Friday, January 20, 2012

தமிழ் சினிமாவில் என்றும் தி பாஸ்&மாஸ் சிவாஜி(என்னைக்கவர்ந்த பிரபலங்கள்)

நான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகன் என்றால் போடா நீ அந்தக்காலத்து ஆள் என்பார்கள்.ஆனால் இந்தக்கால இளைஞனான எனக்கும் என்னைப்போல தற்போதய இளைஞர்கள் பலருக்கும் சிவாஜியை நிச்சயம் பிடிக்கும்.தமிழ் சினிமாவில் நடிப்புக்கு வரவிலக்கணம் எழுதிய நடிப்புலக மாமேதை அவர்.இங்கே சிவாஜியின் வரலாறு பற்றி சொல்லப்போவது இல்லை காரணம் அது எல்லோறுக்கும் தெரிந்ததுதான் கணேசனாக பாராசக்தியில் அறிமுகமாகி தன் அற்புத நடிப்பால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற தமிழ் நடிகர் செவாலியர் சிவாஜி சார்.


சரி இந்தக்கால பையனான எனக்கு எப்படி சிவாஜியை பிடிக்கும் நான் எப்படி அவரது ரசிகன் ஆனேன் என்பதை சொல்கின்றேன்.

நான் 4ம் வகுப்பு படிக்கும் போது 1997ம் ஆண்டு ”கர்ணன்”படம் பார்கும் சந்தர்ப்பம் கிடைத்தது பாடசாலையில் ஒரு விழாவில் கர்ணன் படம் போட்டார்கள்.எனக்கு அப்பவே இதிகாச கதைகள் மேலும் வரலாற்று கதைகள் மேலும் தீவிர தேடல் அதிகம்.அதனால் அந்தப்படத்தை ரசித்துப்பார்த்தேன் ஆனால் அதில் கர்ணனாக நடித்தவரின் பெயர் தெரியாது.வீட்டில் வந்து கேட்ட போது அவரது சிவாஜி கணேசன் என்றார்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

சிவாஜி கணேசன் என்ற பெயர் நான் முன்பே அறிந்திருந்தேன் காரணம் எங்கள் வீட்டில் அம்மா,அம்மாவின் தங்கைகள்,மாமா,எல்லோறும் சிவாஜியின் தீவிரமான ரசிகர்கள்,எனவே எங்கள் வீடுகளில் அடிக்கடி சிவாஜி என்ற பெயர் உச்சரிக்கப்படும்.எனவே கர்ணன் படம் பார்ததும்.அதில் நடித்தவர் சிவாஜி என்று தெரிந்ததும் அவர் நடிப்பு மேல் ஒரு ஈர்ப்பு வந்தது.அதற்குப்பின் அவர் நடித்த புராணப்படங்கள்,வரலாற்றுப்படங்கள்.எங்க போட்டாலும் உடனே போய் பார்த்துவிடுவேன் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் போடுவார்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


நான் 7,8 வகுப்பு படிக்கின்ற போது எல்லாம் சுந்தரகாண்டம் அனைத்து பகுதிகளையும்(பகுதி பகுதியாக இந்த நூல் வந்தது)இராமாயணம்,மகாபாரதம்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் வரலாறு,போன்ற நூல்களை முழுமையாக வாசித்துவிட்டேன்.அப்போது எங்கள் பாடசாலையில் நூலகத்தில் இருக்கும் நூல்களை இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு கொண்டு சென்று வாசிக்கலாம்.நான் பெரும்பாலும் எடுத்துச்சென்று வாசிக்கும் புத்தகங்கள் இதிகாசம்,வரலாற்று நூல்கள் தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


நூலக பொறுப்பாசிரியர் கூட என்னிடம் கேட்பார் இதை நீ வாசிக்க எடுத்து செல்கின்றாயா? இல்லை வீட்டில் யாரும் வாசிக்க எடுத்துச்செல்கின்றாயா? என்று நான் தான் வாசிக்க எடுத்துச்செல்கின்றேன் என்று சொன்னால் அவர் ஆச்சரியமாக பார்ப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
என்னதான் கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் பற்றி வாசித்தாலும் அதை படமாக சிவாஜி சாரின் நடிப்பில் பார்கின்ற போது அது ஒரு தனி ரசனைதான்.



சிவாஜி சார் இறந்த போது எங்கள் மாமா கண்ணீர்விட்டு அழுதார்.அப்பதான் நான் தெரிந்து கொண்டேன் அட எங்கோ இருக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு நடிகனுக்காக இவர்கள் கவலை அடைக்கின்றார்களே.எனவே நான் இப்படி யாருக்கும் ரசிகராக இருக்க கூடாது என்று தீர்மாணித்துக்கொண்டேன்.இன்றுவரை எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன் ஆனால் யாருக்கும் தீவிர ரசிகன் இல்லை.ஆனால் நடிகைகள் மட்டும் விதி விலக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்.

நான் எந்த நடிகருக்கும் தீவிரமான ரசிகன் இல்லை என்றாலும் சினிமா தவிர்ந்த வேறு ஒருவருக்கு அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் நம்ம தாதாவின் மிக மிக தீவிரமான ரசிகன் நான்.

தமிழ் சினிமாவை ரசித்து பார்க்க தொடங்கிய பிறகு எல்லா நடிகர்களின் படங்களும் பார்க்கும் போது கண்டிப்பாக சிவாஜி சாரின் படங்களையும் தேடித்தேடி பார்பதுண்டு.


இப்போது கூட சிவாஜி சார் நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் டீ.வியில் போட்டால் அதை பார்க்க தவறுவதில்லை.எனக்கு சிவாஜி சார் ஹீரோவாக நடித்த படங்களைவிட தற்போதய தலைமுறை நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருப்பார் பாருங்க அப்படியான படங்கள் மிகவும் பிடிக்கும்.உதாரணமாக ஓன்ஸ்மோர்,பூப்பரிக்க வருகின்றோம்,விடுதலை,படையப்பா இப்படியான படங்களில் அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பிடித்த நான் மிகவும் ரசித்த சிவாஜி சார் நடித்த படங்கள் சில
இதில் அவர் ஹீரோவாக நடித்த படங்களும் உள்ளடங்கும் வேறு நடிகர்களில் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த படங்களும் உள்ளடங்கும்

  1. வசந்த மாளிகை(என் ப்ரண்ட் சிலரின் லவ் ஊத்திகிட்ட போது கூட இந்த படத்தை எல்லோறும் சேர்ந்து பல முறை பார்த்தோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்)
  2. விடிவெள்ளி
  3. நீதி
  4. படித்தால் மட்டும் போதுமா
  5. வீரபாண்டிய கட்டப்பொம்மன்
  6. ராஜ ராஜ சோழன்
  7. கர்ணன்
  8. பராசக்தி
  9. திரிசூலம்
  10. நவராத்திரி
  11. ஜெனரல் சக்கரவர்த்தி
  12. தங்கப்பதக்கம்
  13. கூண்டுக்கிளி
  14. கெளரவம்
  15. வெள்ளை ரோஜா(பிரபுவுடன் இணைந்து நடித்திருப்பார்)
  16. தாவனிக் கனவுகள்(பாக்கியராஜ் இயக்கிய இந்தப்படம் தான் நடிகர் பார்தீபன் திரையில் முதன் முதலில் தோன்றிய படம் தபால் காரனாக ஒரு காட்சியில் சிவாஜி சாருடன் நடித்திருப்பார்)
  17. விடுதலை(ரஜனிகாந்துடன் இணைந்து நடித்திருப்பார்)
  18. முதல் மரியாதை
  19. படிக்காதவன்(ரஜனி காந்துடன் இணைந்து நடித்திருப்பார்)
  20. தேவர் மகன்(கமலுடன் இணைந்து நடித்திருப்பார்)
  21. ஜள்ளிக் கட்டு(சத்யராஜுடன் இணைந்து நடித்திருப்பார்)
  22. படையப்பா(ரஜனிகாந்துடன் இணைந்து நடித்திருபார் சிவாஜி சாரின் கடைசிப்படம் என்று நினைக்கின்றேன்)
விஜயுடன் நடித்த  ஒன்ஸ்மோர்,அஜயுடன்(அஜித் இல்லை இவர் நடிகர் அஜய் என்று ஒருவர்) நடித்த பூப்பறிக்க வருகின்றோம்,அர்ஜுனுடன் நடித்த மன்னவரு சின்னவரு,முரளியுடன் நடித்த என் ஆசை ராசாவே,பிரபுவுடன் நடித்த பசும் பொண்,இப்படி சிவாஜி சார் கேரக்டர் ரோலில் நடித்த பல படங்களும் அவர் ஹீரோவாக நடித்த பல படங்களும் எனக்கு பிடிக்கும்.

சிவாஜி சாருக்கு கிடைத்த சில விருதுகள்
  • ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
  • பத்ம ஸ்ரீ விருது (1966)
  • பத்ம பூஷன் விருது (1984)
  • செவாலியே விருது (1994)
  • தாதா சாகேப் பால்கே விருது (1997)
  • 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் மேயராக ' கௌரவிக்கப்பட்டார்.
ஆனால் ஒரு முறை கூட நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு கவலை தரும் விடயம்.


1927 அக்டோபர் 1 ம் திகதி பிறந்த இந்த நடிப்புலக மாமேதை 2001 ஜுலை 21ம் திகதி மறைந்தார்
தமிழ் சினிமாவின் என்றும் மறக்கப்பட முடியாத நடிப்பிற்கு இலக்கணம் வகுந்தவர் மதிப்பிற்குறிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அவருக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

படங்கள்-கூகுள்

அடுத்த வாரம் என்னைக் கவர்ந்த பிரபலங்களின் வரிசையில் ஒரு தேசத்தின் விடிவெள்ளி, ஓடுக்கப்பட்ட மக்களின் ஹீரோ ,ஒரு விடுதலை போராளி,ஒரு தேசத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற ஒருவர் பற்றி பார்ப்போம்
*********************************************************************************
நேற்றய தினம் நான் எழுதிய பதிவை படிக்க இங்கே கிளிக்-தோனி அவ்வளவுதானா? இந்திய அணியின் தோல்வி பற்றி ஒரு பார்வை
*********************************************************************************

Post Comment

35 comments:

கோகுல் said...

வணக்கம் பாஸ் நலமா?

இவருக்கு சென்னையிலையும்,பாண்டிச்சேரியிலயும் சிலை வைச்சிருக்காங்க.அந்த அளவுக்கு இவர் மேல அபிமானம் நம்மவர்களுக்கு.
இன்னமும் கட்டபொம்மன்,ராஜ ராஜ சோழன் என்று சொன்னால் அந்த வேடத்தில் சிவாஜியின் உருவம் தான் நினைவுக்கு வரும்.நல்ல நினைவூட்டல்.

rajamelaiyur said...

முடியை கூட நடிக்கவைக்கும் அருமையான நடிகர் ...

rajamelaiyur said...

ஆனால் அவர்க்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை .. கொடுமை

ராஜி said...

நடிகர் திலகம் பற்றி நிறைய தகவல்கள் பகிர்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் தம்பி.கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

நன்றி சொல்ல வந்தேன் ..

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )

சென்னை பித்தன் said...

நானும் அந்த மகா நடிகரின் தீவிர ரசிகன்தான்.

Unknown said...

சிவாஜி - இந்த பெயர் எப்படி இந்திய வரலாற்று விஷயத்தில் மறக்க முடியாத பெயரோ..அதே போல இந்திய சினிமாவில் மறக்க முடியாத பெயர்...பல இதிகாச மனிதர்களை கண்முன் நிறுத்திய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிவாஜியின் படங்களை சினிமாவாக பார்த்துவிட்டு மறந்துவிட முடியாது.. அவைகள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்...

தன்னுடைய நடிப்பில் அப்படியே ஒன்றிபோய் நடித்தே சிவாஜியின் உடல் நிலை பாதித்தது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.

கொடுத்த பாத்திரத்தில் மிளிர்கின்ற நட்சத்திரம் இன்றைய அளவில் யாரும் இல்லை...

வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்
மகாகவி காளிதாஸ்
வசந்த மாளிகை
நவராத்திரி

போன்ற படங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது இன்றைய அளவில் கூட...


பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்..

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!உங்கள் பார்வை நன்றாக இருந்தது.நடிகர் திலகம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!அந்த இடத்தை எந்தக் கொம்பனாலும் விஞ்ச இயலாது! நன்றி,ராஜ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருவிளையாடல், தில்லானா மொகனாம்பாள், தூக்குத்தூக்கி, புதிய பறவை, உயர்ந்த மனிதன், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி என ஏராளமான படங்கள் உங்களில் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளன.

அவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட இளம் வயதில், பெரும்பாலும் வாழ்ந்தது எங்கள் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் தான். என் பதிவில் கூட இதைக் குறிபிட்டுள்ளேன்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html


திருச்சியிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

நானும் அந்தக்காலத்தில் தீவிர சிவாஜி ரசிகனே!

பகிர்வுக்கு நன்றி. அன்புடன் vgk

K.s.s.Rajh said...

@கோகுல்
////
வணக்கம் பாஸ் நலமா?

இவருக்கு சென்னையிலையும்,பாண்டிச்சேரியிலயும் சிலை வைச்சிருக்காங்க.அந்த அளவுக்கு இவர் மேல அபிமானம் நம்மவர்களுக்கு.
இன்னமும் கட்டபொம்மன்,ராஜ ராஜ சோழன் என்று சொன்னால் அந்த வேடத்தில் சிவாஜியின் உருவம் தான் நினைவுக்கு வரும்.நல்ல நினைவூட்டல்////

நான் நலம் நீஙக் எப்படி எங்க கொஞ்ச நாளாக காணவில்லை
நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
முடியை கூட நடிக்கவைக்கும் அருமையான நடிகர் .////

ஆம் பாஸ் இனி ஒரு நடிகர் இப்படி கிடைப்பது கஸ்டம் தான்

K.s.s.Rajh said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ஆனால் அவர்க்கு இந்தியாவின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை .. கொடுமை
////

அவரின் ரசிகர்களுக்கு இது பெரும் கவலைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@
ராஜி கூறியது...
நடிகர் திலகம் பற்றி நிறைய தகவல்கள் பகிர்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் தம்பி.கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
நானும் அந்த மகா நடிகரின் தீவிர ரசிகன்தான்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@ விக்கியுலகம் கூறியது...
சிவாஜி - இந்த பெயர் எப்படி இந்திய வரலாற்று விஷயத்தில் மறக்க முடியாத பெயரோ..அதே போல இந்திய சினிமாவில் மறக்க முடியாத பெயர்...பல இதிகாச மனிதர்களை கண்முன் நிறுத்திய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு!
////
மிக மிக உண்மை பாஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
சிவாஜியின் படங்களை சினிமாவாக பார்த்துவிட்டு மறந்துவிட முடியாது.. அவைகள் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்...

தன்னுடைய நடிப்பில் அப்படியே ஒன்றிபோய் நடித்தே சிவாஜியின் உடல் நிலை பாதித்தது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார்.

கொடுத்த பாத்திரத்தில் மிளிர்கின்ற நட்சத்திரம் இன்றைய அளவில் யாரும் இல்லை...

வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்
மகாகவி காளிதாஸ்
வசந்த மாளிகை
நவராத்திரி

போன்ற படங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது இன்றைய அளவில் கூட...


பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!உங்கள் பார்வை நன்றாக இருந்தது.நடிகர் திலகம் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!அந்த இடத்தை எந்தக் கொம்பனாலும் விஞ்ச இயலாது! நன்றி,ராஜ்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
திருவிளையாடல், தில்லானா மொகனாம்பாள், தூக்குத்தூக்கி, புதிய பறவை, உயர்ந்த மனிதன், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி என ஏராளமான படங்கள் உங்களில் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளன.

அவர் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட இளம் வயதில், பெரும்பாலும் வாழ்ந்தது எங்கள் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் தான். என் பதிவில் கூட இதைக் குறிபிட்டுள்ளேன்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html


திருச்சியிலும் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

நானும் அந்தக்காலத்தில் தீவிர சிவாஜி ரசிகனே!

பகிர்வுக்கு நன்றி. அன்புடன் vgk
////

மன்னிக்க வேண்டும் பாஸ்
நான் இந்தக்காலப்பையன் என்பதால் என்னால் சிவாஜின் காலத்தில் சிவாஜி படங்களை பார்க்கமுடியவில்லை ஆனால் மிகசிறிய வயதில் 1997ம் ஆண்டில் இருந்து பல சிவாஜி படங்கள் பாத்திருக்கேன் பெயர்கள் ஞாபகம் இல்லை எனவே ஞாபகத்தில் நின்ற படங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் சொன்ன தில்லானா மோகனாம்பாள்,திருவிளையாடல்,
எல்லாம் பார்த்துள்ளேன் இப்பதான் ஞாபகம் வருகின்றது

நன்றி பாஸ்

Kumaran said...

எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் சிவாஜி சாரும் ஒருவர்..அவரை அற்புதமாக எழுதிய தங்களுக்கு எனது நன்றி மற்றும் வணக்கங்கள்.

K said...

வணக்கம் மச்சான் சார்!

உங்க வயசுக்கும், இப்பதிவுக்கும் சம்மந்தமே இல்லையே? என்ன ஒரு வித்தியாசமான ரசனை? சிவாஜி சார் பற்றி இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே! சூப்பர்!

எனக்கு சிவாஜியின் காதல் காட்சிகள் பிடிக்கும்! அவரது ரொமாண்டிக் சூப்பரா இருக்கும்! :-)

பாலா said...

பலபேர் இவர் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொன்னாலும், இவரது மிகச்சிறந்த நடிப்பாற்றலை யாராலும் மறுக்க முடியாது.

அப்புறம் அஜய் வேறு யாருமல்ல, விஷாலின் அண்ணன் அஜய்கிருஷ்ணாதான்

Unknown said...

சினிமாவை ரசிப்பவர்கள் அனைவருக்கும் குரு இவர் தான்... நல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க....

Mathuran said...

வணக்கம் ராஜ்....

சிவாஜி பற்றி எக்கச்சக்கமா தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க..

எனக்கு என்னமோ சிவாஜி மேல ஈடுபாடு இருந்ததில்லை.. ஒன்று இரண்டு படங்கள்தான் பார்த்திருக்கிறன்

K.s.s.Rajh said...

@Kumaran

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்!

உங்க வயசுக்கும், இப்பதிவுக்கும் சம்மந்தமே இல்லையே? என்ன ஒரு வித்தியாசமான ரசனை? சிவாஜி சார் பற்றி இவ்வளவு தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே! சூப்பர்!

எனக்கு சிவாஜியின் காதல் காட்சிகள் பிடிக்கும்! அவரது ரொமாண்டிக் சூப்பரா இருக்கும்! :////

ரசனைக்கு ஏது மச்சான் சார் வயசு.ஹி.ஹி.ஹி.ஹி

சிவாஜி சாரின் ரொமாண்டிக் லுக் உங்களுக்கு பிடிக்குமா அவ்வ்வ்வ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

////
பாலா கூறியது...
பலபேர் இவர் ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொன்னாலும், இவரது மிகச்சிறந்த நடிப்பாற்றலை யாராலும் மறுக்க முடியாது.

அப்புறம் அஜய் வேறு யாருமல்ல, விஷாலின் அண்ணன் அஜய்கிருஷ்ணாதான்
////

எனக்கு கூட சில நேரங்களில் அப்படித்தான் நினைக்கத்தோனும்
ஆனாலும் இவரது நடிப்பாற்றல் அளப்பெரியது

அஜய் விஷாலின் அண்ணன் என்பது நான் அறிவேன் பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Neelam கூறியது...
சினிமாவை ரசிப்பவர்கள் அனைவருக்கும் குரு இவர் தான்... நல்ல விஷயங்கள் பகிர்ந்து இருக்கீங்க..////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ மதுரன் கூறியது...
வணக்கம் ராஜ்....

சிவாஜி பற்றி எக்கச்சக்கமா தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க..

எனக்கு என்னமோ சிவாஜி மேல ஈடுபாடு இருந்ததில்லை.. ஒன்று இரண்டு படங்கள்தான் பார்த்திருக்கிறன்
////

நன்றி பாஸ்

Anonymous said...

திறமை உள்ள நடிகர்...

ஏனோ பல நேரங்களில் அளவுக்கு அதிகமாய் நடிப்பதாய் தோன்றும் எனக்கு...

அவரது சரித்தர படங்கள் பிடிக்கும் எனக்கு..

தொடருங்கள் நண்பரே...

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நடிப்பின் இமயம் பற்றிய அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
பொதுவாகவே சிவாஜிசாரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.
சினிமாவில் பல புதிய நடிகர்கள் தோன்றுவதற்கு கூட இன்ஷ்பிரேசனாக இருந்த பெருமைக்குரியவர் சிவாஜி சார்.

அவரைப் பற்றிய குறிப்புக்களோடு, உங்களைக் கவர்ந்த அவரின் படங்களையும் கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

Unknown said...

நடிகர் திலகம் பற்றிய நல்ல குறிப்புகள்! அறியச் செய்தீர்!

புலவர் சா இராமாநுசம்

sathishbabu said...

Dear friend,

Big thank you for remembering our NT and I am as a NT fan from 1983 (your previous decade) on class 7 , our NT always attracts every one and there is time or age boundaries for our NT.

People talk about NT has not got national award, there is NO need to BUY national award when your uncle sob of hearing NT death which is more than national award.

Our NT will live for decades.

Cheers,
Sathish

K.s.s.Rajh said...

@sathishbabu

மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து வாருங்கள்

Unknown said...

"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails