Friday, November 16, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -6

2002 இல் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான உடன் படிக்கை கைச்சாத்தானதை தொடர்ந்து யுத்தமழை ஓய்ந்தது.எல்லாமே புதிதாக தெரிந்தது இலங்கையின் தென்பகுதியில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பலர் சுற்றுலாப்பயணிகளாக வன்னிக்கு வந்தார்கள்.அவர்களை எல்லாம் பாக்கின்ற போது அட இவர்கள் மாதிரி சுகந்திரமாக யுத்தம் இல்லாத உலகத்தில் வாழ்வேண்டும் என்று வன்னியில் உள்ள மக்கள் மனங்களில் எண்ணியிருப்பார்கள்

மெல்ல மெல்ல யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் மறையத்தொடங்கின கிளிநொச்சி நகரம் பல அபிவிருத்தி பணிகளை காணத்தொடங்கியது.அங்குள்ள மக்களின் மனங்களில் சோகங்கள் விலகி மகிழ்ச்சி குடியேறத்தொடங்கியது.பொருளாதாரத்தடைகள் இல்லை பொருற்களின் விலைகள் குறையத்தொடங்கியது.


சதீஸ்க்கு ஓரளவு வளர்ந்த பையனாக மாறிவிட்டான்.நண்பர்களே அவன் உலகம் பாடசாலையில் மாலைப்பொழுதுகளில் விளையாட்டு மைதானங்களில் என நண்பர்களுடன் நீண்ட நேரம் அரட்டை அடிப்பது அவனுக்கு பிடித்தமான ஒன்று.

காதல் அது ஒரு அழகான உணர்வு அது எப்ப யார்மேல வரும் என்று சொல்லமுடியாது.கடந்த மூன்று வருடங்களாக அவன் கூட படிக்கும் பிரியாவை அவனுக்கு தெரிந்திருந்தாலும்.2004 ஆண்டு அவனையும் அறியாமல் அவள் அவன் மனதுக்குள் நுழைந்துவிட்டாள்.ஆனால் சதீஸ் தன் காதலை அவளிடம் நேரடியாக கடைசிவரை சொல்லவேயில்லை.பிறகு அவள் 2004ம் ஆண்டின் இறுதியில் அவனது பாடசாலையைவிட்டு விலகி உயர்தரத்திற்காக வேறு பாடசாலைக்கு சென்றுவிட்டாள்.

சதீஸ் அதே பாடசாலையில் உயர்தரக் கல்வியை தொடர்ந்தான்.பிரியாவின் நினைவுகளை அவனால் மறக்கமுடியவில்லை காதலை அவளிடம் சொல்லவும் முடியாமல் அவளை பார்க்கும் போது எல்லாம் அவன் மனம் தவிக்கும் தவிப்பை அவனது மனம் மட்டுமே அறியும்.

ஏதாவது பொதுவான நிகழ்ச்சிகள் நடக்கும் போது கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஒன்றுகூடும் சந்தர்பம் கிடைக்கும்.அப்படியான நிகழ்வுகளை சதீஸ் தவறவிடுவது இல்லை.

வன்னி மக்கள் வாங்கி வந்த சாபம் மீண்டும் பலித்தது சமாதான தேவதை தன் பிடியை மெல்ல மெல்ல தளர்த்தினாள்.யுத்த அரக்கன் அவளை விழுங்கிக்கொண்டு இருந்தான் இறுதியில் சமானாதம் முடிவுக்கு வந்தது மீண்டும் யுத்தம் மழை பொழியத்தொடங்கியது.மீண்டும் மரணஓலங்கள் வீடு தோறும் ஒலித்தது.

ஒரு நாள் கிளிநொச்சியில் நகரில் உள்ள பாடசாலைகளின் உயர்தரமாணவர்களை ஒன்றினைத்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

நிகழ்வு முடிந்ததும் முதல் ஆளாக வெளியில் வந்த சதீஸும்  பிரியாவின் வரவுக்காக காத்திருந்தான்.A-9 வீதியில் அந்த அழகு தேவதை சென்று கொண்டு இருந்தாள்.தொலை தூரம் அவள் சென்று மறையும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தான்.அந்த நீண்ட வீதியைப்போல அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி நீண்டுவிட்டது அதன் பின் மீண்டும் அவளை அவன் பார்கவேயில்லை.
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல 
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை 
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல 
வாயை மூடி அழுமே அதில் வார்த்தை இல்லை 
அன்பே உன் புன்னகை எல்லாம் 
அடி நெஞ்சில் சேமித்தேன் 
கண்ணே என் புன்னகை எல்லாம் 
கண்ணீராய் உருகியதே 
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா 
அதில் கொள்ளை போனது என் தவறா ?

(யூத் பட பாடல் வரிகள்)

உலகமே ஒரு நாடகமேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள் என்று ஒரு கவிஞன் சொன்னது போல இந்த நாடகமேடையில் எமக்கு என்ன பாத்திரம் வழங்கப்படும் என்பதை அதன் இயக்குனர் கடவுளுக்கே தெரியும்.

விதி எழுதிய இந்த நாடகத்தில் விதியின் விளையாட்டில் இருந்து யாரும் தப்பமுடியாது.மனித வாழ்க்கையே வலி நிறைந்ததுதான் எல்லாமனிதர்களின் மனங்களிலும் வலிகள் இருக்கும் ஆனால் ஈழத்தமிழனுக்கு மட்டும்தான் வலியே வாழ்க்கையானது.

அது புலம் பெயர்ந்த ஈழத்தமிழனாக இருந்தாலும் சரி,ஈழத்தில் இருப்பவனாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் வலிகளை,வேதனைகளை துன்பங்களை கண்டிராத ஈழத்தமிழன் யாரையும் பார்க்கமுடியாது.

கடவுளுக்கு ஏன் எங்கள் மீது இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை.அவரது கடைக்கண் பார்வை கூட எங்கள் மீது படவில்லை படைத்ததோடு மட்டும் சரி எங்களை கைவிட்டுவிட்டார்.

வாழ்வதற்குத்தான் எத்தனை வலிகளைதாங்கவேண்டியிருக்கு.என்னதான் துன்பங்கள் கஸ்டங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்ளாம் ஆனால் மரணம் இன்றா நாளையா இந்த நொடியா என்று தெரியாத வாழ்க்கை இருக்கே அது கொடுமையிலும் கொடுமை.

வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்தது போர் வன்னிமக்களுக்கு ஒன்றும் புதியது இல்லை என்பதால் யாரும் அது பற்றி பெரிதாக பயப்படவில்லை ஆனால் இதுதான் இறுதியுத்தம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுவாங்கப்போகின்றது.சோற்றுக்கும் வழியில்லாமல் பசியலும் பட்டினியாலும் வாடப்போகின்றோம்.மீள்வதற்கு வழியேயில்லை.குருதி ஆறு ஓடப்போகின்றது.என்று யாரும் அப்போது நினைத்திருக்கவில்லை.

நன்றாக படிக்கவேண்டும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என ஏங்கிய பலரின் வாழ்க்கையை விதி திசைமாற்றி அவர்களை போராளிகளாக ஆக்கியது.யுத்ததின் முழு சுமையையும் வன்னிமக்கள் தங்கள் தலையில் சுமந்தனர்.
(தொடரும்)

A-9 வீதி-இலங்கையில் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்கின்ற ஹைவே யாழ்ப்பாணம் நோக்கி செல்கின்ற போது வடபகுதியில் வவுனியா,கிளிநொச்சி போன்ற நகரங்களின் ஊடாக இந்த வீதி செல்கின்றது.


Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உள்ள வேதனைகள் (சம்பவங்கள்) முதலில் உள்ள பாடலை, மெல்லிய காதலை மறக்கடிச் செய்து விட்டது...

தொடர்கிறேன்...
tm2

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

வரவுக்கு நன்றி பாஸ்

தனிமரம் said...

ம்ம் தொடரட்டும் வலி !ம்ம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails