Monday, September 12, 2011

டீன் ஏஜ் கலாட்டா என் நண்பனின் நினைவுகள்

முஸ்கி-என்ன பதிவு.என்று வாசிக்காமலே காப்பி அடிக்கும் இனையதளங்களே..இந்தப்பதிவையும் வாசிக்காமல் காப்பி அடித்து போட்டுவிடாதீர்கள்..நீங்கள் மொக்கையாக ஆகிவிடுவீர்கள்.இது என் நண்பன் ஒருவன் எழுதிய அவனது பாடசாலை கால நினைவு.


முற்குறிப்பு-இது நான் எழுதிய பதிவு இல்லை.என் நண்பன் திலீப்குமார் தனது பாடசாலை டீன் ஏஜ் காலாட்ட சிலதை பேஸ்புக்கில் எழுதி இருந்தான்.அதை இங்கே நான் பதிவாக தருகின்றேன்..ஏன் எனில் சுவாரஸ்யமான இந்தக்குறிப்பு பலபேரைச்சேரவேண்டும் என்பதால்..
எனவே உங்கள் கருத்துரைகள் வாழ்த்துக்கள் அனைத்தும் அவனது எழுத்துக்களுக்கே போய் சேரட்டும்.




அழகிய நினைவலைகளை எமது வாழ்வில் புரட்டி பார்பதில் உள்ள சுகம் இருகே அப்பப்பா அத நினைத்தாலே என்னுடை உடம்பு எல்லாம் புல்லரிக்குது, எங்கள் வாழ்வில் சந்தோச நினைவலைகளை மனக்கண் முன்னே கொண்டு வருவது எங்களின் Teen age கலாட்டாதனே, அதான் என்னுடைய வாழ்க்கையில் நானும் என்னுடைய நண்பர்களும் செய்த கலாட்டக்கள் சில.

எங்கள் கிராமம் ஓர் அழகிய ஆனால் அங்குள்ள மக்கள் தங்களுடைய சந்தோசங்களை இழந்து இன்பங்களை அனுபவிக்கும் வயதில் அனுபவிக்காமல் வேலை வேலை என்று திரிவார்கள், ஆனால் அதில் பாடசாலை மாணவர்களில் குறிபிட்டு சொல்லக்கூடிய சில நண்பர்களின் கலாட்டாக்களை எங்களாலேயே தாங்க முடியாது அவங்கட லொல்லுகள் என்ற அத வார்த்தையாலேயே சொல்ல முடியாது,ஆன எங்களை ஒன்று சேர்த்த்து பாடசாலை நட்புத்தான், அதில் எங்களில் சிலர் பாடசாலையில் தாங்கள் தான் பெரிய ஹிரோக்கள் என்று நினைப்பில் சுற்றுவார்கள், சிலர் தங்களை ரவுடி போல காட்டிக்கொள்வார்கள் ஆனால் அவர்கள் மனதலவில் பயந்தவர்கள் “அதங்க எங்கட திரையுலக நகைச்சுவை நடிகர்கள் விவேக்,சந்தானம் அப்பிடி வைத்துக் கொள்ளுங்களேன்” அப்படி எங்களின் teen age நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் இவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு விடயம் எல்லோரும் ஒன்று கூடி enjoy பண்ணுறது அப்புறம் பெண்களை site அடிப்பது ஆன இதில ஒரு special என்ன என்றால் எங்களிர் சிலர் ஒரு வகுப்புக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் கதைப்பார்கள் ஆனால் அவர்கள் love என்றரிதியில் கதைக்க மாட்டார்கள் ஆனால் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து “ டேய் மச்சி உண்ட x ஆளு வருதுடா” என்று கூறினால் நம்ம பையங்கள் சும்ம இருப்பாங்களா?  நீங்களே சொல்லுங்க அவங்கட மனதில “ அதங்க மின்னலே படத்தில மாதவன் சொல்லுவார்தானே love வந்த மனதில பட்டாம் பூச்சி பறக்கும் என்று” அதுபோல எங்கள் நண்பர்களும் அப்படியே நினைக்கத்துவங்குவார்கள் அப்புறம் என்ன நம்ம பையங்களுக்கு love துவங்கிறும். ஆனால் எங்களில் சிலர் அவங்க love பண்ணும் பெண்ணிடம் சொல்லமாட்டார்கள், ஆனால் அதை தெய்வீக love என்ற ரெஞ்சுக்கு கொண்டு போய்யிருவாங்க அதுக்குள்ள இன்னும் ஒருத்தன் புகுந்து அவள love கேட்டிருவான் “ அதங்க நம்ம பசங்க சொல்லுவாங்க Gap இக்க கிடா வெட்டிடான் என்று “ இது நம்ம பையங்க பேச்சுத்தமிழ். அப்புறம் நம்ம பசங்கட பேச்ச பார்க்கனும் ” டேய் இந்த பெண்ணுங்க தானே எல்லாம் பொய்டா, அதுக்கப்புறம் இன்னும் ஒன்று சொல்லுவாங்க யாரையும் நம்பலாம் இந்த பெண்களை நம்பக்கூடாது என்று இதை நான் எற்றுக்கொள்ள மாட்டன் ஏன் என்றால் நம்ம பையங்க love பண்ணிணா அவங்க love  பண்ணும் பெண்ணிடம் நேரடியா போய் சொல்லவேனும் அப்பதானே அந்த பெண் அவனில நம்பிக்கை வைப்பாள் ஆனால் நம்ம பையங்க அத செய்யாமல் பெண்களை தப்பு சொல்வது பிழைதானே ஓகே பையங்கள தவிர பிழை சொல்ல ஏலாது தானே பெண்களிளையும் தப்பு இருக்குத்தானே அதங் நம்ம பெண்கள் love பண்ணுறன் என்று யாரவது ஒரு பையனிடம் கூறுவார்கள் அதுக்கப்புறம் என்ன செய்வார்கள் அவனை விட இன்னும் ஒருத்தன் அழகாக இருந்த இவன கலட்டி விட்டு அவனிடம் சென்று விடுவார்கள் அதில ஒன்று அவங்க சும்மாவ போவாங்க நம்ம பையங்களிண்ட பணத்தை எவ்வளவு கறக்கேலுமொ கறந்திட்டு போவாங்க இப்படி ஒரு சிலர் இரு பாலரிலையும் இருப்பதனால் இரண்டு பேருக்கும் கேட்ட பெயர்தான் ஒகே இப்படி தத்துவ்ங்கள் கதைத்தாள் கதைக்காலம் எனி எங்கட teen age கலாட்டாவுக்கு வருவம்.
எங்க ஊரிலையே மிக பிரபல்யமான பாடசாலையில் ஒரு பாடசாலைதான்  எங்களுடைய பாடசாலை அதில் ஒரு advantage என்ன என்றால் நகரத்தில் இருப்பது தான், அதால கொஞ்சம் அழகான பெண்கள் எங்களுடைய பாடசாலையில் கல்வி கற்றார்கள்.சரி எங்கட கலாட்டாவுக்கு வருவம்.
பாடசாலை நாட்கள் என்பது யாருக்கும் மறக்க முடியாத ஒன்று என்பார்கள் ஆனால் எனக்கு பாடசாலை நாட்களில் சில நிணைவலைகள்தான் தோன்றுகின்றது அது தாங்க நாங்க A/L படித்த நிணைவலைகள். அதில எங்கட வகுப்பில் இரண்டு குழு இருக்கும் ஒன்று நல்லவன் போல நடிக்கும் கெட்டவர்கள் குழு அடுத்தது கெட்டவர்கள் போல இருக்கும் கெட்டவர்கள் குழு தான் ஆக மொத்த்தில இரண்டுமே கெட்டவர் குழு தான். சரி இவங்கட கலாட்டக்கள் எப்படி இருக்கு என்று ஒரு அலசல் அலசிப்பார்ப்போம். ஆனா நான் இதில எந்த குழு என்று யோசிக்கிறிங்கதானே ஒகே சொல்லுறன் “ அதாங்க நம்ம தல அஜித் மங்காத்தாவில சொல்வார் தானே நானும் எவ்வளவுகாலம் தான் நல்லவனா நடிக்கிறது என்று “ எனி நீங்களே யோசிங்க நான் எந்த குழு என்று,
எல்லோரும் கூறுவார்கள் பாடசாலை காலத்தில் love என்ற ஒன்று இல்லாமல் விட்ட அந்த பாடசாலை நாட்களே வீணாக போய்விடும் என்று நிணைக்க வேண்டியது தான் எங்கட வகுப்பிலையும் நிறைய காதல் ஜோடிகள் இருந்தார்கள். ஆனால் அதில் ஒன்று இரண்டு பேர்தான் அந்த காதலை தொடர்ச்சியாக கொண்டு செல்லுகின்றனர், நாங்கள் படிக்கின்ற காலத்தில் பாடசாலையில் எங்கள் வகுப்புத்தான் ஒரு முக்கியமான வகுப்பு என்று சொல்லாம், ஏன் என்றால் பாடசாலையில் இருந்து கலைபடுவது “ அதாங்க எதாவது தப்பு செய்த அதிபர் வீட்டுக்கு போகச்சொல்வார் அதாங்க” அப்புறம் விளையாட்டு என்று பாத்தா கிறிக்கட் ,உதை பந்தாட்டம் என்ற எங்கட பாடசாலைய அடிக்க எங்கட மாவட்த்திலையே ஒரு பாடசாலை இல்ல அதில எங்கட பங்கு தான் கூடுதலாக இருக்கும்,அப்புறம் படிப்பு என்று பாத்த எங்கட வகுப்பில் இருந்து 80% பல்கலைகழகம், கல்லூரி தெரிவாகி படித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒகே இதத்தான் எங்கட அதிபர் சொல்லுவார் இது ஒரு சகலகலா வகுப்பு என்று அதங்க எங்கட கமலுக்கு சொல்லுவாங்க தானே அப்படி ஒப்பிடுவார்”.

ஒக்கே ஏன் இவங்க பாடசாலையில் இருந்து கலைபடுவாங்க என்று நினைப்பிங்கதானே அந்த கலட்டாவ கேலுங்களன். அதங்க எல்லா பாடசாலையிலும் சுற்றூலா இருக்கும் தானே அதுதான், எங்களுடைய வகுப்பு மட்டும் வித்தியாசமான முறையில் சுற்றுலா சென்றது ஏன் என்றால் எங்கட அதிபர் இருக்கார் தனே அவர் சுற்றுலாவுக்கு கூடிட்டு போவதாக கூட்ட்த்தில் அறிவித்தார் ஆனா அது ஒரு இடி எங்களுக்கு விழுந்த்து O/L வகுப்பு மட்டும்தான் போவது என்று ஆனா நம்ம பசங்க விடுவாங்களா தாங்களும் வாரம் என்று அதிபரிடம் கேட்டாங்க, அதுக்கு அதிபர் மறுத்துவிட்டார் அப்படி அதிபர் மறுத்த காரணத்தால், எங்கட சிறிய கூட்டம் கூடியது அதில் எடுத்த தீர்மானம் என்ன என்றால் நாங்களும் சுற்றுலா போவது என்றுதான் அத விட அவங்க சுற்றுலா செல்லும் திகதி என்று முடிவு எடுக்கப்பட்டது. ஒக்கே அந்த திகதியும் வந்தது நம்ம பசங்களும் சுற்றுலாவுக்கு சென்றார்கள் சரி அப்படியே சுற்றுலா சென்றாலும் பரவால நம்மா பசங்க என்ன செய்தாங்க அவர்கள் எங்கு எல்லாம் போனாங்களோ அவர்களுக்கு முன் அங்கு போய் கும்மாலம் போடுவாங்க, இதை கண்ட அதிபர் சும்மா விடுவார நண்பன் என்றரிதியில் பலகியவர் வில்லன் என்றரீதியில் கையாள்வார் தானே “ அதாங்க எங்கட தமிழ் சினிமா வில்லன் ரகுவரன் போல என்று வையுங்களன்” ஒகே நம்ம பையங்க சுற்றுலா முடித்து அவங்க அவங்க வீடுகளுக்கு திரும்பி சென்று மீண்டும் பாடசாலை சென்றனர் அப்போது நம்ம பசங்களுக்கு பெரிய இடி ஒன்று காத்திருந்தது அதங்க நம்ம பசங்க சீட்டு எல்லாம் கிழிக்கப்பட்டு வீட்டுக்கு  அனுப்பி விட்டார்.

அப்புறம் எல்லாரும் வீடுகளுக்கு திரும்பியதுதான் பின்பு எங்களின் பெற்றோர்களை கூப்பிட்டு  எங்களை பாடசாலை மறுபடியும் சேர்த்தார்.ஆனால் அதில ஒரு முக்கியமான விடையம் என்றால் எங்களுக்காக O/L வகுப்பு மாணவிகள் அதிபரிடம் சென்று கதைத்து இருக்கிறார்கள், அது ஏன் என்று நீங்க யோசிக்கிறது விழங்குது ஏன் என்றால் அந்த வகுப்பிலதான் நம்ம பையங்க love பண்ணுற பெண்கள் இருக்கிறார்கள் ஒகே இப்படி முதல் கலாட்ட இப்படி முடிவடைந்தது.

எங்களில் இரண்டாவது கலாட்டா தொடர்ச்சியாக எங்கட பாடசாலை காலதில் நடைபெறுவது அதாங்க சீருடை பிரச்சனை இந்த பிரச்சனை ஒரு முடிவு காண முடியாத பிரச்சனை அதில எங்கட அதிபர் கூறுவார் “ டேய் நீங்க என்னுடைய ரவ்சர் போல நீங்களும் தையுங்க என்று ஆனா அத பார்த்தா தைக்கவாங்க மனம் வரும் எதோ வெட்சீட்ட சுத்தி கட்டினமாதிரி இருக்கும்”  ஆன நம்ம பசங்க சினிமாவில வார கீரோ மாதிரி ஒவ்வொரு ஸ்டைல தைப்பாங்க அத கண்டு பிடிப்பதற்காக காலையிலையே ”அதங்க கொலை குற்றாவாளிகளை கண்டு பிடிப்பதற்கு அடையாள அணிவகுப்பு நடக்கும் அதுபோலதான்” அதில சில பேர கண்டு பிடித்து வீட்டுக்கு அனுப்பி விடுவாங்க, ஆன நம்ம பசங்க இருக்காங்க தானே கில்லாடிகள் அதிலையும் தப்பித்து விடுவார்கள். அது எப்பிடி என்றால் எப்பிடியோ அந்த நாள் மட்டும் நல்லவர்கள் போல சீருடை அணிந்து வருவார்கள். அதால நம்ம அதிபரும் இவங்க ரொம்ப நல்லவங்க என்று நம்பிருவாரு இப்படி எங்கட கலாட்டவுக்கே அளவே இல்ல.
அப்புறம் எல்லா பாடசாலையிலும் விளையாட்டுப்போட்டி நேரம் வரும்தானே அதில நடக்கிற கலாட்டா இருக்கு பாருங்க இதான் எல்லாத்தையும் விட ரொம்ப ரொம்ப சுவரசியம் நிறைந்ததா இருக்கும் ஏன்னென்றால் அப்போது தானே வகுப்புக்கள் ஏதும் நடக்காது அந்த Gapக்க என்ன நம்ம பசங்க என்ன செய்வாங்க என்றால் தங்களுக்கு பிடிச்சவங்களா பார்த்து சயிட் அடிப்பாங்க, அங்கள பார்த்த love செட் அகினவங்க அகாங்கே நின்று கதைப்பாங்க அவங்கட மனசில லைலா மைச்சுனு காதல் என்ற ரெஞ்சுக்கு love பண்ணுவாங்க ஆன அவங்களுக்குத்தெரியுமா இந்த வயதில வரும் காதல் நிலைச்சிருக்குமா இல்லையா என்று ஏன் என்றால் teen age இல வரும் காதல் அவர்களின் இனக்கவர்சியால் வருவது சிலவேளை அவளை விட இன்னும் ஒரு பெண் அழகாக வந்தால் அவளையும் பார்க்கும் வயது தானே அதான் சொன்னன் ஆனால் அதிலையும் சிலர் சின்ன சின்ன இடையூறுகள் வந்தாலும் அந்தக்காதலில் வெற்றி பெறுகின்றனார், அப்புறம் என்ன எங்கட பாடசாலை அனுபவங்களின் கடைசி எல்லதான் அதாங்க நம்ம lunch கலாட்டாவ பார்ப்பம், ஆன நம்ம பையங்க என்ன நினைப்பாங்க எதோ நம்மள கொளரவமா அனுப்பி வைப்பாங்க என்று ஆன அவங்க என்ன நினைப்பாங்க ராசாக்காளா நீங்க எனி இந்த பக்கம் வரவேனம் என்றுதான் ஏன் என்றால் அவ்வளவு லூட்டிங்க ஒகே எவ்வளவு தான் முதல் லூட்டி அடிச்சாலும் இந்த நேரம் யாருக்கும் கவல வரத்தான் செய்யும் அது போல தான் நம்ம பசங்களுக்கு ஒரு புண்ணகை தவழ்ந்த முகத்தில் எதிர் பார்ப்பு கலந்த கவல தாங்க ஏன் என்றுதாங்க கேட்கிறிங்க அதாங்க நம்ம பசங்க சுற்றி சுற்றி love பண்ணிண பெண்களை விட்டு பிரிவது என்று தான் அதவிட அதிபர்,ஆசிரியர்களை பிரிவதை நினைத்துத்தான் ஆனா நம்ம பையங்கள் அத கூட வெளிக்காட்ட தெரியாமல் அவர்களை விட்டு பிரிந்து செல்கின்றனர். இதுதாங்க எங்களுடைய teen age கலாட்டாவில் சில.........
இந்த Teen age கலாட்டாவில சில உண்மைகளும் பல கற்பணைகளும் இருக்குதுங்க இதை வாசித்து எங்களை கொடுமையா பார்காதிங்க ஏன் என்றால் நான் முன்பே கூறியது போல கெட்டவன் போல காட்டிக்கொள்ளும் நல்லவர்கள் நாங்க ஒக்கே.



நன்றி-திலீப்குமார்.


முஸ்கி--கடந்த சிலநாட்களாக என் சொந்த ஊரிற்கு போய் இருந்தேன் அதனால் நண்பர்கள் பலரின் வலைத்தளங்களுக்கு வந்து கருத்துரை கூறமுடியவில்லை மன்னிக்கவும்.ஊருக்கு போனது மனசு ரொம்ம ஆறுதலா சந்தோசமாக இருந்தது....பல நல்ல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன.அதை அடுத்த பதிவுகளில் எழுதுகின்றேன்....


சில இனையதளங்கள் செய்த வேலையால் என் பதிவுகளை காப்பி செய்வதை எதோ எனக்கு தெரிந்த வகையில்சில தொழில் நுட்ப பதிவர்களின் பதிவுகளின் உதவியோடு தடுத்து இருக்கின்றேன்..ஆனால்.இதையும் மீறி காப்பி செய்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்..இதனால் என் நண்பர்கள் நீங்க கருத்துரைகளில் காப்பி செய்து இடுவதில் சிரமம் ஏற்படும் மன்னித்துவிடுவீர்கள் என்று நம்புகின்றேன்.


என்னதான் என் பாஸ் இன் நண்பன் இதை எழுதி இருந்தாலும் நீங்கள்  கருத்துரையையும்,ஓட்டையும் என் பாஸிற்குதானே போட முடியும்.ஹி.ஹி.ஹி.போடுங்க அண்ணாக்களே.

Post Comment

41 comments:

stalin wesley said...

குட் .............

நைஸ் ............

M.R said...

நண்பர் ராஜ் ஒரு விஷயம்

இப்பொழுது நீங்கள் செய்திருக்கும் விசயமும் காப்பி செய்யலாமே

காப்பி செய்பவர்கள் செய்யத்தான் செய்வார்கள் என்று சொல்றீங்களா

இன்னும் கொஞசம் சிறமப் படுத்தலாமே
என் தளம் போல

M.R said...

சரண்யா சகோதரி உன் ஆள் கிட்ட சொல்லும்மா ,காப்பி பேஸ்ட் செய்யாதிருக்க அதாவது மௌஸ் வேலை செய்யாமல் இருக்க ஒரு கோட் இருக்கு .

அத உபயோகிக்க சொல்லும்மா

அப்புறம் உனக்கு சூட்டிங் இல்லையா தினசரி இங்கியே இருக்கியே அதான் கேட்டேன்

K.s.s.Rajh said...

@
stalin கூறியது...
குட் .............

நைஸ் ...........////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
நண்பர் ராஜ் ஒரு விஷயம்

இப்பொழுது நீங்கள் செய்திருக்கும் விசயமும் காப்பி செய்யலாமே

காப்பி செய்பவர்கள் செய்யத்தான் செய்வார்கள் என்று சொல்றீங்களா

இன்னும் கொஞசம் சிறமப் படுத்தலாமே
என் தளம் போல////
நண்பா உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் சிரமம் பார்க்காது.அது எவ்வாறு செயவது அந்த கோடிங்கை எனது மெயிலுக்கு அனுப்ப முடியுமா?

சரன்யா said...

////M.R கூறியது...
சரண்யா சகோதரி உன் ஆள் கிட்ட சொல்லும்மா ,காப்பி பேஸ்ட் செய்யாதிருக்க அதாவது மௌஸ் வேலை செய்யாமல் இருக்க ஒரு கோட் இருக்கு .

அத உபயோகிக்க சொல்லும்மா

அப்புறம் உனக்கு சூட்டிங் இல்லையா தினசரி இங்கியே இருக்கியே அதான் கேட்டேன்////


அண்ணே அந்தக்கோடிங்க பாஸ்க்கு கொஞ்சம் சொல்ல ஏலுமா?
அப்பறம் சூட்டிங் இருக்குதான் இடையில் பாஸ்க்கும் நேரம் ஒதுக்குறம்

SURYAJEEVA said...

முடியல..

Mohamed Faaique said...

பாடசாலை வாழ்க்கை எப்போதுமே பசுமரத்தாணிதான்..

M.R said...

மெயில் ஐடி குடுங்க நண்பரே

குறையொன்றுமில்லை. said...

பள்ளி வாழ்க்கை என்றுமே பசுமை நிறந்த நினைவுகள் தானே. நன்றாக பகிர்ந்துகொண்டிருக்கிரீர்கள்.

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
முடியல.///
ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@Mohamed Faaique கூறியது...
பாடசாலை வாழ்க்கை எப்போதுமே பசுமரத்தாணிதான்///
உண்மைதான் நான் ஏற்கனவே என் பள்ளிவாழ்க்கையை பற்றி ஒரு தொடர் எழுதி இருக்கின்றேன்

K.s.s.Rajh said...

@ Lakshmi கூறியது...
பள்ளி வாழ்க்கை என்றுமே பசுமை நிறந்த நினைவுகள் தானே. நன்றாக பகிர்ந்துகொண்டிருக்கிரீர்கள்////

தேங்ஸ் மேடம்

K.s.s.Rajh said...

@ M.R கூறியது...
மெயில் ஐடி குடுங்க நண்பரே.///
நண்பா இதுல போட முடியாது உங்களுகு எனது கருத்துரையில் போட்டு இருக்கேன் பார்த்துவிட்டு டிலீட் செய்து விடுங்கள்.

சக்தி கல்வி மையம் said...

முஸ்கி எச்சரிக்கையா?

M.R said...

anuppi vittaen nanbarae

சுதா SJ said...

அழகிய நினைவுகள்... நம்ம நினைவுகளையும் மீட்டுப்பார்க்க ரெம்ப உதவியது.....கிட்டத்தட்ட எல்லோர் பள்ளி வாழ்க்கையும் ஒரே போல் தான் அமையுது இல்ல...

K.s.s.Rajh said...

@* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
முஸ்கி எச்சரிக்கையா?////

ஆமா பாஸ்

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
anuppi vittaen nanbarae////

தேங்ஸ் நண்பா

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
அழகிய நினைவுகள்... நம்ம நினைவுகளையும் மீட்டுப்பார்க்க ரெம்ப உதவியது.....கிட்டத்தட்ட எல்லோர் பள்ளி வாழ்க்கையும் ஒரே போல் தான் அமையுது இல்ல.////

ஆம் மச்சி

ஆகுலன் said...

பாஸ் எனது பாடசாலை காலமும் உப்பிடித்தான்...ஒரே மாதிரி அதிபர்....

இது எந்த பாடசாலை???

K.s.s.Rajh said...

@ஆகுலன் கூறியது...
பாஸ் எனது பாடசாலை காலமும் உப்பிடித்தான்...ஒரே மாதிரி அதிபர்....

இது எந்த பாடசாலை??///

இது எங்க ஊர்ப்பக்க பாடசாலை

தனிமரம் said...

தம்பி உந்த நல்லவன் குழவில் இருந்த கெட்டவன் நான் கெட்டவன் குழவில் இருந்த நல்லவன் நான் பாடசாலைக்காலம் மனதில் வலி/வைராக்கியம்/தேடல் மிக்கது! 
வாத்தியார் தொல்லை அட போடாப்பா தனிமரம் படிக்கல நண்பன் படித்ததை என் தொடர் ஒன்று சொல்லும் இன்னும் முடிக்கல அதுதான் நொந்துபோகும் இதயம் ஒன்று முடிந்தாள் பாருங்கள் சகோ! 
என் கனிப்பு சரி என்றாள் நானும் அதே பாடசாலை பழையமாணவன்?
குளு பாடசாலை முக்கிய பாதை ஓரம் காட்சி கொடுக்கும் இந்தப்பாதைக்கு தனி வரலாறு உண்டு! ஒரு காலத்தில் செய்திப் பரிமாற்றம் பரிவர்த்தனை மிக அருகில்! அவ்வ்! கண்டுபிடி!

பாலா said...

நண்பரே இந்த கதையை அப்படியே உங்கள் நண்பர் சொல்லி இருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அதை நீங்கள் சுவாரசியமாக அதே சமயம் கொஞ்சம் நீளமாக சொல்லி இருக்கிறீர்கள்.

காப்பி செய்பவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம். இந்த மாதிரி பதிவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.

காட்டான் said...

யாரோ பெத்த பிள்ளைக்கு பேர போடுற பதிவுலகத்தில நீ இது என்ர நன்பனின் எழுத்துன்னு தைரியமா போட்டிருக்க்கீங்க மாப்பிள.. என்னையா இந்த தனிமரம் விடாது கறுப்புன்னு உன்னைய துரத்துது.. இதில வேற அந்த பள்ளிகூடத்தில படிச்சவராம்.. நீ நினைக்கிறியா இந்தாளு பள்ளிக்கூடம் போனவருன்னு..!!?? ஹி ஹி

பின் குறிப்புங்கோ :- உங்களோட இந்த காட்டானுக்கு கோவங்கோ ஏன்யா 2பதிவ போட்டும் எனக்கு அழைப்பில்லை..?? ஏதோ போறவழியில மாப்பிளைய பார்த்திட்டு போவமென்னு வந்தா இரண்டு பதிவு போட்டுட்டு எனக்கு வெத்தில பாக்கு வைக்கல..!!!?? ஏன்யா????

செங்கோவி said...

நல்ல நண்பர் தான் நீங்க!

அம்பாளடியாள் said...

பழகிய நட்பை மறக்காமல் அதை நினைவுகூர்ந்து பதிவு
போட்டுள்ளீர்களே சகோ .வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .....

K.s.s.Rajh said...

////
Nesan கூறியது...
தம்பி உந்த நல்லவன் குழவில் இருந்த கெட்டவன் நான் கெட்டவன் குழவில் இருந்த நல்லவன் நான் பாடசாலைக்காலம் மனதில் வலி/வைராக்கியம்/தேடல் மிக்கது!
வாத்தியார் தொல்லை அட போடாப்பா தனிமரம் படிக்கல நண்பன் படித்ததை என் தொடர் ஒன்று சொல்லும் இன்னும் முடிக்கல அதுதான் நொந்துபோகும் இதயம் ஒன்று முடிந்தாள் பாருங்கள் சகோ!
என் கனிப்பு சரி என்றாள் நானும் அதே பாடசாலை பழையமாணவன்?
குளு பாடசாலை முக்கிய பாதை ஓரம் காட்சி கொடுக்கும் இந்தப்பாதைக்கு தனி வரலாறு உண்டு! ஒரு காலத்தில் செய்திப் பரிமாற்றம் பரிவர்த்தனை மிக அருகில்! அவ்வ்! கண்டுபிடி////

எனக்கு தெரியலை...இது கிளி பாடசாலை அங்கையுமா நீங்க படிச்சிங்க

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நண்பரே இந்த கதையை அப்படியே உங்கள் நண்பர் சொல்லி இருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அதை நீங்கள் சுவாரசியமாக அதே சமயம் கொஞ்சம் நீளமாக சொல்லி இருக்கிறீர்கள்.

காப்பி செய்பவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம். இந்த மாதிரி பதிவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை////

இல்லை நண்பரே அவன் தான் இதை எழுதினான் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டான்...வருங்காலத்தில் பதிவராக முயற்சிசெய்கின்றான் போல.அதான் நான் அவனது எழுத்துக்கு வரவேற்பு இருக்கின்றது என்று பார்க்க எனது தளத்தில் பகிர்ந்து.உள்ளேன்

K.s.s.Rajh said...

@ காட்டான் கூறியது...
யாரோ பெத்த பிள்ளைக்கு பேர போடுற பதிவுலகத்தில நீ இது என்ர நன்பனின் எழுத்துன்னு தைரியமா போட்டிருக்க்கீங்க மாப்பிள.. என்னையா இந்த தனிமரம் விடாது கறுப்புன்னு உன்னைய துரத்துது.. இதில வேற அந்த பள்ளிகூடத்தில படிச்சவராம்.. நீ நினைக்கிறியா இந்தாளு பள்ளிக்கூடம் போனவருன்னு..!!?? ஹி ஹி

பின் குறிப்புங்கோ :- உங்களோட இந்த காட்டானுக்கு கோவங்கோ ஏன்யா 2பதிவ போட்டும் எனக்கு அழைப்பில்லை..?? ஏதோ போறவழியில மாப்பிளைய பார்த்திட்டு போவமென்னு வந்தா இரண்டு பதிவு போட்டுட்டு எனக்கு வெத்தில பாக்கு வைக்கல..!!!?? ஏன்யா???/////

அது மாமா இந்த காப்பி பேஸ்ட் காரங்களோட அக்கப்போரடிச்சதில் நான் மறந்துவிட்டேன் சின்னப்பையன் என்னை மன்னிக்கவேண்டும்..இனி இப்படி தவறு நடக்காது...அவருதான் சொல்லுறார் படிச்சன் என்று...அவரிடமே கேளுங்கள்(அப்பா நான் தப்பிச்சேன்)

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
பழகிய நட்பை மறக்காமல் அதை நினைவுகூர்ந்து பதிவு
போட்டுள்ளீர்களே சகோ .வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .////

தேங்ஸ் மேடம்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலம் தானே?

நிரூபன் said...

அதில் எங்களில் சிலர் பாடசாலையில் தாங்கள் தான் பெரிய ஹிரோக்கள் என்று நினைப்பில் சுற்றுவார்கள்,//

அவ்...இது நம்ம ராஜாவைப் பத்தி அவரோட நண்பன் சொல்லும்
வசனமா;-)))))))))))

நிரூபன் said...

டேய் மச்சி உண்ட x ஆளு வருதுடா” என்று கூறினால் நம்ம பையங்கள் சும்ம இருப்பாங்களா? //

அவ்...அதானே..
இப்படிப் பட்டம் சொல்லிப் பழித்தே, நிஜ ஹீரே ஆகிய நண்பர்களை நானும் கண்டிருக்கிறேன்.

நிரூபன் said...

அதால கொஞ்சம் அழகான பெண்கள் எங்களுடைய பாடசாலையில் கல்வி கற்றார்கள்.சரி எங்கட கலாட்டாவுக்கு வருவம்.
பாடசாலை நாட்கள் என்பது யாருக்கும் மறக்க முடியாத ஒன்று என்பார்கள் ஆனால் எனக்கு பாடசாலை நாட்களில் சில நிணைவலைகள்தான் தோன்றுகின்றது//

ஹே...ஹே...இது வேறையா...

அவ்..............

நிரூபன் said...

விளையாட்டுப் போட்டி டைம்மில கூட இப்படிப் பண்ணியிருக்கிறீங்களா?


கலக்குங்க பாஸ்,,

அடுத்த லூட்டிகளின் தொகுப்பினைப் படிப்பதற்காக காத்திருக்கிறேன்.

சுவாரஸ்யமான பள்ளிக் கால நினைவுகளை மீட்டும் தொடர்.

நிரூபன் said...

என்னதான் என் பாஸ் இன் நண்பன் இதை எழுதி இருந்தாலும் நீங்கள் கருத்துரையையும்,ஓட்டையும் என் பாஸிற்குதானே போட முடியும்.ஹி.ஹி.ஹி.போடுங்க அண்ணாக்களே//

அவ்...இது வேறையா.....
அவ்...அப்போ அவங்களோட மேனேஜரா நீங்க.
நான் என்னமோ ஏதோ என்று நெனைச்சேன்.

K.s.s.Rajh said...

@நிரூபன் கூறியது...
வணக்கம் நண்பா,
நலம் தானே///

வாங்க நலம்

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
அதில் எங்களில் சிலர் பாடசாலையில் தாங்கள் தான் பெரிய ஹிரோக்கள் என்று நினைப்பில் சுற்றுவார்கள்,//

அவ்...இது நம்ம ராஜாவைப் பத்தி அவரோட நண்பன் சொல்லும்
வசனமா;-))))))))))/////

பாஸ் நாம எப்பவும் ஆண்டி ஹீரோ(அஞ்சலி ஆண்டியை சொல்லவில்லை)ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@ நிரூபன் கூறியது...
விளையாட்டுப் போட்டி டைம்மில கூட இப்படிப் பண்ணியிருக்கிறீங்களா?


கலக்குங்க பாஸ்,,

அடுத்த லூட்டிகளின் தொகுப்பினைப் படிப்பதற்காக காத்திருக்கிறேன்.

சுவாரஸ்யமான பள்ளிக் கால நினைவுகளை மீட்டும் தொடர்/////

இது தொடர் இல்லை பாஸ் சிங்கிள் பதிவுதான்...

K.s.s.Rajh said...

////
நிரூபன் கூறியது...
என்னதான் என் பாஸ் இன் நண்பன் இதை எழுதி இருந்தாலும் நீங்கள் கருத்துரையையும்,ஓட்டையும் என் பாஸிற்குதானே போட முடியும்.ஹி.ஹி.ஹி.போடுங்க அண்ணாக்களே//

அவ்...இது வேறையா.....
அவ்...அப்போ அவங்களோட மேனேஜரா நீங்க.
நான் என்னமோ ஏதோ என்று நெனைச்சேன்/////

ஹி.ஹி.ஹி.ஹி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails