Friday, September 30, 2011

கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?

வணக்கம் இன்று ஒரு மேட்டரை கையில் எடுகின்றேன் இதில் பல மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

எமது பிறப்பை நாம் தீர்மாணிப்பது இல்லை.நாம் பிறக்கமுன் செல்வந்த குடும்பத்தில் பிறக்கவேண்டும் வெள்ளையாகப்பிறக்கவேண்டு,அழகாகப்பிறக்கவேண்டும்,இந்த தாய்,தந்தைக்குப்பிறக்கவேண்டு,இப்படி எல்லாம் நமது விருப்பத்தில் நாம் பிறப்பது இல்லை.

நண்பர் பதிவர் மதுரன் அழகான ஒரு வாசகத்தை தனது ப்ளாக்கர் சுயவிபரத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதாவது நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... .இதான் உண்மை எம் அனுமதி இன்றி இப்பூமியில் தள்ளிவிடப்பட்டவர்கள் நாங்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot)

மனிதர்களில் தான் எத்தனை பிரிவுகள்,சாதிகள்,மதங்கள்,பிரதேசவாதம்,ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு,இன்னும் எத்னையோ விடயங்கள் மனிதர்களை பிரிக்கின்றது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot)
நான் பொதுவாக ஈழத்தில் சில இடங்களில் பார்த்து இருக்கின்றேன்..திருமணப்பேச்சு எடுக்கும் போது சாதி,மதம்,வரதட்சனை,இந்தவரிசையில் பிரதான இடம் கலருக்கும் கொடுக்கப்படுகின்றது..பொண்ணு என்ன வெள்ளையா, கருப்பா,மாப்பிளை என்ன வெள்ளையா கருப்பா,இது ஏன் வெள்ளையாக உள்ள பெண்ணைத்தான் திருமணம் செய்ய ஆர்வம் காட்டினால் அப்ப கருப்பாக பிறந்த பெண்கள் செய்த குற்றம் என்ன?

சில ஜோடிகளைப்பாருங்கள்.பொண்ணு சூப்பரா நல்ல வெள்ளையா அழகா இருக்கும் ஆனா அவங்க புருசன்..கரும் சிறுத்தை போல இருப்பார்..சில இடங்களில் புருசன் அழகா..சூப்பரா இருப்பார்..ஆனால் அவங்க பொண்டாட்டியோ....கண்கொண்டு பார்க்க முடியாத கலரில் இருப்பாங்க ஆனாலும் அவங்களுக்கு இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்கும்.

வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ஜொளிக்க முடியும் என்ற விதியை அடியோடு மாற்றிய எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார்

அழகு என்பது வெருமனே கலரை வைத்து தீர்மாணிக்கப்படுகின்றதா?அப்படியாயின் அது மிகவும் தவரான கண்ணோட்டம் ஆகும்.கருப்பு பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட கிளியோப்பட்ரா அவர்காலத்தில் கோடிக்கணக்கான இளஞர்களின் தூக்கத்தை கெடுக்கவில்லையா.ஏன் நம்ம சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு எத்தனை பொண்ணுங்க தங்கள் தூக்கத்தை தொலைத்தார்கள் இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கு

என்ன ஒரு கம்பீரம்,ஸ்டைல்,இதைவிட ஒரு அழகு வேண்டுமா

எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.பார்க்க நம்ம நடிகர் செந்தில் மாதிரி இருப்பான்..அவனை ஒரு பொண்ணு காதலிசது..ஆனால் அந்தப்பையன் அவளது காதலை ஏற்கவில்லை ஏண்டா என்று கேட்டதுக்கு அவள் எப்படி அழகா இருக்கா பாரு நான் எப்படிடா அவளை காதலிக்கிறது என்றான்.ஏன் நாம அழகா இருந்தால்தான் அழகான பெண்ணைக்காதலிக்க முடியுமா?அவனைத்தேடி ஒரு பெண்வந்த போதும் அவன் விலகியதுக்கு காரணம் தான் அழகுஇல்லை என்று அவனே மனசுக்குள் ஒரு மாயையை உருவாக்கிவிட்டான் இதற்கு என்ன காரணம் வெள்ளையாக இருந்தால்தான் அழகு என்று ஒரு மாயை உருவாகியதே பிரதான காரணம்.

கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா இவரது சாதனைகளுக்கு முன் அழகு வெறும் தூசிதான்

எனக்கு ஒரு சம்பவம் நடந்தது..ஒரு நாள் ஊரில் நீண்டகாலத்துக்குப்பிறகு என்னுடம் படித்த ஒரு நண்பியைக் கண்டேன்,ஆனால் அவங்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை..அவள் என்னை அடையாளம் கண்டு விட்டு என்னிடம் வந்து நீங்க ராஜ்தானே என்றால் நானும் ஆம் நான் ராஜ்தான் என்றேன்..என்னைத்தெரிகின்றதா என்றால் நான் இல்லை என்றேன்..வடிவா யோசித்துப்பாருங்கள் நான் உங்களுடன் படித்தேன் என்றால் எனக்கு ஞாபகம் வரவில்லை..அவள் விடுவதாக இல்லை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாள் நான் சொன்னேன் எங்கையோ கண்டமாதிரித்தான் இருக்கு இப்ப உங்களுக்கு என்ன வேனும் என்று பேசி(திட்டி)அனுப்பி விட்டேன்.அவள் போகும் போது சொல்லிவிட்டுப்போனால் பரவாயில்ல கண்டமாதிரி இருக்கு என்றாவது சொன்னிங்களே நன்றி என்று விட்டுப்போனாள்.
என்னுடன் வந்த என் நண்பன் கேட்டான் ஏண்டா ராஜ் அந்தப்பொண்ணு அழகானவளாக இல்லை என்றபடியால் திட்டி அனுப்புற..இதுவே ஒரு நல்ல அழகான் பொண்ணு வந்து என்னைத்தெரியுதா,அப்படி இப்படினு உன்கிட்ட கேட்டா நீ இப்படிப்பேசுவியா(திட்டுவியா)என்று கேட்டான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot)
எனக்கு அவனது கேள்விகள் செறுப்பால் அடித்தது போல இருந்தது.ஆனால் உண்மையில் எனக்கு அவளை ஞாபகம் இல்லை..ஆனால் என் நண்பன் நினைத்துவிட்டான் நான் வேண்டும் என்றுதான் அவளைத்தெரியாது என்று சொல்லிவிட்டேன் என்று.

சுழல் சக்கரவர்த்தி முரளிதரன்

பல பொண்ணுங்களை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொனால் நம்ம மேல அவங்களுக்கு ஒரு இது வருமாம்.அதாவது அழகை புகழ்ந்தால் தான் அவங்க நம்மளை பார்ப்பாங்கலாம்.என்கின்றான் என் நண்பன் ஒருவன்..இப்படி ஒரு பார்வைதேவையா?
ஒரு பொண்ணு ஒரு பையனைப்பார்த்து ஒரு நீ ரொப்ப அழகா இருக்கேடா என்று சொனால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவன் நிலைமையை..பய அப்பறம் கண்ணாடி முண்ணாடி தான் என் நேரமும் நிப்பான்.

டெனிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்

கல்யாணத்தில் பாருங்க மேக்கப்போட எவ்வளவு நேரம் செலவழிக்கின்றார்கள் இல்லை தெரியாமல் தான் கேட்குறேன்..கருப்பா இருப்பவர்களை மேக்கப்போட்டு படம் எடுப்பதாலோ வெள்ளையாக காட்ட முயற்சித்து அளவுக்கு அதிகமாக மேக்கப்போடுவதால் என்ன பிரயோசனம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot)
இன்று பாத்தால் பல பொண்ணுங்க ஏன் ஆண்களும்தான்...பல கிறீம்களை வாங்கி முகத்தில் பூசிக்கொண்டு திரியுறாங்க கேட்டால் வெள்ளையாக வரனுமாம்..ஏன்யா..ஏன்?அதைவிட எங்கையும் போகும் போது நல்ல மேக்கப்பவுடராக வாங்கி முகத்தில் பூசிக்கொண்டு செல்கின்றார்கள்..பார்க்க நல்ல வெள்ளையாத்தான் தெரியுது ஆனால் எவ்வளவு நேரத்திற்கு.

இது ஏன் கருப்பிலும் ஒரு அழகு இருக்கு அதை பலர் உணர்ந்து கொள்ளாமைதான் வருந்தத்தக்கவிடயம் அதைவிட ..கலரில் என்ன இருக்கின்றது.....இதைவிட இன்னும் ஒரு விடயம் பல ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி கொட்டிவிடுகின்றது...இவர்களை சமூகத்தில் எப்படி சொல்கின்றார்கள் சொட்டை,பெல் மண்டை,வழுக்கைத்தலையா,இது எல்லாம் ஏன் அவர்கள் தலைமுடி இளம் வயதில் கொட்டியதுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்...இளம் வயதில் முடிகொட்டிய ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப்பாத்தால் அவனது நண்பர்களோ இல்லை அந்தப்பெண்ணின் நண்பிகளோ கேட்கிறார்கள் உன்ற மூச்சிக்கு உனக்கு லவ் தேவையா?ஏன் முடிகொட்டினால் கருப்பா இருந்தால் லவ் பண்ணக்கூடாதா?என்ன நாசம் இது..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot)
அதே போல கருப்பாக இருக்கும் பெரிதாக அழகு இல்லாத ஒரு பெண் நல்ல அழகான பையனைப்பாத்தால் அவளுக்கும் இந்தக்கதைதான் அட்டுப்பிகரா இருந்து கிட்டு உனக்கு என்ன் லவ்வேண்டி கிடக்கு....ஏன் அட்டுப்பிகராக(அழகு இல்லாத)இருந்தால் காதலிக்கக்கூடாதா?

அது என்னமோ தெரியலை அழகு என்று ஒரு சொல் எங்க வந்தாலும் இவங்க படத்தை போடாமல் இருக்க முடியவில்லை

அழகு என்பது நிரந்தரமானது இல்லை..இளமையும் அழகும் எம் வாழ்நாள் பூராகவும் இருக்கப்போவது இல்லை எனவே மனிதர்களின் உடல் அழகைவிட அவர்களது மனதை பாருங்கள் அதுதான் நிரந்தரமான அழகு..அழகு இல்லை என்று யாரையும் ஓதுக்காதீர்கள் அவர்களுக்குள்ளும் ஒரு அழகான மனது இருக்கு அதையும் கொஞ்சம் புரிந்து கொள்வோம்.

நான் அழகாக இல்லையே என்று யாரும் கவலையடைய வேண்டாம்,உண்மை அழகு என்பது நல்ல மனமே உங்களுக்கு நல்ல மனம் இருந்தாலோ போதும் நீங்களும் பேரழகன்,பேரழகிதான்.பின் குறிப்பு-
அன்புக்குறியவர்களே இந்தப்பதிவு கருப்பாக இருப்பவர்கள் மனதை மேலும் புண்படுத்துவது நோக்கம் இல்லை..அழகு என்று வரும் போது இவர்கள் மீது சமூகத்தில் என்ன கருத்து நிலவுகின்றது என்பதுதான் பதிவின் நோக்கம்.

.

இனி என் ஓவ்வொறு பதிவின் முடிவிலும் எதும் ஒரு தகவலை இன்றைய தகவல் என்று ஒரு தகவல் பதிவிடலாம் என்று இருக்கின்றேன்.இதில் பல தரப்பட்ட தகவல் தர இருக்கின்றேன்.

இன்றைய தகவல்-இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்றுக்கொடுத்த அணித்தலைவர் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமைதாங்கி அதில் 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார்

உங்கள் வேலையை மறக்கவேண்டான் கருத்துரை,ஓட்டுக்கள்

என்ன சரன்யாவைக்கானாம் ஸ்ருதி வந்து இருக்காங்கனு பாக்கிறீங்களா?
இனிமே எல்லாம் அப்படித்தான்இன்ட்லி ஓட்டுப்பட்டையை ஒரு தடவை கிளிக்செய்தால் அது அடுத்த பக்கம் ஓப்பின் ஆகி தானாக ஓட்டை சேர்த்துவிடும்Post Comment

65 comments:

கோகுல் said...

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு!

கோகுல் said...

இன்றைய தகவல் நல்ல முயற்சி தொடருங்கள்

கோகுல் said...

இனிமே எல்லாம் அப்படித்தானா?

எப்படியோ ஏதாவது நல்லது நடந்தால் சரி!

Mohamed Faaique said...

அருமையான பதிவு நன்பா... ரொம்ப ரசித்தேன். சில குடும்பங்களில் எல்லோரும் வெள்ளையாக இருக்க ஒரு பிள்ளை மட்டும் கருப்பாக இருக்கும்.. மக்களின் பார்வையும், கேள்வியாலுமே அவர்கள் அனு அனுவாக கொல்லப் படுவார்கள்.

சில வீட்டில் எல்லோரும் கருப்பாக இருக்க, ஒரு குழந்தை வெள்ளையாக இருக்கும் எல்லோரும் அந்தக் குழந்தை மீதே பாசம் காட்டுவர். இதனால் மற்ற குழந்தைகளுக்கு அந்தக் குழந்தை மேல் ஒரு வெறுப்பு வந்து விடுகிறது.

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு////

ஆமா பாஸ் கருப்பும் ஒரு அழகுதான்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
இன்றைய தகவல் நல்ல முயற்சி தொடருங்க/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
இனிமே எல்லாம் அப்படித்தானா?

எப்படியோ ஏதாவது நல்லது நடந்தால் சரி////

ஹி.ஹி.ஹி.ஹி.............

காட்டான் said...

கல்யாணத்தில் பாருங்க மேக்கப்போட எவ்வளவு நேரம் செலவழிக்கின்றார்கள் இல்லை தெரியாமல் தான் கேட்குறேன்..கருப்பா இருப்பவர்களை மேக்கப்போட்டு படம் எடுப்பதாலோ வெள்ளையாக காட்ட முயற்சித்து அளவுக்கு அதிகமாக மேக்கப்போடுவதால் என்ன பிரயோசனம்///

வீடியோவில பார்க்கும்போது போஸ்ட்மாட்டம் செய்த ஒருவரைதான் இவனுங்க கட்டியிருக்காங்கோன்னு நினைக்கத்தோன்றும்.. !!!

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
அருமையான பதிவு நன்பா... ரொம்ப ரசித்தேன். சில குடும்பங்களில் எல்லோரும் வெள்ளையாக இருக்க ஒரு பிள்ளை மட்டும் கருப்பாக இருக்கும்.. மக்களின் பார்வையும், கேள்வியாலுமே அவர்கள் அனு அனுவாக கொல்லப் படுவார்கள்.

சில வீட்டில் எல்லோரும் கருப்பாக இருக்க, ஒரு குழந்தை வெள்ளையாக இருக்கும் எல்லோரும் அந்தக் குழந்தை மீதே பாசம் காட்டுவர். இதனால் மற்ற குழந்தைகளுக்கு அந்தக் குழந்தை மேல் ஒரு வெறுப்பு வந்து விடுகிறது////

தேங்ஸ் பாஸ் நீங்கள் சொன்ன மாதிரி நானும் சில இடங்களில் பார்த்துள்ளேன்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
கல்யாணத்தில் பாருங்க மேக்கப்போட எவ்வளவு நேரம் செலவழிக்கின்றார்கள் இல்லை தெரியாமல் தான் கேட்குறேன்..கருப்பா இருப்பவர்களை மேக்கப்போட்டு படம் எடுப்பதாலோ வெள்ளையாக காட்ட முயற்சித்து அளவுக்கு அதிகமாக மேக்கப்போடுவதால் என்ன பிரயோசனம்///

வீடியோவில பார்க்கும்போது போஸ்ட்மாட்டம் செய்த ஒருவரைதான் இவனுங்க கட்டியிருக்காங்கோன்னு நினைக்கத்தோன்றும்.. !!////

சரியாகச்சொன்னீங்க மாம்ஸ்

சென்னை பித்தன் said...

த.ம.6.
கருப்பே ஒரு அழகு,காந்தலே ஒரு ருசி!

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
த.ம.6.
கருப்பே ஒரு அழகு,காந்தலே ஒரு ருசி////

ஆகா நல்லாச்சொன்னீங்க ஜயா

காட்டான் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நல்ல அலசல் கருப்புப் போக்க ஒரு கிரிம் அக்காலத்தில் பிரபல்யமான விளம்பரமாக இருந்தது இது எல்லாம் வியாபார தந்திரம் இப்போதைய சந்தையின் வியாபர உத்திதான் இந்த கலர் விடயங்கள் அதிகம் பேசப்படுவதற்கு திரையில் தெய்வத்திருமகன் முதல் முகம் வரை பேசப்பட்ட விடயம் நிலைதான் மாறல!

suryajeeva said...

ஆனா அவங்க புருஷன் கருஞ் சிறுத்தை போல இருப்பார்
கண் கொண்டு பார்க்க முடியாத கலரில் இருப்பார்கள்...
முதலில் நீங்களே கருப்பு என்றால் அழகு இல்லை என்ற மன நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவிலேயே தெரிகிறது...

தனிமரம் said...

ஏய்யா ராச் உன்னுடை கண்ணில் நம் விஜய்காந்து கருப்பாக திரையில் வந்து இன்று அரசியலில் மேலே போவது தெரியலையா ரெண்டு ரஜனிக்கு பதிலாக் அவரையும் ஒரு படம் போட்டா குறைஞ்சா போவாய் இல்ல முரளி இப்படி இருக்கினம் கனபேர்  உங்களுக்கு எல்லாம் டாக்குத்தர் தான் தெரியும் போல் ஹீ ஹீ!

Anonymous said...

வெள்ளை தான் அழகு என்று எம்மவர்களுக்கு பிம்பத்தை ஏற்ப்படுத்திய பெரும் பங்கு சினிமாவுக்கு தான்!

காட்டான் said...

ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி கொட்டிவிடுகின்றது...இவர்களை சமூகத்தில் எப்படி சொல்கின்றார்கள் சொட்டை,பெல் மண்டை,வழுக்கைத்தலையா,இது எல்லாம் ஏன் அவர்கள் தலைமுடி இளம் வயதில் கொட்டியதுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்...இளம் வயதில் முடிகொட்டிய ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப்பாத்தால் அவனது நண்பர்களோ இல்லை அந்தப்பெண்ணின் நண்பிகளோ கேட்கிறார்கள் உன்ற மூச்சிக்கு உனக்கு லவ் தேவையா?ஏன் முடிகொட்டினால் கருப்பா இருந்தால் லவ் பண்ணக்கூடாதா?என்ன நாசம் இது.

ok ok இப்பதான் விஷயம் தெரியுது மாப்பிள மாமன் கலருதான்னு ஏற்கனவே தெரியும் மாமனைப்போல மண்டையுமா..!!? அதுதான் மாப்பிள படத்த மாத்தினிங்களா..??? ஹி ஹி 

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நல்ல முயற்சி சகோ..

அம்பலத்தார் said...

சிலகாலங்களிற்குமுன் இங்கிலாந்தின் அழகியாக, ஜேர்மனியின் டொப் ஆகவெல்லாம் கறுப்பின பெண்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அம்பலத்தார் said...

அழகுசாதன பொருட்களிற்கான விளம்பரங்களிற்கும்,புதிய அழகுசாதன பொருட்களின் கண்டுபிடிப்புகளிற்கான ஆய்வுகளிற்கும்தான் வியாபார உலகில் மிக அதிகளவு பணம் செலவுசெய்யப்படுகிறது.

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நல்ல அலசல் கருப்புப் போக்க ஒரு கிரிம் அக்காலத்தில் பிரபல்யமான விளம்பரமாக இருந்தது இது எல்லாம் வியாபார தந்திரம் இப்போதைய சந்தையின் வியாபர உத்திதான் இந்த கலர் விடயங்கள் அதிகம் பேசப்படுவதற்கு திரையில் தெய்வத்திருமகன் முதல் முகம் வரை பேசப்பட்ட விடயம் நிலைதான் மாறல்///

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
ஆனா அவங்க புருஷன் கருஞ் சிறுத்தை போல இருப்பார்
கண் கொண்டு பார்க்க முடியாத கலரில் இருப்பார்கள்...
முதலில் நீங்களே கருப்பு என்றால் அழகு இல்லை என்ற மன நிலையில் இருக்கிறீர்கள் என்பது உங்கள் பதிவிலேயே தெரிகிறது./////

அப்படி இல்லை நண்பரே ஊரில் கருப்பாக இருப்பவர்களை எப்படி சொல்கின்றார்கள் என்று நிறைய அவதானித்தேன் அதற்கு பிறகு எழுதியதுதான் இந்தப்பதிவு...எனவே நான் அப்படி மனநிலையில் இல்லை பாஸ் நானும் கருப்புத்தான்..இது மற்றவற்கள் பார்வையில் கருப்பாக இருக்கும் அல்லது மேலே சொல்லப்பட்ட ஜோடிகள் எப்படி பார்க்கப்படுகின்றார்கள் என்பதி தெளிவாக சொல்லவே அப்படி குறிப்பிப்பிட்டுள்ளேன்...

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
ஏய்யா ராச் உன்னுடை கண்ணில் நம் விஜய்காந்து கருப்பாக திரையில் வந்து இன்று அரசியலில் மேலே போவது தெரியலையா ரெண்டு ரஜனிக்கு பதிலாக் அவரையும் ஒரு படம் போட்டா குறைஞ்சா போவாய் இல்ல முரளி இப்படி இருக்கினம் கனபேர் உங்களுக்கு எல்லாம் டாக்குத்தர் தான் தெரியும் போல் ஹீ ஹீ///

நிறைய பேர் இருக்கின்றார்கள் பாஸ்..எல்லோறுடைய படமும் போட்டால் பதிவு பெரிதாக வந்துவிடும் சூப்பர் ஸ்டார் படத்தை போட்டது அவரது ஸ்டைலை குறிப்பிட நீங்களே சொல்லுங்கள் கேப்டன் படத்தை போட்டு என்ன ஸ்டைல சொல்லுவது...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
வெள்ளை தான் அழகு என்று எம்மவர்களுக்கு பிம்பத்தை ஏற்ப்படுத்திய பெரும் பங்கு சினிமாவுக்கு தான்/////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
ஆண்களுக்கு இளம் வயதிலேயே முடி கொட்டிவிடுகின்றது...இவர்களை சமூகத்தில் எப்படி சொல்கின்றார்கள் சொட்டை,பெல் மண்டை,வழுக்கைத்தலையா,இது எல்லாம் ஏன் அவர்கள் தலைமுடி இளம் வயதில் கொட்டியதுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்...இளம் வயதில் முடிகொட்டிய ஒரு இளைஞன் ஒரு பெண்ணைப்பாத்தால் அவனது நண்பர்களோ இல்லை அந்தப்பெண்ணின் நண்பிகளோ கேட்கிறார்கள் உன்ற மூச்சிக்கு உனக்கு லவ் தேவையா?ஏன் முடிகொட்டினால் கருப்பா இருந்தால் லவ் பண்ணக்கூடாதா?என்ன நாசம் இது.

ok ok இப்பதான் விஷயம் தெரியுது மாப்பிள மாமன் கலருதான்னு ஏற்கனவே தெரியும் மாமனைப்போல மண்டையுமா..!!? அதுதான் மாப்பிள படத்த மாத்தினிங்களா..??? ஹி .ஹி///

யோவ் மாம்ஸ் நான் கருப்புதான் ஆனால் எனக்கு தலைமுடி இருக்குது நான் சின்னப்பையன் கல்யாணம் ஆகாத ஒரு 22 வயசுப்பையனுக்கு இப்படி கதையை கட்டி கும்மி அடிக்கப்பார்கிறீங்களே இது ஞாயமா.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
நல்ல முயற்சி சகோ.////

எதோ எங்களால் முடிந்ததை செய்வோம் சொல்வோம் பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
சிலகாலங்களிற்குமுன் இங்கிலாந்தின் அழகியாக, ஜேர்மனியின் டொப் ஆகவெல்லாம் கறுப்பின பெண்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்/////

கருப்புப்பெண்களும் ஒரு அழகுதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
அழகுசாதன பொருட்களிற்கான விளம்பரங்களிற்கும்,புதிய அழகுசாதன பொருட்களின் கண்டுபிடிப்புகளிற்கான ஆய்வுகளிற்கும்தான் வியாபார உலகில் மிக அதிகளவு பணம் செலவுசெய்யப்படுகிறது////

ஆமா பாஸ் இது உண்மை

காந்தி பனங்கூர் said...

ராஜ், இன்னையிலிருந்து உங்களை யாரும் கருப்புன்னு சொன்னா, அவங்கள இந்த பதிவை படிக்க சொல்லுங்க. அப்புறம் யாரும் அப்படி சொல்ல மாடாங்க. ஹி ஹி ஹி ஹி

K.s.s.Rajh said...

மகா ஜனங்களே இந்தப்பதிவு கருபாக இருப்பவர்களை புண்படுத்துவது நோக்கம் இல்லை..அழகு என்று வரும் போது இவர்கள் மீது சமூகத்தில் என்ன கருத்து நிலவுகின்றது என்பதுதான் பதிவின் நோக்கம்.

இதை எழுதிய நான் ஒன்றும் பேரழகன் இல்லை என் மூச்சியை இந்த பதிவுக்காக என் தளத்தின் சைட் பாரில் இனைத்து இருக்கின்றேன் பாருங்க.....

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
ராஜ், இன்னையிலிருந்து உங்களை யாரும் கருப்புன்னு சொன்னா, அவங்கள இந்த பதிவை படிக்க சொல்லுங்க. அப்புறம் யாரும் அப்படி சொல்ல மாடாங்க. ஹி ஹி ஹி ////

என்னைச்சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன் பாஸ் நமக்கு என்ன பிரச்சனை..ஹி.ஹி.ஹி.ஹி....

துஷ்யந்தன் said...

நண்பா வணக்கம்...

பாஸ் கருப்பும் அழகுதான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை..அப்புறம் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனி மட்டும் இல்ல. பிரான்ஸ் சூப்பர் ஸ்டார் காட்டான் மாமாவும் கருப்புத்தனய்யா .... அவரு அழகு தெரியும் இல்ல ....

பிரஞ்சு காரிங்க காட்டான் மாமாவு சுத்துவதும் தெரியும் இல்ல

ஹீ ஹீ

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

வாங்கையா வாங்க ஹனிமூன் எல்லாம் சாரி.சாரி.....ஹாலிடே எல்லாம் முடிஞ்சுதா.

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன் கூறியது..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை./////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

அப்புறம் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜனி மட்டும் இல்ல. பிரான்ஸ் சூப்பர் ஸ்டார் காட்டான் மாமாவும் கருப்புத்தனய்யா .... அவரு அழகு தெரியும் இல்ல ....

பிரஞ்சு காரிங்க காட்டான் மாமாவு சுத்துவதும் தெரியும் இல்ல ////

இதை ஏனய்யா பப்புளிசிட்டியா சொல்லுறீங்க அப்பறம் காட்டான் மாம்ஸ் சொல்லித்தான் நான் இந்தப்பதிவை எழுதினதா புரளியை கிளப்பிடுவாங்க............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி..

தனிமரம் said...

K.s.s.Rajh "கருப்பாக இருந்தால் அழகு இல்லையா?அழகு என்பது என்ன?" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்: 

@
தனிமரம் கூறியது...
ஏய்யா ராச் உன்னுடை கண்ணில் நம் விஜய்காந்து கருப்பாக திரையில் வந்து இன்று அரசியலில் மேலே போவது தெரியலையா ரெண்டு ரஜனிக்கு பதிலாக் அவரையும் ஒரு படம் போட்டா குறைஞ்சா போவாய் இல்ல முரளி இப்படி இருக்கினம் கனபேர் உங்களுக்கு எல்லாம் டாக்குத்தர் தான் தெரியும் போல் ஹீ ஹீ///

நிறைய பேர் இருக்கின்றார்கள் பாஸ்..எல்லோறுடைய படமும் போட்டால் பதிவு பெரிதாக வந்துவிடும் சூப்பர் ஸ்டார் படத்தை போட்டது அவரது ஸ்டைலை குறிப்பிட நீங்களே சொல்லுங்கள் கேப்டன் படத்தை போட்டு என்ன ஸ்டைல சொல்லுவது... 

ஒரு கருத்துரையை சேர் 

இந்த இடுகைக்கான கருத்துரைகளிலிருந்து குழு சேர்தலை நீக்கு. 

30 செப்டெம்ப்ர், 2011 3:20 pm அன்று nanparkal/நண்பர்கள் இல் K.s.s.Rajh ஆல் உள்ளிடப்பட்டது//
// 
யாரைப்பார்த்து இந்த கேள்வி இடது கால் வலது கால் சண்டை உங்க டாக்குத்தருக்கு முடியுமா கண்ணீர் சிந்த கிளிசரின் தேவையில்லை பொலிஸ் ஸ்டையில் நம்மாளு    இப்படி அடிக்குக் கொண்டே போகலாம் இதனை படம் தமிழில் மட்டும் நடித்தவர் அவ்வ்வ்வ்வ் 

யாரைப்பார்த்து அவர் வேட்டி கட்டினால் சின்னக்கவுண்டர் மற்றவங்க கட்டினால் டாக்குத்தர் ஒழுங்க வேட்டிகட்டினால் சோல்சிக்காட்டுல் நிற்குமே ஒன்று அது போல் இருக்கும் கும்மியடிப்போம் மகனே உங்க பதிவு கருத்து மாறிவிடும் என்பதால் விடுகின்றேன் பிச்சுப்போடுவன்  பிச்சு!

K.s.s.Rajh said...

@தனிமரம்
ஹி.ஹி.ஹி.ஹி..ஹி...

கும்மி அடிக்க விரைவில் ஒரு பதிவு போடுறன் பாஸ் பாருங்க கும்மினா கும்மி குமாம்மாங் குத்து கும்மியடிக்க முடியும் பாருங்க.....

Dr. Butti Paul said...

நல்லாத்தான் சொல்றீங்க சார், நீங்க ஐஸ்வர்யா சூப்பர் பிகர்ன்னு சொல்றீங்க, எனக்கு அவங்க அட்டு பிகராதான் தெரியுறாங்க. கலர்ல அவங்கள விட கம்மின்னாலும் நந்திதா தாஸ் சூப்பெரோ சூப்பர். கருப்போ சிகப்போ, புற அழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையில் இருக்கு, ஆனா யாராலையும் மாற்றுக்கருத்து சொல்லமுடியாதது அக அழகு, அது ஒண்ணுதான் நாம உருவாக்கிக்க கூடியது.. அப்புறம் இனி எல்லாமே அப்பிடித்தான்னு மொட்டையா சொல்லாதீங்க, சீக்கிரமா யாராவது ஒருத்தருக்கு பிக்ஸ் ஆகிக்கோங்க.

Dr. Butti Paul said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி..//

காப்பி எப்புடின்னு கேட்டப்போவே நினச்சேன். இது வேற இருக்காண்ணே?

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
நல்லாத்தான் சொல்றீங்க சார், நீங்க ஐஸ்வர்யா சூப்பர் பிகர்ன்னு சொல்றீங்க, எனக்கு அவங்க அட்டு பிகராதான் தெரியுறாங்க. கலர்ல அவங்கள விட கம்மின்னாலும் நந்திதா தாஸ் சூப்பெரோ சூப்பர். கருப்போ சிகப்போ, புற அழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையில் இருக்கு, ஆனா யாராலையும் மாற்றுக்கருத்து சொல்லமுடியாதது அக அழகு, அது ஒண்ணுதான் நாம உருவாக்கிக்க கூடியது.. அப்புறம் இனி எல்லாமே அப்பிடித்தான்னு மொட்டையா சொல்லாதீங்க, சீக்கிரமா யாராவது ஒருத்தருக்கு பிக்ஸ் ஆகிக்கோங்க/////

என்னது ஜஸ்வர்யா ராய் அட்டுப்பிகரா?......என்னய்யா டாக்டரே டாகுத்தர் போல பேசுறீங்க...நந்திதாதாஸ் சூப்பர் பிகருதான்..

அக அழகுதான் சார் மிகவும் அழகு

இன்னைக்கு உங்க டீமில் போட்டு இருந்த ஸ்ருதிபடத்தை பாத்துட்டுதான் சார் எனக்கு ஒரு இது வந்துடுச்சி..ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.////

ஏன் தலைவரே அப்பறம் நம்ம ப்ளாக்குல கேமராவோட அலைவாங்க இது எல்லாம் தேவையா நமக்கு ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//கருப்புன்னு சொல்லிட்டு நம்ம கருப்பழகி ரஞ்சிதா பத்தி சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் படமாவது போட்டிருக்க வேணாம்? நித்தி கோச்சுக்குவாருன்னு பதில் சொன்னா பிச்சிபுடுவேன் பிச்சி..//

காப்பி எப்புடின்னு கேட்டப்போவே நினச்சேன். இது வேற இருக்காண்ணே///

யோவ் என்னையா என் ப்ளாக்குல காப்பி பத்தி பேசுறீங்க....திரும்பவும் என் பதிவை யாரும் காப்பி பண்ணிட்டாங்களா?

பிரணவன் said...

அழகு என்பது அவரவர்களின் நடத்தையில் இருகின்றது என்றே நான் சொல்வேன் சகா. . .புறம் எப்பொழுதுமே நிலையில்லை. . .அகமே அழகு. . .

துஷ்யந்தன் said...

யோவ்.. K.s.s.Rajh சொன்னது…
@துஷ்யந்தன்

வாங்கையா வாங்க ஹனிமூன் எல்லாம் சாரி.சாரி.....ஹாலிடே எல்லாம் முடிஞ்சுதா.>>>>>>>>>>>>

யோவ்....
உனக்கு ஏன்ய்யா இந்த கொலை வெறி... வேணாம்ய்யா... வலிக்குது அழுதுடுவன்... அவ்வ்

துஷ்யந்தன் said...

 K.s.s.Rajh கூறியது...
@துஷ்யந்தன் கூறியது..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை./////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........
>>>>>>>>>>>

பார்டா....... பையன் முரண்டு பிடிக்காம சட்டுண்ணு ஒத்துக்கிட்டான்... 
( நானும் ரெம்ப முரட்டித்தான் உண்மைய ஒத்துக்க வைக்கனும் என்று நினைச்சேன்.. ஹீ ஹீ)

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
அழகு என்பது அவரவர்களின் நடத்தையில் இருகின்றது என்றே நான் சொல்வேன் சகா. . .புறம் எப்பொழுதுமே நிலையில்லை. . .அகமே அழகு////

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
யோவ்.. K.s.s.Rajh சொன்னது…
@துஷ்யந்தன்

வாங்கையா வாங்க ஹனிமூன் எல்லாம் சாரி.சாரி.....ஹாலிடே எல்லாம் முடிஞ்சுதா.>>>>>>>>>>>>

யோவ்....
உனக்கு ஏன்ய்யா இந்த கொலை வெறி... வேணாம்ய்யா... வலிக்குது அழுதுடுவன்... அவ்..அவ்/////

ஹீ.ஹீ.ஹீ.ஹீ.ஹீ..............

K.s.s.Rajh said...

@
துஷ்யந்தன் கூறியது...
K.s.s.Rajh கூறியது...
@துஷ்யந்தன் கூறியது..

ஆனால் எல்லோரும் கல்யாணம் என்று வரும் போது நம்ம ஹன்சிகா கலரில்தான் பொண்ணு தேடுறாங்க...

இதில் நான் நீங்கள் எல்லோருமே அடங்குறோம் (உங்க பிரியா கூட வெள்ளை பாஸ்.. ஹீ.. ஹீ..) இதுதான் கசக்கும் உண்மை./////

ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..........
>>>>>>>>>>>

பார்டா....... பையன் முரண்டு பிடிக்காம சட்டுண்ணு ஒத்துக்கிட்டான்...
( நானும் ரெம்ப முரட்டித்தான் உண்மைய ஒத்துக்க வைக்கனும் என்று நினைச்சேன்.. ஹீ ஹீ////

என்னமோ தெரியலை பாஸ் இந்தமேட்டரை கையில் எடுத்தால் நான் சரண்டர்...ஹீ..ஹீ.ஹீ.ஹீ..நம்ம கூட படிச்ச பசங்க கூட நான் எதும் அவங்களிடம் வாதம் செய்தால் உடனே இந்தமேட்டரை கையில் எடுப்பாங்க நான் சரண்டர்...ஹீ..ஹீ.ஹீ.ஹீ...ஆகா உண்மைய உளரிட்டேனோ

kobiraj said...

கருப்பான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்களாமே .கருப்பு மவுசுதான்

Riyas said...

ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிங்க.. அழகு என்பது கலரில் இல்லை உண்மைதான்...

எதுக்கு பிரைன் லாரா பாடம்,, மேற்கிந்திய தீவுகள் அணியிலுள்ள அழகானவர்களில் அவரும் ஒருவர்..

மற்ற படமெல்லாம் ஓக்கே.. ஐஸ்வர்யாவை ஏன் இன்னும் விடமாட்டேங்கிறிங்க,,

Yoga.s.FR said...

குயில்(பறவை)கூடத் தான் கறுப்பு,அதன் குரல் இனிமைமையானதில்லையா?ஏன் நடிகைகளையும்,நடிகர்களையும் மட்டுமே சுட்டுகிறீர்கள்/றார்கள்?கொம்பா முளைத்திருக்கிறது?

K.s.s.Rajh said...

@
kobiraj கூறியது...
கருப்பான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்களாமே .கருப்பு மவுசுதான்/////

உண்மையா பாஸ் அப்ப சரி....ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
ஆஹா எவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிங்க.. அழகு என்பது கலரில் இல்லை உண்மைதான்...

எதுக்கு பிரைன் லாரா பாடம்,, மேற்கிந்திய தீவுகள் அணியிலுள்ள அழகானவர்களில் அவரும் ஒருவர்..

மற்ற படமெல்லாம் ஓக்கே.. ஐஸ்வர்யாவை ஏன் இன்னும் விடமாட்டேங்கிறிங்க,////

உண்மைதான் பாஸ் லாரா கருப்பு என்றாலும் அவரில் ஒரு தனித்துவமான அழகு இருக்கின்றது

மற்றது என்னமோ தெரியவில்லை அழகு என்று ஒரு விடயம் வரும் போது ஜஸ்வர்யா ராயை விடமுடியவில்லை

K.s.s.Rajh said...

@
Yoga.s.FR கூறியது...
குயில்(பறவை)கூடத் தான் கறுப்பு,அதன் குரல் இனிமைமையானதில்லையா?ஏன் நடிகைகளையும்,நடிகர்களையும் மட்டுமே சுட்டுகிறீர்கள்/றார்கள்?கொம்பா முளைத்திருக்கிறது////

நல்ல ஒரு கேள்வி ஜயா ஆனால் இப்ப நடிகை,நடிகைகள் மக்கள் மனங்களில் பளிச்சென்று ஓட்டிக்கொள்கின்றார்கள் எனவே அவர்களை வைத்து சொல்கின்றபோது மக்களுக்கு இலகுவில் விடயம் புரிகின்றது.
இது மிகவும் வருந்தத்தக்க விடயம்

சினிமா சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.இந்த நிலை மாறவேண்டும் ஆனால் நடிகர்களின் கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யும் ரசிகர்களின் மன மாறுகின்றபோதுதான் சினிமா ஏற்படுத்திய பாதிப்பு குறையும் ஆனால் குறையுமா என்பது சந்தேகமே..

M.R said...

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ,

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்

கருப்பான கையாலே என்னை பிடித்தான்

இப்பிடி பாடப்பட்ட கருப்பை பற்றி ஒரு அலசல் ,அருமை

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ,

கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்

கருப்பான கையாலே என்னை பிடித்தான்

இப்பிடி பாடப்பட்ட கருப்பை பற்றி ஒரு அலசல் ,அருமை/////

தேங்ஸ் பாஸ்

மேரிஜோசப் said...

உங்கள் கருத்தை ஏற்கிறேன்

நிரூபன் said...

நல்லதோர் பதிவு பாஸ்..

உண்மையில் நாம் பிறந்த காலம் தொட்டு,
வெள்ளை மீதான மோகத்திற்கு எம்மை அறியாமலே தள்ளப்படுகின்றோம்,

வெள்ளை நிறம் அல்லது அழகு மீது எம்மைச் சூழ்ந்திருப்போரால் எம் சிறு வயது முதல் இயலபாகவே ஒரு ஈர்ப்பு வரும் வண்ணம் சேதிகள் சொல்லப்படுகின்றன.

வெள்ளையும், அழகும் உயர்ந்ததகா எம் சமூகத்தில் காணப்படுவதாலும்,

சிறு வயதில் எம் மனதினுள் வெள்ளை பற்றிய சேதிகளே அதிகளவில் பதிவதாலும் தான் அழகும் வெள்ளையும் பற்றி அதிகம் பேர் விருப்புக் கொள்கிறார்கள்.

K.s.s.Rajh said...

@மேரிஜோசப்

நன்றி சகோதரி

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
நல்லதோர் பதிவு பாஸ்..

உண்மையில் நாம் பிறந்த காலம் தொட்டு,
வெள்ளை மீதான மோகத்திற்கு எம்மை அறியாமலே தள்ளப்படுகின்றோம்,

வெள்ளை நிறம் அல்லது அழகு மீது எம்மைச் சூழ்ந்திருப்போரால் எம் சிறு வயது முதல் இயலபாகவே ஒரு ஈர்ப்பு வரும் வண்ணம் சேதிகள் சொல்லப்படுகின்றன.

வெள்ளையும், அழகும் உயர்ந்ததகா எம் சமூகத்தில் காணப்படுவதாலும்,

சிறு வயதில் எம் மனதினுள் வெள்ளை பற்றிய சேதிகளே அதிகளவில் பதிவதாலும் தான் அழகும் வெள்ளையும் பற்றி அதிகம் பேர் விருப்புக் கொள்கிறார்கள்/////

ஆமா பாஸ் இதான் உண்மை

அம்பாளடியாள் said...

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails