Saturday, July 02, 2011

எனக்கு பிடித்த பெண்கள்(K.s.s.Rajh)

பிடித்த நடிகர்கள்,பிடித்த கிறிக்கெட்வீரர்கள் இப்படி நிறைய பேர் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள்.அது போல எனக்கு பிடித்த பெண்களைப்பற்றி ஒரு பதிவு போடலாம் என்று ஒரு ஜோசனை தோன்றியது.



1)எனது அம்மா

இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த பெண் முதலில் எனது அம்மா தான் 
என்னை இந்த உலகிற்கு காட்டிய தாயே இன்னு ஒர் ஜென்மம் இருந்தாலும்
மீண்டும் நான் உனக்கு மகனாக பிறக்க வேண்டும்.

2)அன்னை திரேசா

யூக்கோஸ்லாவியாவில் பிறந்து இந்தியாவில் சேவை செய்த தாய் அன்னைதிரேசா.ஏழை நோயாளர்களின் வாழ்க்கைக்காக அரும் பாடுபட்ட அன்பு உள்ளம் கொண்ட அன்னை.இவர் வாழ்த காலத்தில் நானும் வாழ்தேன் என்பதை நினைக்கும் போதே மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
(1997ல் அன்னை திரேசா இறக்கும் போது நான் சிறு பையன். இருந்தாலும் அந்த வயதிலேயே எனக்கு அவரின் தொண்டுகளைப்பற்றி நிறைய வாசித்தும்.பிறரிடம் கேட்டும் அறிந்து கொள்வதில் அலாதிப்பிரியம்.)

3)மேரி கியூரி அம்மையார்

 சோதனைகள் பல தாண்டி சாதனை படைத்த பெண் மேரி கியூரி அம்மையார்.
இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞான பெண் மேதை.

4)இளவரசி டாயானா


இங்கிலாந்து இளவரசியாக இருந்த போதிலும் மிக எளிமையான பெண், டாயான.இவர் 1997ல் பாரிஸ்சில் சாலைவிபத்தில் இறந்த போது உலகமே கண்ணீர் சிந்தியது அந்த அளவுக்கு மக்கள் மனங்களை வென்றவர் இளவரசி டயானா. குறிப்பாக அன்னை திரேசா, டாயானாவின் மரணத்தினால் பெரிதும் மனம் உடைந்து போனாராம்.(டாயானா இறந்து சில காலத்தில் 1997ல் லேயே அன்னை திரேசாவும் இறந்து போனது குறிப்பிடதக்கது)


5) நடிகை ஆச்சி மனோரம்மா




தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்த நடிகை. எம்.ஜி.ஆர்,சிவாஜி தொடக்கம் இன்றைய விஜய் அஜித் வரை கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் இனைந்து நடித்துள்ளார்.தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிசம் ஆச்சி மனோரம்மா.

6) ஜஸ்வர்யா ராய்




நம்ம உலக அழகி ஜஸ்வர்யாராயின் அழகைவிட அவங்க நடிப்புத்தான் மிகவும் அழகு.
திறமையான நடிகை.

7)பிறேமினி


இவள் பாடசாலையில் என்னுடன் படித்த பெண். இவள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக(மகிழ்சியாக) இருக்கும்.எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பாள்.
ஆனால் நான் இவளுடன் 4 வருடங்கள் ஒன்றாக படித்துள்ளேன் அப்போது இவளிடம் ஒரு வார்த்தை கூட பேசியது(கதைத்தது) இல்லை.

8)அருணா டீச்சர்
இவர் எனக்கு சிறுவயதில் எனக்கு கல்விகற்பித்த ஆசிரியர் மிகவும் அன்பானவர்.இவர் தற்காலிகமாகத்தான் கல்வி கற்பித்தார் பின்பு வேறு வேலைக்கு போய்விட்டார்.இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.

9)சுலேகா டீச்சர்
இவரும் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியரே.மிகவும் அன்பான ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்த டீச்சர்.இவர் மட்டுமல்ல இவரது சகோதரி ரேணுகா டீச்சரும் மிகவும் அன்பான ஆசிரியர்.சுலேகா டீச்சர் விஞ்ஞான பாடம்தான் படிப்பித்தார் அப்போது ஒரு முறை பரீட்சையில் நான் 97(100 க்கு 97) மார்க் எடுத்தேன்.இதுதான் நான் என் பாடசாலைக்காலத்தில் பரீட்சைகளில் பெற்ற அதி கூடிய புள்ளியாகும்.எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.

10)சிவந்தனா
எனது சித்தப்பாவின் மகன் கண்ணன் அண்ணாவின் மனைவி.அண்ணி எனக்கு இன்னொரு அம்மாவைப்போன்றவர்.

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails