Thursday, November 03, 2011

எனக்குப்பிடித்த டாப்-10 கிரிக்கெட் கேப்டன்கள்

கிரிக்கெட் மீதான என் காதல் மட்டும் குறையவே மாட்டேன் என்கின்றது....எனது தளம் ஆரம்பத்தில் வெறும் கிரிக்கெட் பதிவுகளை மட்டுமே எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன் பின்பு பலதரபட்ட விடயங்களை கலந்து கட்டி எழுதி இன்று பல்சுவைப்பட்ட பதிவுகளுடன் வாசகர்களின் ரசனையை பூர்த்தி செய்யும் தளமாக என் தளம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி..



கிரிக்கெட்டில் பல அற்புதமான வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள்..ஆனாலும் ஓரு அணியின் கேப்டன் என்பவர் மிகச்சிறந்த ஆளுமையுடையவராக இருக்கின்றபோதுதான் ஓரு கிரிக்கெட் அணி அதன் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும்.அப்படி எனக்குப்பிடித்த. என் காலத்தில் அதாவது நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த பின் எனக்குப்பிடித்த மிகச்சிறந்த 10 கேப்டன்களை வகைப்படுத்தியுள்ளேன் இதில் பலரை பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனாலும் இவர்கள் மிகச்சிறந்த கேப்டன்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

1)செளரவ் கங்குலி


நான் இவரைத்தான் முதல் இடத்தில் வரிசைப்படுத்துவேன் என்று பலருக்கு தெரியும்,இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் நம்ம தாதா.பலருக்கு இவரைப்பிடிகாவிட்டாலும் இவர் இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பங்கை எவறும் மறந்துவிட முடியாது...வெளிநாடுகளிலும் இந்திய அணியால் வெற்றி பெறமுடியும் என்று சாதித்து காட்டிய கேப்டன்.

தற்போது தோனி எப்படி சில ஓரு நாள் போட்டிகளில் இளம் வீரர்களை வைத்து போட்டிகளை வெல்கின்றாரோ..அதே போல கங்குலியின் காலத்தில் அணியில் இருந்தவர்கள் அனைவரும் இளம் வீரர்கள் தான்...டெஸ்ட்,ஓருநாள் போட்டிகளில் இளம்வீரர்களை வைத்து பல வெற்றிகளை குவித்தவர் தாதா
சேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,லக்ஸ்மன்,தோனி போன்ற பல வீரர்கள் கங்குலியால் வளர்து எடுக்கப்பட்டவர்கள் தான்.

இந்திய அணியில் கங்குலியின் தலைமைத்துவத்தை கண்டு எதிரணித்தலைவர்கள் அஞ்சினர் என்பது மறுக்கமுடியாது...கிரேக் சப்பல் என்ற ஓரு அவுஸ்ரேலிய பயிற்சியாளரின்...செயற்பாட்டால் கங்குலியை இந்திய கிரிக்கெட்டில் ஓதுக்கிய போதும் மனம் தளராமல் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்து...ஓய்வு பெரும் போது சிறப்பான பெறுபேருகளுடன் ஓய்வை அறிவித்தார்
இதான் கங்குலியின் தன்நம்பிக்கை..தற்போதைய இந்திய அணியின் வளர்சிக்கு வித்திட்டவர் தாதா கங்குலிதான்.2003 ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு வந்ததும் குறிப்பிடதக்கது.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட நடை பெற்ற உலக லெவன்,ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான சர்வதேசஓரு நாள் போட்டியில் ஆசிய அணிக்கு கங்குலியை தலைவராக செயற்பட்டது
இவரது தலைமைத்துவத்துக்கு கிடைத்த கெளரவம்...உலக லெவன் அணிக்கு ரிக்கி பொண்டிங் தலைவாராக செயற்பட்டிருந்தார்.

2)அர்ஜுன ரணதுங்க




இலங்கை அணியை கிரிக்கெட் அணியை உலக அரங்கில் உயர்த்திய பெருமை இவருக்கே ..ஓரு கந்துகுட்டி அணியாக இருந்த இலங்கை அணியை..1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெல்லவைத்த கேப்டன் இவரது சிறப்பான தலைமைத்துவம் தான் இலங்கை அணி.1996ல் உலகக்கிண்ணத்தை வென்றதுக்கு பிரதான காரணம்.இவரை பற்றி குமார் சங்ககார எம்.சி.சி.மைந்தாணத்தில் ஆற்றிய உரையில் இலங்கை அணியின் மீட்பராக அர்ஜுனரணதுங்க வந்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

3)ஸரீபன் பிளமிங்

நியூஸ்லாந்து கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்...அதிகம் நட்சத்திரவீரர்களை கொண்டிராத நியூஸ்லாந்து அணியை கிட்ட தட்ட 10 ஆண்டுகளாக தன் தோள்களில் சுமந்த கேப்டன்...அணித்தலைவராக பல சாதனைகள் படைத்தவர் ஸரீபன் பிளமிங்..
நதன் அஸ்டல்,டானியல் விட்டோரி,ஜேக்கப் ஓரம்,கிறிஸ்கெய்ன்ஸ்,
ஷேன் போண்ட்,பிராங்ளின் போன்ற பல வீரர்கள் இவரது தலைமைத்துவத்தில் வளர்த்து எடுக்கப்பட்டவர்கள் தான்.எனக்கு கங்குலிக்கு பிறகு மிகவும் பிடித்த ஓரு கிரிக்கெட் வீரர் பிளமிங்....

4)ஸ்ரிவோக்



அவுஸ்ரேலிய அணியின் முன்னால் கேப்டன் இவரை ஓரு வீரரகவும்,கேப்டனாகவும் எனக்கு மிகவும் பிடிக்கும் இவரது தலைமையில் 1999ல் அவுஸ்ரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது அத்துடன் இவரின் தலைமையில் அவுஸ்ரேலிய அணி தொடர்ச்சியாக பல டெஸ்ட் வெற்றிகளைப்பெற்று சாதனைபடைத்தது குறிப்பிடதக்கது.
நம்ம தாதா கங்குலிக்கும் இவருக்கு எப்பவும் வாய்கா தகறாறுதான்

5)ரிக்கி பொண்டிங்




எனக்கு பொண்டிங்கை ஓரு வீரராக பிடித்தளவுக்கு கேப்டனாக பிடிப்பது குறைவு...ஆனாலும் கிரிக்கெட் உலகில் பொண்டிங் மிகச்சிறந்த கேப்டன் தான் இவரது தலைமையில் அவுஸ்ரேலிய அணி 2003,2007,ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.அவுஸ்ரேலிய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர்....ஆஷிஸ் தொடரில் தோற்றமை,12 வருடங்களாக அவுஸ்ரேலியா வைத்திருந்த உலகக்கோப்பையை பொண்டிங் தலைமையில் கடந்த உலகக்கோப்பை போட்டியில் (2011) அவுஸ்ரேலியா இழந்தமை.இவரது தலைமைத்துவத்தில் சில சறுக்கள்கள்
ஆனாலும் அந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் பொண்டிங் சதம் விளாசியிருந்தார்...எனினும் இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அவுஸ்ரேலியா அரையிறுதியுடன் வெளியேறியது.12 வருடங்களாக வைத்திருந்த உலகக்கோப்பையையும் பறிகொடுத்தது.

6)இம்சமாம் உல் ஹக்



பாகிஸ்தான் அணியின் முனால் கேப்டன் இவறும் கங்குலியை போல ஒரு ஆக்ரோசமான கேப்டன்...மிகச்சிறந்த ஓரு வீரர்....எனக்கு இவரை ஓரு கேப்டனாகவும்,வீரராகவும் மிகவும் பிடிக்கும்

7)கிரேம் ஸ்மித்


மிக இளம் வயதில் அதாவது 22 வயதில் தென்னாபிரிக்க அணியின் தலைமைப்பொறுப்பை ஏற்ற ஸ்மித்..,மிகச்சிறந்த கேப்டன் ஆவார்..ஓரு நாள் போட்டிகளில் இலங்கை 1996ல் நிலை நாட்டிய 398 ஓட்டங்கள் என்னும் உலக சாதனையை அவுஸ்ரேலியா..2006ல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 434 ஓட்டங்களைக்குவித்து புதிய சாதனை படைத்த போது அந்த இலக்கை துரத்திய தென்னாபிக்கா 438 ஓட்டங்களை பெற்று புதிய வரலாறு படைத்தது அந்த வெற்றிக்கு ஓரு கேப்டனாக ஸ்மித் வீரர்களுக்கு ஊட்டிடய தன்நம்பிக்கையும் பிரதான காரணம் அந்த போட்டியில் ஸ்மித் தன் பங்குக்கு 90 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொடுத்தார்..

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக..உலக லெவன் அணி 6 நாட்கள் கொண்ட ஓரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது உலக லெவன் அணிக்கு கிரேம் ஸ்மித் கேப்டனாக செயற்பட்டது அவரது தலைமைத்துவத்துக்கு கெளரவம்...
ஓரு முறை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஓன்றில் கையில் என்பு முறிவு ஏற்பட்டது அப்போது ஸ்மித்தால் துடுப்பெடுத்து ஆடமுடியவில்லை,தென்னாபிரிக்க அணி தோல்வியை தவிர்க கடுமையாக போராடிக்கொண்டிருந்த போது.விக்கெட்டுக்களும் சரிந்து கொண்டிருந்ததனால்..ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஸ்மித் 8ம் இலக்க துடுப்பாட்ட வீரராக முறிந்த கையுடன் துடுப்பெடுத்து ஆட ஆடுகளம் வந்தார் ..இதை கண்ட தென்னாபிரிக்க ரசிகர்கள் மட்டும் இல்லை அரங்கத்தில் அனைவரும் ஸ்மித்தை வரவேற்றனர்...

கேப்டன்,மற்றும் துடுப்பாட்டவீரராக மிகவும் திறமையானவர்...20 ஓவர் போட்டிகளுக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே விலகிய ஸ்மித் கடந்த உலகக்கிண்ண போட்டிகளோடு ஓருநாள்போட்டிகளுக்கான தலைவர் பதைவியில் இருந்தும் விலகினார்..தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தென்னாபிரிக்க அணியின் தலைவராக விளங்குகின்றார்

8)குமார் சங்கக்கார

ஓரு கனவான் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் சிறந்த கேப்டன்களில் ஓருவர்...எனக்கு இவரை ஓரு விக்கெட் கீப்பராகவும்,ஓரு வீரராகவும் கேப்டனாகவும் மிகவும் பிடிக்கும்.கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததன் பிறகு தனது அணித்தலைவர் பதவியை ராஜனாமா செய்தார்.

9)ராகுல் ராவிட்


மிகவும் அமைதியான கேப்டன்.ஓரு திறமையான வீரர்.
கங்குலி இந்திய அணியின் தலைவராக இருக்கும் போது துணைத்தலைவராக இருந்தவர் பின்பு கங்குலி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்..2004ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று தொடரை வென்ற போது பாகிஸ்தானில் வைத்து தொடரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவராக கங்குலி சாதனை படைத்த அந்த தொடரில் துணைத்தலைவராக இருந்தவர் ராவிட் அந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆம் சேவாக் முச்சதம் விளாசிய அந்த டெஸ்ட்தான் அதில் கங்குலி விளையாட்டாததால் ராவிட் தான் முதல் போட்டிக்கு கேப்டனாக செயல் பட்டார் அந்த போட்டியில் சச்சின் 194*களை ஆட்டம் இழக்காமல் பெற்று இருந்த போது ராவிட் டிக்ளேயர் செய்தது பெரும் சர்சையை கிளம்பியது ஆனால் கங்குலி சொல்லிதான் ராவிட் டிக்ளேயர் செய்ததாகவும் அப்போது ஓரு கதை வந்தது ராவிட்டின் தலைமைத்துவத்தில் இதுதான் பெரும் சர்ச்சையான விடயம்...மற்றும் படி மிகச்சிறந்த அமைத்தியான கேப்டன் ராவிட்...2007ல் உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வியடைந்ததன் பிறகு சில காலத்தில் தனது கேப்டன் பதவியை ராகுல் ராவிட் ராஜனாமா செய்தார்.

10)ஷாகித் அப்ரடி


அதிகளவான போட்டிகளில் கேப்டனாக செயல்படாவிட்டாலும்...பல்வேறு சர்சைகளில் சிக்கியிருந்த பாகிஸ்தான் அணியை கடந்த உலகக்கிண்ண போட்டிகளின் போது...தனது சகலதுறை ஆட்டத்தால் அரையிறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்றவர்....எனக்கு இவரை ஓரு வீரராக மிகவும் பிடிக்கும்...அதிரடி மன்னன் அப்ரடியை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்லமுடியாவிட்டாலும்...இவரை மிகவும் பிடித்துள்ளதால் கேப்டனாகவும் இவரை பிடிக்கும்.பயிற்சியாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதனால் சர்வதேசபோட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்..ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக குழுமாறினால் மீண்டும் விளையாடத்தயார் என்றும் சொன்னார்..இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பவேண்டும் என்பது இவரது ரசிகர்களிம் எதிர்பார்ப்பு.

நிறைய கேப்டன்களை எனக்கு பிடித்தாலும் முதல் பத்து பேரைத்தான் குறிப்பிட்டுள்ளேன்,
இலங்கையின் மகேல ஜெயவர்த்தன,சனத் ஜெயசூர்யா,மாவன் அத்தப்பத்து,மேற்கிந்திய ஜாம்பவான்லாரா அவுஸ்ரேலியாவின் மார்க் டெய்லர்,கில்கிறிஸ்ட்,தென்னாபிரிக்காவின் ஷேன் பொலக்,நியூஸ்லாந்தின் டானியல் விக்ட்டோரி,இங்கிலாந்தின் மைக்கல் வோகன்,ஸ்ரோரஸ் பாகிஸ்தானின் யுனிஸ்கான்,
போன்ற வீரர்களையும் கேப்டனாக எனக்கு மிகவும் பிடிக்கும்...

பலருக்கு ஓரு கேள்வியிருக்கும் ஏன் தோனியை பிடிக்காதா என்று
எனக்கு ஓரு வீரராக,ஓரு விக்கெட் கீப்பராக தோனியை மிகவும் பிடிக்கும் ஆனால் ஓரு கேப்டனாக அவர் ஏனோ என்னை பெரிதும் கவரவில்லை.

Post Comment

48 comments:

அம்பலத்தார் said...

என்ன இது அடுத்த வெடியே பத்தவச்சு போட்டிருக்கிறியள். அந்தப்பக்கம் வேலாயுத வெடி வெடிச்சதிலை கொஞ்சப்பேர் அவுட் அட்ரசயே காணம் விளம்பரமெல்லாம் கொடுத்து தேடிக்கொண்டிருக்கிறம். இனி இந்தவெடியும் பத்திக்கிட்டால் அப்புறம் இன்னும் எத்த்னைபேர் அவுட்டோ தெரியேல்லை. உங்களையெல்லாம் அந்த நிருபனாலையும் காப்பாத்த இயலாதுபோலகிடக்கு.

சக்தி கல்வி மையம் said...

நல்ல தேர்வு..

K.s.s.Rajh said...

@அம்பலத்தார்

////என்ன இது அடுத்த வெடியே பத்தவச்சு போட்டிருக்கிறியள். அந்தப்பக்கம் வேலாயுத வெடி வெடிச்சதிலை கொஞ்சப்பேர் அவுட் அட்ரசயே காணம் விளம்பரமெல்லாம் கொடுத்து தேடிக்கொண்டிருக்கிறம். இனி இந்தவெடியும் பத்திக்கிட்டால் அப்புறம் இன்னும் எத்த்னைபேர் அவுட்டோ தெரியேல்லை. உங்களையெல்லாம் அந்த நிருபனாலையும் காப்பாத்த இயலாதுபோலகிடக்கு/////

ஜயா என்னை அவங்களுடன் சேர்க்காதீர்கள் அது வேற இது வேற கிரிக்கெட் பலருக்கு பிடிக்கும் அதில் எனக்கு பிடித்த கேப்டன்களை வரிசைப்படுத்தியுள்ளேன்....இதில் எந்த பிரச்சனையும் வராது...

K.s.s.Rajh said...

//// !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நல்ல தேர்வு.////

நன்றி பாஸ்

பாலா said...

நல்ல தேர்வு நண்பரே, உங்களுக்கு முன்பே கிரிக்கெட் பார்க்க தொடங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இந்த லிஸ்டில் ஹன்சி குரோனியேவையும் நான் சேர்ப்பேன்.

K.s.s.Rajh said...

@பாலா

////நல்ல தேர்வு நண்பரே, உங்களுக்கு முன்பே கிரிக்கெட் பார்க்க தொடங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இந்த லிஸ்டில் ஹன்சி குரோனியேவையும் நான் சேர்ப்பேன்/////

ஆமா பாஸ் ஹன்சி குரோனியேவையும் எனக்கு பிடிக்கும்..ஆனால் அவரது செயற்பாடுகள் அவர் மீது சுமத்தப்பட்ட சூதாட்ட புகார்கள் போன்றவற்றால் என்னை அவர் கவரவில்லை...இதே போலதான் அசாருதினையும் எனக்கு பிடிக்கவில்லை.

ரைட்டர் நட்சத்திரா said...

டிராவிட் கேப்டனாக பணியாற்றிய விஷயம் இன்றுதான் எனக்கு தெரியும். ஜெயசூரியா பற்றிய சொல்லி இருந்தால் நலமே . அவரை எனக்கு பிடிக்கும்.

Akash said...

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லரும் சிறந்த கேப்டன் தான். அவுஸ்திரேலிய அணியின் ஒரு தாசப்த ஆதிக்கத்துக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் .

Unknown said...

அருமை சகோ வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

பத்துக்குள் அடக்க முடியுமா முத்துக்களை!

பால கணேஷ் said...

இந்த லிஸ்டில் நிகாஞ்ச் கபில்தேவை சேர்க்கத் தவறிய நீங்கள் ‘பார்’ இல்லாத ஊருக்கு போகக் கடவது! மற்றபடி நீங்கள் ரசித்தவர்களை அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்!

M.R said...

அழகிய தொகுப்பு ,அதற்கான விளக்கங்கள் அருமை நண்பா

த.ம 6

K.s.s.Rajh said...

@
கார்த்தி கேயனி கூறியது...
டிராவிட் கேப்டனாக பணியாற்றிய விஷயம் இன்றுதான் எனக்கு தெரியும். ஜெயசூரியா பற்றிய சொல்லி இருந்தால் நலமே . அவரை எனக்கு பிடிக்கும்/////

கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் ராவிட்தான்...கங்குலி கேப்டனாக இருக்கும் போதே கங்குலி விளையாடாத போட்டிகளுக்கு ராவிட்தான் கேப்டனாக செயல் படுவார்..கங்குலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகள் இருந்தவர் ராவிட்

ஜெயசூர்யாவையும் எனக்கு பிடிக்கும் பதிவில் குற்ப்பிட்டுள்ளேன் ஆனால் மிகவும் பிடித்த கேப்டன் களைத்தான் டாப்-10 க்குள் வகைப்படுத்தியுள்ளேன்

ஜெயசூர்யா பற்றி நான் ஓரு தனிப்பதிவே எழுதியுள்ளேன்..எனது தளத்தில் சைட் பாரில் பாருங்க இதுவரை எழுதியது என்று லேபில்களை வகைப்படுத்தியுள்ளேன் அதில் சனத் என்ற லேபிளில் கிளிக்பண்ணுங்கள் சனத் பற்றிய பதிவு இருக்கு...நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Akash கூறியது...
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லரும் சிறந்த கேப்டன் தான். அவுஸ்திரேலிய அணியின் ஒரு தாசப்த ஆதிக்கத்துக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்///////

ஆமா பாஸ் மார்க் டெய்லர் சிறந்த கேப்டன் மட்டும் இல்லை சிறந்த வீரரும் கூட அவரை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளேன்..ஆனால் டாப்-10 க்குள் மிகவும் பிடித்த வர்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்..மார்க் டெய்லர் பற்றி ஓரு தனிப்பதிவு போடுகின்றேன் என்னைக் கவர்ந்த கிரிக்கெட் வீரர்களில் மார்க் டெய்லரும் ஓருவர்

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
அருமை சகோ வாழ்த்துக்கள்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
பத்துக்குள் அடக்க முடியுமா முத்துக்களை//////

ஆம் ஜயா ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த டாப்-10 கேப்டன்களை குறிப்பிட்டுள்ளேன்

தனிமரம் said...

அடுத்த பதிவில் சந்திப்போம் சகோ!

Shanmugam Rajamanickam said...

எனக்கு சச்சின் தான் பிடிக்கும்....

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ கிரிக்கெட்டு ஒடுலேய் மனோ ஒடுலேய் ஓடு ஹி ஹி....

vettippayapullaiga said...

mohammed azharudin avara vittutingale?

கோகுல் said...

நானும் ஹன்சி குரேன்யே வை எதிர்பார்த்தேன்!

கங்குலி முதலிடத்துக்கு தகுதியானவர் தான்!

kobiraj said...

சங்கா ,டிரவிட் எனக்கு பிடிக்கும் .ஆனால் திறமையான கப்டன்களில் தோனியும் ஒருவர் .ஆனால் எனக்கு பிடிக்காது

Anonymous said...

dhoni illadha captain lista poya yo.........

Minmalar said...

நேர்மையான கேப்டன் லிஸ்டில் வேண்டுமானால் ஹன்ஸி குரோனியேவிற்கு இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் சிறந்த கேப்டன் லிஸ்டில் அவருக்கு என்று ஒரு இடம்
நிச்சயம் கொடுத்திருக்கலாம்.
ஆனால் ராகுல் டிராவிட் எல்லாம் இந்த லிஸ்டில் கொஞ்சம் ஓவர்.
(சொன்னதை செய்தவர் அவர் அவ்வளவு தான்.)

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் மச்சி,

கிரிக்கட் மீதான காதல் கூடுகின்றது என்றால்;
அப்போ சரண்யா மீதான காதல் குறையுதா?

நிரூபன் said...

அருமையான தொகுப்பு..

K.s.s.Rajh said...

@தனிமரம்

ஆமா அடுத்த பதிவுக்கு வாங்க

K.s.s.Rajh said...

@
சண்முகம் கூறியது...
எனக்கு சச்சின் தான் பிடிக்கும்../////

ஆமா சச்சினும் கேப்டனாக இருந்தார் தானே...எனக்கு அவரால் அதில் திறம்பட செயற்பட முடியாமல் போனது வருத்தம் தான்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
அய்யய்யோ கிரிக்கெட்டு ஒடுலேய் மனோ ஒடுலேய் ஓடு ஹி ஹி../////

ஏன்ணே இந்த ஓட்டம் ஓடுறீங்க.............ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
vettippayapullaiga கூறியது...
mohammed azharudin avara vittutingale?/////

அசாருதீன் சிறந்த வீரர்தான் ஆனால் அவர் சூதாட்ட புகாரில் சிக்கியது போன்ற பல பிரச்சனைகளால் அவர் என்னை கவரவில்லை

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
நானும் ஹன்சி குரேன்யே வை எதிர்பார்த்தேன்!

கங்குலி முதலிடத்துக்கு தகுதியானவர் தான்////

குரேன்யே சூதாட்டம் போன்ற சர்ச்சையில் சிக்கியது போன்ற பல பிரச்சனைகளால் அவர் என்னை கவரவில்லை

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
சங்கா ,டிரவிட் எனக்கு பிடிக்கும் .ஆனால் திறமையான கப்டன்களில் தோனியும் ஒருவர் .ஆனால் எனக்கு பிடிக்காது/////

என்னையும் தோனி ஓரு கேப்டனாக கவரவில்லை

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
dhoni illadha captain lista poya yo...////

அப்படியில்லை தோனியை எல்லோறுக்கும் பிடிக்கனும் என்று அவசியம் இல்லை ஓரு வீரராக எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் ஆனால் கேப்டனாக அவர் என்னை கவரவில்லை

K.s.s.Rajh said...

@
Minmalar கூறியது...
நேர்மையான கேப்டன் லிஸ்டில் வேண்டுமானால் ஹன்ஸி குரோனியேவிற்கு இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் சிறந்த கேப்டன் லிஸ்டில் அவருக்கு என்று ஒரு இடம்
நிச்சயம் கொடுத்திருக்கலாம்.
ஆனால் ராகுல் டிராவிட் எல்லாம் இந்த லிஸ்டில் கொஞ்சம் ஓவர்.
(சொன்னதை செய்தவர் அவர் அவ்வளவு தான்.////

குரேனியே சிறந்த கேப்டன் தான் ஆனால்ஓரு கேப்டன் என்பவர் ஏனைய வீரர்களுக்கு முன்மாதிரியானவராக இருக்கவேண்டும் அந்த விடயத்தில் குரேனியே தவறிவிட்டார்.....

ராகுல் ராவிட் சிறந்த கேப்டன் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரு வீரராக என்னை அவர் கவர்ந்தால் கேப்டனாகவும் எனக்கு அவரை பிடிக்கும்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் மச்சி,

கிரிக்கட் மீதான காதல் கூடுகின்றது என்றால்;
அப்போ சரண்யா மீதான காதல் குறையுதா/////

ஹி.ஹி.ஹி.ஹி..............

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
அருமையான தொகுப்பு.////

நன்றி பாஸ்

ஸாதிகா said...

பிரஷண்ட் போட்டுக்கறேன்.கிரிக்கெட்டுக்கும் எனக்கு ரொம்ப தூரம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான பட்டியல்...


இந்திய அணியின் கேப்டன்கள் நிறைபேர் இருந்தும் தங்களுக்கு கங்குலியை பிடித்திருப்பது ஆச்சரியம் தான்...

பொதுவாக சவுரவ் அதிகம் விமர்சனத்திற்க்கு ஆளானவர்...


சூப்பர்... வாழ்த்துக்கள்..

K.s.s.Rajh said...

@ஸாதிகா

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@கவிதை வீதி... // சௌந்தர் //

இந்திய அணிக்கேப்டன்களில் கங்குலிக்கு என்றும் தனி இடம் உண்டு இந்திய அணியின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓரு திறமையான கேப்டன் கங்குலி

ம.தி.சுதா said...

ராஜ் தாங்கள் தெரிந்துள்ள அத்தனை பேரையும் விபரித்துள்ள விதம் அருமையிலும அருமை...

நாம் நட்பால் நெருங்கியிருந்தாலும் கங்குலி விடயத்தில் இருவருக்கும் வேற்றுமை இருக்கிறது.. (தப்பாக நினைக்க வேண்டாம்)

எப்போது களத்தில் நின்ற பந்தை கையால் தட்டி விட்டதற்காக ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்தாரோ அன்றே அவர் மீதிருந்த மதிப்பு போய் விட்டது... அதனோடு ஒப்பிடுகையில் சிமணட்ஷ் ஆட்டமிழந்து வெளியேறும் போது திருப்பி அழைத்து ஆட வைத்த அத்தபத்து மேலல்லவா?

வெற்றிகள் மட்டும் ஒரு விளையாட்டு வீரனை சிறந்தவனாக்காது. ஸ்போட்மன்ஸ் சிப் தான் முக்கியம்..

CS. Mohan Kumar said...

எனக்கு தெரிந்து இம்ரான் மற்றும் ஆலன் பார்டர் தான் சிறந்த கேப்டன்கள். தங்கள் அணியை சாதாரண நிலையில் இருந்து வலுவுள்ள அணியாக உருவாக்கியவர்கள்.

தங்களுக்கு வயது குறைவாய் இருந்திருக்கலாம். அதனால் இவர்கள் இருவரையும் நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
♔ம.தி.சுதா♔ கூறியது...
ராஜ் தாங்கள் தெரிந்துள்ள அத்தனை பேரையும் விபரித்துள்ள விதம் அருமையிலும அருமை...

நாம் நட்பால் நெருங்கியிருந்தாலும் கங்குலி விடயத்தில் இருவருக்கும் வேற்றுமை இருக்கிறது.. (தப்பாக நினைக்க வேண்டாம்)

எப்போது களத்தில் நின்ற பந்தை கையால் தட்டி விட்டதற்காக ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்தாரோ அன்றே அவர் மீதிருந்த மதிப்பு போய் விட்டது... அதனோடு ஒப்பிடுகையில் சிமணட்ஷ் ஆட்டமிழந்து வெளியேறும் போது திருப்பி அழைத்து ஆட வைத்த அத்தபத்து மேலல்லவா?

வெற்றிகள் மட்டும் ஒரு விளையாட்டு வீரனை சிறந்தவனாக்காது. ஸ்போட்மன்ஸ் சிப் தான் முக்கியம்./////

கங்குலியி ஓரு சிறந்த கேப்டனாக இருந்தாலும்..அவரது பல செயற்பாடுகளில் எனக்கும் உடன் பாடு இல்லைதான்......ஆனாலும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் அதற்கு காரணம் அவரது தன்நம்பிக்கை,ஆளுமைத்திறன்.

நான் ஏன் பாஸ் தப்பா நினைக்க போறன்......

K.s.s.Rajh said...

@
மோகன் குமார் கூறியது...
எனக்கு தெரிந்து இம்ரான் மற்றும் ஆலன் பார்டர் தான் சிறந்த கேப்டன்கள். தங்கள் அணியை சாதாரண நிலையில் இருந்து வலுவுள்ள அணியாக உருவாக்கியவர்கள்.

தங்களுக்கு வயது குறைவாய் இருந்திருக்கலாம். அதனால் இவர்கள் இருவரையும் நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்////

ஆனா பாஸ் இவர்கள் விளையாடிய காலத்தில் நான் கிரிக்கெட் பார்க்கவில்லை ஆனால் இவர்களை பற்றி நன்கு அறிவேன்...இம்ரான் என்று இம்ரான்கானைதானே சொல்லுறீங்க கிரிக்கெட் உலகில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் இம்ரான் கானும் ஓருவர்,அலன்போடர் இவரை பற்றி சொல்லனுமா என்ன,மிகச்சிறந்த வீரர்...நான் இவர்களின் காலத்தில் கிரிக்கெட் பார்கவில்லை,எனவே இவர்களைக்குறிப்பிடவில்லை பாஸ்

நம்பிக்கைபாண்டியன் said...

சரியான தேர்வு, டிராவிட்டை தவிர! டிராவிட் சிறந்த வீரர், கேப்டன் என்று பார்த்தால் டோனிக்குப் பிறகுதான்!

N.H. Narasimma Prasad said...

நண்பருக்கு வணக்கம். எனக்கு சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஈடுபாடு கிடையாது. அதனால் இந்த பதிவை படித்தபோது ஒன்றுமே புரியவில்லை.

Unknown said...

நீங்கள் குறிப்பிட்டவர்கள் சிறந்த கப்டன்கள் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஆனாலும் கப்டன் ஆகவும் பொண்டிங்கின் செயற்பாடுகள் பிடிக்காது. மேலும் நீங்கள் ஒரு கால கட்டத்திலான கப்டன்களையே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இம்ரான்கான்,அலன்போடர் இப்படி முன்னாலும் நிறைய பேர் உண்டு.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails