Thursday, January 26, 2012

திரைவிமர்சனம் தாவணிக்கனவுகள் /சினிமா அலசல்

புதிய படங்களுக்கு மட்டுமே திரைவிமர்சனம் எழுதவேண்டுமா என்ன?ஏற்கனவே வெளியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும் படங்கள் பற்றியும் எழுதலாம் என்ற எண்ணத்தில் சினிமா அலசல் என்ற பகுதியை ஆரம்பிக்கின்றேன்.இதில் காலத்தால் மறக்க முடியாத பல இயக்குனர்களின் திரைப்படங்கள் பற்றி அலசுவோம் ஆனால் இது தொடர் பதிவாக இருக்காது வாரம் இரு முறை அல்லது ஒரு முறை மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த படங்கள் பற்றி அலசுவோம்

திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படும் கே.பாக்கியராஜ் அவர்களின் கதை,திரைக்கதை,இயக்கத்தில் வெளியான "தாவணிக்கனவுகள்" படம் பற்றிய இன்று பார்ப்போம்

1983 ஆண்டு கே.பாக்கியராஜ் கதை,திரைக்கதை,வசனம் எழுதி,தயாரித்து இயக்கி,நடித்த படம் ”தாவணிக்கனவுகள்”வரதட்சனை என்ற பெயரில் வியாபாரமாகிய திருமணங்கள் பற்றியும் படித்த வேலை கிடைக்காதவர்கள் படும் கஸ்டங்கள் பற்றியும் இந்த படத்தில் சொல்லியிருப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

கே.பாக்கியராஜ்,ராதிகா,நடிகர் திலகம் சிவாஜி,பார்தீபன் இன்னும் பலர் நடிந்திருந்தனர்.பார்தீபனுக்கு இதுதான் முதல் படம் தபால் காரனாக சில காட்சிகளில் வந்தாலும்.அப்போது உதவி இயக்குனராக இருந்த பார்தீபனுக்கு சிவாஜி கணேசனுடன் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது சிறப்பு.பார்தீபன் வரும் சீன்கள் பெரும்பாலும் நடிகர் திலகத்துடனே இருக்கும்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ஜந்து தங்கைகளின் அண்ணான கே.பாக்கியராஜ்,படித்த கோல்ட் மெடல் வாங்கிய பட்டதாரி வேலைகிடைக்காமல் கஸ்டப்படுகின்றார்.இவர்கள் எல்லோறும் ரிட்டயர் மில்ட்ரி கேப்டன் சிவாஜியின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர்.தனியாக வாழும் சிவாஜிக்கு இவர்களின் குடும்பமே ஆறுதல்.

மிகுந்த கஸ்டப்படும் பாக்கியராஜ்க்கும் பக்கத்துவீட்டில் இருக்கும் அவரின் மாமா மகளுக்கு காதல்.இந்த நிலையில் பாக்கியராஜின் மாமா மகளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்கின்றனர்.இதை கேள்விப்பட்ட பாக்கியராஜ் மாமாவிடம் பேசுகின்றார் மாமாவும் சரி உனக்கு என் மகளை கட்டித்தருகிறேன் வீட்டோட மாப்பிளையாக இரு என்று சொல்கின்றார்.பாக்கியராஜ் அதற்கு மறுத்துவிட்டு தன் காதலியை பார்த்து வேறு ஒருவனை கட்டிக்கொள் என்று சொல்லிவிட்டு வந்துவிடுகின்றார்.


சிவாஜி பாக்கியராஜை சென்னைக்கு போகும் படி அனுப்பிவைக்கின்றார். அங்கே இருக்கும் தன் நண்பனுக்கு கடிதம் மூலம் இப்படி ஒருவர் வருவார் அவருக்கு தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று அறிவிக்கின்றார். ஆனால் அவரின் நண்பன் அதற்கு முன்பே இரண்டு மாதங்களுக்கு முன் இறந்துவிடுகின்றார்.அவரின் மகள் ராதிகா தான் பாக்கியராஜை ஆதரிக்கின்றார். வேலையில்லாமல் கஸ்டப்படும் பாக்கியராஜை. ஜுனியர் ஆர்ட்டிஸ்சாக இருக்கும் ராதிகா தான் ஜுனியர் ஆர்ட்டிசாக நடிக்கும் படங்களில் பாக்கியராஜையும் வேலைக்கு சேர்த்துவிடுகின்றார்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ஒரு முறை பாரதிராஜா(இவர் இயக்குனர் பாரதிராஜாவாகவே நடித்துள்ளார்)இயக்கும் படம் ஒன்றில் அதில் வசனம் எழுதிய ரைட்டரின் வசனம் பிடிக்காமல் சூட்டிங் தடைப்படுகின்றது.அப்போது சாப்பாட்டு நேரத்தில் பாக்கியராஜ் ராதிகாவிடம் நானாக இருந்தால் இப்படி வசனம் எழுதியிருப்பேன் என்று நடித்துக்காட்டுகின்றார் இதை பார்த்த பாரதிராஜா  என் படத்தின் ஹீரோவும் நீதான்,ரைட்டரும் நீதான் என்று பாக்கியராஜை படத்தில் நடிக்கவைக்கின்றார்.


இதற்கிடையில் பாக்கியராஜ் சென்னயில் கஸ்டப்பட்டு கொண்டு இருக்கும் போது அவரை சென்னைக்கு அனுப்பிவைத்த சிவாஜி பாகியராஜின் குடும்பத்துக்கு தபால் காரன் பார்தீபன் மூலமாக பாக்கியராஜ் அனுபுவது போல மாதம் மாதம் பணம் அனுப்புகின்றார்.அதைவிட அவருக்கு வருத்தம் வந்து ஆப்ரேசன் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னபோதும் ,பார்தீபன் ஒரு வீட்டைவிற்று ஆப்ரேசன் செய்யுங்கள் என்று எடுத்து சொன்ன போதும் மறுத்துவிட்டு தன் பெயரில் உள்ள இரண்டு வீடுகளையும் பாக்கியராஜின் குடும்பத்துக்கே எழுதிவைக்கின்றார்.

தாவனிக்கனவுகள் படத்தில் பார்தீபன் நடிகர் திலகத்துடன்
கடைசியில் பாக்கியராஜ் பெரிய நடிகராகிவிட்ட சந்தோசத்தோடு சிவாஜி தான் இறக்கும் தறுவாயில் பாகியராஜிடம் தகவல் சொல்ல வேணாம். அவனின் தொழில் குழம்பிவிடும் என்று பாக்கியராஜ் குடும்பத்திடம் சத்தியம் வாக்கிவிட்டு இறந்து போய்விடுகின்றார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
அப்பறம் பெரிய நடிகராகிவிட்ட பாக்கியராஜ் ஊருக்கு திரும்பி தன் தங்கைகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்கின்றார்.ஆனால் திருமணத்தை வேணாம் என்று சொல்லும் தங்கைகள் தாங்கள் கஸ்டப்படும் நேரத்தில் ஏவ்விதமான பிரதி உபகாரமும் பார்க்காது தங்களுக்கு உதவிசெய்த முன்வந்த,அவர்களை திருமணம் செய்ய முன்வந்த லோண்ட்ரி கடைக்காரரையும்,தபால்காரனாக வரும் பார்தீபனையும்,டெயிலர் கடைவைத்திருக்க்கும் ஒருவரையும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்க பாக்கியராஜும் அவர்களுக்கே திருமணம் செய்துவைக்கின்றார். இதுதான் படத்தின் கதை.


படத்தின் அரம்பத்திலே ஒருவர் பசுமாட்டை காளையிடம் விடுவதற்காக ஒருவர் கொண்டு வருகின்றார். அதுக்கு காளையை வைத்திருப்பவர் 20 ரூபா பேரம் பேசி காளையிடம் பசுமாட்டை விட சம்மதிக்கின்றார்.
பசுக்களை சிணைப்படுத்த(கர்ப்பம் ஆக்க) நல்ல இன காளைமாடுகளை வளர்த்து வருவதை பலர் தொழிழாக செய்து வருவது வழக்கம்.காளையுடன் பசுவை சேர விடுவதற்கு குறிப்பிட்ட தொகை பணத்தை அறவிடுவர்.

அப்படி ஒரு காட்சியைகாட்டி அதற்கு அடுத்தது திருமணத்தில் வரதட்சனை கொடுத்து திருமணம் செய்வது போல ஒரு காட்சியை காட்டி அதில் படத்தின் டைட்டிலை போட்டிருப்பார் பாக்கியராஜ்.

படம் முடியும் போதும் புனிதமான இந்த தாம்பத்தியத்தை விற்காதீர்கள் என்று சொல்லி படத்தை முடித்திருப்பார்.

இந்த படத்தில் நடிகர் திலகம் அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருப்பார். இறக்கும் தருவாயில் நேதாஜியின் படத்தை பார்த்து கொண்டே இறக்கவேண்டும் நேதாஜியின் படத்தை கொண்டு வா என்று பாக்கியராஜின் தங்கச்சியிடம் கேட்கும் போது அவர் கண்ணாடியை கொண்டுவந்து காட்டி இவர்தான் நேதாஜி நேதாஜியை உங்கள் உருவத்தில் தான் நாங்கள் பார்த்துள்ளோம் என்று சொல்லும் இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் காட்டும் அந்த பாவனை மிக மிக அருமை அப்படி ஒரு நடிப்பை வழங்க மறுபடியும் சிவாஜி சாரே பிறந்து வரனும்.

பார்த்தீபன் முதல் படம் ஆனாலும் சிறப்பாக நடித்திருப்பார் அதுவும் முதல் காட்சியே நடிகர் திலகத்துடன் நடித்திருக்கின்றார்.

பாக்கியராஜ் சென்னைக்கு வந்து ஆரம்பத்தில் ரஜனியை போல நடிகராக வேண்டும் என நினைத்து ரஜனி ஸ்டைல் பண்ணும் போதும் சரி,ஊரில் வேலை கிடைக்கவில்லை என்று குடித்துவிட்டு பேசும் சீன்களிலும் சரி,குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்க போயிருக்கும் போது படத்தில் படுக்கை அறைக்காட்சி வரும் போது அதை தங்கச்சிகள் பார்க்க கூடாது என்று நினைத்து கீழே காசு விழுந்துவிட்டது குனிந்து தேடுங்கள். என்று தங்கைச்சிகளை அந்த காட்சியை பார்க்கவிடாமல் செய்யும் போதும். நடிப்பில் அசத்தியிருப்பார்.

இந்தப்படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா.

இன்றைக்கு 29 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம் அப்போது நான் பிறக்க கூட இல்லை.

நான் இந்தப்படத்தை 2005ம் ஆண்டு தான் பார்த்தேன் அதாவது இந்த படம் வெளிவந்து 22 வருடங்களுக்கு பிறகுதான் .அப்போதும் என்னால் இந்த படத்தை ரசிக்க முடிந்தது என்றால் இதுதான் பாக்கியராஜின் தனித்தன்மை.

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கப்பட முடியாத ஒரு திரைப்படம் ”தாவணிக்கனவுகள்”.

இன்னும் ஒரு பதிவில் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்
இன்னும் ஒரு படம் பற்றிய விமர்சனத்தை எதிர்பாருங்கள்.


Post Comment

30 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

நானும் இப்பொழுது தான் சில பழைய ரஜினி, கமலின் படங்களை பார்க்கத் தொடங்கியுள்ளேன். பாக்கியராஜ் படங்களையும் லிஸ்டில் போட்டுக்கொள்ள வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

ராஜ் புதிய பட விமரிசனக்களை விட பழையபடங்கள் நல்லாவே இருக்கு அதையும் நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.

Thava said...

நல்ல விமர்சனம்.பொதுவாக தமிழ் படங்கள் என்றால் புதிய படங்களைத்தான் எழுதுவது வழக்கம்.ஆனால், நீங்கள் நல்ல முயற்சி எடுத்துள்ளீர்கள், ஹொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்.

இந்த படம் பார்த்த அனுபவம் இரண்டு முறை எனக்கும் கிடைத்தது.அன்றைய வெளிவந்த படங்களில் இது கொஞ்சம் வித்தியாசமான உணர்வையே தந்தது..நன்றி.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்,என்ன படத்தின் பெயர் தான்................!அது 'தாவணி' இல்லையா????ஹ!ஹ!ஹா!!!!!!மறுபடி,மறுபடி பார்க்கத் தூண்டும் படம்!அந்த,சவக்குழி வெட்டும் காட்சியை விட்டு விட்டீர்களே?

MANO நாஞ்சில் மனோ said...

தாவணிக்கனவுகள் சிறப்பான சினிமாதான் இருந்தாலும் வசூலில் பாக்கியராஜிக்கு சொதப்பிய படமும் கூட....!!

MANO நாஞ்சில் மனோ said...

தாவணிக்கனவுகள் படத்தில் பார்த்தீபன் அடடா இந்த படத்தை பார்த்தீபன் பிரபலம் ஆகுமுன் பார்த்ததால் தெரியாமல் இருந்தது எனக்கு, இது புது தகவல் நன்றி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சிவாஜி ஒரு நடிப்பு சரித்திரம்ய்யா...!

தனிமரம் said...

பாக்கியராச் இயக்கி நடித்த படங்களில் இந்தப்படம் ஒரு மைல்கல் என்றாலும் பொருளாதார நிலையில் வெற்றிப்படம் அல்ல.உங்கள் பார்வையில் சிறப்பாக அலசி இருக்கின்றீர்கள் இப்படியான காலத்தால் மறக்க முடியாத படங்கள் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் ராச்!

தனிமரம் said...

படத்தில் சில காட்சிகளைச் சேர்த்திருக்கலாம் பார்த்தீபன் லவ் சீன் மறக்கமுடியாது .இப்படியான பதிவுகளில் பாடல் பற்றி கொஞ்சம் கூறலாமே என் போன்ற பாடல் பிரியர்கள்" சொங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது" என்ற பாடலுக்காக எத்தனை தபால் அட்டை அனுப்பி இருப்பம் .ம்ம் !

தனிமரம் said...

இந்தப்படத்தில் ராஜா எப்படி எல்லாம் பின்னனி இசையில் கொடி நாட்டி இருப்பார் இனி இப்படியான படத்தை பாக்கியராச் நினைத்தாலும் கொடுக்க முடியாது அது ஒரு காலம் .

சகாதேவன் said...

இயக்கம் பாருங்கள்.
பாக்யராஜை சென்னைக்கு அனுப்பிவிட்டு சிவாஜி, பிள்ளையாரிடம் வேண்டுவார்-
'நீ ஏதாவது ரூபத்தில் போய்....' என்று சொல்லுமுன் பாரதிராஜா திரையில் தோன்றுவார்.
ராதிகாவிடம் அந்த காட்சியில் எப்படி பேசியிருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்வார். வசனம் பாருங்கள் -- '...........நான் கல்யாணத்திற்கு நாள் குறித்து வந்திருக்கிறேன். நீ அந்த தேதியில் வளைகாப்பே நடத்தலாம் என்று சொல்றியே'. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாரதிராஜா, "இனி இந்த் படத்துக்கு வசனமும் நீதான், ஹீரோவும் நீதான்" என்பார். நான் ரொம்ப ரசித்த காட்சி.
புதிய வார்ப்புகள் படத்திற்கு உதவி இயக்குனர் பாக்யராஜ ஹீரோ ஆனது இப்படித்தானோ என்று நான் நினைத்தேன்.

கோகுல் said...

தியேட்டர்ல காசு போட்டு எடுக்கசொல்லும் காட்சி.டிபிக்கல் பாக்கியராஜ்.
நல்ல முயற்சி,தொடருங்க.

Yoga.S. said...

வேலையா இருக்கிறார் போல கிடக்கு!பிழைதிருத்தம் சொல்லி ஐஞ்சு மணித்தியாலம் ஆகீட்டுது.//நேசன் நல்லா தான் உருகிறியள்.சொங்கமலம் சிரிக்காது,செங்கமலம்(பக்கத்து வீடோ?)தான் சிரிக்கும்!

திண்டுக்கல் தனபாலன் said...

எப்போதும் மறக்காத படம் ! நன்றி நண்பரே !

K.s.s.Rajh said...

@Yoga.S.FR
மன்னிக்க வேண்டும் ஜயா கொஞ்சம் பிசியாக இருந்தனால் உடனே திருத்த முடியாமல் போய்விட்டது.இப்போது திருத்திவிட்டேன் நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ஹாலிவுட்ரசிகன் கூறியது...
நானும் இப்பொழுது தான் சில பழைய ரஜினி, கமலின் படங்களை பார்க்கத் தொடங்கியுள்ளேன். பாக்கியராஜ் படங்களையும் லிஸ்டில் போட்டுக்கொள்ள வேண்டும்////

நன்றி பாஸ் பாக்கியராஜ் படங்கள் எப்பவும் சுவாரஸ்யமாக இருக்கும் பாருங்கள்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ராஜ் புதிய பட விமரிசனக்களை விட பழையபடங்கள் நல்லாவே இருக்கு அதையும் நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.
////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
Kumaran கூறியது...
நல்ல விமர்சனம்.பொதுவாக தமிழ் படங்கள் என்றால் புதிய படங்களைத்தான் எழுதுவது வழக்கம்.ஆனால், நீங்கள் நல்ல முயற்சி எடுத்துள்ளீர்கள், ஹொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துக்கள்.

இந்த படம் பார்த்த அனுபவம் இரண்டு முறை எனக்கும் கிடைத்தது.அன்றைய வெளிவந்த படங்களில் இது கொஞ்சம் வித்தியாசமான உணர்வையே தந்தது..நன்றி.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!அருமையாக விமர்சிக்கிறீர்கள்,என்ன படத்தின் பெயர் தான்................!அது 'தாவணி' இல்லையா????ஹ!ஹ!ஹா!!!!!!மறுபடி,மறுபடி பார்க்கத் தூண்டும் படம்!அந்த,சவக்குழி வெட்டும் காட்சியை விட்டு விட்டீர்களே?
////

பிழையை திருத்திவிட்டேன்

ஆம் ஜயா அந்த சவக்குழி வெட்டும் காட்சியை விட்டு விட்டேன்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
தாவணிக்கனவுகள் சிறப்பான சினிமாதான் இருந்தாலும் வசூலில் பாக்கியராஜிக்கு சொதப்பிய படமும் கூட....!!
////

ஆம் பாஸ் வசூலில் சொதப்பினாலும் ஒரு நல்ல படம்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
தாவணிக்கனவுகள் படத்தில் பார்த்தீபன் அடடா இந்த படத்தை பார்த்தீபன் பிரபலம் ஆகுமுன் பார்த்ததால் தெரியாமல் இருந்தது எனக்கு, இது புது தகவல் நன்றி...!!!
////

ஆம் பலருக்கு பார்த்தீபனை அடையாளம் தெரிந்திருக்காது....சந்தர்ப்பம் கிடைத்தால் தற்போது ஒரு முறை பாருங்கள்..

K.s.s.Rajh said...

@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
சிவாஜி ஒரு நடிப்பு சரித்திரம்ய்யா...!
////

ஆம் பாஸ் இனி சிவாஜி சாரே மறுபடியும் பிறந்து வந்தால் தான் அவரை மிஞ்ச முடியும்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது....////

இனி இசை பற்றியும் எழுதுகின்றேன் பாஸ் இந்த பதிவில் எழுதாமைக்கு மன்னிக்கவும்

வசூலில் வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த ஒரு படம் தான்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ சகாதேவன் கூறியது...
இயக்கம் பாருங்கள்.
பாக்யராஜை சென்னைக்கு அனுப்பிவிட்டு சிவாஜி, பிள்ளையாரிடம் வேண்டுவார்-
'நீ ஏதாவது ரூபத்தில் போய்....' என்று சொல்லுமுன் பாரதிராஜா திரையில் தோன்றுவார்.
ராதிகாவிடம் அந்த காட்சியில் எப்படி பேசியிருக்கலாம் என்று பாக்யராஜ் சொல்வார். வசனம் பாருங்கள் -- '...........நான் கல்யாணத்திற்கு நாள் குறித்து வந்திருக்கிறேன். நீ அந்த தேதியில் வளைகாப்பே நடத்தலாம் என்று சொல்றியே'. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாரதிராஜா, "இனி இந்த் படத்துக்கு வசனமும் நீதான், ஹீரோவும் நீதான்" என்பார். நான் ரொம்ப ரசித்த காட்சி.
புதிய வார்ப்புகள் படத்திற்கு உதவி இயக்குனர் பாக்யராஜ ஹீரோ ஆனது இப்படித்தானோ என்று நான் நினைத்தேன்.
////

ஹா.ஹா.ஹா.ஹா. ஆம் பாஸ் அப்படித்தான் நினைக்கத்தோனும்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கோகுல் கூறியது...
தியேட்டர்ல காசு போட்டு எடுக்கசொல்லும் காட்சி.டிபிக்கல் பாக்கியராஜ்.
நல்ல முயற்சி,தொடருங்க.
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...
எப்போதும் மறக்காத படம் ! நன்றி நண்பரே !
////

நன்றி பாஸ்

சென்னை பித்தன் said...

நல்ல ஐடியாவா இருக்கே!அடுத்து நான் ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிக்கு எழுதலாமான்னு பார்க்கிறேன்!

Anonymous said...

பாக்கியராஜ் பாக்கியராஜ் தான் ராஜ் ...

நல்ல விமர்சனம்... நல்லா எழுதி இருக்கீங்க... தொடருங்க...வாழ்த்துகள்...

மகேந்திரன் said...

திரைக்கதை மன்னன் அல்லவா....
ஒருவரிக்கதையை ஒரு முழு நாடகமாக அரங்கேற்றும் அளவுக்கு
தகுதி வாய்ந்தவர்...
தாவணிக்கனவுகள் 1985 ல் என்னைக் கவர்ந்த படம்....

தனிமரம் said...

மன்னிக்க வேண்டும் யோகா ஐயா வேலைக்குப் போகும் போது ரயிலில் பின்னூட்டம் போட்டேன் .அதன்( நித்திரை )வேகத்திற்கு  எழுத்துப்பிழை வந்து விட்டதை இப்போது தான் பார்த்தேன் செங்கமலம்  .பக்கத்துவீட்டில் இருந்த பாட்டி அவங்க தரும் காப்பியும் இலவச வசை மொழியும் மறக்க முடியாது.ஹீ ஹீ  ஆனால் இந்தப்பட பாடலுக்காக வானொலிக்கு முன் காத்துக்கிடந்த காலம் மறக்க முடியாது.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails