Tuesday, November 27, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-10

நான் ஒரு கங்குலி ரசிகன் என்பதில் பெருமையடைகின்றேன்.சராரசி கிரிக்கெட் ரசிகன் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை பலரை தாதா ஏதோ ஒருவிதத்தில் ஈர்த்தார் என்பது மறுக்கமுடியாது.


ஆஸ்ரேலிய கேப்டன் மைக்கல் கிளாக் கடந்த ஜ.பி.எல் போட்டிகளின் போது தாதா தலைமையிலான புனேவாரியஸ் அணியில் விளையாட தேர்வானபோது கூறினார்.மிகச்சிறந்த அணித்தலைவரான கங்குலியின் தலைமையில் விளையாடுவது தனக்கு பெருமை என்று.


கிரிக்கெட் உலகில் தோன்றிய கேப்டன்களில் கங்குலிதான் மிகச்சிறந்த கேப்டன் என்று கூறமுடியாது.ஆனால் மிகச்சிறந்த கேப்டன்களை வகைப்படுத்தினால் அதில் கங்குலியின் பெயரை தவிர்க்கமுடியாது.


ஆக்ரோசமான தலைமைத்துவம்,ஆடுகளத்தில் நகத்தை கடித்துக்கொண்டே பீல்டிங் செட் பண்ணும் அந்த ஸ்டைல்,இமாலய சிக்சர்கள்,எத்தனை பீல்டர்களை ஆப் திசையில் நிறுத்திவைத்தாலும் அவர்களைத்தாண்டி பவுண்ட்ரி அடிக்கும் ஆப் திசையின் கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட கங்குலியின் ஆட்டத்தை இனி ஆடுகளத்தில் பார்க்கமுடியாதது வருத்தம் தான்.


முதல் தரபோட்டிகளில் இருந்தும் ஒய்வு பெருவதாக அண்மையில் தாதா அறிவித்தார்.அவர் ஒரு சர்வதேச கிரிகெட் அணிக்கு பயிற்சியாளராக வரவேண்டும் என்பது ஒரு ரசிகனாக என் விரும்பமாகும்.


நான் பதிவுலகிற்கு வந்ததே தாதா பற்றிய ஒரு தொடர் எழுதவேண்டும் என்பதற்காகத்தான்.ஆனால் இரண்டு வருடங்களுக்கு பிறகே என் எண்ணம் நிறைவேறியது.ஆனாலும் ஒரு கவலை இந்தத்தொடரில் முழுமையாக கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையை பதிவு செய்யவில்லை.சிலவிடயங்களைத்தான் பதிவு செய்துள்ளேன்.


வாழ்நாளில் ஒரே ஒரு முறை கங்குலியை நேரில் பார்த்து பேசவேண்டும் என்பது என் ஆசையாகும்,அதைவிட கங்குலி பற்றிய ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் பார்போம் சந்தர்ப்பம் கிடைக்கின்றதா என்று.
(முற்றும்)

இந்தத்தொடரின் முன்னய பகுதிகளைப்படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா தொடர்

படங்கள்-பேஸ்புக் மற்றும் இணையத்தேடலில் பெறப்பட்டவை நன்றி
இந்தத்தொடருக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி


Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்களுடன் தகவல்கள் அருமை நண்பரே...

நன்றி...
tm1

Admin said...

கங்குலியை சந்திக்க விரைவில் வாய்ப்பு கிடைக்கட்டும்..

பாலா said...

கங்குலி பற்றி ஸ்டீவ்வாக் கூறியது மிகச்சரி. கங்குலி பற்றி நீங்கள் புத்தகம் எழுதவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி நண்பரே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails