ஆபிரிக்கநாடு சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் என்ற புதிய நாடு இன்று(9-7-2011) உதயமாகிறது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சூடான் நாட்டில், எண்ணெய் வளம் நிறைந்துள்ள தெற்கு பகுதி மக்கள் தனி நாடு கோரி, கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
20 லட்சம் பேரை பலி கொண்ட இந்த விடுதலை போராட்டத்தை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் தெற்கு சூடானை தனி நாடாக பிரித்து கொடுப்பது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் 98.83 சதவீத மக்கள் தனிநாடு அமைக்க ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து இரு நாடுகளாக சூடான் பிரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது.
இன்று உலகின் 193வது நாடாகவும் ஆபிரிக்ககண்டத்தின் 54 வது நாடகவும் உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது.
தெற்கு சூடான் மக்களுக்கு சுகந்திரதின வாழ்த்துக்கள்
அப்படியே கருத்துரையில் வாழ்துக்களை சொலிவிட்டு போங்க நண்பர்களே
தெற்கு சூடான் மக்களுக்கு சுகந்திரதின வாழ்த்துக்கள்
அப்படியே கருத்துரையில் வாழ்துக்களை சொலிவிட்டு போங்க நண்பர்களே
|
1 comments:
சுகந்திரதின வாழ்த்துக்கள்
Post a Comment