Tuesday, January 17, 2012

நண்பன்:விஜய் ஏன் இந்தப்படத்தில் நடித்தார்.என் பார்வையில் நண்பன் பட விமர்சனம்

நண்பன் படத்துக்கு அனைவரும் விமர்சனம் எழுதி ஓய்ந்ததும் நான் எழுதுகின்றேன் எனவே பலருக்கு சலிப்பை உண்டு பண்ணாமல் சுருக்கமாக சொல்கின்றேன்

கதை
ஹிந்தியில் வெளியான ”3 இடியட்ஸ்” படத்தின் தமிழ் ரீமேக் ஆனால் நான் ”3 இடியட்ஸ் பார்கவில்லை” எனவே என்னை போல ”3இடியட்ஸ் பார்க்காகவர்களுக்காக சுருக்கமாக படத்தின் கதை

ஒரு இஞ்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,சத்யன்,விஜய்(சென்னை 28,படத்தில் நடித்த விஜய்).அந்தக் கல்லூரியின் முதல்வர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் இலியானா,மற்றும் சில காட்சிகளில் வரும் எஸ்.ஜே.சூர்யா,இவர்களை வைத்து பின்னப்பட்ட ஒரு பக்கா கல்லூரிக்கதைதான் நண்பன்.இயக்கம் சங்கர்,இசை-ஹரிஸ் ஜெயராஜ்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இளைய தளபதி விஜய்

விஜய் என்ற ஹீரோக்குள் இருக்கும் ஒரு அற்புதமான நடிகரை பல படங்களில் காணமுடியவில்லை மிக நீண்ட காலத்துக்கு பின் காவலனில் பார்த்தோம். ஆனால் மீண்டும் வேலாயுதம் மூலம் தனது மாஸ் பாதையிலே பயணித்தார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

அதுக்கு பிறகு மீண்டும் "நண்பன்" மூலம் விஜய் என்ற மாஸ் ஹீரோக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகரை இதில் காண முடிந்தது.

தனது மாஸ் ஹீரோ இமேஜை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு இந்த படத்தில் நடித்ததற்கு விஜயை பாராட்டலாம்.பல காலம் விஜயும்,சங்கரும் இணைந்து படம் பண்ணவேண்டும். என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.அவர்கள் இணைந்த படம் ஒரு ”சிவாஜி” போலவோ இல்லை ”அந்நியன்” போலவோ ”முதல்வன்” போலவோ இல்லாமல் இயல்பான படமாக அமைந்தது சிறப்பாக இருக்கின்றது. விஜய் ரசிகர் இல்லாதவர்களுக்கும் இந்தப்படத்துக்கு பிறகு விஜயை பிடிக்கும் என்று சங்கர் கூறினார்.

அதற்கு காரணம் விஜயின் மாஸ் படங்களை அவரது ரசிகர்கள் இல்லாதவர்கள் பெரிதும் விரும்பி பார்பது இல்லை. விஜயின் இயல்பான படங்கள் தான் அவர் ரசிகர் இல்லாதவர்களையும் கவர்ந்த படங்கள் உதாரணம் பூவே உனக்காக,துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை,தேவா,கோயம்பத்தூர் மாப்பிளை,முதல் அண்மையில் வெளி வந்த காவலன் வரை.அந்த வகையில் நண்பன் படமும் விஜய் ரசிகர் இல்லாதவர்களையும் நிச்சம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை

ஆனால் விஜயின் தீவிர ரசிகர்கள் சிலருக்குத்தான் விஜய் ஏன் இப்படி ஒரு படத்தில் நடித்தார்.என்று ஆதங்கப்படுகின்றனர்.அவர்கள் விஜய் என்ற ஹீரோவில் இருக்கும் மாஸ் இமேஜைத்தான் ரசிகின்றனர்.ஆனால் விஜய் என்ற மனிதனில் இருக்கும் நடிகனை ரசிக்க தயார் இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இந்தபடத்தில் விஜய் கல்லூரியில் படிக்கும் போதும்.10 வருடம் கழித்து பார்கின்ற போதும் ஓரே மாதிரித்தான் தெரிகின்றார் தோற்றத்தில் வித்தியாசம் இல்லை.

ஜீவா,ஸ்ரீகாந்த்,சத்யன் இவர்களின் கெட்டப் கல்லூரியில் படிக்கும் போதும் சரி,10 வருடங்களுக்குப் பிறகும் சரி நன்றாக பொருந்துகின்றது.எனவே சங்கர் விஜயின் கெட்டப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

எது எப்படியோ தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் இப்படி மாறி மாறி நடித்தால் விஜயை எல்லோறுக்கும் பிடிக்கும்.

ஜீவா

குறை சொல்ல முடியாத நடிப்பு.வளர்ந்து வரும் ஒரு ஹீரோவான ஜீவாவுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது.தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கின்றார்.

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் ஒரு சிறந்த நடிகர் என்பது ஏற்கனவே பல படங்களில் நிரூபித்துள்ளார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு மேலும் சிறப்பு.

சத்யன்
நண்பன் படத்தில் விஜய்,சத்யராஜ்,சத்யன்
சத்யன் நடிக்கவில்லை அந்த பாத்திரமாகவே வாழ்திருக்கின்றார்.அந்த பாத்திரத்துக்கு சத்யன் மிக பொருத்தமான தேர்வு. படிக்கும் காலங்களில் புத்தகப்பூச்சிகளாக இருக்கும் மாணவர்கள் பலரை பல இடங்களில் பாத்திருக்கின்றோம்.அப்படி ஒரு பாத்திரத்தில் சத்யன் கலக்கு கலக்கு என்று கலக்கியிருக்கார்.விஜயிடம் சவால் விடும் காட்சியிலும் சரி அதுக்கு பிறகு தான் சவாலில் ஜெயித்துவிட்டேன் என்ற காட்சியிலும் சரி.கல்லூரி விழாவில் உரையாற்றும் காட்சியிலும் சரி.மனிதர் பின்னி எடுக்கின்றார்.
என்னைக்கேட்டால் விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த்,இவர்களுடன் சேர்த்து சத்யனுடன் படத்தில் நான்கு ஹீரோக்கள்.

சத்யராஜ்
நண்பன் படத்தில் விஜய்,சத்யராஜ்
கல்லூரி முதல்வர் வேடம் இவரின் நடிப்பை பற்றி சொல்லவா வேணும் வில்லங்கமான ரோல் என்றாலே பின்னி எடுக்கும் மனிதர்.அந்த வகையில் இந்தப்படத்திலும் பின்னி எடுத்திருக்கார்.

இலியானா



எதிர்பார்த அளவு ஒன்றும் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி.தண்ணி போட்டுவிட்டு. விஜயிடம் பேசும் சீனில் மாத்திரம் ரசிக்க முடிகின்றது.தெலுங்குப் படங்களில் இவரை பார்த்து பார்த்து ரசித்த என்னை போல ரசிகர்களுக்கு இவரின் தமிழில் ரீ எண்ட்ரியை ரசிக்க முடியவில்லை.

நான் வேற நம்ம தலைவி சிம்ரன் ரேஞ்சுக்கு இலியானாவிடம் எதிர்பார்த்தேன். ஆனால் இலியானா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க. 
அடுத்தடுத்த படங்களில் பார்ப்போம்.

எஸ்.ஜே.சூர்யா



ஒரு காட்சியில் வந்தாலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கார்.

விஜய்(சென்னை 28,சரோஜா படங்களில் நடித்த விஜய்)



ஒரே காட்சியில் வந்தாலும் இவரும் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கார்.அந்த கிராமத்து மாணவன் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்திப்போகின்றார்.

படத்தில் வரும் ஏனைய பாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.குறிப்பாக மில்லி மீற்றர் என்ற பாத்திரத்தில் நடிக்கும் அந்த சிறுவன் அவனின் பெயர் ஞாபகம் இல்லை பல டீவி புரோக்கிராம்களில் நடனம் ஆடி பாத்திருக்கின்றேன்.அவன் இந்த படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கான் ரசிக்க முடிகின்றது.

பாடல்கள் பரவாயில்லை ரசிகலாம்.படத்தில் லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் நிறைய சுட்டிக்காட்டலாம் ஆனால் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு பார்த்தோம் என்றால் ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வை நண்பன் தருகின்றது.

மொத்தத்தில் மாஸ் இல்லாத படம். ஆனால் கண்டிப்பாக பாஸ் ஆகிடும்


முஸ்கி-இன்று வரவேண்டிய அன்பைத்தேடும் இதயம் தொடரின் அடுத்த பகுதி நாளை வரும்






Post Comment

24 comments:

Riyas said...

நண்பன் படம் எதிர்பார்த்ததைவிட நல்லாவேயிருக்கு..

விஜயின் ஹீரோயிசமில்லாத நடிப்பும் பிடிச்சிருக்கு..

உங்க விமர்சனமும் பிடிச்சிருக்கு..

Riyas said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

அவ்வ்வ்வ் அண்ணனுக்கு அனானி தொல்லபோல!

Unknown said...

நல்ல அலசல் மாப்ள!

K.s.s.Rajh said...

@Riyas
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
//Your comment has been saved and will be visible after blog owner approval.//

அவ்வ்வ்வ் அண்ணனுக்கு அனானி தொல்லபோல////

என்ன பண்ணுறது பாஸ் சில நேரங்களில் சிலரின் இம்சைகளால் கேட்டை போட வேண்டியிருக்கு

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
நல்ல அலசல் மாப்ள////

நன்றி பாஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லா தரப்புக்கும் நல்ல படமாக அமைந்து விட்டது...

தங்கள் பார்வையில் அழகிய விமர்சனம்...

கிராமத்து மாணவராக வரும் விஜய்
தூக்கில் தொங்கு காட்சியில் திரையரங்கமே அதிர்ந்தது..

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!நன்றாக நண்பனை அலசியிருக்கிறீர்கள்!கண்ணில் விளக் கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்தீர்களோ?///// நம்ம தலைவி சிம்ரன் ரேஞ்சுக்கு இலியானாவிடம் எதிர்பார்த்தேன்.////??????!!!!!!!!!!!!

முத்தரசு said...

விமர்சனம் சர்தான்

K.s.s.Rajh said...

@கவிதை வீதி... // சௌந்தர் //
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!நன்றாக நண்பனை அலசியிருக்கிறீர்கள்!கண்ணில் விளக் கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்தீர்களோ?///// நம்ம தலைவி சிம்ரன் ரேஞ்சுக்கு இலியானாவிடம் எதிர்பார்த்தேன்.////??????!!!!!!!!!!////

ஹா.ஹா.ஹா.ஹா நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@மனசாட்சி கூறியது...
விமர்சனம் சர்தான்
////

நன்றி சகோ

சென்னை பித்தன் said...

நல்ல படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதா?அது போதுமே.
நல்ல விமரிசனம்.

சென்னை பித்தன் said...

த.ம.7

KANA VARO said...

யாரப்பா ஆதங்கப்படுற விஜய் ரசிகர்கள்…?

இப்படியான படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நடந்துவிட்டது.

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்
ஆம் பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
KANA VARO கூறியது...
யாரப்பா ஆதங்கப்படுற விஜய் ரசிகர்கள்…?

இப்படியான படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நடந்துவிட்டது////

எனக்கு தெரிந்த வகையில் சில விஜய் ரசிகர்கள் ஆதங்கப்பட்டார்கள் நான் அவர்களைச்சொன்னேன்

நன்றி வரோ அண்ணே

Anonymous said...

அந்த மில்லிமீட்டர் சிறுவனின் பெயர் ரின்சன்... அது மட்டுமில்லாமல் பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இது மாதிரி படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்... கண்டிப்பாக நண்பன் படம் விஜய்க்கு வரவேற்க பட வேண்டிய விசயம்...

Anonymous said...

உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு ராஜ் ...நல்ல விமர்சனம்...

MaduraiGovindaraj said...

நல்ல விமர்சனம்

K.s.s.Rajh said...

@Annbhu

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
உங்க விமர்சனம் பிடிச்சிருக்கு ராஜ் ...நல்ல விமர்சனம்..////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கோவிந்தராஜ்,மதுரை. கூறியது...
நல்ல விமர்சனம்
////

நன்றி பாஸ்

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லா அலசியிருக்கீங்க பாஸ். பதிவிற்கு நன்றி.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails