Wednesday, January 18, 2012

(பகுதி-6)அன்பைத் தேடும் இதயம்

கடந்த பதிவில்.....
அவன் முத்தமிட்ட போது அவன் முகத்தை பார்க்க முடியவில்லை அவ்வளவு வெட்கம். இப்போது தனிமையில் இருப்பதால் அவன் முத்தமிட்ட தன் கையில் அவன் முத்தமிட்ட இடத்தில் தன் உதடுகளை பதித்தாள். காயத்திரி கோகுலனின் உதட்டிலே முத்தம் இட்டதை போல அவளுக்கு தோன்றியது.


இரு படவா ஒரு நாள் உனக்கு நான் முத்தமழை பொழிகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.குளிர்த்துவிட்டு வெளியே வந்தாள்.


காயத்திரிக்கு அப்பதான் பதிவர் வன்னியின் நினைவு வந்தது அட இன்று அவரின் தளத்தை படிக்கவில்லையே என்று அவசர அவசரமாக சென்று தன் லாப்டாப்பை ஆன் பண்ணினாள்.புதிய பதிவுகள் எதுவும் வரவில்லை? ஏன் இவர் புதிய பதிவுகள் ஏதுவும் எழுதவில்லை ஓவ்வொறு நாளும் ஏதாவது எழுதுவாரே என்று நினைத்துக்கொண்டு அவரின் நம்பருக்கு போன்செய்தாள்

போன் ஆப்(off) செய்யப்பட்டு இருந்தது.

இனி.......

ஏன் வன்னியின் போன் ஓப்(off) செய்யபட்டுள்ளது என்று சிந்தித்துக்கொண்டே அவரின் தளத்தை மீண்டும் ஓப்பின் செய்தாள். தளம் ஓப்பின் ஆகவில்லை முடக்கப்பட்டு இருந்தது.அவளுக்கு பெரும் கவலை ஏதோ ஒன்றை இழந்தது போல இருந்தது ஆனாலும் மனதை திடப்படுத்திக்கொண்டால் இடையில் வந்த முகம் தெரியாத ஒரு நட்பு அது முறிந்ததுக்கு ஏன் கவலைபடவேண்டும்  என்று அவள் மூளைக்கு புரியும் உண்மையை அவள் மனம் ஏற்க மறுத்தது.

என்ன மாதிரி பதிவுகள் எழுதுவார் ”வன்னி”அவரின் தளத்தை படித்துக்கொண்டு இருந்தாலே பொழுது போவதே தெரியாது என்று பலவாறு சிந்தித்துக்கொண்டே உறங்கப்போனாள்

மறுநாள் காலையில் தாயிடம் ப்ரண்ட் வீட்டுக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு கோகுலனை பார்க்க்க ஆஸ்பத்திரிக்கு ஓடிச்சென்றாள் காயத்திரி.


கோகுலனை பார்த்ததும் அவள் முகம் சந்திரனைக் கண்டு மலரும் அல்லி மலர் போல பிரகாசமானது.ஓடிச்சென்று அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்
இப்ப எப்படி இருக்கு கோகுல் 

பரவாயில்லை காயத்திரி கொஞ்சம் வலி குறைந்திருக்கு
ஆனா நீ ஏன் ஒரு மாதிரியாக இருக்க ?

ஒன்னும் இல்லை கோகுல்

இல்லை உன் அழகான முகம் சோகத்தில் இருப்பது தெரிகின்றது என்ன வீட்டில் ஏதும் பிரச்சனையா?

அதெல்லாம் இல்லை கோகுல் கடந்த இரண்டு வருடங்களாக ”வன்னி”என்று ஒரு தளத்தின் வாசகி நான் அந்த தளத்தில் வரும் கட்டுரைகளை தவறாமல் படித்துவிடுவேன்.ஒரு முறை அந்த பதிவருடனும் தொலை பேசியில் கதைத்துள்ளேன். இப்ப திடீர் என்று அவரது தளம் ஓப்பின் ஆகுது இல்லை அது முடக்கப்பட்டுள்ளது. அவரது போனும் வேலை செய்யுது இல்லை அதான் ஏதோ ஒன்றை மிஸ் பண்ணினதை போல ஒரு உணர்வு.

கோகுலனுக்கு அப்பதான் தெரிந்தது. அட! என் எழுத்துக்களை படித்து எனக்கு வாழ்த்து சொல்லும் அந்த ரசிகை காயத்திரியா!.இவளுக்கு எனக்கு ஏதோ ஒரு பூர்வஜென்ம பந்தம் இருக்கு போல இல்லை என்றால் இடையில் பிரிந்திருந்த காலத்தில் கூட ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் தொடர்பில் தான் இருந்திருக்காள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் யார் என்று தெரியவில்லை. முகம் தெரியாமல் புனைபெயரில் எழுதுவதிலும் ஒரு நன்மையிருக்குத்தான் இல்லை என்றால் என்னை காயத்திரி அடையாளம் கண்டு இருப்பாள்.அப்பறம்  என் எழுத்துக்களை ரசிக்காமல் போயிருப்பாள்.எது எப்படியோ என் தேவதைக்கு என் ரசிகை அதுவே எனக்கு போதும் கடவுளுக்கு நன்றி.

என்ன கோகுல் பலத்த யோசனை? என்று அவனது சிந்தனையை களைத்தாள் காயத்திரி.

இல்லை காயத்திரி நான் ஒன்று சொன்னா தப்பா நினைக்க கூடாது.

இல்லை பரவாயில்லை சொல்லு.

அது வந்து நீ சொல்லும் அந்த பதிவர் ”வன்னி”நான் தான்.

என்ன சொல்லுற கோகுல் நான் ரசிச்சு ரசிச்சு படித்த எழுத்துக்கு சொந்தக்காரன் என் கோகுலா என்னால் நம்பவே முடியலை நீ பொய் சொல்லுற?

இல்லை காயு உண்மைதான் நான் வேனும் என்றால் நீ என்னுடன் கதைத்த போன் நம்பர் சொல்லவா? என்று நம்பரை சொன்னான்.

டேய் அப்ப என்னை வேனும் என்று தெரிஞ்சுதான் ஏமாத்தினியா?

இல்லை காயு சத்தியமாக இந்த நிமிடம் வரை நீ சொல்லும் வரை நீதான் அந்த ரசிகை என்று எனக்குத்தெரியாது.இப்ப நீ சொன்ன போதுதான் தெரியும்

சரி அதைவிடு நீ ஏன் உன் தளத்தை முடக்கிவிட்ட ஏன் போன் வேலை செய்யவில்லை?

அது காயு நேத்து மோட்டார் சைக்கிளில் அடிபட்டதும் போன் உடைந்துவிட்டது. அதுதான் போன் வேலை செய்யவில்லை.தளம் முடக்கினதுக்கு காரணம்.நான் இங்கே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருபதால் சரியாக கொஞ்ச நாளைக்கு எழுத முடியாது. அதுதான் என் நண்பனுக்கு போன்பண்ணி சொல்லி என் தளத்தை முடக்கிவிட்டேன்.எனக்கு உடம்பு சரியானதும் மீண்டும் எழுதலாம் இல்லை என்றால் நிரந்தரமாக முடக்கிவிடலாம் என்று இருக்கேன்.

டேய் உன் எழுத்துக்கள் சூப்பரா இருக்கு நீ ஏன் உன் தளத்தை முடக்கிற நீ சரியாகி வந்ததும் மீண்டும் எழுது ஆனா ஒரு கண்டிசன் நீ இந்த ”வன்னி” என்று புனை பெயரில் எல்லாம் எழுதக்கூடாது சொந்தப்பெயரில் எழுது இது என் உத்தரவு

சரிங்க மேடம் நீங்க சொன்னால் மறு கருத்து உண்டா நான் என் சொந்தப்பெயரிலே எழுதுறன் ஓக்கே வா?

ஓக்கே என்று உதட்டை சுழித்தாள் காயத்திரி

ஆஸ்பத்திரி என்றும் பார்க்காது அவளை அப்படியே தன்னுடன் அணைத்துக்கொண்டான் கோகுலன்.

அன்பு ஏழ்மையிலும் அதிகமாக கிடைக்கும் செல்வம்
ஆனால் சில நேரங்களில் அந்தஸ்த்து,காசு ,சாதி,மதம்,இவைகளை கண்டு இது பயப்படும்
அப்போது காதல் என்கின்ற இதன் குழந்தை மரணித்துவிடும்
எதையும் பார்க்காது வரும் அன்பினால் உருவாகும் காதல் என்று வாழும்.

(முற்றும்)

முஸ்கி-இந்த தொடரில் வரும் பாத்திரங்கள் காதல் காட்சிகள் அனைத்தும் கற்பனையே

தொடர் பற்றிய முடிவுரை
இந்தக்கதையானது நான் 2005ம் ஆண்டு படிக்கிற காலத்தில் என் 16வது வயதில் எழுதிய கதை அப்போது இதை ”யதார்த்தம்”என்ற பெயரில் எழுதினேன்.அப்போது பத்திரிகையில் எழுதும் ஒருவராக இந்தக்கதையின் நாயகனை சித்தரித்து இருந்தேன்.

பலரிடம் காட்டிய போது மிக நன்றாக இருக்கு இதை பத்திரிகைகளுக்கு அனுப்பு என்று சொன்னார்கள் ஆனால் சில பல காரணங்களால் அனுப்பமுடியவில்லை.ஆனாலும் என் மனதில் இந்தக்கதை அப்படியே இருந்தது. தற்போது வலைப்பதிவு எழுதத்தொடங்கியதும் இதை என் தளத்தில் தொடராக எழுத நினைத்து எழுதினேன். மூலக்கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.அப்போது பத்திரிக்கைகளில் புனைபெயரில் எழுதும் ஒருவராக கதையின் நாயகனை சித்தரித்து இருந்தேன் தற்போது வலைப்பதிவில் புனை பெயரில் எழுதுபவராக மாற்றினேன்,அதைவிட தற்போதய சூழலுக்கு ஏற்றவாறு சின்ன சின்ன மாற்றங்கள் செய்தேன். மற்றும் படி பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்தக்கதையை முதன் முதலில் நான் எழுதி என் வகுப்பில் நண்பர்களிடம் காட்டிய போது அந்தக்கதைக்கு என் வகுப்பில் படித்த ஒரு நண்பி இது எல்லாம் ஒரு கதையா? ஏன் ராஜ் உனக்கு வேற வேலையில்லையா போய் படிக்கின்ற வேலையை பார் என்றாள்.இதுதான் இந்தக்கதைக்கு வந்த முதல் விமர்சனம்.

கால ஓட்டத்தில் எங்கள் மண் காவுவாங்கிய யுத்ததில் எம் மண்ணுக்காக மரணித்தவர்களில் அவளும் கலந்துவிட்டாள்.
அந்த நண்பிக்கு இந்த தொடர் சமர்ப்பணம்.
************************************************************************************************************
இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க-
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
************************************************************************************************************
நேற்றய தினம் வெளியான என் பதிவை படிக்க இங்கே கிளிக்-நண்பன்:விஜய் ஏன் இந்தப்படத்தில் நடித்தார்.என் பார்வையில் நண்பன் பட விமர்சனம்
*********************************************************************************

Post Comment

8 comments:

குறையொன்றுமில்லை. said...

கதையை சொன்ன விதமும் முடிவும் நல்லா இருந்தது. வாழ்த்துகள் ராஜ்.

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!அந்தக் காலத்தில் எழுதி இந்தக்காலத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்!அருமையான தொடர்!வாழ்த்துக்கள்!!!அந்த முதல் விமர்சனம்................!அது,வழமையாக வருவது தான்.புதிதாக ஏதாவது முயற்சித்தால் இப்படியாக விமர்சித்தே பழகிவிட்டது!மகிழூந்து(கார்)ஓட்டக் கற்றுக் கொள்வதையே புதினமாகப் பார்த்த அந்தக்காலம்! நினைத்தாலே சிரிப்பு வருகிறது!!!!

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
முடிவினைச் சுபமாக முடித்திருக்கிறீங்க.
வன்னி பற்றிய சந்தேகத்திற்கு இப்போது பத்திரிகையாளரை பதிவர் வன்னியாக இங்கே மாற்றி எழுதியிருப்பதாக கூறித் தீர்த்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

தொடரில் காதல், சிணுங்கல், முத்தம் போன்றவற்றினை விட, இதர காட்சிகளுக்கு கூடிய வர்ணனை கொடுத்து தொடரினை இன்னும் சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சி செய்யலாம்.

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யமா எழுதி முடிச்சிருக்கீங்க!அருமை.

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே.

Mahesh said...

வணக்கம் ராஜ் அண்ணே
உங்க்அல் ப்லாகிர்க்கு நான் புதியவன்.

முதன் முரையாக அவலும் அந்த மூன்று நாட்கலும் 2 மாதங்கலுக்கு முன்பு படித்தேன்

அதன் பிரகு தொடர்ந்து இங்க்உ வர முடியவில்லை.


ஆனால் சமிபத்தில் அண்பை தேடும் இதயம் தொடர் படிக்க ஆரம்பிச்சேன் ரொம்ப நல்லாஇருந்திச்சு


அதுவும் லாஸ்ட்டா நீங்க சொண்ண டெஃப்னிஷன் ஸூப்பர்.

K.s.s.Rajh said...

@mahesh
வணக்கம் சகோதரா எப்படி சுகம்?
என் தளத்திற்கு நீங்கள் புதியவர் என்றாலும் உங்களை எனக்கு முன்பு நாற்று குழுமத்தில் தெரியும்

மிக்க நன்றி சகோதரா

Mahesh said...

வணக்கம் சகோதரா எப்படி சுகம்?///

நலம் அண்ணே...

என் தளத்திற்கு நீங்கள் புதியவர் என்றாலும் உங்களை எனக்கு முன்பு நாற்று குழுமத்தில் தெரியும் //

எதிர்பார்க்கல ... ரொம்ப சந்தோஷம்...
இனி தொடர்ந்த் உங்கல் பதிவுகல் படிக்க போரென்...

நன்றி...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails