Wednesday, November 21, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -10

பெப்ரவரி மாதத்தின் 4ம் திகதி சதீஸ் வாழ்கையில் மறக்க முடியாத ஒரு நாள் ஆம் அன்றுதான் அவன் வாழ்வில் இன்னும் ஒரு தாயை முதலில் பார்த்தநாள்.அதற்கு முந்தய இரவு முழுவதும் அவன் மனதில் பல கேள்விகள் இருந்தன அல்லவா?

தாய் தந்தையை தவறவிட்டு விட்டு சித்தப்பா வீட்டில் அடைக்களம் ஆகியிருக்கின்றான்.இதுவரை சித்தப்பா வீட்டில் அடைக்களம் கிடைத்தது 

சித்தப்பா,அண்ணா எல்லோறும் எப்படியும் சதீஸை பார்கவேண்டிய தேவையிருக்கு

ஆனால் அண்ணி வந்து என்ன சொல்வார் அண்ணி பாசமாக இருப்பாரா? அண்ணி ஏதும் சொன்னால் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவது என்று முடிவெடுத்து இருந்தான்.


அண்ணா அண்ணியை கூட்டிக்கொண்டு வந்தார்.அவரை பார்த்த நொடியிலே சதீஸ் மனதில் இருந்த கவலை எல்லாம் ஓடி மறைந்தது.சதீஸ் எதிர்பார்த்த மாதிரி அண்ணி எதுவும் சொல்லவில்லை.மிகுந்த பாசமாக அன்பாக அவனிடம் நடந்துகொண்டார்.
*********************************************************************************
இந்த உலகில் அன்னைக்கு நிகர் யாரும் இல்லை.அண்ணி அன்னைக்கு சமனானவர் என்று சொல்வார்கள்.ஆனால் சதீஸின் அண்ணி அவனுக்கு அன்னையாகவே இருந்தார்.

இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களும் தாயின் அன்புக்கு அடிமைதான்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.தாயின் அன்பு கிடைக்காதவர்கள் நிச்சயம் பாவப்பட்ட ஜுவன்கள்,சதீஸ்க்கு அவனது வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளை கடவுள் கொடுத்து இருந்தாலும் தாயின் அன்பை மட்டும் அவனுக்கு அளவுக்கு அதிகமாக கொடுத்திருந்தார்.அதுவும் ஒரு தாய் இல்லை இரண்டுதாய்கள் ஒன்று அவனை இந்த உலகிற்கு காட்டிய அவனது அம்மா மற்றது அவனது அண்ணி ஆம் சதீஸ்க்கு அவனது அண்ணி இரண்டாம் தாய்.

இத்தனைக்கு அவர் சதீஸின் கூடப்பிறந்த சகோதரனின் மனைவியும்  இல்லை அவனது ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவிதான்.ஆனால் அவனை அப்படி ஒரு போதும் அவர் நினைத்தது இல்லை.தான் பெற்ற பிள்ளையை போல பார்த்துக்கொண்ட ஜுவன்.

வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையிலான போராட்டத்தில்
நான் தவித்துக்கொண்டு இருந்த போது
அண்ணி உருவத்தில் வந்த அன்னையே

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உங்களிடம் நான் பட்ட கடனை
திருப்பி செலுத்த முடியாது.

மறு ஜென்மமென ஒன்றிருந்தால் 
உங்களுக்கு நான் மகனாக 
பிறக்க வேண்டும் தாயே

*********************************************************************************
சதீஸ்க்கு இப்போது கால் ஓரளவு குணமாகிவிட்டது.ஆனால் அவனது தாய் தந்தை பற்றி எந்த தகவலும் இல்லை.அவனும் தெரிந்தவர்களிடன் விசாரித்து பார்த்தான் ஒருவரும் அவர்களைக்கண்டதாக சொல்லவில்லை.

வானியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.தன்னை லவ் பண்ணச்சொல்லி சதீஸ்க்கு பின்னாலும் முன்னாலும் திரிந்தால் சதீஸ் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

அவள் ஒரு படி மேலே போய் அண்ணியை அக்கா என்றும் சித்தியை மாமி என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.

இது பற்றி ஒரு நாள் அண்ணி சதீஸிடம் கேட்ட போது. அவள் தன்னை லவ் பண்ணச்சொல்லி ஒரே கரைச்சல் குடுக்கிறாள் என்று அண்ணியிடம் விடயத்தை சொன்னான்.

அண்ணியும் வானியிடம் எடுத்துச்சொன்னார். அவன் இப்ப இருக்கிற நிலைமையில் இது எல்லாம் சரிவராது தங்கச்சி. இப்ப இது எல்லாம் தேவையா? எமது உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று அண்ணி சொல்லியும். அவள் கேட்பதாக இல்லை. அண்ணி அண்ணாவிடம் சொல்லிவிட்டார்.

அண்ணாவும் அவரின் நண்பரிடம் இப்படி வானியை கண்டித்துவையுங்கள் சதீஸ்க்கு தொல்லைகுடுக்கிறாளாம் அவன் நிலைமை உங்களுக்கு தெரியும் தானே என்று பக்குவமாக எடுத்துச்சொன்னார்.அதுக்கு பிறகு வானியின் தொல்லை ஓரளவு குறைந்தது.

அன்று ஒரு நாள் வானியின் வீட்டிற்கு அவளது அண்ணாவின் நண்பன் ராகுல் வந்திருந்தான்.ராகுலும் சதீஸும் சின்னவயதில் இருந்து நண்பர்கள் பின் காலஓட்டத்தில் இருவருக்கும் இடையில் தொடர்புகள் இல்லாமல் போய்விட்டது.ராகுலை கண்டதும் சதீஸ்க்கு சந்தோசம்.


சதீஸ்க்கு அவனது சித்தப்பா வீட்டில் இருக்கும் பொழுது மிகவும் கவலையாக இருக்கும் காரணம்.வயதான சித்தப்பா,சித்தி,நிறைமாதக் கர்பிணியான அண்ணி,அண்ணாவை மட்டுமே நம்பி அந்த குடும்பம் இருந்தது.ஒரு வேளை அண்ணாவுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் குடும்ப நிலை என்னாவது கற்பனை செய்து பார்க்கவே கஸ்டமாக இருக்கு.ஆனாலும் அண்ணா தன் உயிரையும் பொருற்படுத்தாமல் வேலைகள் ஏதும் செய்வதற்காக காலையில் வெளிக்கிட்டு போய்விடுவார்.அவர் வரும் வரை அண்ணி அழுதுகொண்டேயிருப்பார்.

சதீஸால்  அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் அண்ணாவுடன் தானும் வேலை ஏதும் செய்யப்போகவேண்டும் என்று மனம் விரும்பினாலும் அவனது சூழ்நிலை தடையாக இருந்தது.

அண்ணாவும் சரி,சித்தப்பாவும் சரி,அண்ணியும் சரி ஒரு நாள் கூட சதிஸ்க்கு ஒருவேலை சொல்லியது இல்லை.அவனது சூழலை புரிந்துகொண்டவர்கள்.
*********************************************************************************
நண்பன் ராகுலைக் கண்டது சதீஸ்க்கு கொஞ்சம் ஆறுதல் அவனுடன் சேர்ந்து தாய்,தந்தையை தேடத்தொடங்கினான்.

இந்த பயணத்தில்

சதீஸும்,ராகுலும் எத்தனையோ சோதனைகளை வலிகளை சுமந்திருக்கின்றார்கள்

நண்பனே நீயும் நானும் சுமந்த வலிகளை
வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது
எத்தனை கஸ்டங்கள்,வேதனைகள்

எதிர்காலம் எப்படி இருக்கும்
என்ற சிந்தனையில் நீயும் நானும்
அலைந்த பொழுதுகளில்

நம் மனதின் கண்ணீர் துளிகளை
நீயும் நானும் மட்டுமே அறிவோம்

நம் கதை மட்டும் காவியமானால்
கர்ணனை உலகம் மறந்துவிடும்
நீயும் நானும் நமது நட்பும்
மாத்திரமே எல்லோறுக்கும்
ஞாபகம் வரும்.

*********************************************************************************
ஒரு நாள் சதீஸ்க்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.சித்தப்பாவுக்கு தெரிந்த ஒருவர் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கார் இப்படி உங்கள் அண்ணாவைக்(சதீஸின் அப்பா)கண்டேன் என்று.சித்தப்பாவும் எங்கே என்று விசாரித்ததில் சதீஸின் அம்மா,அப்பா இருக்கும் இடம் தெரிந்தது.சதீஸ்க்கு மீண்டும் புதிகாக பிறந்தது போல உணர்ந்தான்.அவன் அப்போது அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.அவனது அப்பா அம்மாவையும் சித்தப்பாவீட்டிற்கே அழைத்துவந்துவிட்டான்.

யுத்தம் உக்கிரமடைந்தது.வெளியில் நடமாடவே முடியாத நிலை பதுங்குழிக்குள்ளே வாழ்க்கை


30 வருடங்களுக்கு மேல் நிலவிய யுத்ததிற்கு முடிவுரை எழுதப்படுகின்ற அறிகுறிகள் மெல்ல மெல்ல தெரியத்தொடங்கின.

(தொடரும்)







Post Comment

9 comments:

பாலா said...

வெகு நாட்களாக பதிவுலகம் வராததால் நிறைய மிஸ் செய்து விட்டேன். இனி தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன். நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@பாலா

வாங்க பாஸ் எப்படி சுகம் உங்களை சந்திப்பதில் மகிழ்சி வாழ்த்துக்களையும் பதிவு செய்துகொள்கின்றேன்

ஹேமா said...

தாயாக அண்ணி கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் ராஜ்.அப்பா அம்மா கிடைத்துவிட்டார்களா...கடவுளுக்கு நன்றி....தொடருங்கள் !

முற்றும் அறிந்த அதிரா said...

இங்கேயும் ராகுலோ?:).

நான் ஆரம்பத்தில் இருந்து இன்னும் படிக்கவில்லை.. இத்தொடரே அருமை..

K.s.s.Rajh said...

@ஹேமா

உங்கள் வரவுக்கு நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@athira

உண்மையாகவே அவரது பெயர் ராகுல்தான்(மற்றும்படி திட்டமிட்டு குறிப்பிடவில்லை அக்கா)

வரவுக்கு நன்றி அக்கா

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்... அடுத்த பகுதியை படிக்க...
tm3

தனிமரம் said...

அழகான நண்பன் பற்றிய கவிதை நிறைய இந்த தொடரில் உன் சிரத்தை புரிகின்றது இன்னும் முன்னேறு வாழ்த்துக்கள் நிறைய சந்தோஸம் ஒரு வாசகனாக !இந்த பதிவில்!ம்ம்ம் கீப் இட் அப்!

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails