Thursday, May 31, 2012

என் திரைப்பட வரலாறு-2

கடந்த பதிவில்

சென்சர் பண்ணாத படம் பார்த்து பிடிபட்டால் டீ.வி.டெக் பறிமுதல் செய்யப் படும் கடுமையான தண்டனையும் வழங்கப் படும் அப்படி இருந்தும் பலர் விடுதலை புலிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்சார் செய்யாத படங்களை பார்பார்கள்.

எங்கள் நண்பர்களுக்கும் சென்சர் பண்ணாத படம் பார்க்க ஆசையாக இருந்தது எப்படியும் சென்சர் பண்ணாத படம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம் சென்சர் பண்ணாத படக்கொப்பியும் எடுத்தாச்சி ஆனால் எங்க பார்பது எப்படி பார்பது பார்த்து பிடிபட்டால் டின் கட்டிவிடுவார்கள் என்ற பயம் வேறு பார்த்தோமா இல்லையா 
இனி.....

ஒரு மாதிரி சென்சார் செய்யாத படக் கேசட் எடுத்தாச்சு அடுத்து பார்க்க வேண்டும் எங்கே பார்கலாம் என்று நண்பர்கள் சிந்தித்துக்கொண்டு இருந்தபோது நண்பன் ஒருவனின் உறவிணர் வீட்டில் ஒருத்தரும் இல்லை எனவும் அவன் மட்டுமே தனியாக இருக்கின்றான் என்றும் தகவல் கிடைக்க எங்கள் நண்பர்கள் டீம் அவனது வீட்டை நோக்கி படை எடுத்தது.

Post Comment

Tuesday, May 29, 2012

என் திரைப்பட வரலாறு-1

வணக்கம் அன்பு நண்பர்களே இந்த தொடர் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை அதன் மீதான ரசனையை தன்மையை அலட்டல் இல்லாமல் சுருக்கமாக சொல்லாம் என்று நினைக்கின்றேன் ஆமா திரைபட வரலாறு எழுத இவரு பெரிய அப்பாடக்கரு என்று யாரும் திட்டாதீங்கப்பா ஒரு சராசரி சினிமா ரசிகனின் சினிமா அனுபவங்கள் தான் இது.

Post Comment

Monday, May 28, 2012

இலங்கை பதிவுலகம் செல்லும் நிலை சரிதானா?

வணக்கம் நண்பர்களே என் மனதில் ரொம்ப நாளாக ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது அதாவது இந்திய பதிவுலகுடன் ஒப்பிடும் போது எமது இலங்கை பதிவுலகத்தின் நிலை அவ்வளவு சிறப்பானதாக இல்லை

Post Comment

Saturday, May 26, 2012

விஜய்க்கும் தோனிக்கு என்ன தொடர்பு தோனிக்கு ஒரு விசில் போடு........

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அதிஸ்டம்+திறமை ஒருங்கே பெற்ற ஒரு கிரிக்கெட் கேப்டன்.உலகில் எத்தனையோ திறமையான கிரிக்கெட் வீரர்கள் தோன்றியிருக்கின்றார்கள் ஆனால் எல்லோறும் திறமையான கேப்டன்களாக இருக்கமாட்டார்கள்.ஏன் பல வீரர்களுக்கு அணிக்கு கேப்டனாகும் சந்தர்பமே கிடைக்காமல் இருக்கும்.சிலர் அந்த பதவி வழங்கப்பட்டாளும் திறமையாக செயல் படமுடியாமல் தோல்விகளால் துவண்டுவிடும் போது ராஜினாமா செய்துவிடுவார்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதனைகள் செய்த அவரால் கேப்டன் பதவியில் மட்டும் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

Post Comment

Thursday, May 24, 2012

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஒரு நகைச்சுவை கலைஞன் ஓமக்குச்சி நரசிம்மன்

தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் வந்து போயுள்ளார்கள் ஆனால் சிலர் மனசில் சட்டென்று ஓட்டிக்கொள்வார்கள் அந்த வகையில் என்னை மிகவும் கவந்த ஒரு நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் இவரின் தீவிரமான ரசிகன் நான்

Post Comment

Thursday, May 17, 2012

என் ப்ரண்ட போல யாரு மச்சான்? பகுதி-1

இந்த உலகத்தில் விலைகொடுத்து வாங்க முடியாத அற்புதமான உணர்வு நட்பு
நண்பர்கள் இல்லாத மனிதர்களை காணமுடியாது நட்பினால் உயர்ந்தவர்களும் உண்டு நண்பர்களால் தாழ்ந்தவர்களும் உண்டு.நட்பு என்பது சுயநலம் கருதாததாக இருக்கவேண்டும் நண்பர்களுக்கு பிரச்சனை வரலாம் ஆனால் சரியான புரிந்துணர்வின் மூலம் பிரச்சனையை கையாண்டால் எந்த பிரச்சனையும் இலகுவில் மறைந்துவிடும். 

Post Comment

Wednesday, May 16, 2012

ப்ளீஸ் இதை யாரும் படிக்கவேண்டாம்

வணக்கம் நண்பர்களே என்ன பதிவுலகை விட்டு போகின்றேன் என்று சொல்லிட்டு போனவன் மீண்டும் வந்திருக்கேன் என்று பாக்கிறீங்களா?
நிலையற்ற இந்த மனிதவாழ்க்கையில் நிலையானது எது? எனவே எனது பதிவுலகைவிட்டு போகும் முடிவை வாபஸ் வாங்கிவிட்டு மீண்டும் வந்துவிட்டேன். நிலையற்ற பொருளாதார தேடலில் தொலைந்து போகின்ற சாதாரன சாமானியன் நான் எனவே கிடைக்கும் நேரங்களில் என் எழுத்துக்களையும் மதித்து என்னையும் பதிவுலகில் தூக்கிவிட்ட வாசகர்களுக்காக மீண்டும் பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails