Thursday, November 22, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -11

அண்ணியின் உறவினர் ஒருவர் வந்து சொன்ன செய்தி.எரிகணை விழுந்து அண்ணியின்.அம்மாவும்,அப்பாவும் சம்பவ இடத்திலயே இறந்துவிட்டார்கள் என்று.அண்ணியின் அம்மாவும் அப்பாவும் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருந்தார்கள்.அண்ணி ஒரே பிள்ளை அவர்களுக்கு.

யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருந்த நேரம் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு எரிகனைகளும்,துப்பாக்கி சன்னங்களும் மழையாக பொழிந்துகொண்டு இருந்தன எனவே அண்ணியின் அப்பா,அம்மா இறந்த இடத்திற்கு அப்போது நிறைமாதக் கர்பிணியாக இருந்த அண்ணியை அழைத்துச்செல்லவது ஆபத்தானது என்பதால் அண்ணா மாத்திரம் போய் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டு வந்தார்.

இறந்த தாய் தந்தை முகத்தை கூட இறுதியாக பார்க்க முடியாத அண்ணியின் மன நிலை எப்படி இருந்திருக்கும். எத்தனை ஆயிரம் மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டு இருக்கும் கொடுமையிலும் கொடுமையான சூழல் அது.

வன்னியில் வாழ்ந்த ஓவ்வொறு மக்களின் மனங்களும் மறக்க நினைக்கின்ற மறக்க முடியாத வலிசுமந்த நினைவுகள் சாவின் விளிம்புவரை சென்று மீண்ட  அந்த நாட்களை மறக்கத்தான் நினைக்கின்றோம்.

எல்லா மக்களும் ராணுவத்திடம் சென்றுகொண்டு இருந்தார்கள்.கனிசமான இடங்களை ராணுவத்தினர் கைப்பற்றிவிட்டார்கள் சதீஸ் குடும்பம் இருந்த இடத்தில் இருந்த மக்களும் ராணுவத்திடம் செல்வதற்காக பதுங்கு குழியைவிட்டு வெளியே வரவும் அந்த இடத்திற்கு ராணுவம் வரவும் சரியாக இருந்தது.

பயம் வேணாம்.நாங்க ஒங்களை மீட்கத்தான் வந்து இருக்கோம் அப்பி ஓக்கோல்லன்ங்கே யாலுவா என்று தமிழிலும் சிங்களத்திலும் ராணுவத்தினர் பேசினார்கள்.

அந்த பிரதேசத்தில் இருந்த மக்கள் அனைவருக்கும் யுத்தம் இல்லாத பாதுகாப்பான இடத்திற்கு போகப்போகின்றோம் என்ற நிம்மதியுடன்.யுத்தம் நிலவிய அந்த பூமியில் இருந்து வெளியேறினார்கள். மக்கள் ஓவ்வொறுவரின் மனங்களிலும் அப்போது இருந்த ஒரு எண்ணம் யுத்தம் இல்லாத உலகம் வேண்டும் என்பதைத்தவிற வேறு ஒன்றும் இல்லை

அடுத்த சில நாட்களில் 30 வருடங்களுக்கு மேலாக பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவுவாங்கிய யுத்தம் முடிவுக்கு வந்தது.
(முற்றும்)

அப்பி ஓக்கோல்லன்ங்கே யாலுவா -நாங்கள் உங்களின்  நண்பர்கள்
*********************************************************************************
அன்பு நண்பர்களே
இந்த தொடர் பற்றிய அறிமுகப்பதிவிலே நான் குறிப்பிட்டு இருந்தேன் இந்த தொடரை அரசியல் சார்ந்து நோக்காதீர்கள் என்று.இப்போதும் அதையே சொல்கின்றேன் இந்த தொடரை அரசியல் சார்ந்த கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டாம்.காரணம் இது அரசியல் ரீதியிலான தொடர் இல்லை.

அதைவிட இந்த தொடரின் நோக்கம் எமது வலிகளையும் வேதனைகளையும் சொல்லி அனுதாபம் தேடுவதும் இல்லை

யுத்தம் நிலவிய ஒரு மண்ணில் பிறந்து அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்கையில் யுத்தம் ஏற்படுத்திய வலிகளையும்,வேதனைகளையும் பதிவு செய்யவேண்டும் என்பதே என் விருப்பம்.

வன்னியில் வாழ்ந்த மக்களின் வலிகளையும் வேதனைகளையும் முழுமையாக எழுத்தில் கொண்டுவரமுடியாது.என்னால் முடிந்தளவு எங்கள் மண்ணில் நான் பார்த்த வலிகளையும் வேதனைகளையும் ஒரு சாதாரன மனிதனின் பார்வையில் பதிவு செய்துள்ளேன்.

இந்த தொடரை ஆரம்பிக்கும் போது இதற்கு வரவேற்பு இருக்குமா? என்ற ஒரு கேள்வி என் மனதில் இருந்தாலும்.காரணம் பதிவுலகில் தொடர்களுக்கு பெரிதாக வரவேற்பு குறைவு என்பதே உண்மை.ஆனால் சில பதிவுகளுக்கு  எத்தனை பேர் படிக்கின்றார்கள் என்பதைவிட அந்த பதிவுகளை எழுதுவதால் ஒரு ஆத்மதிருப்த்தி ஏற்படும்.மனதின் சுமைகள் குறைவடையும்.அந்த நோக்கத்தில் தான் இந்த தொடருக்கு வரவேற்பு இருந்தாலும் இருக்காவிட்டாலும் தொடர்ந்து எழுதினேன்.


எனது மண்ணின் வலிகளையும் வேதனைகளையும் ஓரளவு பதிவு செய்தேன் என்ற திருப்தியுடன் இந்த தொடரை நிறைவு செய்கின்றேன்.தொடர்ந்து இந்த தொடருக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்



Post Comment

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த தொடரை அரசியல் ரீதியாக எண்ணவே முடியாது... நடந்த சம்பவங்களை படிக்கும் போது மனதிற்குள் வேதனைகள் தான் மேலோங்குகிறது...

நன்றி நண்பரே...
tm2

MANO நாஞ்சில் மனோ said...

யுத்தம் இல்லாத உலகம் வேண்டும், ஜனங்கள் நிம்மதியை சுவாசிக்கவேண்டும்

தனிமரம் said...

தொடர் ஒரு சுகம் அதுவும் வேதனையான கால கட்டத்தில் அரசியல் சாராமல் ஒரு நடுநிலை வாதியாக காலச்சக்கரத்தில் நிறைவாக ஒரு பவர் புல் ஊடக வாதியாக நல்ல ஒரு மற்றைய தொடரினை தந்து இருக்கும் திருவாளர் ராச்க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !

தனிமரம் said...

யுத்தமே போ போ நிம்மதியே வா வா என்று எல்லோரும் சொல்லுவோம் அப்பி ஒக்கலோங்கே யாலுவ! சாமய அப்பே பிரார்த்தனவா!ம்ம்ம் அப்பி சாமானிய மினிசுங்!ம்ம்ம்

ஹேமா said...

ராஜ்...இதை வாசிப்பவர்கள் குறைவானாலும் இது எமக்கான அச்சுப்பதிப்பு.எம் தலைமுறைக்கான எம் அறிமுகம்.தேவையான ஒன்றை முடிந்தளவு திறமையாக எழுதி முடித்திருக்கிறீகள்.வலிகளை உணர்ந்த வாழ்த்துகள் !

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்
வணக்கம் பாஸ் உங்கள் தொடர்ச்சியான வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@MANO நாஞ்சில் மனோ
////யுத்தம் இல்லாத உலகம் வேண்டும், ஜனங்கள் நிம்மதியை சுவாசிக்கவேண்டும்////இது ஒன்றுதான் எங்கள் விருப்பம் பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்
////தொடர் ஒரு சுகம் அதுவும் வேதனையான கால கட்டத்தில் அரசியல் சாராமல் ஒரு நடுநிலை வாதியாக காலச்சக்கரத்தில் நிறைவாக ஒரு பவர் புல் ஊடக வாதியாக நல்ல ஒரு மற்றைய தொடரினை தந்து இருக்கும் திருவாளர் ராச்க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !////

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்
////
யுத்தமே போ போ நிம்மதியே வா வா என்று எல்லோரும் சொல்லுவோம் அப்பி ஒக்கலோங்கே யாலுவ! சாமய அப்பே பிரார்த்தனவா!ம்ம்ம் அப்பி சாமானிய மினிசுங்!ம்ம்ம்////

அப்பி ஒக்கலோங்கே யாலுவ! சாமய அப்பே பிரார்த்தனவா!ம்ம்ம் அப்பி சாமானிய மினிசுங்

K.s.s.Rajh said...

@ஹேமா
////
ராஜ்...இதை வாசிப்பவர்கள் குறைவானாலும் இது எமக்கான அச்சுப்பதிப்பு.எம் தலைமுறைக்கான எம் அறிமுகம்.தேவையான ஒன்றை முடிந்தளவு திறமையாக எழுதி முடித்திருக்கிறீகள்.வலிகளை உணர்ந்த வாழ்த்துகள் ////
உண்மைதான் அக்கா
எனக்கும் ஏதோ நீண்டநாட்களாக மனசில் இருந்த ஒரு பாரத்தை இறக்கிவைத்தாற்போல ஒரு உணர்வு

வரவுக்கு நன்றி அக்கா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails