சுழல் பந்து வீச்சின் நாயகன் முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியை உலகில் தலைநிமிரவைத்த வீரர்களில் ஒருவர்.இலங்கையில் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு வீரர் முரளி.முன்பெல்லாம் நான் சின்னப்பையனாக இருந்தபோது பாடசாலைகளில் கிரிக்கெட்விளையாடும் போது ஒருவர் விக்கெட் எடுத்தால் உடனே அவரை முரளி என்று அழைப்பது வழக்கம்.கிரிக்கெட் என்றதும் முதலில் நினைவுக்குவருவது முரளிதரனின் பெயர்தான்.
இலங்கையில் கிரிக்கெட் தெரியாதவருக்கும் முரளியை தெரியும். முரளி 800 விக்கெட் எடுத்துட்டாராமே என்று கிரிக்கெட் என்றால் என்ன, விக்கெட் எடுப்பது என்றால் என்ன என்று தெரியாத ஒருவருக்கு கூட முரளி எதோ சாதனை செய்து இருக்கார் என்று சந்தோசப்படுவார்கள்.இதற்கு முரளி கிரிக்கெட்டையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர் ஆக இருப்பதும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது.
அழகான இலங்கையில் யுத்தமேகங்கள் சூழ்ந்து இருந்த காலப்பகுதியில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் ,தெற்கில் இருந்து வடக்கிற்கும் வருவதற்கான பாதை(A-9 வீதி) தடைப்பட்டு இருந்தது இதனால் இலங்கையின் வடக்கு பகுதி மக்கள் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.ஆனாலும் அங்கு உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் முரளி என்ற சொல் தாரகமந்திரம் தான்.
அதன் பிறகு யுத்த மேகம் ஒய்ந்து சமாதானம் நிலவிய காலப்பகுதியில்.பாதைகள் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்பிய போது.2004 ஆம் ஆண்டு முரளிதரன் உலக உணவுத்திட்டத்தின் தூதுவராக வடக்கிற்கு வந்தார். அப்போது முரளி எங்கள் பாடசாலைக்கு(கிளிநொச்சி மகாவித்தியாலயம்) வரப்போவதாக செய்தி வந்தது.நான் அப்ப மிகவும் சின்னப்பையன் எங்கள் பாடசாலையில் எல்லோருக்கும் மிகவும் சந்தோசம் ஒரு சாதனை பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் எங்கள் பாடசாலைக்கு வரப்போகின்றார் என்று. அன்று இரவு சரியா நித்திரை வரவே இல்லை முரளியை பார்க்க போகின்றேன் என்று.அடுத்தநாள் நேரத்துடன் பாடசாலைக்கு சென்று விட்டேன்.நான் மட்டும் இல்லை பாடசாலையில் எல்லோரும் சின்னவகுப்பு மாணவர்கள்,பெரிய வகுப்பு மாணவர்கள்,ஏன் பல ஆசிரியர்கள் கூட நேரத்திற்கே வந்து விட்டார்கள்.
பாடசாலை வழமையாவே இயங்கியது ஆனாலும் எல்லோர் முகத்திலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.ஆனால் எங்கள் வகுப்பு ஆசிரியர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் கார்த்திகேயன்.கணித பாட ஆசிரியர் அவர் என்ன நினைத்தாரோ தெரியல திடீர் என்று எங்களை பார்த்து இன்றைக்கு பரீட்சை எல்லாம் தாயார் ஆகுங்க என்று சொல்லி விட்டார்.நாங்க சார் இண்டைக்கு முரளி வருகின்றார். நாளைக்கு பரீட்சையை வையுங்க என்றோம் ஆனால் அவரோ இல்லை இல்லை முரளிவரும் போது பார்கலாம் இப்ப பரீட்சை எழுதுங்க என்று பரீட்சை பேப்பரை தந்து விட்டார் ,நாங்களும் பரீட்சை எழுதத்தயார் ஆனோம்.
அந்த நேரம் முரளிதரன் வந்து விட்டார் எங்கள் வகுப்புக்கு முன்னால் தான் முரளி நின்று கொண்டு இருந்தார் எங்களுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை ஆசிரியரோ பரீட்சையை முடித்து விட்டு போங்க என்று சொல்லுகின்றார்.இதற்கு இடையில் இன்னும் ஒரு ஆசிரியர் வந்து எங்களிடம் முரளியைக்காட்டி சொல்கின்றார் அதோ அங்க நடுவில் நிக்கின்றாரே அவர்தான் முரளி என்று .எங்களுக்கு முரளியை தெரியாத மாதிரி சொன்னார் எங்களுக்கு கோபம் கோபமாக வந்தது.பிறகு கோபம் வராதா
பசியால் அழுகின்ற குழந்தைக்கு முன் உணவை வைத்துவிட்டு சாப்பிடவேண்டாம்.இதுதான் பிஸ்கேட்,இது இனிப்பு,என்று சொன்னால் அந்தக்குழந்தையின் மன நிலை எப்படி இருக்கும்.அதே மனநிலையில் நாங்கள் இருந்தோம்.
முரளியை சுற்றி எங்கள் பாடசாலை மாணவர்கள் நின்று அவருடன் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் பல மாணவர்கள் அவரை தொட்டுப்பார்தும் கட்டிப்பிடித்தும் இது உண்மையா என்பது போல அவர்களையே அவர்களால் நம்பமுடியவில்லை.நாங்கள் பொருத்துப் பொருத்து பார்த்தோம் ஆசிரியர் எங்களைவிடுவதாக இல்லை உடனே ஒரு பையன் சொன்னான் டேய் பரீட்சை நாளைக்கும் எழுதலாம் ஆனால் முரளியுடன் இண்டைக்குதான் கதைக்க முடியும்.அவன் அப்படி சொன்னதுதான் தாமதம் நாங்கள் எல்லோரும் வகுப்பைவிட்டு எழும்பி முரளி நின்ற இடத்திற்கு ஒடிவிட்டோம் நாங்கள் முரளியிடம் போய் திரும்பி பாக்கின்றோம் எங்களுக்கு பரீட்சை வைத்த ஆசிரியர் எங்கள் பின்னாலே அவரும் முரளி இடம் வந்து விட்டார்.பிறகு என்ன ஒடி சென்று முரளிதரனைக் கட்டிப்பிடித்து அவரிடம் என்ன கதைப்பது என்றுதெரியவில்லை. ஏன் என்றால் எங்களால் நம்ப முடியவில்லை அத்தோடு முரளி தமிழில் கதைத்துக் கொண்டு இருந்தார் முரளி தமிழர் என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஆங்கிலத்தில் பேட்டிகள் கொடுத்து பார்த்த எங்களுக்கு முரளி தமிழால் கதைத்துக்கொண்டு இருந்தது மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது.
மாணவர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.கொப்பி, புத்தகம், சேட் ,இப்படி என்ன கிடைத்ததோ அதில் எல்லாம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது நான் முரளியிடம் ஒரு கேள்வி கேட்டேன்
.உங்களுக்கு கங்குலியை பிடிக்குமா சச்சினைப்பிடிக்குமா?(சின்ன வயதில் இருந்த்து நான் கங்குலி ரசிகன் அதனால் தான் முரளியிடம் கேட்டேன்)
அதற்கு முரளி ஒரு அற்புதமான பதில் தந்தார்.
எங்கள் எல்லோரையும் காட்டி முரளி சொன்னார் தம்பி எனக்கு சச்சின் கங்குலியை விட உங்களை இந்த ரசிகர்களில் அன்புதான் முதலில் பிடிக்கும் . இப்படி சின்ன குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் என்னில் எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் இதைவிட வேற என்ன வேனும் என்றார்.
முரளி சொன்ன விடயம் உண்மைதான் இலங்கையில் சின்னக் குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் முரளியை பிடிக்கும்.
முரளி & சங்கக்காரா |
எங்கள் பாடசாலைக்கு வந்தது தனக்கு மிகுந்த மகிழ்சி என்றும் முரளி சொன்னார்.
பிறகு முரளி நிறைய கிரிக்கெட் உபகரணங்களை எமது பாடசாலைக்கு வழங்கி விடை பெற்றுச் சென்றார்.
அதற்கு பிறகு முரளிதரனை பல தடைவை நான் பார்த்து இருந்தாலும் முதல் முதல் நேரில் பார்த அந்த சந்தோசத்திற்கு ஈடாகாது.
எனக்கு ஒரு கவலை அபோது முரளியுடன் எடுத்த படங்கள் ஒன்று கூட இப்போது இல்லை எல்லாம் பாடசாலையில் வைத்து இருந்தார்கள் பிறகு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகாரணமாக எல்லாம் அழிவடைந்து விட்டதாம்..
இப்போது மறுபடியும் இலங்கையில் அமைதி சூழல் திரும்பி யுத்தம் முற்றாக நிறைவடைந்து விட்டது. வடக்கில் எவ்வளவோ மாற்றங்கள்
முத்தையா முரளிதரன் மீதான மக்களின் அன்பு மட்டும் இன்னும் மாறவில்லை .என்றும் மாறப்போவதும் இல்லை.
இதில் இன்னும் ஒன்றை சொல்லவேணும் சச்சின் சர்வதே கிரிக்கெட்டில் எத்தனையோ சாதனைகள் படைத்த வீரர் இந்திய ரசிகர்கள் பலர் சச்சினை கொண்டாடினாலும் எல்லோருக்கும் சச்சினை பிடிக்காது சச்சினை பிடிக்காத இந்திய ரசிகர்கள் இருக்கின்றார்கள்.கங்குலி ரசிகர்களுக்கு சச்சினை பிடிக்காது
முரளியின் 800 விக்கெட் சாதனையை இலங்கை ஜனாதிபதி பாராட்டிய போது |
ஆனால் இலங்கையில் முரளிதரனை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இல்லை என்று சொன்னால் அது மிகையாகது.மகேலவின் ரசிகர்களுக்கும் முரளியைபிடிக்கும் சங்காவின் ரசிகர்களுக்கும் முரளியைப்பிடிக்கும்,சனத்தின் ரசிகர்களுக்கும் முரளியை பிடிக்கும்.ஒட்டு மொத்த இலங்கையருக்கும் முரளியைபிடிக்கும்.இதான் முரளிதரனின் சாதனைகளுக்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களும்,கிரிக்கெட்வீரர்களும் வழங்கி இருக்கும் மாபெரும் கெளரவம் ஆகும்.
(முரளியுடன் நினைவுகள் தொடரும்...)
மறக்காமல் அப்படியே கருத்துரைகளை சொல்லிவிட்டுப்போங்க நண்பர்களே.
|
6 comments:
தமிழ் புத்தாண்டு அன்று விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில், என்னை திட்டுபவர்கள் திட்டட்டும். அவர்கள் வாய்தான் வலிக்கும் என்று குழந்தைதனமாக சொன்னபோதே அவரை பற்றி புரிந்து கொண்டேன். ஒரு சிறந்த மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை.
நன்றி நண்பரே.
வணக்கம் சகோ,
முரளிதரனைப் பார்த்துப் பேசிய நினைவுகளை அற்புதமாக மீட்டிப் பதிவிட்டிருக்கிறீங்க.
கூடவே முரளியின் எளிமையான பண்பினையும் சுட்டியிருக்கிறீங்க.
கொடுத்து வைச்சவங்க நீங்க. நாம இன்னும் முரளியை நேரில் பார்க்கவே இல்லை பாஸ்.
நன்றி நண்பரே.நீங்களும் முரளியை சீக்கிரம் பார்க்க வாழ்த்துக்கள்.
சகோ /முரளியை பற்றி சொன்ன விதம் அருமை...
வாழ்த்துக்கள்..
எனது பக்கம்...
http://sempakam.blogspot.com/
@vidivelli சொன்னது…
சகோ /முரளியை பற்றி சொன்ன விதம் அருமை...
வாழ்த்துக்கள்/
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
Post a Comment