எதோ ஒரு வகையில் என்னைக்கவர்ந்த பெண்கள் பற்றிய பதிவு இது
முன்னைய பகுதிகளை படிக்க
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை எனக்கு இவரை மிகவும் பிடிக்கும்
முன்னைய பகுதிகளை படிக்க
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை எனக்கு இவரை மிகவும் பிடிக்கும்
22)மரியா சரபோவா
எனக்குப்பிடித்த டெனிஸ் நட்சத்திரம்..அசரவைக்கும் அழகி
23)ஜிந்தாமெடினா(லிண்டா)
எனது ஆசிரியர் என் 8ம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை கற்பித்தவர்
8ம் வகுப்பில் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம் சிலகாலம் கற்பித்தார்.அழகில் ஹிந்தி நடிகைகள் போல இருப்பார் அப்படி ஒரு அழகு லிண்டா டீச்சர்.உயர்தரத்தில் எங்களுக்கு எக்கனாமிக்ஸ் படிப்பிச்சார்...ஏதோ தெரியவில்லை எனக்கு லிண்டா டீச்சரை மிகவும் பிடிக்கும்.அவரும் அப்படித்தான் அன்பான ஆசிரியர்
வெளிநாட்டில் திருமணம் முடித்து வெளிநாடு போவதற்கு காத்து கொண்டு இருந்தார் இப்ப எங்க இருக்கின்றார் என்று தெரியவில்லை.
24)ஜுலியட் மனோகரன்
இவரும் என் ஆசிரியர்தான் எங்கள் பாடசாலையில் நீண்டகாலம் படிப்பித்தாலும் எனக்கு உயர்தரத்தில் தான் படிப்பித்தார் உயர்தரத்தில் எங்கள் வகுப்பாசிரியர்..கண்டிப்புடன் கூடிய அன்பான ஆசிரியர்..
25)சுபாஜினி சிறீகாந்தன்/சுபா
மிகக்கொஞ்ச நாட்கள் பழகினாலும் மிகவும் பாசமுள்ள ஒரு சகோதரி என்னுடன் உடன் பிறக்காத சகோதரி.இன்று இவர் இந்த உலகில் இல்லை.மரணம் இவரை தன்னுடன் அணைத்துக்கொண்டது இவர் இறந்தது கூட எனக்கு நீண்ட நாட்களின் பின் தான் தெரியும்...
26)ஜெசிந்தா
இவரும் என் ஆசிரியர்தான் உயர்தரத்தில் எனக்கு கற்பித்த ஆசிரியர் இவரையும் ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல ஒரு ஆசிரியர்
27)லவநிஷா
இவரும் என் ஆசிரியர்தான் இவர் லிண்டா டீச்சர் திருமணத்திற்காக லீவில் போனபோது அவருக்கு பதிலாக சிலகாலம் எக்கனாமிக்ஸ் படிப்பித்தார்.ஆனால் லிண்டா டீச்சர் திரும்பிவந்ததும் நாங்கள் சில பசங்கள் லிண்டா டீச்சர்தான் எங்களுக்கு எக்கனாமிக்ஸ் படிப்பிக்கவேணும் என்று அடம்பிடித்து பிறகு லிண்டா டீச்சரே படிப்பித்தார்.
இதனால் இவருக்கும் எங்களுக்கும் இடையில் கொஞ்சம் மனஸ்த்தாபம் ஏற்பட்டது.பிறகு நாங்கள் இல்லை மிஸ்.லிண்டா மிஸ் ஆரம்பத்தில் படிப்பித்தால் தொடர்ந்து அவரே படிப்பித்தான் நன்றாக இருக்கும் என்றுதான் நாங்கள் அப்படி சொன்னோம் என்று சமாளித்தோம்.ஆனாலும் எனக்கு பிடித்த ஆசிரியர்களில் லவநிஷா டீச்சரும் ஒருவர்.
28)தேனி
இவளது முழுப்பெயர் என்ன என்று எனக்குத்தெரியாது.பிரியாவைப்போல பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகான பொண்ணுதான்
நான் சிலகாலம் என் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்த போது அவர்களின் காணியில் குடியிருந்தது இவர்களது குடும்பம்..பிரியா மேலான காதலில் நான் துவண்டு போய் பிரியாவை மறக்க நினைத்த காலப்பகுதி அது..என்னிடம் எதுவுமே இல்லாமல் நான் கஸ்டப்பட்டுக்கொண்டு இருந்த போது.இதில் ஒன்றைக்குறிப்பிட வேண்டும்.என்னிடம் அப்போது மாற்றிபோட ஒரு நல்ல உடுப்பு கூட இல்லை மிகவும் கஸ்டமான காலம் அது.
அந்த நிலையிலும் என்னை காதலித்த இவளது காதல் எனக்குப்பிடித்து இருந்தது ஆனால் அப்போது இவள் காதலை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் நான் இல்லை..அதுக்கு பல காரணங்கள் பிரியாமேல் இருந்த காதலும் ஒரு காரணம்தான்.
இவள் இப்ப எங்க இருக்கின்றாள் என்று தெரியாது.
29)திருமதி------------------------------------------------
-----------------------பெற்ற அன்னை
(புள்ளிக்கோட்டில் என்ன வரும் என்று கேட்காதீங்க நீங்களே புரிஞ்சுக்கோங்க)
30)குஸ்பு
தன் நம்பிக்கையால் உயர்ந்த பெண்..
நான் இவரது தீவிரமான ரசிகன் நான் மட்டுமா? ரசிகர்கள் கோவில் கட்டிய நடிகையாச்சே....
(தொடரும்)
இன்றைய தகவல்-சச்சினும் கங்குலியும் இணைந்து ஒரு நாள் போட்டிகளில் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களாக 6000க்கு மேட்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்கள் இது ஒரு உலக சாதனையாகும்.இனி வரும் காலங்களில் ஒரு ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி இந்த சாதனையை முறியடிக்க நீண்டகாலம் எடுக்கலாம்.
மும்தாஜ்.............மும்தாஜ்.................
என்ன எல்லாறும் சந்தோசமா இருக்கீங்களா அட நான் தான் உங்கள் மும்தாஜ் இன்னைக்கு நான் வந்து இருக்கேன் நீங்கள் உங்கள் வேலையை மறக்காமல் கருத்துரை,ஓட்டு |
குறிப்பு-மேலே 21 வதாக முதல் நான் குறிப்பிட்ட பெயருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்தப்பெயரை மாற்றி இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் வர இருந்த மிதாலிராஜ் யை அந்த இடத்தில்குறிப்பிட்டுள்ளேன்
|
74 comments:
என்னன்னே இது??
நான் இல்லாத காலத்தில பொண்ணுங்கள பத்தி கதைச்சிருக்கீங்க போல!
எனக்கு மரியா சரபோவான்னா உசிரு பதினேழு வயசில....ஹிஹி
ஏன் யா மும்தாஜ் இதவிட வடிவான(??) படங்கள் கிடைக்கிலியா?
கடை முதலாளி காபி சாப்பிட போய்ட்டாரோ?
@ மைந்தன் சிவா கூறியது...
என்னன்னே இது?////
ஹி.ஹி.ஹி.ஹி............
இன்றைய தகவல் ..
நன்றி..
@
மைந்தன் சிவா கூறியது...
நான் இல்லாத காலத்தில பொண்ணுங்கள பத்தி கதைச்சிருக்கீங்க போல////
ஆமா பாஸ் நிறையவே கதைச்சம்
@
மைந்தன் சிவா கூறியது...
எனக்கு மரியா சரபோவான்னா உசிரு பதினேழு வயசில....ஹி.ஹி..///
ஆமா பாஸ் எனக்கும்...........போங்க பாஸ் வெக்கமா இருக்கு
@
மைந்தன் சிவா கூறியது...
ஏன் யா மும்தாஜ் இதவிட வடிவான(??) படங்கள் கிடைக்கிலியா?////
உண்மையைச் சொல்லுங்க இந்தப்படம் உங்களுக்கு புடிக்கலையா?ஹி.ஹி.ஹி.ஹி.............
@
மைந்தன் சிவா கூறியது...
கடை முதலாளி காபி சாப்பிட போய்ட்டாரோ?////
காப்பி இல்லை பாஸ் திரட்டிகளில் இணைச்சுகிட்டு இருந்தேன்
@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
இன்றைய தகவல் ..
நன்றி./////
தேங்ஸ் பாஸ்
வணக்கம் மாப்பிள..
சோனியாவ பிடிக்குமென்னு சொன்ன ஈழத்த தமிழன் நீதான்யா!!!?? இதுக்கு நீங்க ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் இதை நான் கண்டிக்கிறேன்!!!??
நல்ல தொகுப்பு
வேலை அதிகமானதால் பதிவில் இருந்து கொஞ்ச நாள் ஒதுங்கி இருக்கேன்....
ஆனா உங்க பதிவை பார்த்து மனசு கேளாமல் கருத்து போடுகிறேன்....
பாஸ்... சோனியாவை புடிக்குமா..???
உங்களுக்கு பதில் சொல்ல நிறைய தோணுது.... நன்பன் என்ற காரணத்தால் சொல்ல முடியவில்லை...
பதிவுலகில் உங்களை என் நன்பன் என்று சொல்ல வெக்கமாக இருக்கு.... சாரி........
இப்படி ஒரு பதிவில் அந்த அரக்கியை குறிப்பிட்டதுக்கு வெக்கப்படனும் நீங்க...
மனசாட்சியோ மனிதாபிமானமோ
இந்த கண்றாவியில் ஏதாவது ஒன்று இருந்தால் இந்த பதிவை நீக்கிவிடுங்கள்..
பிரபலம் ஆக சர்ச்சை ஆன விடயத்தை பேசுவது ஆதிரிப்பது பதிவில் சகஜம்தான்
அதுக்காக.... வேணாம்... மேலே இதைப்பற்றி எழுதவே புடிக்கல்ல,.....
உங்களுக்கு பிடிச்ச பொண்ணுகங்க முடிஞ்சதும், நீங்க புடிச்ச பொண்ணுங்கள பற்றி பதிவு போடுவீங்களா???? டவுட்டு
என்னாது சோனியாவ பிடிக்குமா. எதுக்கு நல்லா கொலை பண்ணுவாங்க எண்டா...
லிஸ்ட் இன்னும் நீளும்போல இருக்கே
///மதுரன் சொன்னது…
என்னாது சோனியாவ பிடிக்குமா. எதுக்கு நல்லா கொலை பண்ணுவாங்க எண்டா...
/// ஹிஹி நான் நினச்சதை மதுரன் சொல்லிட்டாரு... அவேட்ட என்ன தன்னம்பிக்கை இருக்குது?? )))
இந்திராகாந்தியை சொன்னா ஏற்றுக்கொள்ளலாம் .. இவ கணவனின் அனுதாபத்தை வைத்து தானே இந்த நிலைக்கு வந்தவா ))
ஒரு பேர்தான் கொஞ்சம் இடறுது.
ஆனா ஈழ தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் அழிக்க இவ காட்டிய தன்னம்பிக்கை ..................?
எனக்கும் பிடித்த ஆசிரியர்களின் நீண்ட பட்டியல் உள்ளது ...
குஷ்பூ .....? எனக்கு பிடிக்காது ))
மாப்பிள சோனியாவை பற்றி தெரி்யாமல் எதோ ஹிட்சுக்காக எழுதியதுபோல் இருக்கிறது உங்க பதிவு எது தன்னம்பிக்கை?? சோனியா ஒரு ஆமை புகுந்த வீடு மாதிரி இந்தியாவுக்குள் புகுந்துள்ளார்?? ராஜீவின் போர்பஸ் ஊழல் தொடக்கம் முள்ளி வாய்க்கால் வரை இவரின் கைகள் நீண்டிருக்கிறது இப்போ நடக்கும் 2ஜி ஊழலில் பெரும் பங்கு அவருடைய சகோதரிகள் சுவிஸ் பாங்கில் பதுக்கியுள்ளதாக தகவல் ஒரு ஊழல்வாதி ,கொலைகாரி உங்களுக்கு எப்படி தன்நம்பிக்கை உள்ளவர்ன்னு சொல்லமுடியுமா? சிலவேளை ஊழலும் கொலைகளும்தான் தன்நம்பிக்கையா உங்களுக்கு?? சரியான விளக்கம் தாருங்கள் உங்களால் சரியான விளக்கம் தர முடியா விட்டால் அவரின் பெயரை தயவு செய்து நீக்கிவிடுங்கள் ஒரு கொலைகாரியை ஆதரித்துதான் நீங்கள் ஹிட்ஸ் கொடுக்க வேண்டிய தேவை இல்லை ஹிட்ஸ்சுக்காக எதையும் எழுதலாம் என்னும் போக்கை மாற்றுங்கள் ராசுக்குட்டி!!!
உங்க ஆசிரியர்களின் படம் போடல்லியே?
@காட்டான்
ஆகா கீழே துஷியும் கடுமையாக வாங்கு வாங் கென்று வாங்கியுள்ளார் கீழே ஒரு விரிவான விளக்கம் தருகின்றேன்...
நான் அவரது பெயரை தூக்கிவிட்டேன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
தேங்ஸ் பாஸ்
@துஷ்யந்தன்
ஏன் இந்தக்கோபம் பாஸ் கூல் கீழே விளக்கம் தருகின்றேன்...ஆனால் பெயரை தூக்கிவிட்டேன்
@
Mohamed Faaique கூறியது...
உங்களுக்கு பிடிச்ச பொண்ணுகங்க முடிஞ்சதும், நீங்க புடிச்ச பொண்ணுங்கள பற்றி பதிவு போடுவீங்களா???? டவுட்டு////
போட்டுட்டா போச்சி
@
மதுரன் கூறியது...
லிஸ்ட் இன்னும் நீளும்போல இருக்கே////
நீளும் பாஸ்...........ஹி.ஹி.ஹி.ஹி.......
@
சென்னை பித்தன் கூறியது...
ஒரு பேர்தான் கொஞ்சம் இடறுது////
அதுக்குத்தான் ஜயா நிறைய எதிர்ப்பு கிளம்பியிருகு..கடைசியில் ஒரு விளக்கம் கொடுக்கின்றேன்
@
கந்தசாமி. கூறியது...
எனக்கும் பிடித்த ஆசிரியர்களின் நீண்ட பட்டியல் உள்ளது ...
குஷ்பூ .....? எனக்கு பிடிக்காது )////
என்னது குஸ்புவைப்பிடிக்காதா?
@
Lakshmi கூறியது...
உங்க ஆசிரியர்களின் படம் போடல்லியே?/////
படங்கள் கைவசம் இல்லை மேடம்
அரக்கியை தூக்கியது ஓகே..விளக்கம் எங்கே?
யோ என்னையா கந்தசாமி குஸ்பூ இட்லியாவது பிடிக்குமோய்யா..ஹி ஹி
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்
நான் இங்கு எனக்குப்பிடித்த பெண்கள் என்ற பதிவில் சோனியா காந்தியை குறிப்பிட்டதுக்கு பலத்த எதிர்பு கிளம்பியது இதில் ஒன்றை குறிபிட வேண்டும் இங்கு நான் சோனியா காந்தியை பிடிக்கும் என்று சொன்னதுக்கு ஏன் இவ்வளவு எதிர்பு என்று எனக்கு புரியவில்லை..
ஆனாலும் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து பெயரை நீக்கிவிட்டேன் ஏன் என்றால் நான் எப்பவும் நான் சொல்வது தான் சரி மற்றது எல்லாம் பிழை என்ற மனநிலை உடையவன் இல்லை..என்னில் அக்கறை கொண்டவர்களிள் உட்பட ஏனையோரின் கருத்துக்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிபவன் எனவே நான் அந்தப்பெயரை நீக்கியுள்ளேன்.
இதில் ஒன்றைக்குறிப்பிடவேண்டும் தவறு செய்யாதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை..இங்கே நீங்கள் சுட்டிக்காட்டும் காரணங்கள் சரிதான்
உங்களிடம் ஒரு கேள்வி..ஈழமக்களுக்காக போராடிய புலிகள் தவறு செய்யவில்லையா? எந்த மகளுக்காக போராடினார்களோ அந்த மக்களுக்கு எதிராக அவர்கள் எத்தனை தவறுகள் செய்தார்கள் இதை உங்களால் மறுக்கமுடியுமா?ஆனாலும் அவர்கள் செய்த பலதியாகங்களுக்கு முன் அவர்கள் செய்த தவறுகள் பெரிதாக தெரியவில்லை.
உலகையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி ஹிட்லரிடம் கூட சில நல்ல குணங்கள் இருந்தன அவர் தன் மது அருந்துவது,மாமிசம் உண்பது,புகைப்பிடிப்பது,போன்ற பழக்கங்கள் அவரிடம் இல்லை....
(கருத்துரை நீண்டு விட்டதால் கீழே தொடர்ச்சி)
(கருத்துரை தொடர்ச்சி)
நான் சோனியா காந்தியை எனக்கு பிடிக்கும் என்று சொன்னதுக்கு காரணம்
இத்தாலியில், வெனிடோப்பிரதேசத்தில், 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறுகிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்த அவர்...ஒரு பெண்ணாக பல சவால்களை எதிர்கொண்டு...
இன்று
இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர், 2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சாதாரன குடும்பத்தில் பிறந்து இந்தளவுக்கு உயர்ந்த இவரது தன் நம்பிக்கைதான் பிடிக்கும் என்று நான் குறிப்பிட்டேன்.
மற்ற படி நான் இந்தப்பதிவில் சோனியா காந்தியைப்பற்றி எழுதித்தான் ஹிட்ஸ் வாங்கனும் என்று இல்லை..
ஹட்சுகாக எதையும் எழுதும் ஆள் நான் கிடையாது..அப்படி ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு கிரிக்கெட் என்னால் ஒரு நாளைக்கு கிரிக்கெட் பத்தி 10 பதிவுகள் போட ஏலும்.அவை அனைத்தும் ஹிட்ஸ் ஆகும்
நீங்கள் எனது பதிவுகளை அவதானித்தால் புரியும் என் கிரிக்கெட் பதிவுகள் எவையும் ஹிட்ஸ் ஆகாமல் இருந்தது இல்லை..ஒரு நாளைக்கு என்னால் 10 கிரிக்கெட் பதிவுகளை எழுதி என்னால் அனைத்தையும் ஹிட்ஸ் ஆக்க முடியும்..அது ஒரு பிரச்சனையே இல்லை..அப்படி நான் நினைத்து இருந்தால் இன்னேரம் 300,400 பதிவுகளை எழுதியிருப்பேன்.ஆனால் நான் இதுவரை எழுதியது வெறும் 89 பதிவுகள் தான்..என்னிடம் வாசகர்கள் எதை எதிர்பாக்கின்றார்கள் என்று பார்த்து அவர்களின் மனநிலையில் இருந்துதான் நான் பதிவுகளை எழுதுகின்றேன்..அதனால் தான் நீங்கள் சுட்டிக்காட்டியதும் உடனே பெயரை நீக்கிவிட்டேன்.
இதில் இன்னும் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும்..நேற்று நான் ஒரு மொக்கை பதிவு எழுதினேன் வாசித்து இருப்பீர்கள்..அந்தப்பதிவை நீங்கள் அவதானித்தால் தெரியும் அது செம ஹிட்ஸ் ஆகிவிட்டது ஆனாலும் பதிவுலகில் பலருக்கு தெரியாத ஒரு விடயம் இருக்கு மிகச்சிலருக்குத்தான் அது தெரியும் ஒருஇடத்தில் நாங்கள் எழுதும் பதிவை இணைத்தால் அங்கே இருந்து ஒரு நாளைக்கு நம்மமுடியாதவகையில் வாசகர்கள் வருவார்கள்..ஆனால் நான் நேற்று எழுதிய பதிவு மொக்கை பதிவு என்பதால் நான் அங்கே பகிரவில்லை அங்கே மட்டும் பகிர்ந்து இருந்தால் மேலதிகமாக 500,600 வாசகர்கள் வந்திருப்பார்கள் ஆனால் நேற்று நான் எழுதியது மொக்கை என்று எனக்கே தெரியும் அதனால் எனக்கு அதை பகிரவிருப்பம் இல்லை அதானல் பகிரவிலை இப்ப சொல்லுங்கள் நான் ஹிட்ஸ் மையமாக வைத்து பதிவு எழுதுபவன் இல்லை என்று இதில் இருந்து புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்..
மற்றது வேறு யார் சொல்லியிருந்தாலும்..நான் கொஞ்சம் என் கருத்தையும் சொல்லித்தான் அதற்கு பிறகு பெயரை நீக்கியிருப்பேன் ஆனால் நாம் மிகவும் மதிக்கும் காட்டான் மாமா,துஷி,கந்தசாமி,மதுரன்,போன்றவர்கள் சொன்னதால் உடனடியாக நீக்கிவிட்டு வந்துதான் இந்த கருத்துரையே எழுதினேன்..நான் இந்தக்கருத்துரை எழுதியதுக்கு காரணம் முதல் பதிவை வாசித்தவர்கள் திரும்ப வரும் போது என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளவேண்டும் அல்லவா அதற்க்காகத்தான் இந்த நீண்ட விளக்கம்.
ஏதும் மனம் புண்படும் படியாக நான் கூறியிருந்தால் மன்னிக்கவேண்டுகின்றேன்
அன்புடன்
என்றும்
உங்கள் நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
@
செங்கோவி கூறியது...
அரக்கியை தூக்கியது ஓகே..விளக்கம் எங்கே?////
ஏன் பாஸ் கொந்தளிக்குறீங்க இதோ மேல விளக்கம் கொடுத்து இருக்கேன் பாருங்க.......
இந்தப்பதிவில் 29 வதாக நான் யாரை குறிப்பிட்டுள்ளேன் என்று யாராவது கவனித்தீர்களா?
நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது?
http://spoofking.blogspot.com/2011/10/blog-post.html>
என்னங்க நான் வரத்துக்குள்ள ஒரே களேபரமே நடந்திருக்கு?
@
கோகுல் கூறியது...
என்னங்க நான் வரத்துக்குள்ள ஒரே களேபரமே நடந்திருக்கு////
ஆமா பாஸ் பெரும் களோபரம்
நண்பா நீங்கள் சோனியாவை பிடிக்கும் என்று சொன்ன கருத்து உங்கள் கைகளில் இருந்து வந்ததல்ல..மாறாக மனசில் இருந்து வந்தது ..கைகளால் எழுதியதை அழித்துவிட்டீர்கள் ..ஆனால் மனசில் உள்ளது உள்ளது தானே.
ஆகவே என்னை பொறுத்தவரை நீங்கள் சோனியாவை பிடிக்கும் என்று எழுதியதை நீக்கவேண்டியதில்லை. அத்தோடு உங்கள் உணர்வுகள் பற்றி ஏனையவர்களும் அறிந்து கொள்ள அது ஒரு சான்றாக இருக்கும்..
மற்றும் படி நீங்கள் மேற்சொன்ன நியாயபடுத்தலிலே புலிகளை இழுத்தது சரி அல்ல. புலிகளின் போராட்டத்தில் ஒரு நியாயம் இருந்தது..பெரும் பகுதி மக்கள் ஆதரித்தார்கள் அவர்களை.. புலிகள் செய்த தவறுகளை விட அவர்களின் தியாகங்கள் வரலாறுகளில் போற்றி புகழப்படும் என்பது நிதர்சனம்.. ஆக அவர்களை சோனியாவுடன், அவாவை நியாயபடுத்த கருவியாக பயன்படுத்துவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுக்கு ஒப்பானது.
சோனியாகாந்தி ஒன்றும் அடி மட்டத்தில் இருந்து தன் முயற்சியால் முன்னேறியவர் அல்ல! மாறாக தன் கணவனின் இறப்பை முன்னிறுத்தி, அந்த அனுதாபத்தின் மூலம் காங்கிரஸ் தலைவியாகி இன்று இந்த நிலையில் இருப்பவர்.
இலட்சக்கணக்கான நம் மக்களின் சாவுக்கு ஆயுதம் வழங்கி ஆசிர்வதித்தவர் ..போதாது என்று இன்றும் ஈழ தமிழர் மீது இருக்கும் வஞ்சத்தால் அந்த அப்பாவி உயிர்கள் மூன்றை தூக்கு கைற்ரில் ஏற்ற துடிக்கும் ரத்த வெறி பிடித்தவர்.
யுத்தத்தையும், அதால் ஏற்ப்பட்ட அவலங்களையும் கண்ணால் கண்டு உணர்ந்த எவனும் இந்த சோனியா என்ற ரத்த காட்டேரியை தன் ஆஸ்தான இடத்தில் வைத்திருக்கான்.. ஆனால் நீங்கள் எப்பவும் மிக பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறீர்கள். இதற்க்கு முன்னர் கூட ஒரு பதிவில் "இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்தை கடவுள்களுக்கு நிகராகனவர்கள்" என்று உங்கள் கற்பனையின் உச்சத்தை கவிதையில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்(நினைவிருக்கு)
இந்த சோனியாவால் ஈழ மக்கள் எதிர்கொண்ட அவலங்களை எண்ணி தமிழ்நாட்டு மக்களே அந்த பெண்ணின் முகத்தில் காறி உமிழ நீங்கள் என்னடாண்டால்...!
(தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும் )
நிகழ்வுகள் சொன்னது…
நண்பா நீங்கள் சோனியாவை பிடிக்கும் என்று சொன்ன கருத்து உங்கள் கைகளில் இருந்து வந்ததல்ல..மாறாக மனசில் இருந்து வந்தது ..கைகளால் எழுதியதை அழித்துவிட்டீர்கள் ..ஆனால் மனசில் உள்ளது உள்ளது தானே.
ஆகவே என்னை பொறுத்தவரை நீங்கள் சோனியாவை பிடிக்கும் என்று எழுதியதை நீக்கவேண்டியதில்லை. அத்தோடு உங்கள் உணர்வுகள் பற்றி ஏனையவர்களும் அறிந்து கொள்ள அது ஒரு சான்றாக இருக்கும்..
மற்றும் படி நீங்கள் மேற்சொன்ன நியாயபடுத்தலிலே புலிகளை இழுத்தது சரி அல்ல. புலிகளின் போராட்டத்தில் ஒரு நியாயம் இருந்தது..பெரும் பகுதி மக்கள் ஆதரித்தார்கள் அவர்களை.. புலிகள் செய்த தவறுகளை விட அவர்களின் தியாகங்கள் வரலாறுகளில் போற்றி புகழப்படும் என்பது நிதர்சனம்.. ஆக அவர்களை சோனியாவுடன், அவாவை நியாயபடுத்த கருவியாக பயன்படுத்துவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதுக்கு ஒப்பானது.
சோனியாகாந்தி ஒன்றும் அடி மட்டத்தில் இருந்து தன் முயற்சியால் முன்னேறியவர் அல்ல! மாறாக தன் கணவனின் இறப்பை முன்னிறுத்தி, அந்த அனுதாபத்தின் மூலம் காங்கிரஸ் தலைவியாகி இன்று இந்த நிலையில் இருப்பவர்.
இலட்சக்கணக்கான நம் மக்களின் சாவுக்கு ஆயுதம் வழங்கி ஆசிர்வதித்தவர் ..போதாது என்று இன்றும் ஈழ தமிழர் மீது இருக்கும் வஞ்சத்தால் அந்த அப்பாவி உயிர்கள் மூன்றை தூக்கு கைற்ரில் ஏற்ற துடிக்கும் ரத்த வெறி பிடித்தவர்.
யுத்தத்தையும், அதால் ஏற்ப்பட்ட அவலங்களையும் கண்ணால் கண்டு உணர்ந்த எவனும் இந்த சோனியா என்ற ரத்த காட்டேரியை தன் ஆஸ்தான இடத்தில் வைத்திருக்கான்.. ஆனால் நீங்கள் எப்பவும் மிக பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறீர்கள். இதற்க்கு முன்னர் கூட ஒரு பதிவில் "இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட சிறீலங்கா இராணுவத்தை கடவுள்களுக்கு நிகராகனவர்கள்" என்று உங்கள் கற்பனையின் உச்சத்தை கவிதையில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்(நினைவிருக்கு)
இந்த சோனியாவால் ஈழ மக்கள் எதிர்கொண்ட அவலங்களை எண்ணி தமிழ்நாட்டு மக்களே அந்த பெண்ணின் முகத்தில் காறி உமிழ நீங்கள் என்னடாண்டால்...!
(தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும் )
மீண்டும் ஒருமுறை படியுங்க நன்பா....
விளக்கம் அபத்தம் சாரி........ :))
தப்பா சொல்லி இருந்தால் என்னையும் மன்னியுங்கள் :(
கந்தசாமியின் கருத்தே என் கருத்தும்
இதுக்கு மேலே இது பற்றி பேச புடிக்கவுல்லை..
ராஜ் மேலே உங்களை திரும்ப படிக்க சொல்லியே கந்தசாமியின் கருத்தை நானும் கொப்பி பண்ணி போட்டு உள்ளேன்..
கந்தசாமியின் கருத்துக்கள் நிதர்சனம்..
எங்கள் மேல் கோவிக்காமல் தவறு எங்கே என்று தேடுங்கள் ப்ளிஸ்ஸ்
////இத்தாலியில், வெனிடோப்பிரதேசத்தில், 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறுகிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்த அவர்...ஒரு பெண்ணாக பல சவால்களை எதிர்கொண்டு...
இன்று
இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர்,
2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
////
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF என்ன கொடுமை சரவணன் ..நியாயபடுத்தல்கள் கூட உங்கள் சொந்த கருத்தாக இல்லையே
//
கந்தசாமி. கூறியது...
////இத்தாலியில், வெனிடோப்பிரதேசத்தில், 30 கிலோ மீட்டர் தொலைவில் விசென்ஸாவில், உள்ள லூசியானா எனும் ஒரு சிறுகிராமத்தில் ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்த அவர்...ஒரு பெண்ணாக பல சவால்களை எதிர்கொண்டு...
இன்று
இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிகுந்த நபரான அவர்,
2004ல் போர்பஸ் பத்திரிகையால் உலகில் மிகச் சக்திவாய்ந்த பெண்மணிகளில் மூன்றாவது இடம் வகிப்பவராகவும் மற்றும் 2007ல் அந்தப் பட்டியலின் தரவரிசையில் ஆறாவது இடம் வகிப்பவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.மேலும் டைம்பத்திரிகையும் இவரை 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் உலகில் உள்ள 100 அதிகச் செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராகத் திகழ்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
////
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF என்ன கொடுமை சரவணன் ..நியாயபடுத்தல்கள் கூட உங்கள் சொந்த கருத்தாக இல்லை////
அண்னே இங்கே கருத்துரையில் நான் சோனியா பற்றி ஏன் அவரை பிடித்தது என்ற காரணத்தை உதாரணப்படுத்த நினைத்தேன்..என் கருத்துக்க்கு ஓத்துழைக்கும் தகவல்கள் விக்கிபீடியாவில் இருந்து உதாரணப்படுதியுள்ளேன் இதில் என்ன பிழை?நீங்கள் சண்ணைபிடிக்கவேண்டும் என்பதற்காக ஏதோதோ கதைக்கவேண்டாம்...இதை தகவல்கள் உண்மைதானே பிறகு என்ன போங்க பாஸ்
@நிகழ்வுகள்
பாஸ் நான் இங்கே புலிகளை உதாரணப்படுத்தியது..தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை என்பதை சொல்லத்தான்..
சோனியா தவறு செல்லவில்லை என்று நான் வாதாடவில்லை என்பதை நீங்கள் முதலில் தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள்...ஹிட்லரைக்கூட பலருக்கு பிடிக்கும் அதற்காக அவர்கள் நாஜிகளா?இல்லை சர்சாதிகாரிகளா?இல்லையே.....
நான் சொன்னது சாதரான பெண்ணாக பிறந்து இந்தியா அரசியலில் சக்தி மிக்க நபராக மாறிய சோனியாவின் தன் நம்பிக்கைபிடிக்கும் என்றேன்...மற்றபடி நான் சோனியாவின் புகழ்பாடவில்லை அவரை ஒரு சிறந்த மனிதராக வர்ணிக்கவும் இல்லை..இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
மற்றது நீங்கள் சொன்ன முந்தய பதிவை வடிவாக வாசித்துவிட்டு வாருங்கள் அதில் அந்த நேரத்தில் உதவி செய்ய ஓவ்வொறு ராணுவமும் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் நீங்கள்தான் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகின்றீர்கள்..
மற்ற படி நான் அவரது பெயரை நீக்கியது நான் எப்பவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் அதனால்தான் நான் பெயரை நீக்கினேன்
@
துஷ்யந்தன் கூறியது...
கந்தசாமியின் கருத்தே என் கருத்தும்
இதுக்கு மேலே இது பற்றி பேச புடிக்கவுல்லை..
ராஜ் மேலே உங்களை திரும்ப படிக்க சொல்லியே கந்தசாமியின் கருத்தை நானும் கொப்பி பண்ணி போட்டு உள்ளேன்..
கந்தசாமியின் கருத்துக்கள் நிதர்சனம்..
எங்கள் மேல் கோவிக்காமல் தவறு எங்கே என்று தேடுங்கள் ப்ளிஸ்////
கந்தசாமியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளேன் பாருங்க....
லிஸ்டில அனுஷ்காவை காணோம்...
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
புள்ளிக்கோட்டில் இருப்பது யாரு நண்பா???????????????????????
@
மாய உலகம் கூறியது...
லிஸ்டில அனுஷ்காவை காணோம்.////
எனக்கு அந்தம்மாவை புடிக்காது பாஸ் ஹி.ஹி.ஹி.ஹி........
@
விக்கியுலகம் கூறியது...
மாப்ள பகிர்வுக்கு நன்றி////
தேங்ஸ் பாஸ்
@
காந்தி பனங்கூர் கூறியது...
புள்ளிக்கோட்டில் இருப்பது யாரு நண்பா??????????????????????////
ஒரு மாபெரும் சரித்திரத்தை பெற்றெடுத்த தாய்..புரிஞ்சுடுச்சா?
K.s.s.Rajh சொன்னது…
////ஹிட்லரைக்கூட பலருக்கு பிடிக்கும் அதற்காக அவர்கள் நாஜிகளா?இல்லை சர்சாதிகாரிகளா?இல்லையே.....///ஆக ஹிட்லரால் 'வன்கொடுமைக்கு உள்ளான' பலருக்கு ஹிட்லரை பிடிக்கும் என்கிறீர்கள்... அதே போல சோனியா கும்பலால் 'மிக பெரிய அவலங்களை' சந்தித்த உங்களுக்கு(?) சோனியாவை பிடித்திருக்கிறது...
வெளில யாருக்கும் இப்பிடி சொல்லிப்போடாதேங்க பாஸ் )))
////நான் சொன்னது சாதரான பெண்ணாக பிறந்து இந்தியா அரசியலில் சக்தி மிக்க நபராக மாறிய சோனியாவின் தன் நம்பிக்கைபிடிக்கும் என்றேன்// இதற்க்கு ஏற்க்கனவே இரண்டு இடங்களில் விளக்கம் கொடுத்துவிட்டேன் பாஸ் ...
///மற்ற படி நான் அவரது பெயரை நீக்கியது நான் எப்பவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் அதனால்தான் நான் பெயரை நீக்கினேன் // இல்லை நண்பா உங்கள் உணர்வுகளை ,விருப்பங்களை பிறருக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே ???
@நிகழ்வுகள்
////ஆக ஹிட்லரால் 'வன்கொடுமைக்கு உள்ளான' பலருக்கு ஹிட்லரை பிடிக்கும் என்கிறீர்கள்... அதே போல சோனியா கும்பலால் 'மிக பெரிய அவலங்களை' சந்தித்த உங்களுக்கு(?) சோனியாவை பிடித்திருக்கிறது...
வெளில யாருக்கும் இப்பிடி சொல்லிப்போடாதேங்க பாஸ் )))//////
நான் அப்படி சொல்லவில்லை உலகமே தூற்றிய சர்வாதிகாரி ஹிட்லரிடம் கூட சில நல்ல குணங்கள் இருந்துள்ளன..அதாவது..அவர் மது அருந்துவது இல்லை,மாமிசம் உன்பது இல்லை,புகைப்பிடிப்பது இல்லை அதை விட ஹிட்லர் சிறந்த ஓவியரும் கூட..இந்தகுணங்களால் ஹிட்லரை பலருக்கு பிடித்திருக்கலாம்.
மற்றது விதண்டாவாதம் செய்ய வேண்டும் என நினைக்கும் உங்களிடம் என்ன சொன்னாலும் அது தவறாகத்தான் தெரியும்....
////
நிகழ்வுகள் கூறியது...
///மற்ற படி நான் அவரது பெயரை நீக்கியது நான் எப்பவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவன் அதனால்தான் நான் பெயரை நீக்கினேன் // இல்லை நண்பா உங்கள் உணர்வுகளை ,விருப்பங்களை பிறருக்காக மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே ??/////
அப்படி இல்லை பாஸ் இது என் ப்ளாக் நான் என்னமும் எழுதுவன் நீ படிச்சிட்டு போ அப்படி என்று நினைக்கும் ஆள் நான் கிடையாது என் தளத்திற்கு வரும் வாசகர்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிப்பவன்
////
நிகழ்வுகள் கூறியது...
////நான் சொன்னது சாதரான பெண்ணாக பிறந்து இந்தியா அரசியலில் சக்தி மிக்க நபராக மாறிய சோனியாவின் தன் நம்பிக்கைபிடிக்கும் என்றேன்// இதற்க்கு ஏற்க்கனவே இரண்டு இடங்களில் விளக்கம் கொடுத்துவிட்டேன் பாஸ் ./////
இப்ப முடிவா என்ன சொல்லவாறீங்க..
அடேயப்பா! சோனியாவிற்கு இத்தனை எதிர்ப்பா? பதிவு அருமை பாஸ்
@thalir
ஆமா பாஸ்
நண்பா ராஜ்
கந்தசாமி சொல்லிய கருத்தை தாங்கள் புரிந்துகொள்ளவில்லையென்று நினைக்கிறேன். ஹிட்லரிடம் சில நல்ல குணங்கள் உள்ளனதான். அதை சிலர் விரும்புகிறார்கள்தான். ஆனால் அப்படி விரும்புவோரில் ஹிட்லரின் கொடுமைக்கு உள்ளாகிய ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யாராவது இருக்கிறார்களா. நீங்கள் கூறிய உதாரணமே தவறு.
அடுத்துவிடுதலைப்புலிகளின் தவறுகளை சோனியாவின் தவறுகளோடு ஒப்பிட்டதற்கு என் கடுமையான கண்டணங்கள்
அப்புறம் பாஸ்.. இந்த பிரச்சினையை இத்தோடு முடித்துக்கொள்ளலாமே..
மது..! நான் சொன்னது உங்களுக்காவது புரிந்ததில் சந்தோசம் ...
@மதுரன்
அடுத்துவிடுதலைப்புலிகளின் தவறுகளை சோனியாவின் தவறுகளோடு ஒப்பிட்டதற்கு என் கடுமையான கண்டணங்கள்////
பாஸ் நான் அப்படி உதாரணப்படுத்தியது.தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை என்று உதாரணப்படுத்தான்..
@மதுரன்
/////அப்புறம் பாஸ்.. இந்த பிரச்சினையை இத்தோடு முடித்துக்கொள்ளலாமே..////
ஆமா பாஸ் இதை இதை இத்தோடு முடித்துக்கொள்வோம்
நான் அடுத்த பதிவும் போட்டுவிட்டேன் அதையும் கொஞ்சம் பார்க்கலாமே.
தேங்ஸ் பாஸ்
அன்புக்குறிய நண்பர்களே
இங்கே எல்லோறும் ஒன்றை புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்..நான் இங்கே சோனியா காந்தியின் புகழ்பாடி பதிவு போடவில்லை.அதை கந்துவும் சரி,துஷியிம் சரி புரிந்து கொள்ளவில்லை.ஒருவரை எதோ ஒருவகையில் எமக்கு பிடிக்கிறது என்றால் அதற்காக அவரை ஆதரிப்பவர்களாக நாம் இருப்போம் என்று முடிவு செய்வது தவறு.
அப்படித்தான் நானும் அவரை பிடிக்கும் என்று குறிப்பிட்டேனேதவிர மற்றும் படி அவர் நல்லவர் என்றோ இல்லை ஈழத்தமிழர்களுக்கு அநீதியே இழைக்கவில்லை என்று எங்கையும் நான் குறிப்பிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
சரி இத்துடன் இந்தவிவாத்தை முடித்துக்கொள்வோம் நான் அடுத்த பதிவும் போட்டு விட்டேன் அங்க போவோம் வாங்க நண்பர்களே
யோ நீங்க இன்னும் இந்த பதிவிலதான் நிக்கிறீங்களோ விடுங்கையா விடுங்க!! பாவம் அவருக்கு அதிகமாதான் செம்ப நெளிச்சிட்டிங்கய்யா..!! டோய் மாப்பிளைங்க மதுரன்,கந்து,துஸி எல்லாரையும் இந்த பதிவில இனி பாக்கக்கூடாது சொல்லிப்புட்டன் ஆமா!!?? விடுங்கய்யா ராசுக்குட்டிக்கு சனி மாற்றம் சரியில்லைன்னு செங்கோவியே சொல்லிபோட்டாரையா..? தயவு கூர்ந்து விடுங்கையா அவர் அடுத்த பதிவ எழுத அதில வாங்கையா கும்ம.., ஹி ஹி
என்ன காட்டான் மாமா... சனிய ராஜ்சுக்கு பிடிச்சிருக்கா. .அது யாரு புதுப்பொம்பிள
யோவ் ராஜ்.. அப்போ சரன்ஜா கதி
அட பாவி மதுரா நீ இங்கதான் இன்னும் நிக்கிறியா..!!? இன்டைக்கு ராசுக்குட்டிய பிடிச்ச சனி பகவான்கள் மூனு பேரையா எதுக்கு விளக்கமையா சோனியாவை பற்றி இவர் எழுதும்போது கண்டிச்ச முதல் ஆள் நாந்தாய்யா... இங்கின சுத்சுறத விட்டுட்டு ஒரு பதிவு போடையா நான் வந்து உனக்கும் கும்முறன்.. அதுக்கு முன்ன ஒரு ஈமெயில் அனுப்பு சரி சரி போய்யா..!!அட வயசான காலத்தில காட்டானை கத்த வைக்கிறியே மாப்பிள இது நல்லாவா இருக்கு இனி சோனியா கனவிலகூட ராசுக்குட்டிட்ட வரமாட்டார்யா..!! ரெப்பத்தான் செம்ப நெளிக்கிறீங்க...!!ஹி ஹி
அட அடுத்த பதிவு போட்டு அதற்கு அடுத்த பதிவும் போடப்போறன் மாமா சொல்லுறமாதிரி இன்னுமா இங்க சுத்திக்கிட்டு நிக்கிறீங்க...எல்லோறும் அங்க வாங்கையா?
அட இது தானா ராசுக் குட்டிக்கு நடந்த பஞ்சாயத்து...
நான் வரலைப்பா/
ஆல்ரெடி நம்மளையும் ரணகளப்படுத்திட்டாங்க.
@நிரூபன்
எப்பிடி சிக்கியிருக்கேன் என்று பாத்திங்களா பாஸ் இங்கையும் சிக்கி பத்தாததுக்கு உங்க கடையிலும் வந்து சிக்கினேன்.ஹி.ஹி.ஹி.ஹி..
Post a Comment