Saturday, July 16, 2011

(பகுதி-3)-சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

இந்தத் தொடரின் பகுதி-2 வாசிக்க இங்கே
(பகுதி-2)சுழல் சக்கரவர்த்தி முத்தையா முரளிதரனுடன்,ஒரு மீள் நினைவுகள்.

முரளியின் திறமைக்கு ஒரு சவால்.





அண்மையில் லண்டன் பிஞ்சிலேய்(finchley)கிரிக்கெட் கிளப்மைதானத்தில் முரளிதரனின் திறமைக்கு ஒரு சவால் விடுக்கப்பட்டதாம்.அதாவது விக்கெட்டின் மீது ஒரு கிளாஸ் வைக்கப்பட்டு இருக்கும் அதன் மீது நாணயம் ஒன்று வைக்கப்பட்டு இருக்கும்.பந்து கிளாசை தாக்காமல் நாணயத்தை மட்டும் வீழ்த்தவேண்டும்.
முரளிக்கும் இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர் கிராம் ஸ்வானுக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற்றதாம் யார் வென்று இருப்பார்கள் வீடியோவைப்பாருங்கள்.போட்டி விதிமுறையை வாசித்தபின் ஸ்வான் இலகுவானது என்றுசொல்லுகின்றார் பாருங்கள். ஆனால் முரளி இலகுவானது இல்லை என்று தன் அடக்கத்தோடு சொல்லி கலந்து கொண்டு ஜெயிக்கிறார் பாருங்கள்.
(இந்த வீடியோ you tube தளத்தில் இருந்து பகிரப்பட்டுள்ளது நன்றி you tube.com)




இரண்டு மூன்று முறை இருவரும் வீசிய பந்துகளில் ஸ்வானின் பந்துகள் விக்கெட்டை தாக்கின ஆனால் முரளியின் பந்து விக்கெட்டை தாக்கவில்லை இதில் இருந்து பாருங்கள் முரளியின் முழுக்கவனமும் நாணயத்தை விழுத்தவேண்டும் என்பதில் தான் இருந்து இருக்கின்றது கடைசியில் முரளி நாணயத்தை வீழ்தினார்.இதான் முரளிதரன்.


குறிப்பு-இது போலியான வீடியோ என்றும் ஒரு கருத்து நிலவுகின்றதாம்.அப்படி இது போலியான வீடியோவாக இருந்தாலும்.  முரளியால் இது இயலாத காரியம் இல்லையே அவரால் இதை செய்ய முடியும்.
ஆரம்பத்தில் முரளியின் பந்து வீச்சே போலி, விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகின்றார் என்று சொல்லப்பட்டது தானே.எத்தனை சோதனைகளைக் கடந்து சாதனை படைத்தவர் முரளி.
(முரளியுடன் நினைவுகள் தொடரும்)


அப்படியே மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க நண்பர்களே.

Post Comment

2 comments:

நிரூபன் said...

மச்சான், நீங்க உண்மையிலே ரியலி கிரேட்...
இதுவரை நாம அறியாத, முரளிதரன் பற்றிய அசத்தலான ஓர் தகவலை - வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

K.s.s.Rajh said...

நன்றி நண்பரே.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails