Tuesday, November 08, 2011

ஓரு பதிவர் பேசுகின்றார்.


இன்று என்பதிவின் ஊடாக பதிவுலகம் பற்றி பேசுகின்றேன்




அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
இன்று (8-11-2011) நண்பர்கள் தளம் ஆரம்பிக்கப்பட்டு ஓரு வருடங்கள் பூர்த்தியாகின்றது 8-11-2010 அன்று என் தளத்தை ஆரம்பித்து முதலாவது
பதிவு வை எழுதினேன்...நான் பதிவெழுத வந்த இந்த ஓரு வருடத்தில் இதுவரை 108 பதிவுகள் எழுதியிருக்கின்றேன்.3488 கருத்துரைகள் கிடைத்திருக்கின்றன..திரட்டிகளில் என் பல பதிவுகள் பிரபல்யமாகியிருக்கின்றன,விகடனில் குட்ப்ளாகில் என் தளம் தேர்வுவாகியிருந்தது.தமிழ்மணத்தில் டாப்-20 பதிவர்களில் பல வாரங்கள் இடம்பிடித்திருக்கின்றேன்.அதிகபட்சமாக 4வது இடம் கிடைத்து..
தமிழ்விருதின் சிறந்த கிரிக்கெட் பதிவருக்கான விருது கிடைத்தது.



ஆனால் நான் பதிவெழுத வந்து 7 மாதங்கள் வரையில் என் தளம் பதிவுலகில் பெரிதாக அடையாளம் காணப்படவில்லை.. 7மாதங்களில் வெறும் 35 பதிவுகள் மட்டுமே எழுதியிருந்தேன்...காரணம் எனக்கு இந்த பதிவுலகம் பற்றி சரியாகத்தெரியாது..ஆனாலும் நான் சோர்ந்து போகாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருந்தேன்...கடந்த 5 மாதங்களாகத்தான் என்தளமும் பதிவுலகில் அடையாளம் காணப்பட்டது..இன்று நானும் பதிவுலகில்..பலரும் கவனிக்கும் ஓரு பதிவராக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..இதற்கு காரணமான வாசகர்கள்,திரட்டிகள்,சகபதிவர்கள், ,அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எமது எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகச்சிறந்த வரப்பிசாதமாக இன்று பதிவுலகம் திகழ்கின்றது.எம் கருத்துக்களை தெளிவாக சொல்லமுடிகின்றது..நான் எல்லாம் சில ஆண்டுளுக்கு முன்பு பல சிறுகதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவைப்பேன் ஆனால் அவை பிரசுரமாகாமல் விடும் போது மனசு வலிக்கும்..ஆனாலும் நான் சோர்ந்துவிடாமல் கதைகளை எழுதி அனுப்புவதுண்டு..அப்படி நான் எழுதிய கதைஓன்று ஓரு வருடங்களுக்கு பின் பத்திரிகையில் பிரசுரமானது அன்று நான் அடைந்த மகிழ்சிக்கு அளவில்லை.அந்த சிறுகதையை என் தளத்திலும் பதிவாக்கியுள்ளேன் அதை படிக்க இங்கே-சிறுகதை-விதியின் ரேகை

ஆனால் இன்று உடனுக்குடன் எமது எழுத்துக்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் வலைப்பதிவுகள் என்னைபோல பலருக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.
அதைவிட எமது எழுத்துக்கள் பற்றிய பாராட்டுக்கள்,அதற்கு விமர்சனமும் உடனுக்கு உடன் கிடைக்கின்றது
.உண்மையில் பாராட்டுக்கள் என்பதும்,விமர்சனம் என்பது கட்டாயம் ஓரு படைப்பாளிக்குதேவை அப்போதுதான் அவனது படைப்புக்கள் புடம்போடப்படும்.ஆனாலும் பதிவுலகில் பல பதிவர்கள்..பல்வேறு பிரயோசனம் அற்ற விடயங்களுக்காக கருத்துக்களால் மோதிக்கொள்வது வருந்தத்தக்க விடயம் குறிப்பாக சினிமா நடிகர்களுக்காகவும்,அந்த நடிகர் பெருசா,இந்த நடிகர் பெருசா என்று கருத்துக்களால் முரண்பட்டுக்கொள்வது.

பல நல்ல திறமையான பதிவர்கள் பலரும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது வேதனையான விடயம்.இன்று ஓரு பதிவரின் பதிவை படித்தேன் மிகவும் அழகான ஓரு கட்டுரை பதிவாக எழுதியிருந்தார்....என்னைக்கேட்டால் நான் படித்த அவரது சிறந்த பதிவாக அதைக்குறிப்பிடுவேன்...எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது அட இப்படி எழுதும் திறமையுள்ள ஓருவரா ஓரு சினிமா நடிகருக்காக கருதுக்களால் மோதிக்கொண்டார் என்று..

அடுத்து மொய்க்கு மொய் என்றும் ஓரு விடயம் அதாவது நீ என் பதிவுகளுக்கு ஓட்டும் கருதுரையும் போட்டால்தான் நான் உன் பதிவுகளுக்கு ஓட்டும் கருத்துரையும் போடுவேன் என்ற ஓரு விடயம்....இதனால் பல நல்ல பதிவுகளை எழுதும் பலர் பதிவுலகில் அடையாளம் காணப்படாமலே இருப்பார்கள்...
.
மொய்க்கு மொய்யை ஓரு வகையில் தவறு என்றும் சொல்லமுடியாது காரணம் நான் பதிவுகளை எழுதுவேன் யாருக்கும் கருத்துரை ,ஓட்டும் போட மாட்டேன் என்று இருந்து கொண்டு என்பதிவுகளை ஓருத்தரும் படிக்கவில்லை அந்தப்பதிவருக்கு மட்டும் நிறைய ஓட்டு,கருத்துரை கிடைக்கின்றது என்று பிரபல பதிவர்களை குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை அப்படி இருந்தால் நீங்கள் நிச்சயம் பதிவுலகில் அடையாளம் காணப்படாமலேதான் இருப்பீர்கள் .

எனவே பதிவுகளை எழுதும் அதே சமயம் சகபதிவர்களின் பதிவுகளை வாசித்து அவர்களுக்கு கருத்துரைகள் கூறி,ஓட்டுக்களை போட்டு ஊக்கப்படுத்துங்கள்...அவரும் உங்களுக்கு நிச்சயம் கருத்துரையும்,ஓட்டும் போட்டு உங்களை ஊக்கப்படுத்துவார்....

ஆனால் பதிவர்கள் தங்கள் சக நண்பர்களின் பதிவுகளுக்கே அதிகளவு கருத்துரைகளை கூறி,ஓட்டுபோட்டு..அவர்களது பதிவுகளை பிரபல்யப்படுத்த வேண்டும் என்பதற்காக ஓருவரே இரண்டு மூன்று...பெயர்களில் ப்ரபைலை உருவாக்கி கருத்துரையோ இல்லை ஓட்டோ போடுவது .மிகவும் வேதனையானது.இந்தவகையில் பார்த்தால் மொய்க்கு மொய் தவறானது.

இன்னும் ஓரு விடயம் எமது பதிவுகளை ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாசிக்கின்றார்கள் ஆனால் எமக்கு கருத்துரை,ஓட்டுப்போடுவது பெரும்பாலும் எமது சகபதிவர்கள்தான்...எனவே அதிக கருத்துரை ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதுக்காக..ஓரு பதிவரை கலாய்த்து மொக்கை போட்டால் அதிக ஓட்டு,கருத்துரை கிடைக்கும் ஆனால் எமது தளத்தை வாசிக்கும் ஆயிரக்கணகான வாசிகர்களுக்கு பெரும்பாலானவர்களுக்கு நாம் கலாய்த்து மொக்கை போடும் பதிவரை தெரிந்திருக்காது...இதனால் வாசகர்களுக்கு சலிப்புத்தன்மை ஏற்படும்..

நான் கூட ஆரம்பத்தில் இதை உணரவில்லை நம்ம சக பதிவர்கள் சிலைரை கலாய்து மொக்கை போட்டுள்ளேன் அந்தப்பதிவுகளுக்கு
கருத்துரைகள் நூற்றுகணக்கிலும்,ஓட்டுகள் அதிகளவும் கிடைத்தன பதிவும் பிரபல்யமானது ஆனால் பார்வையாளர்கள்.300,400 பேர்தான் அதை பார்த்திருந்தார்கள்,ஏன் பார்வையாளர் குறைந்தார்கள் என்று யோசித்தேன் அப்பதான் எனக்கு இந்த விடயம் புரிந்தது அட.நம்ம பதிவர்களை வைத்து மொக்கை போடும் போது பதிவர்கள் அல்லாத வாசகர்களின் வரவு குறைகின்றது என்று...எனவே இதுவும் பதிவர்கள் கவனிக்கவேண்டிய ஓரு விடயம்...

எது எப்படியோ பதிவுலகம் எமக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம்...எமது எழுத்துக்கள் மூலமாக எம்வாசகர்களுக்கு சிறந்த பதிவுகளை வழங்குவோம்,சக பதிவர்களையும் ஊக்குவிப்போம்

.பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்று என்னைக்கேட்டால் நான் துணிந்து சொல்லுவேன் பல நண்பர்களை சம்பாதித்திருக்கின்றேன்,

என் மனதில் நீண்டகாலமாக உறுத்திக்கொண்டு இருந்த ஓரு விடயத்தை பதிவுலகம் வாயிலாக மறக்க முடியாத பாடசாலை நாட்கள் என்னும் தொடர் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.அதே போல இன்னும் ஓரு விடயம் என் மனதில் நெடுநாட்களாகவே உறுத்திக்கொண்டு இருந்தது.அதாவது நான் பாடசாலையில் உயர்தரம் படிக்கும் போது ஓரு கதை எழுதினேன் காதலையும்,கிரிக்கெட்டையும் வைத்து எழுதின கதை அது அதை நான் எழுதிக்கொண்டு இருந்த போது என கூடப்படித்த நண்பன் ஓருவன் அதை எடுத்து எங்கள் வகுப்பில் படித்த பொண்ணுங்களிடம் கொடுத்துவிட்டான் அவங்க அதைப்படித்து விட்டு...சிலர் நல்லா இருக்கு பத்திரிகைக்கு அனுப்பு என்றார்கள்..அதில் ஓரு பொண்ணு சொன்னுச்சி இதலாம் ஓரு கதையா தூக்கி போட்டுவிட்டு பிரயோசனமாக வேலை ஏதும் இருந்தால் பார் ராஜ்
என்றாள்.எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது..அந்தக்கதையையும் அப்படியே எழுதாமல் விட்டு விட்டேன்

பிறகு என் பாடசாலைகாலம் முடிந்து கொஞ்ச காலத்தின்பின் அந்தக்கதையை மீளவும் தூசி தட்டி எழுதினேன்...பலர் மிகச்சிறப்பாக இருக்கு பத்திரிகைக்கு அனுப்பு என்றார்கள்.சில காரணங்களால் அனுப்பமுடியவில்லை இப்ப அந்தக்கதை எழுதின நோட்டும் என் கைவசம் இல்லை ஆனால் அந்தக்கதை மட்டும் மனதில் அப்படியே புதைந்து போயிருக்கின்றது...

இப்போது வலைப்பதிவு எழுத தொடங்கியதும் அதை எழுதலாம் என்று நினைத்தேன்.ஆனால் யார் படிக்கபோகின்றார்கள் என்று விட்டுவிட்டேன்...நான் எழுதும் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால்
என் தளத்தில் அந்தக்கதையை எழுதுகின்றேன் என்ன அது உண்மைக்கதை இல்லாவிட்டாலும் நான் எழுதிய முதல் கதை அது.
நிச்சயம் அதை என் தளத்தில் எழுதுகின்றேன்.இப்ப எழுதும் தொடர் முடிவடையட்டும்.

என்ன அந்தக்கதையை தூக்கி போட்டுவிட்டு வேறு வேலையை பார் என்று அந்தக்கதைக்கு முதல் விமர்சனம் சொன்ன என் பாடசாலைகால நண்பி இப்போது உயிருடன் இல்லை மண்னைநேசித்து மரணித்த பல உறவுகளுள் அவளும் கலந்துவிட்டாள்..அந்தக்கதையை எழுதும் போது அதை அவளுக்கே சமர்ப்பணம் செய்கின்றேன்

என்னை பதிவுலகில் ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்கள் வாசகர்கள்,அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்
எனக்குத்தெரிந்ததை நான் எழுதுகின்றேன்..அதற்கான அங்கிகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

Post Comment

79 comments:

ஆகுலன் said...

வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கோ...

சென்னை பித்தன் said...

த.ம.1

முதல் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.
தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்!

நிரூபன் said...

முதலாமாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் மச்சி,

பதிவுலகை ஒரு வருடத்தினுள் கரைத்துக் குடித்து எழுதியிருக்கிறீங்க.

தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களோடு, ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

ஆமா, நமக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா?

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் மக்கா, தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம்...!!!

ஆமினா said...

முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள் சகோ

பதிவுலகின் சில உண்மை விஷயங்களை சொல்லியிருக்கீங்க... ரசித்தேன்


தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்

செங்கோவி said...

முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கிஸ்ராஜா..தொடர்ந்து இதே போன்று ஆக்கப்பூர்வமான விஷயங்களை எழுதி வாருங்கள்..

தனிமரம் said...

முதலாம் ஆண்டு இன்னும் பல ஆண்டுகளாக தொடர வாழ்த்துக்கள் சகோதரம்!

தனிமரம் said...

பதிவுலகத்தின் உண்மைத்தண்மையை நன்கு தெரிந்து கொண்டீர்கள் தொடர்ந்தும் காத்திரமான பதிவுகளை தயக்கம் இன்றி எழுதுங்கள் ஒரு வாசகனாக தொடர்கின்றேன்.
கருத்து மோதலில் நட்பு சில நேரங்களின் கேள்விக்குறியாவது கண்டிக்க வேண்டிய ஒன்று நண்பர்கள் நல்ல பதிவைக் கொடுக்கும் போது சகபதிவாளர்கள் ஊக்கம் அவசியம் என்பதை நீங்கள் மொய்க்கு மொய் மூலம் அலசியிருப்பது நல்ல ஒரு விடயம்!
மீண்டும் வாழ்த்துக்கள் மறு பதிவில் சந்திப்போம்!

K.s.s.Rajh said...

@ஆகுலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
த.ம.1

முதல் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.
தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
முதலாமாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் மச்சி,

பதிவுலகை ஒரு வருடத்தினுள் கரைத்துக் குடித்து எழுதியிருக்கிறீங்க.

தொடர்ந்தும் காத்திரமான படைப்புக்களோடு, ஜனரஞ்சக அந்தஸ்தினை நோக்கிய பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

தனிமரம் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி நீங்க ராச் ஆ கிஸ்ராச் ஆ???ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ஆமா, நமக்கெல்லாம் பார்ட்டி கிடையாதா?/////

என்னது பாட்டியா?யாருடைய பாட்டி
ஓ பார்ட்டியா ஜடியாமணி ஹன்சிகா பாவாடையை ஏலம் விடுவதாக அறிவித்து இருக்கார்தானே அதில் ஓரு தொகை பணம் இந்தபார்ட்டிக்குத்தான்..ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
வாழ்த்துக்கள் மக்கா, தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கிறோம்...!!/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஆமினா கூறியது...
முதலாம் ஆண்டு வாழ்த்துக்கள் சகோ

பதிவுலகின் சில உண்மை விஷயங்களை சொல்லியிருக்கீங்க... ரசித்தேன்


தொடர் வெற்றியடைய வாழ்த்துக்கள்////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கிஸ்ராஜா..தொடர்ந்து இதே போன்று ஆக்கப்பூர்வமான விஷயங்களை எழுதி வாருங்கள்./////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
முதலாம் ஆண்டு இன்னும் பல ஆண்டுகளாக தொடர வாழ்த்துக்கள் சகோதரம்////

நன்றி அண்ணே

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
பதிவுலகத்தின் உண்மைத்தண்மையை நன்கு தெரிந்து கொண்டீர்கள் தொடர்ந்தும் காத்திரமான பதிவுகளை தயக்கம் இன்றி எழுதுங்கள் ஒரு வாசகனாக தொடர்கின்றேன்.
கருத்து மோதலில் நட்பு சில நேரங்களின் கேள்விக்குறியாவது கண்டிக்க வேண்டிய ஒன்று நண்பர்கள் நல்ல பதிவைக் கொடுக்கும் போது சகபதிவாளர்கள் ஊக்கம் அவசியம் என்பதை நீங்கள் மொய்க்கு மொய் மூலம் அலசியிருப்பது நல்ல ஒரு விடயம்!
மீண்டும் வாழ்த்துக்கள் மறு பதிவில் சந்திப்போம்////

உண்மைதான் பாஸ்..நன்றி

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி நீங்க ராச் ஆ கிஸ்ராச் ஆ???ஹீ ஹீ////

நான் ராஜ் தான் அண்ணே..செங்கோவி பாஸ் இன் பதிவின் பின்னூட்டத்தில் நான் ஓரு முறை அஞ்சலியின் வயதை பப்ளிக்காக சொல்லிவிட்டேன் இதனால் காண்டான செங்கோவி பாஸ் என் புகழைக்கெடுக்க கிஸ்ராஜா என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்...மற்றும் படி வேற ஒன்றும் இல்லை......ஹி.ஹி.ஹி.ஹி.....

பால கணேஷ் said...

முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாகத் துவங்கும் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் அனுபவங்களை எழுதியது என்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் தரும் விஷயம். நன்றி ராஜா சார்.

பால கணேஷ் said...

த.ம.7

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதலில் வாழ்த்துக்களை பதிவு செய்துவிடுகிறேன்...


தாங்கள் அத்தனைக்கருத்துக்கும் நானும் செவிசாய்க்கிறேன்...


கிரிக்கெட் சார்ந்த ஒரு தளம் பிரபவமடைவது கொஞ்சம் கடினம் தங்களின் உழைப்பினால் அது சாத்தியமாயிற்று...

கதை கவிதை போன்றவைகள் புத்தகமாக வெளியிடும்பேர்து மாத வார இதழ்களில் வெளிவரும் போதும் குறைந்த அளவு வாசகர்களை மட்டுமே சென்றடைகிறது..

ஆனால் பதிவுலம் தாங்கள் சொன்னது போல் எனக்கும் ஒரு வரப்பிரசாதமே....

தங்களுக்கு இன்னும் அதிக நண்பர்கிடைத்து தாங்களும் பிரபல பதிவர்கள் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாழ்த்துக்கள்..

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..
பதிவுலகில் ஒருவருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்... ட்தொடர்ந்தும் எழுதுங்கோ ஆதரவுக்கு நாங்க இருக்கோம்..

K said...

யோவ், மச்சான் சார்! அதுக்குள்ளையா ஒரு வருஷம் ஆச்சு? வாழ்த்துக்கள் மச்சான் வாழ்த்துக்கள்!

நீங்கள் எழுதும் கிரிக்கெட் பதிவுகளைப் பார்த்து நான் நினைப்பேன், “ அட எப்படி, இப்படியெல்லாம் எழுதுகிறார்?” என்று!

எனக்கு கிரிக்கெட்டில் ஒண்ணுமே தெரியாது! ஆனால் நீங்கள் கிரிக்கெட், மொக்கை, சீரியஸ், சிறுகதை, கவிதை என்று ஆல் ஏரியாவிலும் கலக்குகிறீர்கள்!

வாழ்த்துக்கள் மச்சான் சார்!

K said...

பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்று என்னைக்கேட்டால் நான் துணிந்து சொல்லுவேன் பல நண்பர்களை சம்பாதித்திருக்கின்றேன்,//////

யோவ், மச்சான் சார், வலையுலகம் மூலமாக உங்களுக்கு ஒரு மச்சான் சாரும் + உங்கள் தங்கச்சிக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைத்ததை மறந்து விட்டீர்களா? ஹி ஹி ஹி ஹி !!!

K.s.s.Rajh said...

@கணேஷ்

////
கணேஷ் கூறியது...
முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாகத் துவங்கும் உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் அனுபவங்களை எழுதியது என்போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் தரும் விஷயம். நன்றி ராஜா சார்////

நன்றி பாஸ் என்னை ஏன் சார் என்று எல்லாம் கூப்பிட்டு கிட்டு நான் சின்னப்பையன் பாஸ் ராஜ் என்றே சொல்லுங்க

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
முதலில் வாழ்த்துக்களை பதிவு செய்துவிடுகிறேன்...


தாங்கள் அத்தனைக்கருத்துக்கும் நானும் செவிசாய்க்கிறேன்...


கிரிக்கெட் சார்ந்த ஒரு தளம் பிரபவமடைவது கொஞ்சம் கடினம் தங்களின் உழைப்பினால் அது சாத்தியமாயிற்று...

கதை கவிதை போன்றவைகள் புத்தகமாக வெளியிடும்பேர்து மாத வார இதழ்களில் வெளிவரும் போதும் குறைந்த அளவு வாசகர்களை மட்டுமே சென்றடைகிறது..

ஆனால் பதிவுலம் தாங்கள் சொன்னது போல் எனக்கும் ஒரு வரப்பிரசாதமே....

தங்களுக்கு இன்னும் அதிக நண்பர்கிடைத்து தாங்களும் பிரபல பதிவர்கள் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாழ்த்துக்கள்.////

நன்றி பாஸ் உங்களைப்போன்ற நண்பர்களின் அன்பு இருந்தால் நான் மேலும் பதிவுலகில் வளர்வேன்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி..
பதிவுலகில் ஒருவருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்... ட்தொடர்ந்தும் எழுதுங்கோ ஆதரவுக்கு நாங்க இருக்கோம்.////

நன்றி மாம்ஸ் உங்களைப்போன்றவர்களின் அன்பு இருந்தால் நான் இன்னமும் பதிவுலகில் வளர்வேன்

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
யோவ், மச்சான் சார்! அதுக்குள்ளையா ஒரு வருஷம் ஆச்சு? வாழ்த்துக்கள் மச்சான் வாழ்த்துக்கள்!///

நன்றி மச்சான் சார் நான் பதிவெழுத வந்து ஓரு வருடம் ஆகிவிட்டது ஆனால் நான் பலராலும் ஓரு பதிவராக அடையாளம் காணப்பட்டது கடந்த 5 மாதங்களாகத்தான்....

K.s.s.Rajh said...

@Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
நீங்கள் எழுதும் கிரிக்கெட் பதிவுகளைப் பார்த்து நான் நினைப்பேன், “ அட எப்படி, இப்படியெல்லாம் எழுதுகிறார்?” என்று!

எனக்கு கிரிக்கெட்டில் ஒண்ணுமே தெரியாது! ஆனால் நீங்கள் கிரிக்கெட், மொக்கை, சீரியஸ், சிறுகதை, கவிதை என்று ஆல் ஏரியாவிலும் கலக்குகிறீர்கள்!

வாழ்த்துக்கள் மச்சான் சார்////

உங்களைபோன்ற பதிவர்களின் ஆதரவுதான் காரணம் மச்சான் சார்
நான் ஒரு மொக்கை போட நிறைய யோசிப்பேன்
ஆனா நீங்க அசால்ட்டா பல மொக்கை போட்டுவிட்டு போயிடுவீங்க நான் அப்ப எல்லாம் ஆச்சரியப்பட்டு இருக்கேன்
இவர் எல்லாம் என் தளத்திற்கு வருவாரா என்பதிவுகளை படிபாரா என்று.....பதிவுகளில் மொக்கை போடுவதுதான் கடினம் பாஸ்...என்னைக்கேட்டால் ஓருவரை சிரிக்கவைப்பது என்பது மிகவும் கடினம் அதை உங்களைப்போன்ற பதிவர்களால் மட்டும்தான் முடியும்
கிரிக்கெட் பதிவு எழுதுவது மிகவும் இலகுவானது அதில் ஆர்வம் இருந்தால் மிக இலகுவாக எழுதலாம்.

நன்றி மச்சான் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு

முற்றும் அறிந்த அதிரா said...

ஒருவருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள் ராஜ்.

இன்னும் தொடர்ந்து பல பதிவுகளை எழுத வாழ்த்துகிறேன்.

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்று என்னைக்கேட்டால் நான் துணிந்து சொல்லுவேன் பல நண்பர்களை சம்பாதித்திருக்கின்றேன்,//////

யோவ், மச்சான் சார், வலையுலகம் மூலமாக உங்களுக்கு ஒரு மச்சான் சாரும் + உங்கள் தங்கச்சிக்கு ஒரு மாப்பிள்ளையும் கிடைத்ததை மறந்து விட்டீர்களா? ஹி ஹி ஹி ஹி ////

நீங்கள் மாறிச்சொல்கின்றீர்கள்...

சரியானது இதுதான் எனக்கு ஒரு லவ்வரும்(சரன்யா)அவளுக்கு ஓரு அண்ணனும்(ஜடியாமணி)எனக்கு மச்சான்...கிடைத்துள்ளனர் என்று தான் சொல்லனும்...ஹி.ஹி.ஹி.ஹி

KANA VARO said...

வாழ்த்துக்கள் கிஸ் ராஜா

KANA VARO said...

யாருப்பா சினிமா நடிகருக்காக மோதுற ஆள்..? போட்ட்டுடுவமா ..

KANA VARO said...

உங்க இந்த பதிவுக்கும் 300, 400 பேர் தான் சிலவேளை வருவினம். ஏன்னா இது உங்க தனிப்பட்ட பதிவு. நண்பர்கள் வாசிப்பார்கள். இது தான் பதிவுலகம்

Anonymous said...

ஒரு வருடத்தில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறீர்கள்.
உங்கள் பதிவுலக பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ஹொங் ஹொங்கில் பாம்பு சூப்பிற்கு தனியான உணவகம்.

rajamelaiyur said...

வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்றைய ஸ்பெஷல்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
புதியவர்களுக்கு வழிகாட்டும் பதிவாக நிச்ச்யம் இது இருக்கும்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 10

M.R said...

வாழ்த்துக்கள் நண்பா ,இன்னும் நிறைய எழுதுங்கள்

த.ம 11

சக்தி கல்வி மையம் said...

முதலில் வாழ்த்துக்கள்..

இந்த ஒரு வருடத்தில் பல நல்ல பதிவுகளைத் தந்து இருக்கிறீர்கள்..

உங்களின் கிரிக்கெட் பற்றிய பதிவுகளின் ரசிகன் நான் என்பதில் பெருமையடைகிறேன்..

வாழ்த்துக்கள்+பாராட்டுகள்..

சி.பி.செந்தில்குமார் said...

1 பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...

ராஜ் முதலில் வாழ்த்துக்கள். ஒருவருடம் சலிக்காமல் தொடர்ந்து எழுதுவதென்பதே பெரிய சாதனை. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பதிவுகளிற்கு மொய் எழுதும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்.

அம்பலத்தார் said...

Where is the party?.............
நடு ரோட்டில
நடு வீட்டில
நடு Blog இல

அம்பலத்தார் said...

பதிவர்களின் வாழ்வை வடிவாக நேர்மையாக உண்மையாக எழுதியிருக்கிறியள்.

அம்பலத்தார் said...

மிகவும் சரியாக சொல்லியிருக்கிறியள் ராஜ். பதிவெழுதவந்ததில் கிடைத்த மிகப்பெரிய விடயம் நல்ல உள்ளங்களின் நட்பு.
நம்ம பசங்க எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க சத்தமாகச் சொல்லுறன் கேட்டுக்குங்கோ ஊத்திறன் பத்திறன் என்கிறதைவிட்டிட்டு எல்லாருமாச் சேர்ந்து காட்டான் மாமாவின்ரை பெண்ணைக் கட்டிக்கொண்டு சந்தொசமா Friends ஆக இருங்கோ

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா.. உங்கள் சேவை தொடரவேண்டும்..

சுதா SJ said...

வாழ்த்துக்கள் பாஸ்..

சுதா SJ said...

பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்று என்னைக்கேட்டால் நான் துணிந்து சொல்லுவேன் பல நண்பர்களை சம்பாதித்திருக்கின்றேன்,//////

நாங்களும் சொல்வோம் பதிவுலகத்தால் ராஜ் போல் ஒரு நல்ல நண்பன் கிடைத்தான் என்று :)

K.s.s.Rajh said...

@KANA VARO
////வாழ்த்துக்கள் கிஸ் ராஜா////

நன்றி மாப்ள

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
யாருப்பா சினிமா நடிகருக்காக மோதுற ஆள்..? போட்ட்டுடுவமா ////

ஹி.ஹி.ஹி.ஹி.........சொன்னா புரியாது சொல்லாட்டி தெரியாது.....

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
உங்க இந்த பதிவுக்கும் 300, 400 பேர் தான் சிலவேளை வருவினம். ஏன்னா இது உங்க தனிப்பட்ட பதிவு. நண்பர்கள் வாசிப்பார்கள். இது தான் பதிவுலகம்////

அதே அதே..........

ஸாதிகா said...

வாழ்த்துகள்!வாழ்த்துக்கள்!!

K.s.s.Rajh said...

@
கூகிள்சிறி கூறியது...
ஒரு வருடத்தில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறீர்கள்.
உங்கள் பதிவுலக பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ஹொங் ஹொங்கில் பாம்பு சூப்பிற்கு தனியான உணவகம்.
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
வாழ்த்துகள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
அருமையான பதிவு
புதியவர்களுக்கு வழிகாட்டும் பதிவாக நிச்ச்யம் இது இருக்கும்
தொடர வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
அருமையான பதிவு
புதியவர்களுக்கு வழிகாட்டும் பதிவாக நிச்ச்யம் இது இருக்கும்
தொடர வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
முதலில் வாழ்த்துக்கள்..

இந்த ஒரு வருடத்தில் பல நல்ல பதிவுகளைத் தந்து இருக்கிறீர்கள்..

உங்களின் கிரிக்கெட் பற்றிய பதிவுகளின் ரசிகன் நான் என்பதில் பெருமையடைகிறேன்..

வாழ்த்துக்கள்+பாராட்டுகள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சி.பி.செந்தில்குமார் கூறியது...
1 பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
ராஜ் முதலில் வாழ்த்துக்கள். ஒருவருடம் சலிக்காமல் தொடர்ந்து எழுதுவதென்பதே பெரிய சாதனை. இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பதிவுகளிற்கு மொய் எழுதும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@அம்பலத்தார் கூறியது...
Where is the party?.............
நடு ரோட்டில
நடு வீட்டில
நடு Blog இல்////

ஹா.ஹா.ஹா.ஹா. இதைவைத்து செம மொக்கை பதிவு ஓன்று போடலாம்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
பதிவர்களின் வாழ்வை வடிவாக நேர்மையாக உண்மையாக எழுதியிருக்கிறியள்////

இதான் யதார்ந்தம் இன்றய பதிவுலகில்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறியள் ராஜ். பதிவெழுதவந்ததில் கிடைத்த மிகப்பெரிய விடயம் நல்ல உள்ளங்களின் நட்பு.
நம்ம பசங்க எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க சத்தமாகச் சொல்லுறன் கேட்டுக்குங்கோ ஊத்திறன் பத்திறன் என்கிறதைவிட்டிட்டு எல்லாருமாச் சேர்ந்து காட்டான் மாமாவின்ரை பெண்ணைக் கட்டிக்கொண்டு சந்தொசமா Friends ஆக இருங்கோ
/////

ஹி.ஹி.ஹி.ஹி.............எல்லோறும் நல்லா கேட்டுக்கோங்கப்பா

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா.. உங்கள் சேவை தொடரவேண்டும்/////

நன்றி டாக்டரே

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
வாழ்த்துக்கள் பாஸ்..
/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்று என்னைக்கேட்டால் நான் துணிந்து சொல்லுவேன் பல நண்பர்களை சம்பாதித்திருக்கின்றேன்,//////

நாங்களும் சொல்வோம் பதிவுலகத்தால் ராஜ் போல் ஒரு நல்ல நண்பன் கிடைத்தான் என்று ://///

நண்பேண்டா.............

ஓசூர் ராஜன் said...

one year service complete..? so, you are get the conformation order now! Don't asking the salary,promotion and increment.

ஓசூர் ராஜன் said...

congraulations.!

ப.கந்தசாமி said...

வாழ்த்துக்கள், ராஜ்.

K.s.s.Rajh said...

@ஓசூர் ராஜன்
////
ஓசூர் ராஜன் கூறியது...
one year service complete..? so, you are get the conformation order now! Don't asking the salary,promotion and increment////

ஹா.ஹா.ஹா.ஹா.......

K.s.s.Rajh said...

@ ஸாதிகா கூறியது...
வாழ்த்துகள்!வாழ்த்துக்கள்!!
////

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ ஓசூர் ராஜன் கூறியது...
congraulations.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
DrPKandaswamyPhD கூறியது...
வாழ்த்துக்கள், ராஜ்/////

நன்றி ஜயா

N.H. Narasimma Prasad said...

வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முதல் கதைக்கு எதிர்மறை கருத்துச் சொன்ன, தன் நாட்டிற்காக உயிர் துறந்த அந்த சகோதரிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். நிச்சயம் அந்த சிறுகதை அந்த சகோதரிக்குத் தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

அம்பாளடியாள் said...

ஒ happy birthday யா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ ஓராண்டு
பல நூறாண்டு பதிவுலகம் உள்ளவரைக் கொண்டாடட்டும் .
அருமையான படைப்புக்களால் உங்கள் வலைத்தளம் வளம்பெற
வாழ்த்துக்கள் .உங்கள் மனம் மகிழ் ஓர் கவிதை காத்திருக்கின்றது
கண்டு மகிழுங்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

குறையொன்றுமில்லை. said...

முதல் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.
தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ராஜ்! உங்கள் பணி தொடரட்டும்! உங்கள் எழுத்துக்களின் வாசகனாக இருப்பதில் நானும் பெருமை அடைகிறேன்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails