Tuesday, November 01, 2011

என் பார்வையில் 7ம் அறிவு,இது விமர்சனம் இல்லை

தீபாவளிக்கு வந்த படங்களில் 7ம் அறிவு தாமதமாகத்தான் பார்க்கமுடிந்தது.
7ம் அறிவு பற்றி பலர் விமர்சனம் செய்ததால் நான் விமர்சனம் எழுதவில்லை படத்தை பற்றி.சின்ன பார்வை.


1600 வருடங்களுக்கு முட்பட்ட காலத்தில் போதி தர்மர்..என்ற இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட ஓரு ஞானி சீனாவுக்கு சென்றுஅங்கு ஒரு கிராமத்தில் தனது தற்பாதுகாப்பு கலைகள்,மருத்துவம் போன்றவற்றை கற்பிக்கின்றார். கொடிய தொற்று நோயில் இருந்து அந்த மக்களைக்காக்கின்றார்



.கடைசியில் அந்த கிராமத்து மக்கள்.அவரது உடல் அந்த மண்ணில் புதைக்கப்பட்டால்...அந்த மண்ணில் நோய்கள் எதுவும் வராது என எண்ணி...போதி தர்மருக்கு விஷம் கலந்த உணவை கொடுக்கின்றார்கள்.
இதை போதிதர்மர் உணர்ந்தாலும் அம்மக்களின் வேண்டு கோளுக்கு இனங்க அந்த உணவை உண்டு மரணமடைகின்றார்....அவரின் உடல் அந்த மண்ணில் புதைக்கப்படுகின்றது....இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
இப்போது சீனாவில் பல இடங்களில் போதிதர்மரை கடவுளாக வழிபடுகின்றார்களாம்.அவர் அருளிய அந்த கலைகளை சீனா இந்தியாவுக்கு எதிராக தற்போது பயன்படுத்தினால் என்ன விளைவுகள் வரும்..

அதை போதிதர்மரின் வம்சாவழியில் வந்த நிகழ்காலத்தில் இருக்கும் ஓருவரை கொண்டு அந்த நடவடிக்கையை எப்படி முறியடிக்கப்படுகின்றது.என்பதுதான் படத்தின் கதை.
.
இதில் போதிதர்மரை பற்றி சின்ன அறிமுகம் மட்டுமே படத்தில் கொடுக்கப்படுகினறது.அதனால் இந்தப்படம் முழுமையாக போதிதர்மரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் இல்லை..ஆனால் படத்தின் இயக்குனர் முருகதாஸ்,மற்றும் சூர்யா பேட்டிகளில்.
நாங்கள் மறந்த ஓரு ஞானியை இன்னும் ஓரு தேசத்தில் கடவுளாக மதிக்கும் ஓரு ஞானியான போதி தர்மர் கதையை முதன் முதலில் தமிழ் சினிமாவில் பதிவு செய்தாதாக குறிப்பிட்டார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
சூர்யா ஓரு படிமேலே போய்..வீரபாண்டிய கட்டபொம்மன்,ராஜராஜ சோழன்,
போன்ற படங்களை உதாரணம் காட்டி..இந்தபடங்கள் எவ்வாறு வரலாற்றை சொல்லி நிற்கின்றனவே அதேபோல இதுவும் இருக்கும் என்றார்.
ஆனால் படத்தில் முழுமையாக போதிதர்மரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவில்லை..காரணம் அப்படி ஆக்கியிருந்தால் கமர்சியல் ரீதியாக படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதாலோ என்னவோ....இயக்குனர் போதிதர்மரின் கதையை மையமாக வைத்து...கமர்சியல் விடயங்களை படத்தில் திணித்து...படத்தை ஓரு கமர்சியல் படமாக மாற்ற முயற்சி செய்துள்ளார்..

முருகதாஸ் சொல்லியிருந்தார் தமிழர்களால் மறக்கப்பட்ட..ஒரு ஞானியின் வரலாற்றை சொல்லியிருகோம் என்று அதை முழுமையாக படமாக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.முருகதாஸ் அப்படி செய்யவில்லை..
படத்தில் இவரை வில்லன் என்று சொல்வதை விட ஹீரோ என்று சொன்னாலும் மிகையாகாது
ஆனாலும் படம் ரசிக்கவைக்கின்றது..குறிப்பாக சைனீஸ் வில்லன்..என்ன ஓரு நடிப்பு..படத்தின் ஹீரோ அவர் என்று சொன்னாலும் மிகையாகாது.
ஆனால் கடைசி சண்டைக்காட்சிகளில் வழமையாக தமிழ் சினிமா சண்டைகாட்சியைதான் நினைவு படுத்துகின்றது...முருகதாஸ் சொல்லியிருந்தார் வழக்கமான சண்டைகாட்சிகளில் இருந்து இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகள் வேறு படும் என்று.
பெரும்பாலும் இந்தப்படத்தில் வில்லனுக்குதான் அதிக சண்டைக்காட்சிகள் இருக்கின்றது அனைத்திலும் பட்டையை கெளப்பியிருக்கார்...ஆனால் கடைசி சண்டைக்காட்சியில் அப்படியே வழமையான தம் தமிழ் சினிமா சண்டை காட்சிதான்..

அதாவது ஹீரோ முதலில் அடிவாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு..அப்பறம் வில்லனை துவைத்து எடுக்கும் பார்முலா.
ஆனால் அதை கதையுடன் சேர்த்து போதிதர்மரின் சக்தியை நிகழ்கால சூர்யாவுக்கு கொண்டு வருவதற்கு ஆராச்சி செய்து கொண்டிருக்கும் போது கடைசி சண்டை நிகழ் \கின்றது..எனவே சூர்யா முதலில் அடிவாங்குகின்றார்..சண்டையின் இடையில் அவருக்கு போதிதர்மரின் சக்தி வந்துவிடுகின்றது எனவே கடைசியில் சண்டையில் வில்லனை புரட்டி எடுக்கின்றார்.இது இயக்குனரின் சாமர்தியம்..ஆனாலும் இன்னும் கொஞ்சம் அந்த சண்டைக்காட்சியை மெருகூட்டியிருக்கலாம்.

சூர்யா
இதில் இரட்டை வேடம் போதிதர்மராக ஓரு வேடம்,சர்கஸ் கலைஞராக இன்னும் ஓரு வேடம்..இரண்டிலும் சூர்யாவின் உழைப்புதெரிகின்றது சிறப்பாக நடித்திருக்கின்றார்...படத்துக்குப் படம் வித்தியாசமாக நடிக்கும் சூர்யா நிச்சயம் தமிழ் சினிமாவில் இன்னும் உயரத்துக்குப்போவார்.


ஸ்ருதிஹாசன்




கமல் என்ற ஓரு சினிமா ஞானியின் மகள்.
இதான் தமிழில் ஸ்ருதியின் அறிமுகப்படம் ..இந்தி உட்பட வேறு மொழிப்படங்களில் சிலவற்றில் நடித்திருக்கின்றார்.கமல் மகள் என்று பார்க்காமல் ஓரு புதுமுக நடிகையாக பார்க்க வேண்டும்.


இலகுவாக சினிமா அறிமுகம் இவருக்கு கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க இன்னும் ஸ்ருதி இன்னும் சிறப்பாக பல படங்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்..அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம் ஸ்ருதி என்ன செய்யப்போகின்றார் என்று.


ஆனால் தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் தமிழ் பொண்ணு அதுவும் பாட்டுப் பாடி நடிக்கும் ஓரு கதாநாயகி வெகுகாலத்துக்குப் பிறகு..கிடைத்துள்ளார் தற்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வேறு மொழி நாயகிகளே ஆதிக்கம்செலுத்தும் போது ஸ்ருதியின் வரவு ஆரோக்கியமானதுதான்..தமிழ் சினிமா இவரை பயன்படுத்த வேண்டும்.


பாடல்கள்..பரவாயில்லை  இன்னும் என்ன தோழா பாடல் சிறப்பாக இருக்கின்றது ஆனாலும் சில பாடல்களை முருகதாஸ் கட்டாயம் படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கவேண்டும் என்பதற்காக திணித்தாக தெரிகின்றது.
உதாரணத்துக்கு காதல் பொண்ணம்மா என்கின்ற சோகப்பாடல்.S.P.B யின் குரலில் பாட்டு அற்புதமாக இருக்கின்றது..ஆனால் அந்தப்பாடல் அந்த இடத்தில் தேவையில்லை..என்றே தோணுகின்றது.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
படத்தில் ஓளிப்பதிவு சிறப்பாக இருக்கு காட்சிகளை சிறப்பாக திரையில் நமக்கு காட்டியுள்ளார்.

படம் சிறப்பாக இருக்கின்றது இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..ஆனால் போதிதர்மரின் வாழ்கையை படமாக்கியுள்ளார்கள் என்று நினைத்து படம் பார்க்க போனால் ஏமாற்றம் தான்....அவரைப்பற்றிய சின்ன அறிமுகத்துடன் ஓரு கமர்சியல் படமாக 7ம் அறிவு வந்திருக்கின்றது.அவ்வளவுதான்.


நான் படம் பார்த்ததன் காரணங்கள்
சூர்யா,ஸ்ருதி,மற்றும் தற்பாதுகாப்பு கலை சம்மந்தமான படம் என்பதாலும்,போதிதர்மரை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலிலும்

படம் பார்த்ததன் பின் இவை எல்லாத்தையும் விட அந்த வில்லன் தான் மனசில் நிற்கின்றார்..சில ஆங்கிலப்படங்களில் முன்பே அவரது சண்டைகளை பார்த்து இருக்கின்றேன் ஆனாலும் தமிழ் சினிமாவில் பார்ப்பது சிறப்பாக இருக்கின்றது.

இந்தப்படத்துக்காக படக்குழு அனைவரினதும் உழைப்பு பாராட்டத்தக்கது..

Post Comment

34 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே!!!!!!
நடுநிலையான் விமர்சனம் நன்றி

M.R said...

ஆமாம் நண்பா ,நானும் படம் பார்த்தேன்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் மச்சி,
வில்லன் பற்றிய குறிப்புக்கள் அருமை,
வித்தியாசமான அலசல்.

சம்பத்குமார் said...

காலை வணக்கம் சகோ..

உங்களது பார்வையும் அதன் வழி விமர்சனமும் அருமை..

நன்றியுடன்
சம்பத்குமார்

பால கணேஷ் said...

எல்லாரும் படத்தை குத்து குத்துன்னு குத்தும்போது நீங்க மயிலிறகால ஒத்தியது மாதிரி நல்ல அம்சங்களை மட்டும் பாராட்டியிருக்கீங்க. வெரிகுட். நன்றாக இருந்தது.

பாலா said...

உண்மையில் படத்தின் கதாநாயகன் ஜானி

வில்லன் ஹாரிஸ் ஜெயராஜ்

சூர்யா - துணை நடிகர்.

Unknown said...

Mmmm padam paravaillai!

தனிமரம் said...

இன்னும் படம் பார்க்கவில்லை நண்பா!
படத்தில் நான் எதை எல்லாம் தேடுவேனோ அதை  நீங்களும் உள்வாங்கியது சிறப்பே!
பாடல்கள் ,காட்சியமைப்பு, நடிப்போரின் பாத்திரப்படைப்பு .வாழ்த்துக்கள் நண்பா!

தனிமரம் said...

முருகதாஸ் கவனிக்க வைக்கும் இயக்குனர் ஆனாலும் வெற்றி என்ற கனியைப்பறிக்க கமர்சல் படம் கொடுக்கனுமே அதைத் தாண் செய்திருக்கிறார் போல் இருக்கு உங்களின் பதிவைப் படிக்கும் போது!

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி 
படம் வரும் முன்னமே அவர்கள் படத்திற்கு அதிகமான எதிபார்பை கூட்டி விட்டார்கள் அத்தோடு சில பாட்டுக்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளது... இலங்கையில் படத்தில் வரும் எல்லா வசனங்களும் இருக்கின்றதா..???

Admin said...

ஒரு சாதாரணமான ரசிகனின் நடுநிலைப் பார்வை..

எந்த ஒரு மறை விமர்சங்களையும் உள்ளெடுக்காமல் இந்த படத்தினை பார்க்க செல்லும் ஒரு ரசிகனின் வெளிப்பாடாகவே இது உள்ளது.

வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

வித்தியாசமான அலசல்..

வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

நானும் இன்னும் படம் பார்க்கவில்லை, விமர்சனங்கள் படித்ததோடு சரி, உங்கள் விமர்சனம் நடுநாயமாக இருக்கிறது.

kaialavuman said...

நல்ல விமர்சனம்.

என்னைப் பொருத்தவரை படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியதால் அதை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

மேலும், இணையத்திலும் வலைப்பூக்களிலும் நல்ல பெயர் பெற்ற படங்கள் உண்மையில் தோல்வியையும் அடைந்துள்ளன (உம்: நந்தலாலா, ஆரண்ய காண்டம்). அதிகமாக விமர்சிக்கப்பட்ட படங்கள் வசூலில் சாதனை புரிந்தும் உள்ளன.

படம் ரசிகர்களால் எப்படி ஏற்கப் படுகிறது என்பதைப் பொருத்தே வெற்றித் தோல்வி.

இதை வேறு விதமாகவும் கூறலாம். ”படத்தின் வெற்றியை வைத்து நல்ல படமா இல்லையா என்பதைக் கூறமுடியாது” என்று.

ஆக இது ஒரு vicious circle தான்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சூப்பர்..

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

kobiraj said...

படத்தின் நல்ல அம்சங்களை மட்டும் சுட்டி காட்டி வித்தியாசமாக எழுதி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@சார்வாகன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
ஆமாம் நண்பா ,நானும் படம் பார்த்தேன்////

எப்படி என் விமர்சனம் நல்லாயிருக்கா

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் மச்சி,
வில்லன் பற்றிய குறிப்புக்கள் அருமை,
வித்தியாசமான அலசல்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சம்பத் குமார் கூறியது...
காலை வணக்கம் சகோ..

உங்களது பார்வையும் அதன் வழி விமர்சனமும் அருமை..

நன்றியுடன்
சம்பத்குமாம்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
எல்லாரும் படத்தை குத்து குத்துன்னு குத்தும்போது நீங்க மயிலிறகால ஒத்தியது மாதிரி நல்ல அம்சங்களை மட்டும் பாராட்டியிருக்கீங்க. வெரிகுட். நன்றாக இருந்தது/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
உண்மையில் படத்தின் கதாநாயகன் ஜானி

வில்லன் ஹாரிஸ் ஜெயராஜ்

சூர்யா - துணை நடிகர்/////

ஆமா பாஸ் அப்படியும் சொல்லாம்

K.s.s.Rajh said...

@
s.jaffer.khan கூறியது...
Mmmm padam paravaillai!////

ஆமா பாஸ் பார்க்ககூடிய படம்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இன்னும் படம் பார்க்கவில்லை நண்பா!
படத்தில் நான் எதை எல்லாம் தேடுவேனோ அதை நீங்களும் உள்வாங்கியது சிறப்பே!
பாடல்கள் ,காட்சியமைப்பு, நடிப்போரின் பாத்திரப்படைப்பு .வாழ்த்துக்கள் நண்பா////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
முருகதாஸ் கவனிக்க வைக்கும் இயக்குனர் ஆனாலும் வெற்றி என்ற கனியைப்பறிக்க கமர்சல் படம் கொடுக்கனுமே அதைத் தாண் செய்திருக்கிறார் போல் இருக்கு உங்களின் பதிவைப் படிக்கும் போது/////

ஆமா பாஸ் அப்படித்தான் படம் பார்க்கும் போது தெரியுது.....

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி
படம் வரும் முன்னமே அவர்கள் படத்திற்கு அதிகமான எதிபார்பை கூட்டி விட்டார்கள் அத்தோடு சில பாட்டுக்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டுள்ளது... இலங்கையில் படத்தில் வரும் எல்லா வசனங்களும் இருக்கின்றதா..????/////

என்ன என்ன வசனங்கள் வந்தது என்று எனக்கு தெரியவில்லை மாம்ஸ் அதனால் வசனம் எதுவும் நீக்கப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் கேட்பது போல வசனங்கள் இல்லை

K.s.s.Rajh said...

@
கறுவல் கூறியது...
ஒரு சாதாரணமான ரசிகனின் நடுநிலைப் பார்வை..

எந்த ஒரு மறை விமர்சங்களையும் உள்ளெடுக்காமல் இந்த படத்தினை பார்க்க செல்லும் ஒரு ரசிகனின் வெளிப்பாடாகவே இது உள்ளது.

வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
வித்தியாசமான அலசல்..

வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
நானும் இன்னும் படம் பார்க்கவில்லை, விமர்சனங்கள் படித்ததோடு சரி, உங்கள் விமர்சனம் நடுநாயமாக இருக்கிறது/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
வேங்கட ஸ்ரீனிவாசன் கூறியது...
நல்ல விமர்சனம்.

என்னைப் பொருத்தவரை படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாக்கியதால் அதை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

மேலும், இணையத்திலும் வலைப்பூக்களிலும் நல்ல பெயர் பெற்ற படங்கள் உண்மையில் தோல்வியையும் அடைந்துள்ளன (உம்: நந்தலாலா, ஆரண்ய காண்டம்). அதிகமாக விமர்சிக்கப்பட்ட படங்கள் வசூலில் சாதனை புரிந்தும் உள்ளன.

படம் ரசிகர்களால் எப்படி ஏற்கப் படுகிறது என்பதைப் பொருத்தே வெற்றித் தோல்வி.

இதை வேறு விதமாகவும் கூறலாம். ”படத்தின் வெற்றியை வைத்து நல்ல படமா இல்லையா என்பதைக் கூறமுடியாது” என்று.

ஆக இது ஒரு vicious circle தான்////
ஆமா பாஸ் சரியாகச்சொன்னீர்கள்..

7ம் அறிவு பெற்றி பெருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
சூப்பர்./////

நன்றி டாக்டரே

K.s.s.Rajh said...

@
N.H.பிரசாத் கூறியது...
விமர்சனம் அருமை நண்பரே. பகிர்வுக்கு நன்றி/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
படத்தின் நல்ல அம்சங்களை மட்டும் சுட்டி காட்டி வித்தியாசமாக எழுதி இருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்/////

நன்றி நண்பா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails