Monday, July 11, 2011

110 ஆண்டுகளாக ஒளிரும் மின்குமிழ்

அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பியூஸ் போகாமல் ஒளிர்ந்து வரும் குண்டு மின்குமிழ் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.





அமேரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லிவர்மோர் நகரில் தீயனைப்பு அலுவலகம் உள்ளது இங்கு 1901 ஆம் ஆண்டு 60 வோட் குண்டு மின்குழிழ் பொருத்தப்பட்டது. அதற்கு பிறகு கட்டிட பராமரிப்பு வேலைகள்,பெயிண்ட் அடிக்கும் வேலைகள் பலமுறை நடந்தபோதும் இந்த மின்குழிழ் அகற்றப்படவில்லை.தற்போதும் ஒளிர்ந்துவருகின்றது 110 ஆண்டுகளாக பியூஸ் போகாமல் ஒளிர்வதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

1903 ஆம் ஆண்டில் சிலகாலமும்,1937 ஆம் ஆண்டில் ஒரு வாரமும் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு வரையில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்ட நேரங்களில் மட்டும் இந்த மின்குமிழ் ஒளிரவில்லை மற்றபடி 110 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிர்ந்து வருகின்றது.நூறாண்டு கடந்த மின்விளக்குகளை பாதுகாக்கும் கமிட்டி ஒன்று லிவர்மோர் நகரில் செயல்படுகின்றது.அதன் தலைவர் லின் ஓவன்ஸ் கூறுகையில்.
குண்டு மின்குமிழில் உள்ள டங்ஸ்டன் இழை அதிக வெப்பம் தாங்கமுடியாமல் சிறிது காலத்தில் வலுவிழந்து உடைந்துவிடும்.
இதைத்தான் பியூஸ் போகிறது என்கிறோம் இந்த மின்குழிழ் இத்தனை காலம்
எப்படி பியூஸ்போகாமல் ஒளிர்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது என்றார்.

எது எப்படியோ 110 ஆண்டுகளாக ஒளிர்ந்து கொண்டு இருப்பது ஆச்சரியமான விடயம் அல்லவா.

சரி அப்படியே உங்கள் கருத்துரைகளை சொல்லிவிட்டு போங்க நண்பர்களே

Post Comment

2 comments:

பாலா said...

அணையா விளக்குன்னு சொல்றாங்களே அது இதுதானா?... சுவாரசியமான தகவல். நன்றி நண்பரே,,,

K.s.s.Rajh said...

ஆம் இதுதான் அணையா விளக்கு போல

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails