Tuesday, November 06, 2012

நண்பர்கள் தளத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு

நேற்றுடன் நான் பதிவு எழுத வந்து இரண்டுஆண்டுகள்முடிவடைந்துவிட்டன. இன்று மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கின்றேன்.

எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர என்ன எழுதவேண்டும் என்று தெரியாமல் கிரிக்கெட்டை மட்டுமே நம்பி பதிவுலகில் களம் இறங்கி அப்பறம் படிப்படியாக பல்சுவைப்பதிவுகளையும் எழுதத்தொடங்கினேன்.

இன்று நண்பர்கள் தளம் பல தரப்பட்ட வாசகர்களால் படிக்கப்படுகின்றது மிகவும் சந்தோசம்.

சமூக அக்கறையுடைய சீர்த்திருத்த கருத்துக்களை சொல்லும் பதிவுகளை நான் எழுதியது இல்லை. என் பார்வையில், என் எண்ணங்களில், நான் காணும்,ரசிக்கும் விடயங்களை எழுதுவது என் வழமை.என் எழுத்துக்களையும் ரசித்து எனக்கு அன்பும் ஆதரவும் காட்டிய நண்பர்களுக்கு நன்றி என்று சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை. நீங்கள் எனது குடும்பம் என்றும் நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன் நண்பர்களே.


இந்த இரண்டு வருடங்களில் நான் ஒன்று பெரிதாக எழுதிக் கிழிக்கவில்லை
இதுவரை 234 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கின்றேன்.இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் இப்போது எல்லாம் பதிவுலகில் சீராக இயங்க முடியவில்லை பல நேரங்களில் பதிவுலகில் இருந்து விலகலாமா என்று கூட நினைப்பதுண்டு.ஆனாலும் நண்பர்களின் அன்பு அந்த எண்ணத்தை மாற்றிவிடுகின்றது.

என் தனிமையை போக்கிக்கொள்ள பதிவுலகில் நுழைந்த எனக்கு இங்கே அன்பும் ஆதரவும் காட்ட அக்கா,அண்ணா,மாமா,என பல உறவுகள் கிடைத்தார்கள்.அதுவே போதும் எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை.


இந்த இரண்டு வருடங்களில் நான் எழுதிய பதிவுகளில் ஒரு வாசகனாக எனக்கும் மிகவும் பிடித்த என் டாப்-10 பதிவுகள்

1)ஓவ்வொறு துறைகளிலும் என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பற்றி நான் எழுதிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பிடல் காஸ்ட்ரோ பற்றிய பதிவு இது என்னைக் கவர்ந்த பிரபலங்கள்-ஒரு தேசத்தின் சூரியன்  

2)என்னைக் கவர்ந்த பிரபலங்கள் வரிசையில் கங்குலி பற்றி எழுதிய பதிவுஆளுமையின் சிகரம்

3)என்னைக் கவர்ந்த பிரபலங்கள் வரிசையில் சேகுவரா பற்றி எழுதிய பதிவு பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்

4)ஆங்கில மொழியை இப்படியும் கற்கலாம் என்று நான் ஆங்கில மொழி அறிந்த விதம் பற்றிய பதிவு இப்படியும் ஆங்கிலம் கற்கலாம்

5)சமூக அமைப்பில் வரதட்சனை என்ற ஒரு விடயம் ஒழியவேண்டும் இது பற்றி நான் எழுதிய பதிவு சமூக அமைப்பில் வரதட்சனை ஒழியவேண்டும்

6)இது முதன் முதலில் நான் எழுதி பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை அதை என் தளத்திலும் எழுதியுள்ளேன் விதியின் ரேகை

7)பல பதிவுகள் எழுதியிருக்கேன் ஆனால் கவிதை மட்டும் எனக்கு எழுத வராது நானும் ரவுடிதான் வடிவேல்  ஸ்டைலில் நான் சில கவிதைகள் எழுதியுள்ளேன் அதில் ஒன்று இது வை திஸ் கொலைவெறிடி

8)தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் மார்கபெளச்சர் பற்றி நான் எழுதிய பதிவுமார்க் பெளச்சர் தென்னாபிரிக்காவின் ஒன் மேன் ஆர்மி

9)இது எனது 100வது பதிவாகும் பிரட்மனுடன்  சச்சின்,கலீஸ் போன்ற நிகழ்கால கிரிக்கெட் வீரரகளின் ஒப்பீடு. இது பற்றி ஒரு பதிவு எழுதும் படி நண்பன் மைந்து கேட்டு இருந்தார் அந்தப்பதிவு சச்சின்,கலீஸ் பிரட்மனுடன் ஒப்பிடலாமா?

10)இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் ராவிட் ஓய்வு பெற்ற போது அவர் பற்றி நான் எழுதிய பதிவு ராவிட் போல யாரு மச்சான்?சுவர் இல்லாத சித்திரமாக இந்திய அணி


என் பதிவை பலரிடம் கொண்டு சேர்க்கும் திரட்டிகள் சமூகதளங்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்


எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்


Post Comment

15 comments:

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி நலமா?
மூணாவது ஆண்டில் காலடி வைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.!

பால கணேஷ் said...

இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதி மூன்றாம் ஆண்டில் நுழைந்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தம்பி. சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் தொடர்கிறேர்ம்.

K.s.s.Rajh said...

@காட்டான்

நான் நலம் நீங்கள் எப்படி இருக்கீங்க

நன்றி மாம்ஸ்

K.s.s.Rajh said...

@பால கணேஷ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@dina pathivu

மிக்க நன்றி

தனிமரம் said...

வாழ்த்துக்கள்  ராச் !இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே ஒரு வாசகனாக என் விருப்பம்!

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்... தொடர்ந்து கலக்குங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் ராஜா...

தொடருங்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... தொகுப்பும் அருமை...

நன்றி...

Riyas said...

Best Of Luck!!

செங்கோவி said...

வாழ்த்துகள் கிஸ்.ராஜா.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் நண்பரே! இன்னும் பல சிறப்பான பதிவுகளுடன் தொடருங்கள்! நன்றி!

Anonymous said...

மூணாவது ஆண்டில் காலடி வைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails