Thursday, January 19, 2012

தோனி அவ்வளவுதானா? இந்திய அணியின் தோல்வி பற்றி ஒரு பார்வை

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் படுதோல்வியடைந்து இன்று பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கின்றது தோனி தலைமையிலான இந்திய அணி.

முன்னால் வீரர்கள் உட்பட பலர் தோனியை டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துவரும் இந்த நிலையில் நிச்சயம் தோனிக்கு இது நெருக்கடியான காலகட்டம்.

எப்படி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன் 
எனக்கு இந்திய அணியை பார்க்கும் போது கங்குலி கேட்டனாக வரமுன்பு இருந்த அணியை போல தோனுகின்றது. அதாவது வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவது கடினம் என்ற மன நிலை,போராட்ட குணம் இல்லை.யார் என்ன சொன்னாலும் கவலையில்லை அவர்களுக்கு பதில் அறிக்கைவிட மாட்டோம்.இந்த நிலைமைதான் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக வரமுன்பு இருந்தது. கங்குலியின் தலைமைத்துவத்தில் முற்றிலும் இந்த நிலை மாறியது.வெளி நாட்டு மண்ணிலும் இலகுவாக வெற்றிகள் பெற முடியும் என்று நிரூபித்து காட்டியவர் தாதா.அதைவிட அவுஸ்ரேலியா போன்ற அணிகள் எதிரணி வீரர்களின் மனோபலத்தை சிதறடிப்பதற்காக போட்டிகள் தொடங்க முன் பல்வோறு அறிக்கைகள் விடுவார்கள்.இது எல்லாம் எதிரணி வீரர்களின் மனோ பலத்தை சிதறடிக்கும் செயல். ஆனால் கங்குலியிடம் இவர்களில் பாச்சா பலிக்கவில்லை பதிலுக்கு கங்குலியும் அதிரடியாக அறிக்கைகள் விட்டு அவர்களின் மனோபலத்தை சிதறடிக்கு செயற்பாடுகளை மேற்கொண்டார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

தலையில் துண்டை போட வச்சிட்டாங்களே அவ்வ்வ்
ஆனால் தற்போது தோனி பெயரளவில் மட்டும் தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கின்றார். என்று எண்ணத்தோணுகின்றது.ஆரம்பத்தில் இருந்தே தோனியை சிறந்த கேப்டனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.உலகக்கோப்பையை வெல்வதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கேப்டனை சிறந்த கேப்டனாக சொல்ல முடியாது. உலகக்கோப்பையை வெல்லாதா எத்தனையோ சிறந்த கேப்டன்கள் இருக்கின்றார்கள்,ஸ்ரிபன் ப்ளமிங்,கங்குலி,கிரேம் ஸ்மித்,இப்படி பலர் உதாரணத்துக்கு இருக்கின்றார்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ஒரு கேப்டன் என்பவர் ஒரு அணி சோர்ந்து போய் இருக்கும் போது தனது அணிக்கு புத்துணர்ச்சி வழங்ககூடியவராக இருக்க வேணும்.அதைவிட அணி நெருக்கடியான சூழலில் இருக்கும் போது கேப்டன் தன் பொறுப்பை உணர்ந்துவிளையாடவேண்டும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை தோனியில் நெருக்கடியான சமயங்களில் சிறப்பாக விளையாடும் தன்மையில்லை. வருவார் ஏனோ தானோ என்று விக்கெட்டை பறிகொடுத்திட்டு போய்விடுவார். தோனி மட்டும் இந்திய அணியின் கேப்டனாக இல்லாது இருந்திருந்தால் இன்னேரம் டெஸ்ட் அணியில் இருந்து எப்பவோ காணாமல் போயிருப்பார்.


இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த போது கூட அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாது 2013 ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று அறிக்கை விடுகின்றார்.ஒரு வேளை ஊடகங்களின் பார்வையை திசை திருப்ப அப்படி கூறியிருந்தாலும் தோல்வியால் துவண்டு இருக்கும் சமயத்தில் வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய கேப்டன் இப்படி அறிக்கை விடலாமா?இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

எனவே கூல் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் தோனி விரைவில் டெஸ்ட் போட்டிகளில் தன்னை சிறந்த வீரராகவும்,கேப்டனாகவும் நிரூபிக்கவேண்டும். விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். இல்லையேல் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தோனி காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இங்கிலாந்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அதுக்கு பிறகு சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெற்றி பெற்றார்கள் இப்ப அவுஸ்ரேலியாவில் மீண்டும் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி இந்த தோல்வி தொடருமானால் இந்திய அணியில் பாரிய மாற்றங்கள் வரலாம்.

எத்தனை நாளைக்குத்தான் சுவரையே நம்புவது அவருக்கும் வயசாகுதுல்ல
தற்போது மூத்த வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.கங்குலி சொன்ன மாதிரி 10வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் ஆடியது போன்று ராவிட்,லக்ஸ்மனிடம் எதிர்பாக்க முடியாது அப்போது அவர்கள் இளம் வீரர்கள் தற்போது 40 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.இதுதான் உண்மை.

அதற்காக ராவிட்,லக்ஸ்மண்,சச்சின்,இவர்கள் ஒரு தொடரின் சிறப்பாக ஆடவில்லை என்று அவர்களை ஓட்டு மொத்தமாக அணியில் இருந்து தூக்க முடியாது அப்படி தூக்கி இளம் வீரர்களுக்கு வாய்பு கொடுத்தால் இந்திய அணியின் நிலை இன்னும் மோசமாகிவிடும். இங்கிலாந்து தொடரில் கூட ராவிட் தனி நபராக போராடி இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.

பாவம் இவர்களும் என்னதான் செய்வார்கள் எத்தனை நாளைக்குத்தான் இந்திய அணியை தோழ்களில் சுமப்பது
எனவே இடைக்கிடையில் இளம் வீரர்களுக்கும் வாய்பு வழங்கி அவர்களை வளர்ந்து எடுக்கவேண்டும்.
அப்போதுதான் ராவிட்,லக்ஸ்மன்,சச்சின்,ஓய்வுக்கு முன் இந்திய அணி பலம் பெறும் இல்லை என்றால் இவர்கள் இருக்கும் போதே இப்படி என்றால் அதிரடியாக இவர்களை அணியை விட்டு தூக்கினால்.இந்திய அணியின் நிலமை என்னவாகும்?

தற்போது இந்திய அணிக்கு தேவை தன்னம்பிக்கை அதை இந்திய அணி முற்று முழுதாக இழந்துவிட்டது.ஏனோ தானோ என்று விளையாடுகின்றார்கள்.அவுஸ்ரேலிய அணியுடன் ஓப்பிடும் போது இந்திய அணி பலம் பொருந்திய அணிதான்.அவுஸ்ரேலிய அணியில் பலர் அனுபவம் இல்லாத வீரர்கள் தான்.ஆனால் அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடுகின்றார்கள்.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர்,மற்று கோவன் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் இல்லாதவீரர்கள். வார்னராவது பரவாயில்லை சில போட்டிகளில் ஆடியுள்ளார் ஆனால் கோவன் இந்த தொடரில் தான் அறிமுகம்.இவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் போராட்ட குணமும். இந்தியாவின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சேவாக்,கம்பீரிடம் இல்லாமல் போய்விட்டது ஆச்சரியம்.

நம்மள அடுத்த கங்குலினு சொன்னாங்க அவரை மாதியே கேப்டன் ஆகிடலாமுனு பார்த்தா இப்ப அவரை மாதிரியே டீமை விட்டு ஓரம் கட்டிடுவாங்க போல அவ்வ்வ்வ்வ்வ்வ்
இந்திய அணி விளையாடுவதை பார்க்கும் போது ஏனோ தானோ என்று விளையாடுகின்றார்கள் என்று எண்ணத்தோனுகின்றது.எனவே வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் ஹர்பஜன் சிங்கை அவுஸ்ரேலிய தொடருக்கு சேர்த்திருக்க வேண்டும் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்,அவரை விட்டு விட்டு அனுபவம் இல்லாத அஸ்வினை நம்பியது சரியில்லை.அஸ்வின் உள்ளூரில் சிறப்பாக மேற்கிந்திய அணியுடனான தொடரில் செயல் பட்டார் ஆனால் அவுஸ்ரேலியாவில் அவரது ஆட்டம் எடுபடவில்லை.அதைவிட இர்பான் பதானுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு வாய்பு வழங்கி பார்க்கலாம்.

அவரை ஏன் தொடர்ந்து புறக்கணிக்கின்றார்கள் என்று புரியவில்லை.நீண்ட காலத்துக்கு பின் கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கிய பதான் தனது முதல் பந்திலே விக்கெட்டை எடுத்தார் தற்போது அவுஸ்ரேலியா,இலங்கை,இந்தியா,பங்கேற்கும் முக்கோண தொடரில் இர்பான் பதான் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். பார்ப்போம் அதில் பிரகாசிக்கும் பட்சத்தில் எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் டெஸ்ட் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட சந்தர்ப்பம் உள்ளது.

கடைசி போட்டியில் ஜெயிக்கிறம்.விமர்சனங்களுக்கு முற்று புள்ளிவைக்கிறம்.ஓக்கே டண்
எது எப்படியோ இந்திய அணி விமர்சனங்களுக்கு எல்லாம் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்.செய்வார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்.அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் தோனிக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.3வது டெஸ்ட்டில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்.அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஜ.சி.சி தடைவிதித்துள்ளது..அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக ரித்திமான் சாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டனாக சேவாக் செயல் படுவார்.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகன் அர்ஜுன் உடன் சச்சின்
பொறுத்திருந்து பார்ப்போம் சேவாக் தலைமையிலான இந்திய அணி 4வது டெஸ்டில் சிறப்பாக ஆடி தங்கள் மேல் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு  முற்றுப்புள்ளி வைப்பார்களா?இல்லை தோல்வி தொடருமா?இந்த போட்டியிலாவது சச்சினின் 100வது சதம் வருமா?பொறுத்திருந்து பார்ப்போம்.

முஸ்கி-ஒருபுறம் இந்திய அணி தோற்றுக்கொண்டு இருக்கும் போது மறுபுறம் இலங்கை அணி தென்னாபிரிக்காவிடம் வாங்கி கட்டுகின்றது அது பற்றி இன்னும் ஒரு பதிவில் பார்ப்போம்,இன்னொரு புறம் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரும் ஆரம்ப மாகியுள்ளது எனவே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பல கிரிக்கெட் பதிவுகள் என் தளத்தில் வர இருக்கின்றது.அதற்காக தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் இல்லை இடைக்கிடையில் மாறி மாறி வரும்.

Post Comment

26 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மொத விக்கெட்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

வாங்க பாஸ்

Unknown said...

எனக்கென்னமோ ஒரு வித சோகம் அணியில இருக்கு போலன்னு தோனுது...வேணும்னா வெளினாடு போய் வெற்றி கொண்டாந்தா(!) பாரத ரத்னா கொடுப்போம்னு சொல்லி பாக்கலாமோ!

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
எனக்கென்னமோ ஒரு வித சோகம் அணியில இருக்கு போலன்னு தோனுது...வேணும்னா வெளினாடு போய் வெற்றி கொண்டாந்தா(!) பாரத ரத்னா கொடுப்போம்னு சொல்லி பாக்கலாமோ////

ஹா.ஹா.ஹா.ஹா ஒரு வேளை அப்படித்தான் போல

நன்றி பாஸ்

நிரூபன் said...

வணகம் நண்பா,
இப் போட்டி தொடர்பான ஆய்வு ஒன்றினைக் கேட்டேன்.
அதில் இந்திய அணி வீரர்களில் லக்ஸ்மன், ட்ராவிட், சச்சின் போன்றோரை நீக்கி இந்திய அணிக்கு இள ரத்தம் பாய்ச்ச வேண்டும் எனச் சொல்லியிருக்காங்க.

நல்லதோர் அலசல் பாஸ்.

K.s.s.Rajh said...

@நிரூபன்

உடனடியாக மூத்த வீரர்களை நீக்க முடியாது பாஸ் அது மேலும் நெருக்கடியை உண்டு பண்னும்

முக்கியமான போட்டிகளில் மட்டும் மூத்த வீரர்களை களம் இறக்கி.ஏனைய போட்டிகளில் இடைக்கிடையில் இளம் வீரர்களுக்கு வாய்பளித்து பரீட்சித்து பார்க்க வேண்டும்.

நன்றி

rajamelaiyur said...

வென்றால் கொண்டாடுவதும் தொடரல் திட்டுவதும் நமது இயல்புதான்

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

ஹா.ஹா.ஹா.ஹா. அதுவும் சரிதான் பாஸ்

நன்றி பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

என்ன அநியாயம், கமெண்ட் போட்டதும் கரண்ட் கட்.. அவ்வ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தோணி மட்டுமல்ல, அணியில் பலரும் சரியாக விளையாடுவது கிடையாது....

அதிலும் வெளிநாடு என்றாலே பயபுள்ளைங்க நடுங்குது.....

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்
////என்ன அநியாயம், கமெண்ட் போட்டதும் கரண்ட் கட்.. அவ்வ்
////
ஹா.ஹா.ஹா.ஹா.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

@
தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...
தோணி மட்டுமல்ல, அணியில் பலரும் சரியாக விளையாடுவது கிடையாது....

அதிலும் வெளிநாடு என்றாலே பயபுள்ளைங்க நடுங்குது.////
அதுவும் சரிதான் பாஸ் ஆனால் கேப்டன் என்ற முறையில் தோனிக்கு அதிக பொறுப்பு இருக்கு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K said...

விரிவாக அலசியிருக்கீங்க மச்சான் சார்! நமக்குத்தான் கிரிக்கெட் சூனியம்! இனி உங்க ப்ளாக் படிச்சு கத்துக்கறேன்!

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கிரிக்கெட்டோ? தோனி என்றதும், தோணியாக்கும் ஸ்பெலிங் மிஸ்ரேக் என நினைத்து உள்ளே வந்தேன்:))..

போயிட்டு அடுத்ததுக்கு வாறேன்.

Mohamed Faaique said...

தலைல துண்டை போட்ட டோனி படம் கலக்கல்.. எனக்கும் இந்திய அணி, தேசிய அணி போனா போகுது, நமக்கு ஐ.பி.எல் இருக்கு’னு சொல்லிகிட்டு விளையாடுர போலத்தான் இருக்கு...

Yoga.S. said...

PRESENT,கிரிக்கெட்........!!!!??????You Know!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அலசல்தான், ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் நடக்கும் என்று அனேகமாக எல்லாருமே எதிர்பார்த்தார்கள், அணியும் அந்த நிலையில்தான் இருக்கு. பிரச்சனை இங்கிலாந்து தொடரிலேயே ஆரம்பிச்சிடுச்சு, ஆனா உள்ளூர்ல ஜெயிச்ச உடனே எல்லாரும் மறந்துட்டாங்க, இப்போ மறுபடி....! பட் இது ஒண்ணும் இந்திய அணிக்கு புதிசில்ல... !

Anonymous said...

Abroad shopping trip/Overseas vacation almost over...:)

K.s.s.Rajh said...

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

சீக்கிறம் கத்துக்கோங்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கிரிக்கெட்டோ? தோனி என்றதும், தோணியாக்கும் ஸ்பெலிங் மிஸ்ரேக் என நினைத்து உள்ளே வந்தேன்:))..

போயிட்டு அடுத்ததுக்கு வாறேன்////

ஹா.ஹா.ஹா.ஹா. இது எனது தளத்திற்கு வந்த 5000மாவது கமண்ட் அதை போட்ட உங்களுக்கு நன்றிகள் அக்கா

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
தலைல துண்டை போட்ட டோனி படம் கலக்கல்.. எனக்கும் இந்திய அணி, தேசிய அணி போனா போகுது, நமக்கு ஐ.பி.எல் இருக்கு’னு சொல்லிகிட்டு விளையாடுர போலத்தான் இருக்கு...
////

அப்படித்தான் எண்ணத்தோணுகின்றது
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
PRESENT,கிரிக்கெட்........!!!!??????You Know!
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நல்ல அலசல்தான், ஆஸ்திரேலியாவில் இப்படித்தான் நடக்கும் என்று அனேகமாக எல்லாருமே எதிர்பார்த்தார்கள், அணியும் அந்த நிலையில்தான் இருக்கு. பிரச்சனை இங்கிலாந்து தொடரிலேயே ஆரம்பிச்சிடுச்சு, ஆனா உள்ளூர்ல ஜெயிச்ச உடனே எல்லாரும் மறந்துட்டாங்க, இப்போ மறுபடி....! பட் இது ஒண்ணும் இந்திய அணிக்கு புதிசில்ல... !
////

ஆமா தலைவா சரியாகச்சொன்னீங்க இதுதான் மேட்டர் நன்றி தல

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
Abroad shopping trip/Overseas vacation almost over...:////

போற போக்கை பார்த்தால் அப்படித்தான் நினைக்கத்தோனுது

நன்றி பாஸ்

Riyas said...

இந்தியா அணிக்கு.. பிம்பிளிக்கா பிலாபி அவ்வ்வ்வ்

போட்டோ கமெண்ட்ஸ் சூப்பர்.. இந்திய அணியில இடம் கிடைக்காட்டி எதுக்கு கவலை அதுதான் ஐபிஎல்ல கோடிக்கணக்கா சம்பாதிக்க முடியும்ல்ல்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails