Saturday, November 17, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -7

மீண்டும் கிளிநொச்சியில் இருந்து இடப்பெயர்வு பரத்தன் சந்தியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்கின்ற A-35 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்கலான தர்மபுரம்,விசுவமடு,தேவிபுரம்,போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் பிறகு அங்கியிருந்தும் இடம் பெயர்ந்து இறுதியாக வந்து சேர்ந்த இடம் மாத்தளன்,பொக்கனை,முள்ளிவாய்க்கால்.

பல ஆயிரம் உயிர்களை காவிவாங்கிய இறுதியுத்தம் முடிவுக்கு வந்த இடம் தான் முள்ளிவாய்க்கால் ஒரு கடற்கரை ஓர கிராமம் என்பதை தவிர ஈழத்தில் பெரிதும் அறியப்படாத இடம். இன்று வரலாற்றில் கறைபடிந்த பூமியாக மாறிவிட்டது.

ஒரு குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பிற்குள்,கிளிநொச்சி,முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களின் முழு மக்கள் தொகையும் ஒதுங்கினால் எப்படி இருக்கும் 
அதுவும் யுத்தம் மழைபோல அந்தப்பகுதியில் பொழிந்தால்.சற்று கற்பனை செய்து பாருங்கள்.கற்பனை செய்யவே முடியாமல் இருக்கும் உங்களுக்கு ஆனால் அங்கு வாழ்ந்த மக்களின் மனநிலை எப்படி இருந்து இருக்கும்.

எரிகணைகளில் இருந்து பாதுக்காப்பாக இருக்க பங்கர் வெட்டி இருப்பார்கள்..எரிகனை பட்டு அப்பாவோ இல்லை அம்மாவோ இல்லை அண்ணாவோ இல்லை அக்காவோ இல்லை மனைவியோ இறந்தால் இறுதிக்கிரிகைகள் எல்லாம் செய்வது இல்லை உயிரை காக்க வெட்டிய அந்த பதுங்கு குழியிலே போட்டு மூடிவிட்டு அடுத்த இடத்திற்கு மீண்டும் இடப்பெயர்வு.

சரியான மருத்துவ வசதிகள் இல்லை,உணவு இல்லை,பசி பட்டினி தொடர்ந்து 24 மணிநேரமும் பதுங்கு குழிக்குள்ளே வாழ்க்கை.

இது எல்லாம் ஏ.சி.ரூமில் பஞ்சனையில் படுத்துக்கொண்டு.சகல சுகபோகங்களையும் வாழ்க்கையில் அனுபவித்துவிட்டு தங்கள் அரசியல் சுயலாபத்துக்காக மீண்டும் மீண்டும் ஈழத்தமிழருக்கு அது செய்கின்றேன் இது செய்கின்றேன் தனி ஈழம் அமைப்பேன் என்று கூச்சல் போடும் கலைஞர் போன்ற........................பிறவிகளுக்கு தெரியுமா? எங்கள் வலிகள் வேதனைகள்
உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் எங்களை வைத்து உங்கள் அரசியலுக்கு சுயலாபம் தேடாதீர்கள்.

சிவப்பு வரிகளில் குறிப்பிடப்பட்ட வசனங்களுக்காக யாரும் செம்பை தூக்கிக்கொண்டு பஞ்சாயத்து பண்ணவெளிக்கிட்டால் அது பற்றி எனக்கு கவலையில்லை.அவர்களுக்கு எல்லாம் என் பதில் ஒன்றுதான் இங்கே வந்து பாருங்கள் போரினால் பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் இருக்கின்றார்கள் நீங்கள் உண்மையிலே ஈழத்தமிழனுக்கு ஏதும் செய்ய நினைத்தால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஏதும் முயற்சிகள் எடுங்கள்
அப்படி உங்களால் ஏதும் உதவிகள் செய்யமுடியாவிட்டால் பேசாமல் உங்கள் வேலையைப்பாருங்கள் எங்களை வைத்து உங்கள் அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.

இறுதியுத்ததில் சதீஸ் குடும்பமும் ஊர் ஊராக இடம் பெயர்ந்து கொண்டு இருந்தது.வீட்டுப்பொருற்களை ஏற்றிக்கொண்டு இந்த இடத்திற்கு போங்கள்  நான் எஞ்சிய பொருற்களை எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்று சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு.பொருற்களை எடுத்துவிட்டு தான் சொல்லிய இடத்தில் போய் பார்த்த சதீஸ்க்கு அதிர்ச்சி அங்கே அவனது குடும்பம் இல்லை கடுமையாக எரிகனைகள் விழுந்தால் அந்த இடத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டார்கள் போல அங்கே மக்கள் யாரும் இல்லை

தனித்துவிடப்பட்ட சதீஸ் தனது குடும்பத்தை தேடி அலைந்துகொண்டு இருந்தான்.தொலைபேசிகளோ,கடிதங்களோ இல்லை,வேறு எந்த தொலைத்தொடர்பு வசதிகளோ இல்லை.ஒரு இடத்தில் இன்று இருக்கும் மக்கள் நாளை அதே இடத்தில் இருக்க மாட்டார்கள் இப்படியிருக்க எங்கோ ஒருவரை கண்டு பிடிப்பது.இப்படியான சூழ்நிலையில் சதீஸ் தனது குடும்பத்தை தேடிக்கொண்டு இருந்தான்.

ஒரு நாள் அவனது  குடும்பத்தை தேடிசெல்லும் போது பலத்த சத்ததுடன் எரிகனை ஒன்று அவன் தலைக்கு மேல் இருந்த மரத்தில் விழுந்தது.

ஒரு எரிகனையின் சத்தத்தை வைத்தே அது எங்கே விழப்போகின்றது என்று கணிக்கும் திறன் வன்னிமக்கள் ஒவ்வொறுவரிடமும் இருக்கு காரணம் அன்றாடம் யுத்தமழையில் வாழ்க்கை என்பதால் அவர்களுக்கு அது பழக்கப்பட்டவிடயம்.

ஒரு கணம் சுதாகரித்துக்கொண்ட சதீஸ் நிலத்தில் விழுந்துபடுத்துக்கொண்டான்.பலத்த சத்ததுடன் எரிகனை வெடித்தது.தொடர்ந்தும் சில எரிகனைகள் அந்தப்பகுதியில் விழுந்துவெடித்தன.

சிறிது நேரத்தில் சத்தங்கள் எதுவும் இல்லை நிலத்தில் இருந்து சதீஸ் எழுந்தான் அவனால் எழுந்திருக்கமுடியவில்லை அவனது வலது காலை அசைக்கமுடியவில்லை.

மெதுவாக தலையை திருப்பி பார்த்தான் வலது காலில் இருந்து இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.உடனே தலையை திருப்பிவிட்டான். காலை இழந்துவிட்டேன் என்று அவனுக்கு தெரிந்தது ஆனால் கால்முழுமையாக சிதைந்துவிட்டதா இல்லை கொஞ்சம் இருக்கின்றதா என்று அவனால் கணிக்கமுடியவில்லை அவனை அறியாமல் அம்மா என்று கத்திவிட்டான்.ஒரு இரண்டு நிமிடம் அப்படியே அசையாமல் கிடந்தான் பிறகு சுதாகரித்துக்கொண்டு.மெதுவாக மீண்டும் பார்த்தான்.

முழங்கால் வரை கால் தெரிந்தது முழங்கால் வரை ஒரு பாதிப்பும் இல்லை என்று எண்ணிக்கொண்டு மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தான் அப்போதுதான் பார்த்தான் அவன் காலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை பாதத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது அதில் இருந்துதான் குருதி பெருகிக்கொண்டு இருந்தது.ஆனாலும் அவனால் காலை அசைக்கமுடியவில்லை.

தனது கைக்குட்டையால் காயத்துக்கு ஒரு கட்டுப்போட்டான்.மெதுவாக எழுந்து அந்த இடத்தைவிட்டு நகரமுயன்றான் முடியவில்லை ஒரு கம்பின் உதவியுடன் ஒற்றைக்காலில் கெந்திக் கெந்தி நடந்தான்.அப்போது அந்த வழியால் ஒரு டக்டர் வந்துகொண்டு இருந்தது.அதை மறித்து அதில் ஏறினான்.

எங்கே போவது என்று தெரியாது,ஏற்கனவே தாய் தந்தையை தவறவிட்டு தேடிக்கொண்டு இருந்தான்.கையில் இருப்பதோ இரண்டாயிரம் ரூபா பணம்.அதை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு வாழ்க்கையை ஓட்டுவது.இப்போது காலில் வேறு காயம் பட்டு நடக்க முடியவில்லை.
அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது அவனது சித்தப்பா ஒருவர்.
அருகில் இருக்கும் ஊரில் இருக்கின்றார்.இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை அங்கே போகலாம் என்று.ஆனால் அவரது முகவரி அவனுக்கு சரியாகத்தெரியாது.

அதைவிட அவர் அதே ஊரில் இருப்பார் என்று நிச்சயம் சொல்லமுடியாது காரணம் அவரும் இடம் பெயர்ந்து இருக்கலாம்.ஆனாலும் நம்மிக்கையை தளரவிடாது சதீஸ் இருந்தான்.

தம்பி நான் நேராக போகப்போறேன் நீங்க எங்க இறங்கப்போறீங்க என்று டக்டரை ஓட்டி வந்தவர் கேட்டார் நான் இதுல இறங்கிக்கொள்கின்றேன் அண்ண என்று அந்த இடத்தில் இறங்கினான் ஆனால் அவனால் நடக்கமுடியவில்லை
கம்பின் உதவியுடன் ஒற்றைக்காலில் தாண்டித் தாண்டி சித்தப்பா இருக்கும் ஊரை நோக்கி மெதுவாக நடந்தான் ஒரு கிலோமீற்றர் தூரம் நடந்திருப்பான்.

அங்கு வீட்டு பொருற்களை ஏற்றிக்கொண்டு இருந்த ஒருவரிடம் விசாரித்த போது.அங்கே இருந்த மக்கள் எல்லோறும் வேறு இடத்திற்கு போய்விட்டார்கள் அங்கே இப்ப ஒருவரும் இல்லை என்றார் அவர்

இல்லை அண்ண நான் போய் பார்கின்றேன் என்று சதீஸ் அவரது பேச்சை பொருற்படுத்தாமல் சென்றான் அவரோ தம்பி இப்ப நேரம் இரவு 11 மணிக்கு மேலாகுது உனக்கோ காலில் காயம் வேறு இந்த நிலையில் நீ எப்படி போவாய்.இங்கே இருந்த சனம் எல்லாம் ரோட்டுக்கு மறுபக்கம் இருக்குதுகள் காலையில் போய்விசாரிச்சுப்பார் என்றார்.

அவனது ஒரே நம்பிக்கையும் தகர்ந்தது.ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் எஞ்சி நின்ற அவனது தன்னம்பிக்கை நான் இருக்கின்றேன் தைரியமாக இரு  சதீஸ் என்று ஆறுதல் சொன்னது. அருகில் இருந்த ஒரு கடையில் இருவர் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் கேட்டு அன்று இரவு அங்கே தங்கினான்.

காலை விடிந்தது.இப்போது கால் அதிகமாக வீங்கிவிட்டது அசைக்கவே முடியவில்லை.ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் எழுந்து கம்பின் உதவியுடன் ரோட்டிற்கு அந்தப்பக்கம் நடக்கத்தொடங்கினான்.
(தொடரும்)




Post Comment

9 comments:

சிகரம் பாரதி said...

Arumaiyaana padhivu. Vaalththukkal. Nenjai negila vaikkum varigal. Arumaiyaaga eludhugireergal. Thodarungal. Pls visit my site.

http://newsigaram.blogspot.com/2012/11/iniyavai-irubadhu-46-12.html

திண்டுக்கல் தனபாலன் said...

பட்டால் தானே தெரியும் என்பார்கள்... ஆனால் பட்டது கொஞ்ச நஞ்சமல்ல என்பது புரிகிறது...

தொடர்கிறேன் நண்பரே...
tm2

K.s.s.Rajh said...

@சிகரம் பாரதி

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி பாஸ்

தனிமரம் said...

யுத்தம் வலிகளை மட்டும்மல்ல வாழ்க்கையின் போராட்டத்தையும் எழுதிச்சென்றுவிட்டு இருக்கின்றது இருப்பது தன்நம்பிக்கை ஒன்றே!ம்ம் தொடரட்டும் இன்னும்....தொடர்!

ஹேமா said...

வாசிக்க வாசிக்க ...சொல்லமுடியாத உணர்வுகள் ராஜ்.நாங்கள்....எப்படியெல்லாம்....இனி நாங்கள் எப்படி ?

K.s.s.Rajh said...

@தனிமரம்

தன்னம்பிக்கை உடைய மனிதன் என்றும் தோற்பதில்லை பாஸ்

K.s.s.Rajh said...

@ஹேமா

எமது வலிகளை முழுமையாக எழுத்தில் வடிக்கமுடியாது அக்கா என்னாம் முடிந்தளவு இதை பதிவு செய்யவேண்டும் என்பதே என் எண்ணம்

K.s.s.Rajh said...

@ஹேமா

பாவப்பட்டர்கள் தானே அக்கா நாங்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails