Friday, July 22, 2011

(பகுதி-6)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

வணக்கம் தொடர்ந்து எனது இந்தமுரளி பற்றிய தொடருக்கு ஆதரவு அளித்துவரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கடந்த பதிவில்(பகுதி-5)ல் அனைவருக்கும் விரிவாக நன்றி தெரிவித்து இருந்தாலும் மீண்டும் நன்றிகள்(பகுதி-5 வாசிக்காதவர்கள் அவசியம் வாசியுங்கள்)



சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முரளியின் முக்கியமான சாதனைகள்
முரளி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பலசாதனை படைத்துள்ளார் அவரின் சில முக்கியமான சாதனைகளை இந்தப்பதிவில் பதிவிட்டுள்ளேன்

  •  டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (800) 
  • ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (534) 
  • டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் பெறுமதிகளை அதிக தடவைகள் வீழ்தியுள்ளார்(67) 
  • டெஸ்ட் போட்டிகளில்10 விக்கெட் பெறுமதிகள் அதிக தடவைகள் வீழ்தியுள்ளார்(22) 
டெஸ்ட் போட்டிகளில்
  • விரைவாக 350விக்கெட்டுக்களைவீழ்தியவர்  
  • விரைவாக 400விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
  • விரைவாக 450விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
  • விரைவாக 500விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
  • விரைவாக 550விக்கெட்டுக்களைவீழ்தியவர்
  • விரைவாக 600விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
  • விரைவாக 650விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
  • விரைவாக700விக்கெட்டுக்களைவீழ்தியவர்  
  • விரைவாக 750விக்கெட்டுக்களைவீழ்தியவர் 
கடந்த ஆண்டு இதே நாளில்தான்(22-7-2011)முரளி டெஸ்ட் போட்டிகளில்800 விக்கெட் என்னும் சாதனையை நிகழ்த்தினார் இன்றுடன் சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது,முரளியின் 800விக்கெட்சாதனைப்பற்றி இந்தத்தொடரின் பகுதி-2ல் எழுதியுள்ளேன் அதைவாசிக்க இதை கிளிக்பன்னவும்-(பகுதி-2)முரளியின் தன்னம்பிக்கைக்கு உதாரணம் 800வது விக்கெட்
  • .டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் பெறுமதியைத் தொடர்ந்து 4 தடவை வீழ்தியுள்ள வீரர்
  • டெஸ்ட்விளையாடும்அனைத்துஅணிகளுக்குஎதிராகவும் 50விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்தியுள்ளார்
  • ஒரேஇனிங்சில்9விக்கெட்டுகளைஇரண்டுதடவைகள்வீழ்த்தியுள்ளார். (இங்கிலாந்தின்ஜிம்லேக்கர்ஒரேடெஸ்டில்முதல்இனிங்சில் 9விக்கெட்டிக்களையும் இரண்டாவது இனிங்சில்10விக்கெடுக்களையும் வீழ்தியுள்ளார் இவருக்குப் பிறகு இந்திய சுழல் ஜாம்பவான் கும்ளேதான் ஒரே இனிங்சில் 10விக்கெடுக்களையும் வீழ்திய வீரர்/முரளிக்கு இரண்டு முறை ஒரே இனிங்சில் 10விக்கெட்டை வீழ்த்த சந்தர்ப்பம் வந்தாலும் அவரால் வீழ்தமுடியவில்லை)
  •  டெஸ்ட் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர்.
  • டெஸ்ட் போட்டிகளில்அதிக ஓடமற்ற ஓவர்களை(1794) வீசிய வீரர்.
  • ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுக்களை(166) வீழ்த்திய வீரர் -SSC மைதானம்
  • 3 மைதானங்களில் அதிக விக்கெட்டுக்களை (100 இற்கு அதிகம்) வீழ்த்திய வீரர்.
  • டெஸ்ட்போட்டிகளில் சொந்த மண்ணில்(இலங்கையில்) அதிக விக்கெட்டுக்களை(493) வீழ்த்திய வீரர்


  • டெஸ்ட் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளருக்கு அதிக பிடிகளை மகேல முரளியின் பந்துவீச்சுக்கு 77 பிடிகளை எடுத்துள்ளார் இதுவும் ஒரு உலகசாதனைதான். 


  • டெஸ்ட்போட்டிகளில் அதிக தடவைகள் போல்ட்அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-167 தடவைகள்
  • அதிக தடவைகள் தானே பந்து வீசி பிடியெடுத்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்( 35 தடவைகள்)
  • அதிக தடவைகள் STUMPED அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-47 தடவைகள்
  • அதிக தடவைகள் பிடியெடுப்பு அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-435 தடவைகள்
  • விக்கெட் காப்பாளரல்லாத களத் தடுப்பாளர்களால் அதிக பிடியெடுக்கப்பட்டு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-388 தடவைகள்
இப்படி முரளியின் சாதனைகள் ஏராளம் எல்லாவற்றையும் பதிவிட இயலாது அவறில் முக்கியமானவைகளை பதிவிட்டுள்ளேன்.

முரளி3உலகக்கிண்ணஇறுதிப்போடிகளில்விளையாடியுள்ளார் ஆசியஅணிகளில்(இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை,பங்களாதேஸ்)3உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளில் விளையாடிய ஒரேவீரர் முரளிதான் 1996,2007,2011,மூன்று இறுதிப்போடிகளில் விளையாடியுள்ளார் இதில் 1996ல் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.


அவுஸ்ரேலியஅணி6உலகக்கிண்ணஇறுதிப்போடிகளில் விளையாடியுள்ளதால் ரிக்கிபொண்டிங்,மெக்ராத்போன்றவர்கள்4 உலக்கிண்ண இறுதிப்போடிகளில் விளையாடியுள்ளனர்.ஆனால் ஆசிய அணிகளில் இந்தியா 3 முறையும்(1983,2003,2011)இலங்கை 3 முறையும் (1996,2007,2011)பாகிஸ்தான் 2 முறையும்(1992,1999)மட்டுமே இறுதிப்போடிக்கு வந்துள்ளது எனவே ஆசிய வீரர்களில்,சச்சின்,யுவராஜ் சிங்,சகிர்கான்,சேவாக்,சங்கக்கார,மகேல,சமிந்தவாஸ்,சனத் ஜெயசூர்யா,இம்சமாம் உல்ஹக் போன்ற பல வீரர்கள் 2 உலக்கிண்ண இறுதிப்போடிகளில் தான் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


முரளியின் கடைசி ஒரு நாள் சர்வதேசப்போட்டியின் பின் நான் பேஸ்புக்கில் வெளியிட்ட படம்
2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டிதான் முரளியின் கடைசி ஒருநாள் சர்வதேசப் போடியாகும் இந்தப்போட்டியில் முரளி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை


அடுத்தப் பதிவில் முரளியின் புகைப்படங்கள் மற்றும் முரளியின் பெயர் 
வைக்கப்பட்ட இலங்கையின் பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை எதிர்பாருங்கள்.

(முரளியுடன் நினைவுகள் தொடரும்.......)


உங்கள் வேலையை மறக்காமல் செய்திட்டுப்போங்க அதான் கருத்துரைகளை சொல்லிட்டுப்போங்க........நண்பர்களே.





Post Comment

6 comments:

பாலா said...

இவரது சாதனைகளை பட்டியலிட்டால் அதையே ஒரு புத்தகமாக வெளியிடலாம் போலிருக்கிறதே? உண்மையில் சுழல் மன்னன்தான். ஒரு குறிப்பு, கும்ப்ளே மட்டுமல்ல, ஜிம் லேக்கரும் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ள இன்னொரு வீரர்.

பாலா said...

ஒரு சின்ன வேண்டுகோள், வேர்ட் வேரிபிகேசன், மற்றும் கமெண்ட் மாடரேசன் ஆகியவற்றை நீக்கினால் சிறப்பாக இருக்கும். அவை தேவைப்படாது என்பது என் கருத்து.

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது
ஒரு குறிப்பு, கும்ப்ளே மட்டுமல்ல, ஜிம் லேக்கரும் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ள இன்னொரு வீரர்

நன்றி நன்றி நண்பரே திருத்திவிட்டேன்

K.s.s.Rajh said...

@பாலா சொன்னது..
ஒரு சின்ன வேண்டுகோள், வேர்ட் வேரிபிகேசன், மற்றும் கமெண்ட் மாடரேசன் ஆகியவற்றை நீக்கினால் சிறப்பாக இருக்கும். அவை தேவைப்படாது என்பது என் கருத்து.

நன்றி பாலா அண்ணா ஆரம்பத்தில் நான் வலைப்பதிவு எழுதவந்த புதுசில் எனது நண்பர்கள் வேண்டும் என்றே தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பெயரில்லாமல் கருத்துரைகளை இடுவார்கள் அதை தடுக்கவே. வேர்ட் வேரிபிகேசன், மற்றும் கமெண்ட் மாடரேசன்.நீக்காமல் இருந்தேன் பிறகு அப்படியே விட்டுவிடேன்.
இப்போது நீக்கிவிட்டேன் நன்றி.

Anonymous said...

அத்துடன் அவர் அண்மையில் ஸ்ரீலங்கா கிரிக்கட்டை பகிஷ்கரித்தால் கிரிக்கட் விளையாட்டே இல்லாது போகும் எனவும் பகிஷ்கரிப்பைக் கோருவோர் அகதி அந்தஸ்துக்காகவே செய்கிறார்கள் எனவும் திருவாய் மலர்ந்ததையும் எழுதுங்கள். 40,000 பொதுமக்கள் சில வாரங்களில் கொல்லப்பட்டது பற்றிக் கவலை இல்லை.200,000 பேர் இதுவரை கொல்லப்பட்டகணக்கிற்கு கவலை இல்லை. சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கவலை இல்லை. இதற்கெல்லாம் விட ஒரு சாதனை உலகில் எங்கேனுமுண்டா? சும்மா சொல்லக்கூடாது இவர் சாதனையாளர் தான்! கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்குமாக விக்கற்றுகள் எடுக்கும் வரை ஓயாதீர்கள். ஸ்ரீலங்கா உங்களைப்போற்றி பாதுகாக்கும்!

K.s.s.Rajh said...

@பெயரில்லா சொன்னது…

நன்றி தங்கள் கருத்துரைக்கு.உங்கள் பெயருடன் கருத்துரையைச்சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.உங்கள் ஆதங்கத்தை நீங்கள் வெளிக்காட்டுவது போல்,முரளி ஒரு கிரிக்கெட் வீரராக கிரிக்கெட் அழிந்துவிடக்கூடாது என்று நினைப்பதில் தவறு ஏதும் இல்லையே.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails