Thursday, January 12, 2012

நண்பன் படமும் பல்பு வாங்கிய நானும்.

பொதுவாக நான் சினிமா விமர்சனம் எழுதுவது இல்லை.ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் விமர்சனம் எழுதுவதுண்டு.நான் பதிவுலகில் முதன் முதலில் எழுதிய விமர்சனம் வேலாயுதத்துக்குத்தான் அதன் பின் 7ம் அறிவுக்கு எழுதினேன்.இப்ப நண்பன் படத்துக்கு எழுதலாம் என்று நினைத்தேன்.



இந்தியில் சூப்பர் ஹிட்டான பரபரப்பாக பேசப்பட்ட ”3 இடியட்ஸ்” படத்தின்  ரீமேக் என்பதால் தமிழில் நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்பு ஒரு புறம்,மற்றது ஷங்கர் படம் என்ற எதிர்பார்பு.உண்மையைச்சொன்னால் நான் இதுவரை ”3 இடியட்ஸ்” படம் பார்கவில்லை பொதுவாக ஹிந்திப்படங்கள் என்றால் ஜஸ்வர்யா ராய் நடித்த படங்கள் மட்டும் தான் பார்ப்பேன்(எல்லாம் ஜஸ்வர்யா ராய் மேல ஒரு இதுதான் ஹி.ஹி.ஹி.ஹி)ஏனைய படங்கள் பார்பது இல்லை எனவே 3 இடியட்ஸ் மிஸ்சிங்.


எனவே நண்பன் எப்படியும் பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தது. எனவே படம் பார்கலாம் என்று முடிவு செய்து புறப்பட்டேன்.எங்க ஊரில் ஒரு தியேட்டர் தான் இருக்கு.10-30 காட்சிக்கு நான் 10-20 க்குத்தான் போனேன். குறிப்பாக எங்கள் ஊர்பக்கம் விஜய்க்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் விஜய் படம் என்றால் கூட்டம் களைகட்டும்.டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் போனேன்.ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை காவலன் படம் வந்த நேரம் இப்படித்தான் படம் ஆரம்பித்த பின் போனபோது டிக்கெட் இருந்தது. எனவே சிலவேளை நண்பனுக்கும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்றேன்.


தியேட்டரில் கூட்டத்தையே காணாம் முன் இருந்த போட்டில் பொங்கள் வெளியீடு ”வேட்டை”(14,15 ம் திகதிகளில் தான் பொங்கள்)என்று போட்டு இருந்தது. தியேட்டரில் வேறு  ஒரு படம் ஓடுகின்றது என்ன நடந்தது ஏன் நண்பன் ரிலீஸ் ஆகவில்லை என்று எனக்கு ஒரே குழப்பம் ஒரு வேளை இலங்கையில் ரிலீஸ் ஆகவில்லையோ என்று நினைச்சேன் ஆனால்.வேறு ஒரு பதிவர் நண்பன் விமர்சனம் எழுதியிருக்காரே அப்படி என்றால் இலங்கையில் ரிலீஸ்தானே ஏன் இங்கே ரிலீஸ் பண்ணவில்லை என்று நினைத்துக்கொண்டு இருந்த போதுதான்.நம்ம நண்பரும் சக பதிவரும் டாகுதரின் தீவிர ரசிகருமான பதிவரின் ஞாபகம் வந்தது உடனே போனை போட்டேன்.


அவரிடம் ஏன் பாஸ் உங்க ஊரில் நண்பன் ரிலீஸ் ஆகிடுச்சா என்று கேட்டேன் அவரும் எங்க ஊரில் நேற்றே வந்திருச்சி ஏன் உங்க ஊரில் வரவில்லையா என்று கேட்டார் நான் இல்லை என்று சொல்லிவிட்டு நாளை எங்க சொந்த ஊர்பக்கம் போவதால் அதுக்கு அடுத்த ஊர் தான் அவரின் ஊர் எனவே நேரம் கிடைத்தால் அந்த பதிவரின் ஊரில் போய் படத்தை பார்ப்போம் நேரம் கிடைச்சால் வருகின்றேன் பாஸ் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணினேன்.


அப்பறம் தான் விசாரித்த போதுதான் காரணம் தெரிந்தது எங்கள் ஊரில் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று.காரணம் ரகசியம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட படம் பார்க்க போய்தான் பல்பு என்றால் வரும் போது நானும் என் நண்பனும் வந்து கொண்டு இருந்தோம். அப்ப ஒரு நண்பன் போன் பண்ணினான் என்னடா என்றேன் எப்ப ஊருக்கு வார என்று கேட்டான் நான் நாளைக்கு வாரன் என்று சொல்ல! ஏன் இன்றைக்கு வா என்று அவன் சொல்ல! நான் படம் பார்க்க போய் பல்பு வாங்கிய கடுப்பில் போனை வைடா
பக்கி என்று சத்தமாக சொல்ல! எனக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த இரண்டு பிகருகள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றார்கள்.ஹி.ஹி.ஹி.ஹி அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா.

மொத்ததில் இன்று எனக்கு செம பல்பு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நண்பன் படம் பார்ததும் அது பற்றி விமர்சனம் தருகின்றேன் நண்பர்களே

முஸ்கி-இலியானாவின் படங்கள் பதிவில் கொஞ்சம் தூக்கலா இருக்கு எல்லாம் இலியானா மேல ஒரு இதுதான்.அவ்வ்வ்வ்வ்வ்


இன்று வெளியான இன்னும் ஒரு பதிவை படிக்க

Post Comment

46 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

சீக்கிரமே பல்பு வாங்காமல் ஒரு விமர்சனம் போட்டுவிடுங்க.

குறையொன்றுமில்லை. said...

பல்பு வாங்கினதெல்லாம் கரெக்டா சொன்னீங்க. நண்பன் படம் அப்புரமாவது பாத்தீங்களா இல்லியா? விமரிசனம் எங்கே?

rajamelaiyur said...

இலியானா மேல எது ? ( நான் பச்ச புள்ள )

rajamelaiyur said...

உங்களுக்காக ...

நண்பன் : திரை விமர்சனம்

K.s.s.Rajh said...

@ஹாலிவுட்ரசிகன்

கண்டிப்பாக பாஸ் படம் பார்ததும் போடுகின்றேன்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
பல்பு வாங்கினதெல்லாம் கரெக்டா சொன்னீங்க. நண்பன் படம் அப்புரமாவது பாத்தீங்களா இல்லியா? விமரிசனம் எங்கே?////

படம் இன்னும் பார்கவில்லை மேடம் பார்ததும் விமர்சனம் தருகின்றேன்

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
இலியானா மேல எது ? ( நான் பச்ச புள்ள )
////

ஹி.ஹி.ஹி.ஹி போங்க பாஸ் எனக்கு வெட்கமாக இருக்கு

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
உங்களுக்காக ...

நண்பன் : திரை விமர்சனம்
////

இதோ வாரன் பாஸ்

K said...

மச்சான் சார் நீங்க பாங்கினது 60 வாட்ஸ் பல்பா, 100 வாட்ஸ் பல்ப்ப்பா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க பதிவை படிச்சதுமே ஒரு இது தான்.... ஹி..ஹி...

மகேந்திரன் said...

அடடா...
என்ன இது
விமர்சனம் எங்கே...
படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனமா????
சரி தான்
ரைட்டு....
நடக்கட்டும்.

சுவாரஸ்யமான பதிவு நண்பரே.

Yoga.S. said...

இரவு வணக்கம் ராஜ்!"நண்பன்" பார்த்து,பிறவிப் பயனை அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்!பல்ப் வாங்கினது,பல்ப் வாங்கினது எண்டு சொல்லுறியள்,உங்கட ஊரில கரண்ட் இருக்குதோ?????

KANA VARO said...

நாளைக்குப் பார்த்திட்டு சூப்பர் விமர்சனம் ஒண்டு போடப்பா

Admin said...

விரைவில் விமர்சனத்தைப் போடுங்கள்..

வாழ்க்கைத் துணை நலம்

Admin said...

சீக்கிரம் ஒரு விமர்சனத்தைப் போடுங்க..

வாழ்க்கைத் துணை நலம்

நிரூபன் said...

அடப் பாவி, படத்துக்கு போக முன்னாடி கொஞ்சம் விசாரித்து போக கூடாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MaduraiGovindaraj said...

சரி சரி இது மாதிரி எத்தனைபேர் ம்ம்ம் முடியல!

MaduraiGovindaraj said...

ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

கேரளாக்காரன் said...

Unga oorla yen boss release aagala?

K.s.s.Rajh said...

@
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
மச்சான் சார் நீங்க பாங்கினது 60 வாட்ஸ் பல்பா, 100 வாட்ஸ் பல்ப்ப்பா?////

எத்தின வாட்ஸ் என்று தெரியவில்லை ஹன்சிகா வைச்சிருக்கும் அளவு பல்பு இருக்கும் அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
உங்க பதிவை படிச்சதுமே ஒரு இது தான்.... ஹி..ஹி.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
மகேந்திரன் கூறியது...
அடடா...
என்ன இது
விமர்சனம் எங்கே...
படம் பார்க்காமலேயே ஒரு விமர்சனமா????
சரி தான்
ரைட்டு....
நடக்கட்டும்.

சுவாரஸ்யமான பதிவு நண்பரே////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
இரவு வணக்கம் ராஜ்!"நண்பன்" பார்த்து,பிறவிப் பயனை அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்!பல்ப் வாங்கினது,பல்ப் வாங்கினது எண்டு சொல்லுறியள்,உங்கட ஊரில கரண்ட் இருக்குதோ????/////

ஹி.ஹி.ஹி.ஹி கரண்ட் எல்லாம் இருக்கு ஜயா அவ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
நாளைக்குப் பார்த்திட்டு சூப்பர் விமர்சனம் ஒண்டு போடப்பா
////

எங்க பாஸ் எங்க ஊரில் படம் வராது போல யாழ்பாணத்தில் போய்தான் பாக்கனும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
மதுமதி கூறியது...
விரைவில் விமர்சனத்தைப் போடுங்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அடப் பாவி, படத்துக்கு போக முன்னாடி கொஞ்சம் விசாரித்து போக கூடாதா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

எல்லாம் ஒரு வேகத்தில் போறதுதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
கோவிந்தராஜ்,மதுரை. கூறியது...
சரி சரி இது மாதிரி எத்தனைபேர் ம்ம்ம் முடியல!
/////

ஹி.ஹி.ஹி.ஹி. நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ மௌனகுரு கூறியது...
Unga oorla yen boss release aagala?
////

நண்பன் படம் தியேட்டர் காரங்க எடுக்கவில்லை அதனால் பொங்களுக்கு வேட்டைதான் ரிலீஸ்

Unknown said...

ஏன் மாப்ள கோச்சிக்காதீங்கோ...அது என்னா எல்லா நடிகைகள் மேலயும் ஒரு இதுவா ஹிஹி...just for funnக்கு கேட்டேன்!

பால கணேஷ் said...

ஐஸ்வர்யா ராய், இலியானா... இன்னும் எத்தனை பேர் மேலப்பா ஒரு ‘இது‘ உனக்கு? மத்தவங்க பல்பு வாங்கின அனுபவத்தைப் படிக்கறதுன்னாலே லட்டு திங்கற மாதிரி தானே நமக்கு. சந்தோஷமா லட்டு தின்னேன். சீக்கிரம் விமர்சனம் வரட்டும் ராஜ். ஐ வெயிட்டிங்.

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்

ஹா.ஹா.ஹா.ஹா சும்மா ஒரு இதுதான் பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
ஐஸ்வர்யா ராய், இலியானா... இன்னும் எத்தனை பேர் மேலப்பா ஒரு ‘இது‘ உனக்கு? மத்தவங்க பல்பு வாங்கின அனுபவத்தைப் படிக்கறதுன்னாலே லட்டு திங்கற மாதிரி தானே நமக்கு. சந்தோஷமா லட்டு தின்னேன். சீக்கிரம் விமர்சனம் வரட்டும் ராஜ். ஐ வெயிட்டிங்////

ஹி.ஹி.ஹி.ஹி நன்றி பாஸ் சீக்கிரம் போடுறன்

ஷைலஜா said...

என்ன ராஜா விமர்சனம்னு நினச்சி ஓடிவந்தா,,,...?:)

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் படிக்கலாம் என்று பார்த்தால்..... நல்ல பல்ப்! நன்றி நண்பரே!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

முற்றும் அறிந்த அதிரா said...

2012 பிறந்ததுதான் பிறந்துது... எல்லாப் பக்கமும் ஒரே பல்ப்பா வாங்குறாங்கோ:))...

ஃபோன் இருக்குதுதானே? ஒரு கோல் பண்ணிக் கேட்டிட்டுப் போயிருக்கலாமெல்லோ அவ்வ்வ்வ்வ்:))).

Anonymous said...

பல்பு :)

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அம்பலத்தார் said...

ராஜ் பார்க்காத படதை வைத்தே ஒரு பதிவா? ரொம்ப நல்லா Think பண்ணுறிங்கப்பா. நீங்க நண்பன் விமர்சனத்தை எழுதியிருந்தால்கூட அதை இவ்வளவு ரசிக்கமுடிந்திருக்காது அப்படி ஜாலியாக பல்பு வாங்கின கதை சொல்லி அசத்திட்டிங்க

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

Anonymous said...

Iynkaran(jaffna)
http://www.katturai.com/?p=735

"அன்புத் தலைவா விஜய்..உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது..!

தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம். இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது? முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!"


தயவு செய்து இந்த கொடுமையை பார்த்திடாதிங்க..இந்த கட்டுரையை வாசிங்க..

K.s.s.Rajh said...

@ஷைலஜா

ஹி.ஹி.ஹி.ஹி விமர்சனம் போடுறேன் அக்கா

K.s.s.Rajh said...

@
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
விமர்சனம் படிக்கலாம் என்று பார்த்தால்..... நல்ல பல்ப்! நன்றி நண்பரே!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
////

சீக்கிரம் விமர்சனம் எழுதிறேன் பாஸ்

K.s.s.Rajh said...

@ athira கூறியது...
2012 பிறந்ததுதான் பிறந்துது... எல்லாப் பக்கமும் ஒரே பல்ப்பா வாங்குறாங்கோ:))...

ஃபோன் இருக்குதுதானே? ஒரு கோல் பண்ணிக் கேட்டிட்டுப் போயிருக்கலாமெல்லோ அவ்வ்வ்வ்வ்:))).
////

ஹா.ஹா.ஹா.ஹா தியேட்டர் பக்கத்தில் தான் அதைவிட புதுப்படங்கள் உடனே ரிலீஸ் ஆகிவிடும் அதனால் தான் கோல் பண்ணிக்கேட்கவில்லை நன்றி அக்கா.

K.s.s.Rajh said...

@ ரெவெரி கூறியது...
பல்பு :)

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ராஜ் பார்க்காத படதை வைத்தே ஒரு பதிவா? ரொம்ப நல்லா Think பண்ணுறிங்கப்பா. நீங்க நண்பன் விமர்சனத்தை எழுதியிருந்தால்கூட அதை இவ்வளவு ரசிக்கமுடிந்திருக்காது அப்படி ஜாலியாக பல்பு வாங்கின கதை சொல்லி அசத்திட்டிங்க////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
////

மிக்க நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
Iynkaran(jaffna)
http://www.katturai.com/?p=735

"அன்புத் தலைவா விஜய்..உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது..!

தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம். இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது? முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!"


தயவு செய்து இந்த கொடுமையை பார்த்திடாதிங்க..இந்த கட்டுரையை வாசிங்க////

நன்றி சகோ நேரம் இருக்கும் போது கண்டிப்பாக வாசிக்கின்றேன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails