Friday, January 27, 2012

காதலிக்க என்ன தகுதி வேண்டும்?

என் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விதான் இந்த பதிவை எழுத தூண்டியது.என் நண்பன் ஒருவனின் அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் அவன் பெயர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)அவனை நான் கிட்ட தட்ட 10 வருடங்களாக அறிவேன் என்னுடன் பாடசாலையில் கூடப்படித்த நண்பன்.எங்கள் வகுப்பில் பலருக்கு அவன் மேல் செம காண்டு. காரணமே தெரியாத கோபம் அவன் மேல் பலருக்கு.

சில வேளைகளில் அவனின் பேச்சுக்கள் கடுப்பை உண்டு பண்ணும் அளவுக்கு இருந்தாலும் அவனது சுபாவம் அப்படித்தான்.

குமார் படிக்கும் போது காதல் வலையில் வீழ்ந்து இருக்கின்றான்.ஆனால் இவன் காதலிக்கும் பெண்ணிடம் காதலை சொல்ல அந்த வயதில் இவனுக்கு தைரியம் இல்லை.இதனால் தன் காதலை மனசுக்குள்ளே வைத்திருக்கின்றான்.
இது எப்படியோ சில நண்பர்களுக்கு தெரிய வந்த போது.அவனை நக்கல் செய்து இருக்கின்றார்கள்.உனக்கெல்லாம் எதுக்கு காதல் அந்த பெண்ணின் ரேஞ் என்ன உன ரேஞ் என்ன? அந்த பொண்ணு எல்லாம் உன்னை திரும்பியும் பார்க்காது என்று.மிகுந்த மனம் உடைந்து போன அவன் பேசாமல் தனக்குள்ளே அந்த காதலை புதைத்துவிட்டான்.

இந்த சுழ்நிலையில் குமார் மனசுக்குள் லவ்விய பெண்ணை இன்னும் ஒரு நண்பனும் லவ்வினான் அவன் பெயர் ராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவன் குமார் போல இல்லை மிகவும் துணிச்சல் பேர்வழி அந்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டான். அவள் இவனை ஏற்றுக்கொள்ளவில்லை.இப்படி இருக்கும் போது சில நண்பர்கள் ராமிற்காக அந்த பெண்ணிடம் தூது செல்வது வழக்கம்.

ஒரு முறை நான் கூட ராமிற்காக அந்த பெண்ணிடம் போய் பேசியிருக்கேன் ஆனால் அப்போது எனக்கு குமார் அவளை மனசுக்குள் லவ்விய மேட்டர் தெரியாது.

இப்படி இருக்கு நாங்கள் உயர் தரம் படித்துக்கொண்டிருந்த போது.குமார் படிப்பை விட்டுவிட்டு வேலைசெய்யத் தொடங்கிவிட்டான்
ராம்,நான்,அந்தப்பொண்ணு மூவரும் ஒன்றாகத்தான் படித்தோம்.
ஆனால் ராம் உயர்தர வகுப்பில் வேறு ஒரு பெண்ணை லவ்வி நொந்து நூலாகி இந்தப் பொண்ணை மறந்துவிட்டான்.

காலம் அதன் போக்கில் ஓடியது.நாட்டின் யுத்த சூழ்நிலைகளால் நண்பர்கள் எல்லோறும் ஒவ்வொரு திசையில் பிரிந்து சென்றுவிட்டனர்.

மீளவும் தற்போது நாட்டில் அமைதி திருப்பியதால் நண்பர்களில் யுத்தம் காவு வாங்கியவர்கள்,வெளிநாட்டிற்கு சென்றவர்கள்,போக ஏனையோரில் ஊரில் இருக்கின்றனர்.இந்த சூழ்நிலையில் குமாருக்கு படிக்கும் போது மனசுக்குள் இருந்த காதல் அப்படியே இருக்கு..இப்ப தான் எனக்கு தெரியும் குமார் அந்த பெண்ணை படிக்கும் போது மனசுக்குள் லவ்வியிருக்கான் என்றும் நண்பர்களின் கேலியாலும்,அந்த பெண்ணிடம் காதலை சொல்ல தைரியம் இல்லாமையாலும் மனசுக்குள்ளே தன் காதலை புதைத்துவிட்டான் என்றும்.


இப்பவும் அவன் அந்தப்பெண்ணை காதலிக்கின்றான் ஆனால் சில நண்பர்கள் அந்த பழய கருத்தையே சொல்வார்கள் உனக்கு எதுக்கு லவ் அந்த பெண்ணின் ரேஞ் என்ன உன் ரேஞ் என்ன அது எல்லாம் உனக்கு செட்டாகாது. என்று அவனை கேலி செய்யும் நண்பர்களும் உண்டு நானும் இன்னும் சிலரும் தான் அவனுக்கு சப்போடாக கதைப்போம் கேலி செய்யும் நண்பர்களிடம் குமாருக்காக பரிந்து பேசுவோம்.

இப்போது அந்தப்பொண்ணு எங்கே இருக்கின்றாள் என்று தெரியாது.ஆனாலும் குமார் 7 வருடங்களாக சொல்லாத காதலை மனசுக்குள் வைத்துக்கொண்டு  வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.நானும் சில நண்பர்களும் சொல்வதுண்டு கவலை படாதே மச்சி அவளை சந்திக்கும் போது உன் காதலை எடுத்து சொல்ல நாங்கள் இருக்கோம் நீ யோசிக்காதே என்று.

ஆனால் இன்னும் ஒரு சிலர் அவனை கேலியாக பேசுவது எனக்கு புரியவே இல்லை ஏன் இப்படி இருக்கின்றார்கள்.அந்த பொண்ணு அழகாக இருந்தால் இவன் லவ் பண்ணக்கூடாதா? இத்தனைக்கும் இவனை கேலி செய்யும் நண்பர்களைவிட குமார் வாழ்க்கையில் நன்றாகத்தான் இருக்கின்றான்.
நல்ல வேலையில் இருக்கான் மாதம் 30,000 மேல் சம்பாதிக்கின்றான்.ஒரு பெண்ணை வைத்து காலம் எல்லாம் காப்பாற்ற கூடிய நிலையில் அவன் இருக்கின்றான்.

படிக்கும் போது அவனை கேலி செய்தார்கள் ஓக்கே. ஆனால் இப்ப அவன் நல்ல நிலையில் இருக்கும் போது கேலி செய்வதுதான் வருத்தமான விடயம்.அந்தப் பெண்ணிடம் காதலை இவன் சொல்லாவிட்டாலும் 7 வருடங்களாக மனசில் சுமந்து கொண்டு இருக்கும் அவன் காதல் நிச்சயம் தூய்மையானதுதான்.

இந்த வலி எவ்வளவு பெரியது என்று எனக்கு நன்றாகத்தெரியும் ஏன்னா நானும் படிக்கும் போது ஒரு பெண்ணை லவ்வி அந்த வயதில் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் நொந்து நூலாகிய கதை எல்லோறுக்கும் தெரியும்.(என் தளத்தில் முன்பு தொடராக எழுதினேன்).

எனவே குமாரின் வலியை என்னால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.ஆனால் அவனை ஏனைய சில நண்பர்கள் கேலி செய்வது வருத்தமாக இருக்கின்றது.இத்தனைக்கும் இவன் அந்த பெண்ணிடம் காதலை சொல்லி அவள் மறுத்திருந்தால் ஒருவேளை நண்பர்கள் கேலி செய்வதில் நியாயம் இருக்கலாம்.ஆனால் இவன் அவளிடம் காதலை சொல்லவும் இல்லை.அவளை காதலிக்கின்றான் என்று நண்பர்களிடம் சொன்னதுக்கே இவர்கள் அவனை கேலிசெய்கின்றனர்.
இவர் இருந்த பிரபல்யத்துக்கு நினைத்திருந்தால் ராஜகுமாரனைவிட பெட்டரான ஒருவரை திருமணம் செய்திருக்கலாம்.ஆனால் ராஜ குமாரனிடம் எதையுமே எதிர்பார்க்காமல் அவரின் காதலை மட்டுமே பெரிதாக நினைத்து அதை மதித்து ராஜகுமாரனின் அன்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்ம தலைவி.நிஜமாகவே காதல் தேவதைதான்.நல்ல காலம் பதிவர் துஷி இப்ப பதிவுலகில் தற்காலிக ஓய்வில் இருக்கின்றார் இல்லை என்றால் இந்தப் படத்தை போட்டதுக்கு இன்னேரம் பெரும் சண்டை மூண்டிருக்கும்.ஹி.ஹி.ஹி.ஹி...
ஏன் கொஞ்சம் அழகு இல்லாதவன் அழகான பெண்ணை காதலிக்க கூடாதா?அல்லது அழகு இல்லாத பெண் அழகான ஆணை காதலிக்க கூடாதா?அழகை வைத்துதான் காதல் தீர்மானிக்கப்படுகின்றதா?இல்லையே.அப்பறம் ஏன்? ஒருவரின் முக அழகை வைத்து அவரின் அகத்தை எடை போடாதீர்கள் !அதற்குள்ளும் ஒரு அழகான மனசு இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
*********************************************************************************
முஸ்கி-இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் கேட்கலாம்! ராஜ் நீ மட்டும் பெரிய யோக்கியமா? அழகான சரன்யா மோகன்,ஹன்சிகா,தேவயானி,சிம்ரன் போன்றவர்களை பார்த்துதானே ஜொள்ளுவிடுற....என்று ஹி.ஹி.ஹி.ஹி.... நாங்க ஜஸ்வர்யா ராயையும் லவ் பண்ணுவோம் ஆனால் அவங்க யாரும் நம்மளை லவ் பண்ணனும் என்று எதிர்பார்க்க மாட்டோம் கடமையை செய் பலனை எதிர்பார்காதே. சோ சரன்யா மோகனுக்கு கல்யாணம் ஆனா அடுத்த பிகரை பார்த்திட்டு போய்கிட்டே இருப்போம்.ஹி.ஹி.ஹி.ஹி.......
என்ன சொன்னாலும் நம்ம தலைவி சரன்யா ஒரு அழகு தேவதைதான் .ஹி.ஹி.ஹி.ஹி....
*********************************************************************************
ஒரு அறிமுகம்
பதிவர் தனிமரம் நேசன் அண்ணா அவர்கள் தன் தனிமரம் தளத்தில் ”மலையகத்தில் முகம் தொலைத்தவன்”என்ற ஒரு புதிய தொடரை ஆரம்பித்துள்ளார்.ஒரு நண்பனின் காதல் கதை என்று அந்த தொடருக்கு அறிமுகம் வழங்கியிருக்கின்றார்.பொதுவாக தொடர்களை சுவாரஸ்யமாகவும் அதில் மனதை மயக்கும் பாடல்களையும் பகிர்வது இவரின் வழக்கம் இவர் எழுதிய ”நொந்து போகும் இதயம்” தொடர் அதற்கு சான்று.எனவே இந்த தொடரிலும் சிறப்பாக வாசகர்களின் ரசனையை பூர்த்திசெய்வார் என்று எதிர்பார்கலாம்.
இவரின் தொடர் பற்றிய அறிமுக பதிவை வாசிக்க இங்கே கிளிக்-மலையகத்தில் முகம் தொலைத்தவன்
*********************************************************************************


Post Comment

22 comments:

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!லவ்வுறதுக்கு டிப்ளோமா ஒன்றும் தேவையில்லை!லவ் அப்படிஎன்றால் என்ன?ஒரு ஈர்ப்பு.கறுப்பு, சிவப்பு,பணம்,பதவி,பட்டம் எல்லாமே இரண்டாம் பட்சம்தான்!தொடர்ந்து காதலியுங்கள்!அதிலும்,நீங்கள் விரும்பும் பெண்ணை விட உங்களை விரும்பும் பெண் வாழ்வில் அதீத ஒளிகொடுப்பாள்!!!!!!

Yoga.S. said...

என்ன சொன்னாலும் நம்மதலைவி ஒரு அழகு தேவதை தான்!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!///இன்னுமா??????

ஹாலிவுட்ரசிகன் said...

ஆரம்பம் நல்ல சுவாரஸ்யமா தெரியுது. நமக்கும் ரொம்ப வேண்டப்பட்ட டாபிக் தான். ஹி ஹி

பின்னேரம் வந்து வாசிக்கிறேன்.

தனிமரம் said...

காதலின் போது பொருளாதாராத்தில் தன் சொந்தக்காலில்(வருவாய் முக்கியம் குடித்தனம் நடத்த) நிற்கும் போது துணிந்து காதலைச் சொல்லி கைபிடிக்கலாம் என்பது என் கருத்து.

தனிமரம் said...

7வருடங்களுக்கு மேல் காதலிப்பவன் காதலைச் சொல்லாமல் இருப்பது அவனின் கோழைத்தனம் (30000 உழைப்பில் குடும்பம் நடத்தலாம்) அல்லது ஏதாவது சொல்லமுடியாத நோய் இருக்கலாம் அதனால் கூட தயங்கலாம் என்ற பார்வையையும் புறம் தள்ளக்கூடாது நண்பர்கள். 

சென்னை பித்தன் said...

காதலிக்க எந்தத் தகுதியும் வேண்டிய தில்லை ராஜ்.அழகில்லாத எத்தனையோ பேர் காதலில் ஜெயிக்கிறார்கள்.என்ன காரணத்துக்காக ஒருவர் காதலிக்கிறார் அல்லது காதலிக்கப் படுகிறார் என்று சொல்லவே இயலாது!
சிலருக்கு மச்சம்!

தனிமரம் said...

நண்பர்கள் சிலருக்கு தங்களை பிரிக்க இடையில் யாராவது வந்து விடுவார்களோ என்ற தயக்கத்திலும் உன் தகமையைவிட அவள்/அவன் உயர்ந்தவன் என்று பிரிவினை செய்யலாம் அதையும் தெளிந்து காதலிப்பவன் கெட்டிக்காரன்.

தனிமரம் said...

என் தொடருக்கு உங்கள் தளத்தில் தந்த ஊக்கிவிப்பு அறிமுகத்திற்கு என்றும் நன்றிகள் பலகோடி. நிச்சயம் இந்தத் தொடரில் பல கடந்த கால விடயங்களை தொட்டுச் செல்வேன். நண்பனின் உதவியுடன்.

Mohamed Faaique said...

பாஸ்ஸ்!!! இது ரொம்ப குழப்பமான மேட்டராச்சே!!!

Unknown said...

காதல் தகுதி பார்த்து வருவதில்லை!

புலவர் சா இராமாநுசம்

ஹாலிவுட்ரசிகன் said...

இப்போ தான் பதிவை வாசித்தேன்.

அதான் இப்போ நல்ல நிலைல செட்டில் ஆகிட்டாரே. இன்னும் ஏன் தயக்கம்? அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?

பி.அமல்ராஜ் said...

வணக்கம் பாஸ், எல்லாருமே நம்மள மாதிரியே இருக்காங்க இல்ல... ஹி ஹி ஹி..

காதல் என்பது புறத்தோற்றத்தை மட்டும் பார்த்து வருவது இல்லை. ஆனால், புறத்தோற்றமும் ஒரு குறித்த பங்கை வகிக்கிறது. என்னைப் பொறுத்தவரைக்கும் உண்மை காதல் என்பது வருவதற்கு ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் இருந்தால் போதுமானது. இதென்ன பாஸ், எண்ட பிரெண்ட் ஒருத்தன் ஒன்பது வருசமா லவ்வு லவ்வுன்னு லவ்வுறான். அந்தப் பொண்ணு திரும்பியும் பார்பதாய் இல்லை. (நம்மளத்தான் அடிக்கடி திரும்பி பாக்குது..ஹி ஹி ஹி). காதல் என்பது அவரவர் தலைஎழுத்து. அவ்வளவுதான்.

காட்டான் said...

என்னப்பா உன்னுடைய கதையை எல்லாம் நண்பர்கள் கதைன்னு அவுட்டு விடுறியே...!!

சசிகுமார் said...

அருமை....

MaduraiGovindaraj said...

சுய கதை போல் தெரிகிறதே நண்பா? முஷ்க்கி போட்டு விளக்கி இருந்தாலும் என் உள்மனசு அப்படித்தான்னு சொல்லுது

KANA VARO said...

தம்பி, ராஜ குமாரனுக்கு என்ன குறை? அவர் நினைத்திருந்தால் தன் அறிவுக்கு படித்த பெண்ணை திருமணம் செய்த்திருக்கலாம். ஒரு நடிகைக்கு வாழ்வு குடுத்திருக்கார். (துசி ஓய்வு, எதுவும் கதைக்கலாம்)

பால கணேஷ் said...

காதல் எப்ப, யாருக்கு வரும்னு சொல்றது ரொம்ப ரொம்பக் கஷ்டம்! ஆனா காதலிச்சதை அவகிட்ட சொல்ல ஏன் தயங்குறாங்கன்னுதான் எனக்குப் புரியல. அவகிட்ட போய்ச் சொல்ல நண்பர்கள் சப்போர்ட் வேற வேணுமா? கொடுமைடா சாமி!

Anonymous said...

படிக்க ரொம்ப நல்லா இருக்கு

முற்றும் அறிந்த அதிரா said...

அட என்னப்பா இது ஓடி வந்து அடிக்கோணும்போல கோபம் வருதெனக்கு:)) சரி சரி முறைக்காதீங்க.

காதலே கை கூடல்ல, காதலியையும் காணேல்லை, அவவுக்கு திருமணமாகிட்டுதோ இல்லையோ என்றும் தெரியேல்லை, அதையெல்லாம் விட்டுப்போட்டு... எதுக்கு நண்பர்களைப்பற்றிப் புலம்புறீங்க...

அவர்கள் என்ன வேணுமென்றாலும் சொல்லிட்டுப் போகட்டுமே... பொறாமையாகக்கூட இருக்கலாம், அந்த ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு, முதல்ல காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கப்பாருங்கோ.

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று.

உங்களுக்கென்றால் உங்களுக்குத்தான் இல்லையென்றால் இல்லைத்தான்.. அதுக்காக அதையே நினைத்து வருந்துவதுதான் தப்பு.

முற்றும் அறிந்த அதிரா said...

என்னாது இன்னும் சரண்யாவை லவ் பண்ணுறீங்களோ? அவ தான் “வேலாயுதத்தில” குண்டு வெடிப்பில முடிஞ்சதாக் காட்டிச்சினமே அப்போ அது பொய்யா?... இல்ல தெரியாமல் கேட்கிறன் முறைக்கப்படா:)).. நோ கர் பிளீஸ்ஸ்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா... நீஈஈஈஈஈண்ட காலத்துக்குப் பிறகு, காட்டான் அண்ணனின் தலை தெரியுது, நான் நினைச்சன் இப்ப குளிர் அதிகமாகிவிட்டதால, புராதன உடை தாக்குப் பிடிக்காமல் வீட்டிலயே முடங்கிட்டார் என அவ்வ்வ்வ்வ்வ்வ்:))... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே
காட்டான் மாம்ஸ் உண்மையாவே என் நண்பனின் கதைதான்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails