Monday, November 26, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-9

இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி கலக்கு கலக்கு என கலக்கியவர் தாதா.பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் கூட விளாசியிருந்தார்.
மீளவும் வந்து சாதித்துக்காட்டி கெளரவமான முறையில் தன் ஓய்வை அறிவித்து எல்லோறின் மனங்களிலும் உயர்ந்து நின்றார் தாதா.


கேப்டனாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அளப்பரிய சேவையாற்றிய தாதாவை கெளரவிக்கும் பொருட்டு தாதாவின் இறுதிடெஸ்ட் போட்டியில் கடைசி கட்டத்தில் தாதாவை கேப்டனாக செயல் படுமாறு கூறினார்.இந்திய அணியின் கேப்டன்  தோனி.

தனது இறுதிசர்வதேசப்போட்டியின் பிறகு ரசிகர்களிடம் கையசைத்து விடைபெறும் தாதா

இது தோனி கங்குலிக்கு வழங்கிய கெளரவமாகும் பல கங்குலி ரசிகர்களின் மனதில் இந்தச்செயல்பாட்டின் மூலம் தோனி உயர்ந்து நின்றார்.

தனது இறுதிடெஸ்ட் போட்டியின் இறுதிக்கட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக தாதா,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின் ஜ.பி.எல் போட்டிகளில் தாதாவை ரசித்த அவரது ரசிகர்களுக்கு பின் கொல்கத்தா அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்ட பின். புனேவாரியஸ் அணிக்காக களம் இறங்கிய போது.

தாதாவின் காலில் வீழ்ந்து வணங்கும் ரசிகர் அருகில் நிற்பது போட்டி நடுவர் மற்றும் யுவராஜ் சிங்

நீண்டநாட்களுக்கு பின் அவரை ஆடுகளத்தில் பார்த ஒரு ரசிகர் பாதுக்காப்பையும் மீறி ஆடுகளத்தில் ஓடி தாதாவின் காலில் வீழ்ந்து வணக்கிய சம்பவம் தாதா மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்புக்கு சாட்சி. எனக்குத்தெரிய எந்த கிரிக்கெட் வீரரின் ரசிகர்களும் இப்படி இருந்தாக அறிந்ததுஇல்லை இதுதான் தாதாவின் சிறப்பு.

கங்குலி பங்கு பற்றிய மூன்று உலகக்கிண்ண போட்டிகளில் அவரது பெறுபேருகள்,இதில் 2003 ஆண்டு கேப்டனாக இருந்தபோது இந்திய  அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்று இருந்தார்.


ரசிகர்களின் நாயகன் என்றும் தாதாவைச்சொல்லாம்,தாதா ஒய்வு பெற்றதும் பல கிரிக்கெட் பார்பதையே நிறுத்திக்கொண்டனர் என்பதும் உண்மை.அந்தளவுக்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகன்.

எனது இந்த தொடர் பற்றி கருத்து தெரிவித்த நண்பர் ஒருவர் சொன்னார்.கங்குலி என்ற பெயரைக்கேட்டாலே தான் அளவற்ற சந்தோசம் அடைவாராம் தாதா பற்றிய தொடர் என்றால் கேட்கவா வேணும் என்று.இப்படி ரசிகர்களின் அன்பை பெற்ற தாதாவை மீண்டும் கிரிக்கெட் ஆடுகளத்தி பார்க்கமுடியாதே என்ற வருத்தம் அவரின் ரசிகர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றது.

ஆனால் கிரிக்கெட்டில் இருந்து தாதா ஓய்வு பெற்றாலும் தற்போது வர்ணனையாளராக இருக்கின்ற படியால் அவரின் நேரடி வர்ணனையை கேப்பதற்கே என்னை போன்ற அவரது ரசிகர்கள் இப்ப எல்லாம் போட்டிகளை பார்க்கின்றோம்.

ஆனால் தாதா பயிற்சியாளராகவும் அடுத்த இனிங்சை தொடங்கவேண்டும் என்பது என்னைப்போன்ற அவார்து ரசிகர்களின் எதிர்பார்பாகும்

(தாதா இன்னும் வருவார்)

இந்தத்தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா தொடர்

படங்கள்-பேஸ்புக்,மற்றும் கூகுள் தேடலில் பெறப்பட்டவை நன்றி

Post Comment

4 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

திண்டுக்கல் தனபாலன் said...

வர்ணனையிலும்-தாதா தான்...

K.s.s.Rajh said...

@dinapathivukal

உங்கள் அழைப்பிற்கு நன்றி கண்டிப்பாக வருகின்றேன்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

உண்மைதான் பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails