Monday, July 18, 2011

(பகுதி-4)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-3 படிக்க இங்கே.
 (பகுதி-3)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன் ஒரு மீள் நினைவுகள்

முரளியின் கிரிக்கெட் அறிமுகம்





சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன் பொத்த்,குண்டசாலை,கண்டியில் முரளிதரன் பிறந்தார்.சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர்.  கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக்கல்வியை பயின்ற முரளி பாடசாலை கிரிக்கெட் அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா(Bata) நிறுவனம் வழங்கும் "பாட்டா(Bata) ஆண்டின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் கிரிக்கெட்கழகத்தில் இணைந்து தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்தார்.




இலங்கை A அணியில் இடம்பிடித்த இவர் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டைக் கூட முரளி வீழ்த்தவில்லை. 



முரளியின்முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 1992 அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும்.
தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

முரளியின் முதலாவது டெஸ்ட் விக்கெட்டாகவும் முதல் சர்வதேச கிரிக்கெட் விக்கெட்டாகவும் ஆட்டம் இழந்தவர் அவுஸ்ரேலியாவின்
கிரேக் மக்தேர்மொத்ட்(Craig McDermott )lbw முறையில் ஆட்டம் இழந்தார்.


.இதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இந்தப்போட்டியில் முரளி ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார். முரளியின் முதலாவது ஒருநாள் போட்டியின் விக்கெட்டாக ஆட்டம் இழந்தவர்.இந்தியாவின் PK Amre போல்ட் முறையில் ஆட்டம் இழந்தார்.
முரளி இந்தியாவுக்கு எதிரான 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


டெஸ்ட்போட்டிகளில் முரளியின் முக்கிய விக்கெட்டாக ஆட்டம் இழந்தவர்கள்

01 கிரேக் மக்டமட் - அவுஸ்ரேலியா
50 நவஜோத் சிங் சித்து -இந்தியா
100 ஸ்டீபன் பிளெமிங்- நியூசிலாந்து
150 கய் விட்டல் -சிம்பாப்வே
200 பென் ஹோலியொக் -இங்கிலாந்து
250 நவீ ட் அஷ்ரப் - பாகிஸ்தான்
300 ஷோன் பொல்லாக்-தென்னாபிரிக்கா

350 மொஹமட் ஷரிப் - பங்களாதேஷ்
400 ஹென்றி ஒலங்கா-சிம்பாப்வே
450 டரல் ரபி-நியூசிலாந்து
500 மைக்கல் கஸ்ப்ரோவிக்ஸ் - அவுஸ்ரேலியா
520 என்(N)காலா -சிம்பாப்வே ( கொட்னி வோல்ஷின் உலகசாதனை முறியடிப்பு)
550 காலித் மஷுத் -பங்களாதேஷ்
600 காலித் மஷுத் பங்களாதேஷ்
650 மக்காய நிடினி- தென்னாபிரிக்கா
700 சயத் ரசல் -பங்களாதேஷ்
709 போல் கொலிங்வூட்- இங்கிலாந்து( ஷேன் வோனின் உலகசாதனை முறியடிப்பு)
750 சௌரவ் கங்குலி - இந்தியா
800 பிரக்ஜன் ஓஜா- இந்தியா

ஷேன் வோன் and முரளி

Note-கொட்னி வோல்ஷின் 519 டெஸ்ட் விக்கெட்டுக்கள் உலகசாதனையை முரளி முறியடித்து அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றியவர்களில் முதலிடம் பிடித்தார் அதன் பின் ஷேன் வோன் முரளியின் சாதனையை முறியடித்தார் பிறகு ஷேன் வோன் ஒய்வு பெறும் வரை அவரது சாதனையை முரளியால் முறியடிக்கப்படவில்லை.அதன் பிறகு இங்கிலாந்தின் போல் கொலிங்வூட் விக்கெட்டை வீழ்த்தி முரளி ஷேன் வோனின் உலகசாதனையை முறியடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் முரளிதான் பிறகு ஷேன் வோனும் 1000 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்
.
சனத்ஜெயசூர்யா தலைமையில் தான் முரளி அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.அவரின் தலைமையில் 35 டெஸ்ட் போடிகளில் விளையாடி 230 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியுள்ளார்.
முரளி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவர்களாக இருந்தவர்கள்.அதில் முரளி கைப்பற்றிய விக்கெட்டுகளும்.
தலைவர்கள் போட்டிகள் விக்கெட்
  1. அர்ஜுன ரணதுங்க- 42 - 203 
  2. சனத் ஜெயசூரிய- 35 230
  3. ஹஷான் திலகரத்ன- 10 - 76 
  4. மார்வன் அத்தப்பத்து- 11 - 70 
  5. மஹேல ஜெயவர்தன- 28 - 186 
  6. குமார் சங்ககார- 6 - 30 
  7. கிரேம் ஸ்மித்- 1 - 05 விக்கெட் (ICC அணிக்காக விளையாடிய சந்தர்ப்பம்)
மொத்தம் -133 டெஸ்ட் போட்டி 800 விக்கெட்

தென்னாபிரிக்காவின் கேப்டன் கிரேம் சிமித்துக்கு ஒரு பெருமை உள்ளது அவரின் தலைமையின் கீழ் முரளி ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார் ஆம் அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் ICC லெவன் அணியில் முரளிவிளையாடியுள்ளார்.

ஆனால் முரளி 18 ஆண்டுகள் இலங்கை அணிசார்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும்.முரளி ஒரு போட்டியில் கூட இலங்கை அணியின் தலைவராக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.குமார் சங்ககார இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளி உபதலைவராக இருந்துள்ளார்.

அடுத்த பதிவில் முரளியின் பந்து வீச்சை தொடர்ச்சியாக முறைஅற்ற பந்தாக குற்றம் சாட்டிய நடுவருடன் முரளிக்கு சார்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போட்டியை புறக்கணித்த இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனரணதுங்க.சர்வதேச கிரிக்கெட்டில் முரளியின் சோதனைகளும் சாதனைகளும் இன்னும் பல சுவாரஸ்சியமான விடயங்கள் எதிர்பாருங்கள்.

முரளிக்காக நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும் அர்ஜுன ரணதுங்க.

(முரளியுடன் நினைவுகள் தொடரும்)

சரி வழக்கம் போல அப்படியே உங்கள் வேலையை பாத்திட்டு போங்க அதாங்க கருத்துரைகளை சொல்லிவிட்டு போங்க.

Post Comment

4 comments:

பாலா said...

நண்பரே உங்கள் தகவல்கள் அனைத்தும் மிக அருமை. முரளியின் சாதனைகளை இன்னும் அருகில் இருந்து திரும்பி பார்ப்பது போலிருக்கிறது.

அப்புறம் முரளியின் 200ஆவது விக்கெட் பென் ஹோலியாக். ஆடம் ஹோலியாக்கின் இளைய சகோதரர். ஒரு கார் விபத்தில் பலியானது சோகமான விஷயம்.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துரைகளை சொல்வதற்கு.

Riyas said...

good post...

K.s.s.Rajh said...

@Riyas சொன்னது…
good post..

நன்றி நண்பரே..

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails