Monday, July 25, 2011

(பகுதி-7)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

இந்தத்தொடரின் பகுதி-6 வாசிக்க இங்கே கிளிக்பன்னவும்-(பகுதி-6)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

Pallekele International Cricket Stadium /Muttiah Muralitharan International Cricket Stadium
முரளியின் பெயர் சூட்டப்பட்ட பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம்



இலங்கையில் முரளியின் சொந்த இடமான கண்டியில் ஏற்கனவே புகழ் பெற்ற அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது அஸ்கிரிய மைதானத்தில் முரளி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


முரளியின் சாதனைகளை கெளரவிக்கும் முகமாக கண்டியில் பல்லேகல்லவில் புதிதாக அமைக்கப்பட்ட பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி.1-12-2010 ல் இலங்கை மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட்போட்டியாகும்,அப்போது முரளி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று விட்டதால் அந்தப்போட்டியில் விளையாடவில்லை.இந்தமைதானத்தில் நடை பெற்ற முதல் ஒரு நாள் சர்வதேசப்போட்டி கடந்த உலக்கிண்ணப்போட்டிகளின் போது.8-3-2011 ல் பாகிஸ்த்தான் நியூஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியே இந்தமைதானத்தில் நடை பெற்ற முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியாகும்.


முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்(பல்லேகல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம்)நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் போது நான்(கடந்த உலக்கிண்ணப்போட்டிகளின் போது 8-3-2011 பாகிஸ்தான் vs நியூஸ்லாந்து)
இந்தபோட்டியை என்னால் மறக்க முடியாது காரணம் இந்தமைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் சர்வதேசப்போட்டி என்பதற்கு அப்பால் எனக்கு சர்வதேசக்கிரிக்கெட்டில் மிகவும் பிடித்தவீரர்களில் ஒருவரான நம்ம அதிரடி மன்னன் அப்ரடியின் ரசிகர்களான எனது நண்பர்கள்,நியூஸ்லாதுக்கு சப்போட் பன்னும் எனது நண்பர்களுடன் பாகிஸ்தான் வெல்லும் என அறிக்கை விட்டு
நேரடியாக போய்பார்த்தோம்
பாகிஸ்தான், நியூஸ்லாந்து போட்டியின் போது,அப்ரடிக்கு ரசிகனாக நான்
ஆனால் நியூஸ்லாந்தின் ரோஸ்டெய்லர் தனது பிறந்த நாள் அன்று காட்டிய அதிரடி ஆட்டத்தில் பல்லேகல்ல மைதானத்தில் பந்துகள் சிக்சர்களாக பறந்தன.பாகிஸ்தானின் நிலைமையோ பரிதாபம்,பின் அப்துல் ராசாக்கின் அரைச்சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் கெளரவமான தோல்வியைத்தழுவியது.இந்த சுவாரஸ்யமான போட்டி பற்றி ஏற்கனவே நான் எழுதிய பதிவை வாசித்துப்பாருங்கள் அதைவாசிக்க இங்கே கிளிக்பன்னவும்-பல்லேகல்லவில் பாகிஸ்தானை பந்தாடிய நியூஸ்லாந்து அணி 
நானும் என் நண்பர்களும் பல்லேகல்ல மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் சர்வதேசப்போட்டியின் போது(8-3-2011 பாகிஸ்தான் vs நியூஸ்லாந்து)
இந்தப்போட்டி இன்னும் ஒரு வகையில் சிறப்புப்பெறுகின்றது அதாவது கிரிக்கெட் உலகின் வேகப்புயல் பாகிஸ்தானின் சொயிப் அக்தர் 2011 உலக்கிண்ணப்போட்டிகளோடு ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்தபோட்டியில் அக்தரின் பந்து வீச்சை நியூஸ்லாந்து வீரர்கள் வெளுத்து வாங்கியதால் இந்தப்போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் ஆடிய போட்டிகளில் அக்தருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை அந்த வகையில் இந்தப்போட்டி அக்தரின் இருதிப்போட்டியாகவும் அமைந்து விட்டது.




பாகிஸ்த்தான்,நியூஸ்லாந்து போட்டிக்குப்பிறகு 10-3-2011ல் நடை பெற்ற அடுத்தப்போட்டியில் ஸிம்பாவேக்கு எதிரான உலகக்கிண்ணப்போட்டில் முரளி தனது பெயர் சூட்டப்பட்டமைதானத்தில் விளையாடினார் இந்தப்போடியில் முரளி 34 ஒட்டங்களைக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை,வீழ்த்தினார்.இலங்கை அணி இந்தப்போட்டியில் 139 ஓட்டங்களால் ஸிம்பாவே அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.




இதன் மூலம் தனது பெயர் சூட்டப் பட்ட மைதானத்தில் விளையாடிய வீரர் என்னும் பெருமையையும் முரளி பெற்றுக்கொண்டார்.
இந்தமைதானத்திற்கு போகின்ற வழியில் முரளிதரன் பிறந்த ஊரான குண்டசாலை உள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்தப்பதிவில் முரளிதரனின் புகைப்படங்களை எதிர்பாருங்கள்.


(முரளியுடன் நினைவுகள் தொடரும்.....)


அப்படியே கொஞ்சம் உங்கள் வேலையை மறக்காமல். கருத்துரைகளைச்சொல்லி விட்டும் போங்க

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails