னை தருவேன்////
தகவலுக்கு நன்றி மச்சி அடுத்த பகுதியில் இணைக்கின்றேன்

நிரூபன் said...

கலக்கலான பட்டியல் மச்சி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails