Wednesday, July 20, 2011

(பகுதி-5)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-4 வாசிக்க இங்கே கிளிக் பன்னவும்

வணக்கம்
பதிவுக்கு முன்னால் இதை எழுதியதற்கு மன்னிக்கவும் வாசகர்களே.ஆனால் எனது பதிவுகளை வாசிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டியது எனது கடைமை.எனவே சிரமம் பார்க்காது இதையும் கொஞ்சம் வாசித்த பின் கீழே பதிவை தொடர்ந்து வாசியுங்கள்.



எனது இந்தத் தொடர்பதிவை பலவாசகர்கள் வாசித்து ஆதரவு தந்தாலும்,கருத்துரைகள் மிகக்குறைவாகவே சொல்லப்படுகின்றது.கருத்துரைகள் சொல்லாவிட்டாலும். வாசகர்கள் தொடர்ந்து இந்தத் தொடரை படிப்பது எனக்கு சந்தோசமே. நான் எல்லாம் வலைப்பதிவு எழுதுவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.ஒரு காலத்தில் எனது கருத்துக்கள் என் சிந்தனைகளை சொல்ல சரியான களம் இல்லாமல் தவித்ததுண்டு.பாடசாலையில் படிக்கின்றபோது சிறுகதைகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன் ஆனால் அவை வெளிவாராமல் விட்டுவிடும் மிகுந்த கவலையாக இருக்கும்.அப்படி நான் எழுதிய கதை ஒன்று கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு மித்திரன் வாரமலரில் பிரசுரமாகியது.அந்த சிறுகதையை படிக்க இங்கே கிளிக் பன்னவும்
அதற்கு பிறகு வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு நானும் வலைப்பதிவு எழுதவேண்டும் என்று ஆசை தோன்றியது ஆனால் எப்படி வலைப்பதிவு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.ஒருமாதிரி கணனி பற்றிய அறிவு இருந்ததால் நானே சுயமாக முயன்று பல கஸ்டங்களுக்கு அப்பறம் உருவாக்கியதுதான் எனது நண்பர்கள் வலைப்பதிவு.இன்று இந்த வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பதிவராக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.எனது இந்த முரளிதரன் பற்றிய தொடர்பதிவை வாசித்து ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றிகள்.குறிப்பாக மறக்காமல் கருத்துரைகளைச் சொல்லி என்னை ஊக்கப்படுத்தும்.பாலாவின் பக்கங்கள் பாலா அண்ணா,மற்றும் நாற்று  நிரூபன் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
Kss.Rajh
சரி பதிவுக்கு வருவோம்
முரளியின் பந்துவீச்சு முறையற்றது என அறிவித்த நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,போட்டியை புறக்கணித்த இலங்கை அணித்தலைவர் அர்ஜுனரணதுங்க





முரளியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பொக்சிங் டே (Boxing Day) என கருதப்படும் நாள் 1995 ம் ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி. அன்றைய தினம்தான் முரளிதரன் பந்து வீசிய போது நடுவராக கடமையாற்றிய டெரல் ஹெயார் அவர் பந்தை எறிகிறார் என்று கூறி குற்றம்சாட்டினார்.

இலங்கை கிரிக்கெட் அணியை. கிரிக்கெட் அரங்கில் தலைநிமிரவைத்த தலைவர் அர்ஜுனரணதுங்க 1996ல் உலகக்கிண்ணத்தை இலங்கை வென்றபோது உலகக்கிண்ணத்துடன்/இந்த உலகக்கிண்ணத்தை வென்ற அணியில் முரளியும் இடம் பெற்று இருந்தார்.
1996ல் இலங்கை அணி வென்ற உலகக்கிண்ணத்துடன் நான்(kss.Rajh).2011 உலகக்கிண்ணப்போட்டிகள் இலங்கையில் நடை பெற்றபோது இந்த உலகக்கிண்ணம் இலங்கை முழுவதும் கொண்டு செல்லப்பட்டது அப்போது எடுத்த படம் இது.

அதன் பின் 10 நாட்கள் கழித்து 1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் திகதி அன்று மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியின்போது முரளிதரன் தனது முதலாவது ஓவரை வீசிய போது 3 முறை நோபோல் என்று நடுவர் ரொஸ் எமர்சன் அறிவித்தார்.
 இப்போட்டியின் போது துணை நடுவராக செயலாற்றிய டொனி மெக்கியுலின் அமைதியாகவே இருந்துவிட்டார்.


1996 ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக முரளி உயிரியல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனடிப்படையில் அவர் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டே பந்து வீசுகிறார் என அவர்கள் தெரிவித்தனர். 

இதற்கமைய அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. 1998,1999 காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி விளையாடியது.


இப்போட்டியின் போது நடுவராக கடமையாற்றியவர் ரொஸ் எமர்சன். முரளி பந்து வீசிய வேளையில் அவர் முறையற்ற விதத்தில் பந்து வீசும் பாணி அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் அர்ஜுன ரணதுங்க

அப்போது இலங்கை அணியின் தலைவராகக் கடமையாற்றிய அர்ஜுனரணதுங்க நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்தோடு நின்றுவிடவில்லை, இந்தப்போட்டியை இத்தோடு நிறுத்திவிடுகிறோம் என்று கூறிய அர்ஜுன அணியை பெவிலியன் நோக்கி அழைத்துச் சென்றார்.


அப்போது குறுக்கிட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் போட்டியை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமானது. இந்தச் சம்பவத்தை அடுத்து அர்ஜுன ரணதுங்கவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டது. நடுவராக செயலாற்றிய ரொஸ் எமர்சனும் சுகயீன விடுமுறை என்று காரணம் காட்டி போட்டித் தொடலிருந்து விலகிக் கொண்டார்.
முரளியின் பந்துவீச்சுமுறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது

அர்ஜுனரணதுங்க பற்றி குறிப்பிடும் முரளிதரன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாதவர் என்று குறிப்பிட்டார். அர்ஜுன ரணதுங்க மட்டும் இல்லை.சனத்,அரவிந்த,அத்தபத்து,மகேல,சங்கா,இப்படி அனைத்து இலங்கை வீரர்கள்,ரசிகர்கள் உட்பட அனைத்து இலங்கையரும் முரளியின் கிரிக்கெட் வாழ்க்கையில் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.என்பது மறுக்கமுடியாத உண்மை.

சாதனை நாயகனின் பந்துவீச்சு முறை சோதிக்கப்பட்டபோது
முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 500 வது விக்கெட்டை 2004 ம் ஆண்டு மார்ச் 16 ம் திகதி கண்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது வீழ்த்தியிருந்தார். இப்போட்டித் தொடரில் “துஸ்ரா' முறையில் பந்து வீசியிருந்தமை தொடர்பாக போட்டி நடுவராகக் கடமையாற்றிய கிறிஸ் பிரோட் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்திருந்தார். 

அதனால் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கமைய மருத்துவ தீர்வுகள் முரளிதரனுக்கு சாதகமாக அமைய, “துஸ்ரா' பந்து வீச்சினை வீசுவதற்கு முடியும் என ஐசிசி யினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் முரளி.


இதனடிப்படையில் “தூஸ்ரா' பந்து வீசப்படும் வேளையில் 12.2 பாகையில் கை மடங்கும் போது சராசரியாக மணிக்கு 86 கிலோ மீற்றர் வேகத்திலும் ஓவ் பிரேக் பந்து வீச்சின் போது 12.9 பாகையில் கை மடங்கும் அதேவேளை மணிக்கு 99.45 கிலோ மீற்றர் வேகத்திலும் பந்து வீசுகிறார் என்பது அறியப்பட்டது.


முரளியின் பந்து வீச்சு சரியானது என பல சோதனைகள் மூலம் நிருபனம் ஆனது.
இப்படி பல சோதனைகளைக்கடந்து சாதனைப்படைதவர் முரளி.

முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்
(முரளியுடன் நினைவுகள் தொடரும்....)


எனது இந்த தொடர்பதிவை வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மீண்டும் நன்றிகள்.அப்படியே உங்கள் கருத்துரைகளை சொல்லிவிட்டு போங்க.

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails