Tuesday, November 20, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -9

இதுதான் சதீஸ் அண்ண அவர் சொன்ன இடம். இருங்க விசாரிச்சுப்பார்போம் என்று சைகிளை ஓட்டி வந்த பையன் சொல்லிவிட்டு அருகில் நின்ற ஒருவரிடம் சதீஸின் சித்தப்பாவின் பெயரை சொல்லி விசாரித்தான்.அவரும்
அதோ அங்கே தான் இருக்கின்றார்கள் நேற்றுத்தான் எங்கோ இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்தார்கள் என்றார்.

அவர் சொன்ன வீட்டில் போய் கூப்பிட்டார்கள்.கடவுள் முதன் முறையாக சதீஸ்க்கு உதவிசெய்தார் ஆம் அது அவனது சித்தப்பாவின் வீடுதான்.
தன்னை அழைத்து வந்த பையனிடம் நன்றி தம்பி என்று சொன்னபோது அவன் சொன்னான்.அண்ணே அன்று நீங்கள் செய்த உதவியைவிட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை நான் போய்வருகின்றேன். மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றான்.ஆனால் அதுக்கு பிறகு அந்த பையனை சதீஸ் மீண்டும் சந்திக்கவேயில்லை.

சித்தி,சித்தப்பாவிடம் இப்படி அப்பா அம்மாவை தவறவிட்டு விட்டதாகவும் அவர்களைத்தேடிக்கொண்டு இருக்கின்றேன் என்றும் அவர்கள் பற்றி ஏதும் தகவல் தெரியுமா என்று கேட்டபோது.

சித்தப்பா சொன்னார் முத்துராம்(இன்னும் ஒரு சித்தப்பா) இங்க பக்கத்தில் தான் இருந்தான்.அவனிடம் கேட்டால் தெரியும் நாளைக்கு கேட்போம்.முதலில் உன் காயத்துக்கு மருந்து கட்டுவோம் வா என்று அந்த காணிக்குள் இடம்பெயர்ந்து வந்து மெடிக்கல்ஷாப் வைத்திருந்த ஒரு மருத்துவரிடம் சதீஸ் காயத்துக்கு மருந்துகட்டினார்கள்.

சித்தப்பா வீட்டில் இன்னும் ஒரு குடும்பமும் இடம்பெயர்ந்து வந்து இருந்தார்கள் அது யார் என்று விசாரித்த போது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்) நண்பரின் குடும்பம் என்று சொன்னார்கள்.அண்ணாவும்,அண்ணியும் இங்கே எரிகனைகள் அதிகமாக விழுவதால் மாத்தளனுக்கு போய்விட்டார்கள்.நாங்களும் இன்னும் இரண்டு நாளில் அங்கே போயிருப்போம்.நல்லகாலம் நீ இப்ப வந்ததுவிட்டாய் இல்லாவிட்டால் எங்களையும் தவறவிட்டு இருப்பாய் என்று சித்தப்பா சொன்னார்.

சித்தப்பா வீட்டில் இருந்த அண்ணாவின் நண்பரின்   மனைவியின் தங்கை ஒருத்தி இருந்தாள் அவளுக்கு ஒரு 18 வயது இருக்கும். அவள் பெயர் வானி அந்தப்பெண் சதீஸ் சித்தப்பா வீட்டிற்கு போன முதல் நாளிலே அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.ஒருவேளை புதிதாக வந்திருப்பதனால் பார்கின்றாள் என்று சதீஸ் நினைத்தான்.ஆனால் அடுத்தநாள் அந்த பெண் செய்தகாரியம் அவனுக்கு ஒரு பக்கம் அதிர்சியையும் மறுபக்கம் கோபத்தையும் வரவழைத்தது. 

ஒரு பேப்பரில் I LOVE YOU என்று எழுதி சதீஸிடம் தந்தாள்.அதுவரை சினிமாவில் மட்டுமே கண்டதும் காதல் என்ற விடயத்தை பார்த்த சதீஸ்க்கு நிஜத்தில் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.அதுவும் தன்னிடம் ஒரு பெண் காதலை சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை.பார்த்த உடன் ஒரு பெண் மயங்கும் அளவுக்கு அவன் ஒன்றும் மன்மதன் எல்லாம் இல்லை தனுஸ் சொல்வது போல என்னை மாதிரி பசங்களை எல்லாம் பார்த்த உடன் பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் ரகம் சதீஸ்.ஆனால் அவனை பார்த்து அடுத்த நாளே அந்தபெண் காதலை சொன்னதை அவனால் நம்பமுடியவில்லை.

ஒருவேளை லூசாக இருக்குமோ.என்று கூட நினைத்தான் அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை பேசாமல் இருந்துவிட்டான்.ஆனால் மறுநாள் அவளே சதீஸிடம் வந்து நேற்று கேட்டதுக்கு என்ன பதில் என்றால்

நீங்க என்ன லூசா தங்கச்சி நேத்துதான் என்னை பார்த்தீங்க உடனே லவ் பண்ணுவதாக சொல்லுறீங்க என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் நான் யார்? என் கடந்தகாலம் இது எல்லாம் தெரியுமா?.நானே வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டு இருக்கேன் இந்த லட்சனத்தில் லவ்வுக் கிவ்வும் போங்க தங்கச்சி போய் வேலையைப்பாருங்க.கடுமையாக அவளை திட்டிவிட்டான் அவள் அழுதுகொண்டே போய்விட்டாள்.

ஆனால் அவளது சேட்டைகள் தொடர்ந்தது,சித்தப்பா குடும்பமும் அவர்களும் ஒரே சமையல் தான் எனவே எல்லோறும் ஒன்றாகத்தான் சாப்பிவார்கள் பெரும்பாலும் வானிதான் எல்லோறுக்கும் உணவு பறிமாறுவாள்,சாப்பாடு கொடுக்கும் சாட்டில் கையை சுரண்டுவது.யாரும் இல்லாவிட்டால் எதையாவது எடுத்து அவன் மேல எறிவது என்று அவளது அட்டகாசம் தொடர்ந்தது.

அந்த இடத்தில் கடுமையாக எரிகனைகள் விழவே அண்ணா வந்து சொன்னார் எல்லோறும் மாத்தளனுக்கு வாங்க என்று.அடுத்த நாள் வீட்டுப்பொருற்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு மாத்தளனுக்கு பயணமாக தயார் ஆனோம்.

இந்த இடத்தில் ஒருவர் பற்றி சொல்லவேண்டும் பக்கத்துவீட்டில் ஒரு அக்கா இருந்தார் அவர் பெயர் சுபா,அந்தக்காவும் அவரின் கணவர் சிறி அண்ணையும் மிகுந்த அன்பாக சதீஸிடம் பழகுவார்கள் அந்த அக்காவுக்கு சதீஸ் மாதிரி ஒரு தம்பி இருந்தாகவும்.அவன் இறந்துவிட்டதாகவும் அதனால் சதீஸ் மீது அவருக்கு மிகுந்த பாசம்.

அந்த அக்கா இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.கடுமையான எரிகனை வீச்சினால் பெரும் சத்தம் ஏற்பட்டால் எல்லாம் அவருக்கு மயக்கம் வந்துவிடும்.ஆனால் என்ன செய்வது யுத்தம் நடக்கும் இடத்தில் சத்தம் இல்லாத இடத்திற்கு எங்கே போவது.

சுபா அக்காவின் கணவர் கொண்டு வந்த ஒரு டக்டரில் பொருற்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு மாத்தளன் நோக்கி பயணமானோம்.சித்தப்பா,சித்தி மற்றும் ஏனையவர்களை அண்ணா வேறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பிரதான வீதியால் செல்ல முடியாது என்பதால் காரணம் கடுமையாக எரிகனைகள் வீழ்ந்து கொண்டு இருந்த படியால் வேறு ஒரு உட்பாதையால்  கூட்டிக்கொண்டு சென்றுவிட,

பெருற்கள் ஏற்றிய டக்டருடன் அந்த பாதையால் செல்ல முடியாது டக்டர் புதையும் அதைவிட எல்லோறும் இடம்பெயர்ந்து அந்த பாதையால் செல்வதால் சனநெருக்கடி அதிகம் எனவே பொருற்களை ஏற்றிய டக்டருடன் வேகமாக செல்லமுடியாது என்பதால் சதீஸும்,அண்ணாவின் நண்பரும்  பிரதான வீதியால் செல்வது என முடிவெடுத்தனர் 

புதுக்குடியிருப்பு பிரதான வீதி எங்கும் சனநடமாட்டமே இல்லை வீதியோரங்களில் மாடுகளும்,நாய்களும்,மனிதர்களின் உடல்களும் சிதறிக்கிடந்தன.

நல்ல காலமாக அவர்கள் மாத்தளன் போகும் வரை எந்த எரிகனைகளும் விழவில்லை.

மாத்தளன்  வந்து சேர்ந்தார்கள்.இம்முறை அண்ணாவின் நண்பரின் குடும்பமும் நாங்களும் ஒன்றாக இல்லை வேறு வேறாக வீடுகள் அமைத்தோம்.அப்பாட வானியின் தொல்லையில் இருந்த தப்பிக்கலாம் என்று சதீஸ் பெரு மூச்சி விட்டான்.ஆனால் இனித்தால் அவள் அதிகமாக இம்சை பண்ணப்போகின்றாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

சுபா அக்காவும்,அவர் கணவர் சிறி அண்ணாவும் சற்று தொலைவில் அவர்களின் உறவினர்கள் இருந்த இடத்திற்கு போய்விட்டார்கள் போகும் போது சுபா அக்கா கவனமாக இரு சதீஸ் நம்பிக்கையை தளரவிடாதே.அப்பா அம்மாவை எப்படியும் கண்டு பிடித்துவிடலாம் என்று.சொல்லி விட்டுப்போனார்.அதுக்கு பிறகு மீண்டும் சதீஸ் அவர்களை பார்கவேயில்லை 
*********************************************************************************
இறுதியுத்தம் எல்லாம் முடிந்து பின்னாலில் வார இதழ் ஒன்றில் சுபா அக்காவின் மரண அறிவித்தலைத்தான் பார்த்தான்.ஆம் அந்த யுத்தத்தில் எல்லாம் பாதுகாத்து வந்த அவரது உயிரை இருதயநோய் பறித்துவிட்டது போல.ஆனால் அவர் இறந்த பல நாட்களின் பின் தான் சதீஸ் அந்த பத்திரிகையை பார்த்தால் அவனால் போகமுடியவில்லை.

ஒரு தாயின் அன்பை காட்டிய சகோதரி உடன் பிறந்தால்தான் தம்பியா? இரத்த சொந்தத்தை விட அன்பினால் உருவாகும் சொந்தங்களுக்கு சக்தி அதிகம் அதை சதீஸ் முதன் முதலில் உணர்ந்து கொண்டது சுபா அக்காவின் அன்பில் தான்.இன்னும் ஒரு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் உங்களுடன் உடன் பிறக்கவேண்டும் சகோதரியே
*********************************************************************************

சதீஸினதும் அவனது அண்ணாவினது ஒரு நாள் உழைப்பினால் அழகான ஒரு தற்காலிக வீடு உருவானது.

இனிமேல் இங்கிருந்து இடம்பெயரப்போவது இல்லை இனி போக வேறு இடமும் இல்லை காரணம் ,இதுதான் கடைசி இடம் வாழ்வோ சாவோ இங்கேதான். வன்னியில் உள்ள முழுமக்களுக்கும்  கடைசியாக கரை ஒதுக்கிய இடங்கள் தான் மாத்தளன்,பொக்கனை,முள்ளிவாய்கால்.பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய 30 வருடங்களாக நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்த இடங்கள் இவை.

சதீஸின் அண்ணாவும்,அண்ணியும் முன்பே மாத்தளன் வந்துவிட்டதால் வேறு ஒரு இடத்தில்  தான் தங்கியிருந்தார்கள்,இப்போது இங்கே வீடு அமைத்தது நாளைக்கு அண்ணியை கூட்டிக்கொண்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு அண்ணா போய்விட்டார்.

சதீஸ் மனதில் இப்போது ஒரு கேள்வி? சித்தப்பா வீட்டிற்கு இப்போதுதான் வந்து இருக்கின்றேன்.அண்ணாவின் திருமணத்திற்கு கூட வேறு ஒரு இடத்தில் இருந்ததால் போகவில்லை.என்ன இருந்தாலும் அவர் சித்தப்பா,அண்ணா எனவே எல்லோறும் எப்படியும் சதீஸை பார்கவேண்டிய தேவையிருக்கு

ஆனால் அண்ணி வந்து என்ன சொல்வார் அண்ணி பாசமாக இருப்பாரா? அண்ணி ஏதும் சொன்னால் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவது என்று முடிவெடுத்து இருந்தான்.எங்கே போவது என்று தெரியாது, போக ஒரு இடமும் இல்லை ஆனாலும் சதீஸ் தீர்க்கமாக முடிவெடுத்து இருந்தான்.

அன்றைய இரவு அவனுக்கு நரகமாகவேயிருந்தது மறுநாள் பொழுது விடிந்தது.
(தொடரும்)

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல குழப்பங்கள்... அடுத்த பகிர்வை அறிய ஆவல்...
tm2

ஹேமா said...

வாசிக்க வாசிக்க மனம் வலிக்குது ராஜ்.முடியேல்ல.இது உங்கள் அனுபவமா?இன்னும் தாங்கி வாழ்கிறோம் என்பதே புதுமை.நாங்கள் மரத்தவர்களோ...மறவர்களோ !

K.s.s.Rajh said...

@ஹேமா

உங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி அக்கா இல்லை இது என் சொந்த அனுபவம் இல்லை

தனிமரம் said...

வானி போல லூசுகள் அதிகம் தான் கண்டதும் காதல் !ம்ம் தொடருங்கள் பாஸ் §

K.s.s.Rajh said...

@தனிமரம்

ஆமாம் பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails