Thursday, January 12, 2012

(பகுதி-5)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்....
தன் அபிமான தான் ரசிக்கும் ஒரு பதிவருடன் கதைத்தது காயத்திரிக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.ஒவ்வொறு நாள் காலையிலும் அவள் வீட்டுக்கு முன்பு இருந்த டீக்கடைக்கு கோகுலன் டீ குடிக்க வருவதால் அவன் மனது எப்படி இருக்கு இன்னும் அவனுக்கு தன் மேல் காதல் இருக்கா என்று அறிய அவன் காலையில் வரும் போதெல்லாம் தன் வீட்டு மொட்டை மாடியில் நின்று அவனை பார்ப்பாள்.காயத்திரி அவனும் ஹாய் என்று கையை காட்டிவிட்டு போவான் ஆனால் இவளை பெரிதாக கண்டு கொள்வது இல்லை.அப்படி ஒரு நாள் கோகுலன் வழமை போல டீ குடிக்க வரும் போது காயத்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
இனி......

கோகுலன் காயத்திரியை பார்த்துக்கொண்டே வரும் போது பின்னால் இருந்துவந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவன் மேல் மோதியது.கோகுலன் தூக்கி எறியப்பட்டான். காயத்திரி கோகுலன்!...... என்று தன்னையறியாமல் கத்தினாள்.

சனம் கூடிவிட்டது விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கப்பா! என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுத்தார்.ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.மாடியில் இருந்து இறங்கிய காயத்திரி அவசர அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்றாள்.


அங்கே கோகுலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான்.காயத்திரி டாக்டரிடம் பேசினால் அவரும் சினிமாவில் வரும் டாக்டர் மாதிரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும் ப்ளட் கொஞ்சம் பிலீடிங்( blood bleeding)ஆகியிருக்கு என்றார்..

எதிரே இருந்த இருக்கையில் காயத்திரி அமர்ந்து கொண்டாள்.எவ்வளவு நேரம் இருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை அப்படியே தூங்கிப்போனால் கண்விழித்து பார்த்த போது இருட்டிவிட்டது.திடுக்கிட்டு எழுந்தாள் வீட்டில் தேடப்போகின்றார்களே என்ற நினைவு உந்த எழுந்து கோகுலனை பார்த்துவிட்டு புறப்படுவோம் என்று நினைத்துக்கொண்டு டாக்டரிடம் போனாள்.


ஒன்றும் பிரச்சனை இல்லை போய்ப்பாருங்கள் என்று சொன்னார் டாக்டர்.காயத்திரி கோகுலனிடம் ஓடிச்சென்றாள்.
காயத்திரியை கண்டதும் கோகுலனின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது
தன் கைகளால் அந்தக் கண்ணீரை துடைத்த காயத்திரி.ஏண்டா அழுகிற அதான் நான் இருக்கேன்ல உனக்கு ஒன்னும் ஆகாது.உன் போனைக்கொடு உங்கள் வீட்டுக்கு தகவல் சொல்லுவம்.

இல்லை வேணாம் காயத்திரி அம்மா,அப்பாவுக்கு தெரியவேண்டாம் அவர்கள் பாவம் என்னமோ ஏதோ என்று ஊரில் இருந்து கிளம்பி வருவார்கள் அவர்களை கஸ்டப்படுத்த வேண்டாம் அதான் எனக்கு ஒன்னும் ஆகலையே?
எப்படி கோகுல் உன்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிகின்றது
எல்லாம் காலம் தந்த பாடம் தான் காயத்திரி எவ்வளவோ வலிகளை தாங்கிட்டேன் அதனுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிய வலி இல்லை.

தான் விட்டுவிட்டு வந்ததைத்தான் அவன் சுட்டிக்காட்டுகின்றான் என்று காயத்திரிக்கு புரிந்தது.அவன் கைகளைப்பற்றிக்கொண்டு பேசினாள்
கோகுல் அன்று ஏதோ ஒரு கோபத்தில் அப்படி பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடு இனி நான் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்.

இல்லை காயத்திரி நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை. அன்று நீ காதலை சொன்ன போது எனக்கு புரியவில்லை. பிறகு உன் மாமா என்னை அழைத்து அவளை விட்டுவிடு அவளுக்கு நீ பொருத்தமானவன் இல்லை என்று சொன்னபோதுதான். நான் யோசித்து பார்த்தேன்.அப்பதான் இந்த மரமண்டைக்கு புரிந்தது.அதுதான் பஸ்சில் உன்னிடம் நாங்கள் உடல் ரீதியாக இணைவோம். அப்பதான் யாராலும் பிரிக்க முடியாது என்று சொன்னேன் எனக்குத்தெரியும் அப்படி சொன்னால் நீ கண்டிப்பாக கோபப்பட்டு என்னைவிட்டு விட்டு போய் விடுவாய். என்று..அதே போலவே நீயும் செய்துவிட்டாய்.இரண்டு நாள் காதல் மூன்றாம் நாளே முடிந்துவிட்டது.சின்ன வயதில் இருந்தே உன் மாமாவின் மகன் சதீஸும் நானும் நல்ல ப்ரண்ட். நான் எங்கள் வீட்டில் இருந்ததை விட அவங்க வீட்டில் தான் அதிகமாக இருந்து இருக்கேன்.

எனவே உங்கள் மாமா என்னிடம் அப்படி சொன்ன போது எனக்கு உன் மேலான காதலைவிட அந்தக்குடும்பத்தின் மீதான மரியாதைதான் அதிகமாக இருந்தது. எனவே தான் 10 வருட நட்புக்காக 2 நாள் காதலை தூக்கி எறிந்தேன்.ஆனால் உன் மனம் கஸ்டப்படக்கூடாது என்னில் வெறுப்பு வரவேண்டும் என்று தான் அப்படி உன்னிடம் கேட்டேன். மற்ற படி என் மனதில் தப்பான எண்ணம் எதுவும் இல்லை என்னை மன்னித்துவிடு காயத்திரி நீ என் தேவதை உன்னை எப்பவும் என்னால் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க மனசு வராது.பட பட என்று கோகுலன் பேசி முடித்தான்.

அடப்பாவி எனக்குத்தான் ஒன்னும் புரியவில்லை நீ அப்படி கேட்டதும் உன்னை தப்பாக நினைத்துவிட்டேன்.சரி நடந்ததை மறந்துவிடுவோம் உனக்கு நான் தந்த இரண்டு வருட தண்டனை போதும்.இனிமேல் சந்தோசமாக இருப்போம்.அது சரி என்னை எப்பவும் தப்பாக பார்க முடியாது என்றால் அப்ப எப்போதும் சும்மாவா இருப்ப அப்படி லவ்வர் எனக்கு வேண்டாம். நான் கெளம்புறன் என்று அவனை பார்த்து புன்னகைத்தாள்.

ஏன் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் எனக்கு உடம்பு சரியாகச்சும் வைச்சுக்கொள்கின்றேன் கச்சேரியை.
அவன் அப்படி சொன்னதும். போடா என்று அவன் தலையில் செல்லமாக குட்டினாள்(கொட்டினாள்).

ஜயோ.....அடிப்பாவி தலையில் அடிப்பட்டு இருக்கு நீ வேற குட்டுற(கொட்டுற)
டேய் சாரிடா டேய் சாரிடா என்று அவனிடம் கெஞ்சினாள்.
கோகுலனும் சரி விடு என்று தன் கையை பற்றியிருந்த அவள் கைகளை பற்றிக்கொண்டான்.

ஓக்கே விடு கோகுல் நான் கிளம்புறேன் நாளைக்கு வாரன் என்று சொல்லிவிட்டு எழுந்தாள். கோகுலன் பற்றியிருந்த அவள் கைகளில் மெதுவாக தன் இதழ்களைப் பதித்து முத்தம் கொடுத்தான்.

ஒரு கணம் நாணத்தால் அவள் முக சிவந்தாலும் கோகுலனை நோக்கி சொன்னாள் டேய் முதலில் சேவ் எடு மீசை குத்துது.என்று சொல்லிவிட்டு அவன் பற்றியிருந்த கையை விலக்க மனம் இல்லாது வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.

ஒக்கே மேடம் நீங்க சொன்னால் சரி கையில் தானே மீசை குத்தியது முகத்தில் கிஸ் பண்ணும் போது சேவ் எடுத்துவிட்டு கிஸ் பண்ணுகின்றேன் ஓக்கேவா?

கோகுலன் அப்படி சொன்னது போடா நீ ஓவரா போற என்று சொல்லிக்கொண்டே அவன் பற்றியிருந்த கைகளை பறித்துக்கொண்டு நாளைக்கு வாரேன் என்று அவன் முகத்தை பார்க்காமல் சொல்லிவிட்டு சென்றாள் அந்த அழகு மங்கை.

வீட்டிற்கு வந்த காயத்திரியை அவளது தாய் முறைத்துப்பார்த்தாள் இவ்வளவு எங்கடி போன

இல்லம்மா அது வந்து ப்ரண்ட் வீட்டு போனேன்.

சரி காலையில் நம்ம ரோட்டில் ஒரு பையன் மோட்டார் சைக்கிளில் அடிபட்டானே அவன் எப்படி இருக்கிறான்.

தாய் அப்படி கேட்டதும் காயத்திரி பேச்சை மாத்தினாள் யாருக்குத்தெரியும் என்ன நடந்துச்சி என்று நான் காலையில் ப்ரண்ட் வீட்ட போயிட்டேன் இப்பதான் வாரன் எனக்கு என்ன தெரியும்.?

சரி சரி போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று கூறிவிட்டு தாய் சமையல் அறையினுள் சென்றாள்.

காயத்திரியின் மனதில் அம்மா ஏன் தன்னிடம் அப்படி கேட்டார் ஒரு வேளை நான் ஆஸ்பத்திரிக்கு போய் கோகுலனை பார்த்தை அறிந்திருப்பாரோ ஆனாலும் அம்மாவுக்கு! கோகுலனுக்கும் எனக்குமான பழய கதை தெரியாதே? பிறகு எப்படி? பலவாறு சிந்தித்துக்கொண்டே குளியல் அறையில் நுழைந்தாள்.

தன் ஆடைகளை களைந்துவிட்டு டப்பில் தண்ணீரை திறந்துவிட்டாள் அவள் மேனி எங்கும் தவழ்ந்த தண்ணீர் துளிகளில் கோகுலனின் விம்பம் அவளுக்கு தெரிந்தது. ஆஸ்பத்திரியில் அவன் அவளது கரம் பற்றி முத்தமிட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவன் முத்தமிட்ட போது அவன் முகத்தை பார்க்க முடியவில்லை அவ்வளவு வெட்கம். இப்போது தனிமையில் இருப்பதால் அவன் முத்தமிட்ட தன் கையில் அவன் முத்தமிட்ட இடத்தில் தன் உதடுகளை பதித்தாள். காயத்திரி கோகுலனின் உதட்டிலே முத்தம் இட்டதை போல அவளுக்கு தோன்றியது.

இரு படவா ஒரு நாள் உனக்கு நான் முத்தமழை பொழிகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.குளிர்த்துவிட்டு வெளியே வந்தாள்.

காயத்திரிக்கு அப்பதான் பதிவர் வன்னியின் நினைவு வந்தது அட இன்று அவரின் தளத்தை படிக்கவில்லையே என்று அவசர அவசரமாக சென்று தன் லாப்டாப்பை ஆன் பண்ணினாள்.புதிய பதிவுகள் எதுவும் வரவில்லை? ஏன் இவர் புதிய பதிவுகள் ஏதுவும் எழுதவில்லை ஓவ்வொறு நாளும் ஏதாவது எழுதுவாரே என்று நினைத்துக்கொண்டு அவரின் நம்பருக்கு போன்செய்தாள்
போன் ஆப்(off) செய்யப்பட்டு இருந்தது.

(தொடரும்)

முஸ்கி-இந்த தொடரில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள் அனைத்தும் கற்பனையே.

இந்த தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க

முஸ்கி-இந்த தொடரின் அடுத்த பகுதி வரும் திங்கள் கிழமை(16-1-2012) வரும்

************************************************************************************************************
நேற்றய தினம் நான் எழுதிய பதிவை படிக்க கீழே கிளிக்
************************************************************************************************************

Post Comment

14 comments:

குறையொன்றுமில்லை. said...

தொடர் சுவாரசியமாக ச்செல்கிரது. தொடருங்க.

Yoga.S. said...

HAI RAJ!!!இது வயசுப் பொடியள் சமாச்சாரம்! நமக்கெதுக்கு?அன்பை இப்பிடித் தேடுற கத!போடாங்....................!!!!!!!!!!!!!(ச்சும்மா!)நல்லாயிருக்கு!

ராஜி said...

பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? அந்த சரண்யா போட்டோ மாத்த மாட்டினங்களா?

Admin said...

இந்த பகுதியை வாசித்தேன்..முன் பகுதிகளை நேரமிருக்கும்போது வாசிக்கிறேன்..தொடருங்கள் தொடர்கிறேன்.தளத்தில் இணைந்துகொண்டேன்..வாழ்த்துகள்..

தீண்ட மறுக்கிறார் காந்தி

K said...

கதை நல்ல விறுவிறுப்பாவும் சுவாரசியமாவும் போகுது! என்ன அன்பைத் தேடுறமாதிரி தெரியேலை....! இது வேற என்னத்தையோ தேடுற மாதிரி இருக்கு! ஹா ஹா ஹா !! சும்மா பகிடிக்குச் சொன்னேன் மச்சான் சார்!

அதுசரி வன்னி என்று ஒரு பதிவரா? அவரின் லிங் ப்ளீஸ்!
மச்சான் சார், இதன் அடுத்த பாகம் எப்போ?

K.s.s.Rajh said...

@Lakshmi

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
HAI RAJ!!!இது வயசுப் பொடியள் சமாச்சாரம்! நமக்கெதுக்கு?அன்பை இப்பிடித் தேடுற கத!போடாங்....................!!!!!!!!!!!!!(ச்சும்மா!)நல்லாயிருக்கு////

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? அந்த சரண்யா போட்டோ மாத்த மாட்டினங்களா?/////

ஹா.ஹா.ஹா.ஹா அடுத்த பதிவில் மாத்திடுவோம் அக்கா

K.s.s.Rajh said...

@
மதுமதி கூறியது...
இந்த பகுதியை வாசித்தேன்..முன் பகுதிகளை நேரமிருக்கும்போது வாசிக்கிறேன்..தொடருங்கள் தொடர்கிறேன்.தளத்தில் இணைந்துகொண்டேன்..வாழ்த்துகள்..

தீண்ட மறுக்கிறார் காந்தி
////

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
கதை நல்ல விறுவிறுப்பாவும் சுவாரசியமாவும் போகுது! என்ன அன்பைத் தேடுறமாதிரி தெரியேலை....! இது வேற என்னத்தையோ தேடுற மாதிரி இருக்கு! ஹா ஹா ஹா !! சும்மா பகிடிக்குச் சொன்னேன் மச்சான் சார்!

அதுசரி வன்னி என்று ஒரு பதிவரா? அவரின் லிங் ப்ளீஸ்!
மச்சான் சார், இதன் அடுத்த பாகம் எப்போ?/////

யோவ் மச்சான் சார் வன்னி கற்பனை பதிவர் இது முழுவதும் கற்பனை கதை வரும் திங்கள் கிழமை அடுத்த பகுதி வரும் நன்றி பாஸ்

மகேந்திரன் said...

இன்றுதான் இந்தத் தொடரை படிக்கிறேன் நண்பரே.
அழகாக இருக்கிறது உங்கள் எழுத்து நேர்த்தியாக.

நண்பரே கடந்த பதிவுகளையும்
படித்து விட்டு கருத்திடுகிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

கதை ரொம்ப சூடு பிடிக்குதே அவ்வ்வ்வ்:)).. அதுக்குள் பதிவரையும் இழுக்கிறீங்களோ? கலக்கல்தான்... ஆர் அந்த வன்னிப் பதிவர்? ராஜ் என்பவரோ?:).

K.s.s.Rajh said...

@மகேந்திரன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
கதை ரொம்ப சூடு பிடிக்குதே அவ்வ்வ்வ்:)).. அதுக்குள் பதிவரையும் இழுக்கிறீங்களோ? கலக்கல்தான்... ஆர் அந்த வன்னிப் பதிவர்? ராஜ் என்பவரோ?:////

வை திஸ் கொலை வெறி அக்கா? இந்தக் கதையில் வரும் அனைத்தும் கற்பனை பாத்திரங்கள் நன்றி அக்கா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails