Friday, November 30, 2012

கிரிக்கெட் உலகின் சக்கரவர்த்தி ரிக்கிபொண்டிங்

ரிக்கிபொண்டிங் கிரிக்கெட் உலகில் என்றும் மறக்கமுடியாத நாமம்,ஒரு சக்கரவர்த்தியாக தனது கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தை கொண்டு சென்றவர்.
சச்சின்,லாரா என்று இரண்டு ஜாம்பவான்கள் ஜொலித்துக்கொண்டு இருந்தகாலத்தில் அவர்களுக்கு இணையாக தனது ஆதிக்கத்தை செலுத்தியவர்.

லாரா,சச்சின் இருவரும் ஜாம்பவான்களாக இருந்தபோதும் கேப்டன்களாக இவர்களால் பெரிதாக சாதிக்கமுடியவில்லை.ஆனால் பொண்டிங் தனது அபாரமான தலைமைத்துவத்தால் அசைக்கமுடியாத ஆஸ்ரேலிய கிரிக்கெட் கோட்டையை கட்டி எழுப்பினார்.எத்தனையோ வெற்றிகள் எத்தனையோ கிண்ணங்களை பொண்டிங் தலைமையிலான ஆஸ்ரேலிய அணி வென்றது.
இதில் இரண்டு உலகக்கிண்ணங்களும் அடங்கும்.


1995ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார் பொண்டிங்.அதே ஆண்டு ஆஸ்ரேலியாவில் பெர்த்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட்போட்டியில் அவருக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது.அந்தப்போட்டியில் 96 ஓட்டங்களை பெற்றார் பொண்டிங் 4 ஓட்டங்களால் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.சமிந்தவாஸின் பந்துவீச்சில் lbw ஆனார்.

இப்போது தனது கடைசி டெஸ்ட் போட்டியையும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதே பெர்த் மைதானத்துல் விளையாடுகின்றார்.சமீபகாலமாக பெரிதாக பிரகாசிக்காத நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்போட்டியுடன் ஒய்வு பெருவதாக அறிவித்துவிட்டார்.கிரிக்கெட் உலகில் இருந்து மிகச்சிறந்த ஒரு வீரர் ஒய்வு பெறுகின்றார்.


2002ம் ஆண்டு ஆஸ்ரேலிய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்பட்ட பொண்டிங்.2004 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்,2003,2007ம் ஆண்டுகளில் பொண்டிங் தலைமையிலான ஆஸ்ரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது,கடந்த உலகக்போப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்ததால் 12 வருடங்கள் தங்கள் வசம் வைத்திருந்த உலகக்கோப்பையை பறிகொடுத்தது ஆஸ்ரேலியா.இதை அடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் பொண்டிங்.இந்தப்போட்டியில் பொண்டிங் சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொண்டிங் சில குறிப்புக்கள்
2005 ஆம் ஆண்டு ஆஸ்ரேலியா தனது முதலாவது 20 ஓவர் போட்டியை நியூஸ்லாந்துக்கு எதிராக விளையாடியது அந்தப்போட்டியில் கேப்டனாக இருந்த ரிக்கிபொண்டிங் ஆட்டம் இழக்காமல் 98* ஓட்டங்களை விளாசினார்

77 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த பொண்டிங் இதில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.வேறு எந்தக்கேப்டனும் இந்த சாதனையை செய்யவில்லை.

ஒரு நாள் போட்டிகளிலும் 229 போட்டிகளுக்கு ஆஸ்ரேலிய அணிக்கு தலைமைதாங்கி அதில் 164 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்.

2003,2007ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பொண்டிங் தலைமையிலான் ஆஸ்ரேலிய அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

1996,1999,2003,2007, நான்கு உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளில் பொண்டிங் விளையாடியுள்ளார் இதில் 1996 ஆண்டு தவிர மற்ற மூன்று முறை ஆஸ்ரேலியா உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஒரு வீரராக 100 டெஸ்ட் வெற்றிகளை ருசித்தவர் இதுவரை பொண்டிங் மாத்திரமே.அதாவது பொண்டிங் விளையாடிய காலத்தில் ஆஸ்ரேலிய அணி வென்ற 100 டெஸ்ட் போட்டிகளில் பொண்டிங் விளையாடியுள்ளார்.இது ஒரு  அரிய சாதனை.

தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இனிங்சிலும் சதம் அடித்த ஒரே ஒரு வீரர் இதுவரை பொண்டிங் மாத்திரமே.

இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரது கடைசி டெஸ்ட் அவருக்கு 168 வது டெஸ்ட் போட்டியாகும் இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டியில்விளையாடிய ஆஸ்ரேலிய வீரரகள் வரிசையில் ஸ்ரிவோக்குடன் இணைந்துகொள்கின்றார்(ஸ்ரிவோக் 168 போட்டிகளில் விளையாடியுள்ளார்.)சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்களில் இது இரண்டாவது இடத்தில் இருக்கின்றது முதலிடத்தில் சச்சின் இருக்கின்றார் அவர் 192 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் இரண்டிலும் தலா 13000க்கு மேல் ஓட்டங்கள் குவித்துள்ளார்,சச்சினுக்கு அடுத்த படியாக இரண்டு வகைப்போட்டிகளிலும் அடுத்த இடத்தில் இருப்பது பொண்டிங்தான்.

இதுவரை பொண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில்
(புள்ளி விபரம் http://www.espncricinfo.com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது நன்றி)
Batting and fielding averages
MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests167285291336625752.212275258.7441621507731960
ODIs375365391370416442.031704680.39308212311621600
T20Is1716240198*28.64302132.7802411180
First-class279476592308925755.36781032980
List A451441531622116441.8034981930
Twenty202322247798*23.85394121.06024613100
Bowling averages

MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests1673558127351/01/054.602.81116.2000
ODIs375515010431/121/1234.664.1650.0000
T20Is17------------
First-class2791476799142/1057.073.24105.400
List A45134926983/343/3433.624.6243.6000
Twenty2023-

கிரிக்கெட் உலகில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரிக்கி பொண்டிங் அவரது சாதனைகளை பட்டியல் இட ஒரு பதிவு போதாது எனவே சிலவற்றைமட்டுமே இங்கே பதிவு செய்துள்ளேன்.அவரது இறுதி டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க ஒரு ரசிகனாக வாழ்த்துகின்றேன்.


என் வயது இளைஞர்களின் கிரிக்கெட் ஹீரோக்கள் ஒவ்வொறுவராக ஓய்வு பெருவது.மனதுக்கு வருத்தம் தான் ஆனால் என்றோ ஒரு நாள் ஒய்வு பெறத்தானே வேண்டும்.

கிரிக்கெட் உலகில் ஒரு சக்கரவர்த்தியின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டது.அவரது அடுத்தகட்ட வாழ்க்கைப்பயணத்துக்கு வாழ்த்துக்கள் 

Post Comment

3 comments:

Admin said...

என்னதான் எதிரணி வீரராக இருந்தாலும் ரிக்கியின் சில ஆட்டங்களை மறக்கவே முடியாது.அவரது ஓய்வு ஆஸ்திரேலியாவிற்கு இழப்பே..

K.s.s.Rajh said...

@Madhu Mathi

நன்றி பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

எதற்கும் அசராமல் ஆடும் அவரின் ஆட்டம் நம்மை அசர வைக்கும்...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails